Tuesday, December 27, 2011
The Postman (1994)
Posted under World Cinema, உலக சினிமா on December 27, 2011 by Unknown with
22 comments

Tuesday, December 20, 2011
Wednesday, December 14, 2011
யாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்! - நம்மவர்!
Posted under girls, Jaffna, அனுபவம், மொக்கை on December 14, 2011 by Unknown with
30 comments

'யாழ்ப்பாணம் இப்ப ரொம்ப மோசமாமே?'
பொண்ணுங்களுக்கும் நமக்கும் எப்பவுமே ஆவுறதில்ல!நாம இருக்கிற ஏரியாலயே பொண்ணுங்களைக் காண முடியிறதில்ல!எப்பவாவது அலுவலகத்தில ஒன்றிரண்டு பேரைப் பார்த்தாலும் நாம அவங்க வழிக்கே போறதில்ல! ஆனா பாருங்க நம்மளப் பார்த்த உடனேயே கட்டம் கட்டிடுவாய்ங்க போல! வலிய வம்பிழுக்கிறதுன்னு முடிவு பண்ணிடுவாய்ங்க! நம்ம ராசி அப்பிடி!
Thursday, December 8, 2011
நிராகரிப்பின் வலி!
Posted under Dhanush, காலம், தனுஷ், நிராகரிப்பு, மயக்கம் என்ன?, வலி on December 08, 2011 by Unknown with
29 comments

நிராகரிப்பு, நம்பிக்கைத் துரோகத்தின் வலி மிகக் கொடுமையானது! அது மென்மையானவர்களை, மிகத்திறமைசாலிகளை அதீதமாகவே தாக்கிவிடுகிறது! அவர்கள் தொலைத்ததாகக் கருதும் அங்கீகாரத்தை, வாழ்க்கையை வேறு எதுவுமே ஈடு செய்வதில்லை.
ஒரு சிலர் தாங்களாகவோ அல்லது அன்புக்குரியவர்கள் முயற்சியாலோ மீண்டு வருகிறார்கள். ஆனால் பலர் தம்மையே தொலைத்து விடுகிறார்கள். அவர்களை மீட்க யாரும் முயற்சிப்பதில்லை என்பது பெரும்சோகம்!
ஒரு சிலர் தாங்களாகவோ அல்லது அன்புக்குரியவர்கள் முயற்சியாலோ மீண்டு வருகிறார்கள். ஆனால் பலர் தம்மையே தொலைத்து விடுகிறார்கள். அவர்களை மீட்க யாரும் முயற்சிப்பதில்லை என்பது பெரும்சோகம்!
Tuesday, December 6, 2011
Saturday, November 26, 2011
A Beautiful Mind (2001)
Posted under A Beautiful Mind, Hollywood, Russel Crowe on November 26, 2011 by Unknown with
21 comments

எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கும். அது அவர்களால் இனங்கண்டு கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கலாம். பலர் தம்மாலும், பிறராலும் கண்டுகொள்ளாமலேயே பயணத்தை முடித்தும் செல்லலாம். ஆனால் திறமைகள் இருந்தும், உணர்ந்தும் நிரூபிப்பதற்கு சரியான சந்தர்ப்பங்கள் அமையாதுவிடுதல் அல்லது மற்றவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போதல் என்பது எவ்வளவு கொடுமையானது!
Sunday, November 20, 2011
Water (2005)
Posted under a r rahman, Deepa mehta, John Abraham, Lisa ray, water, உலக சினிமா on November 20, 2011 by Unknown with
27 comments

Friday, November 18, 2011
மாலை நேர மழைத்துளி!
Posted under பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது on November 18, 2011 by Unknown with
25 comments

Wednesday, November 16, 2011
Schindler's List - மேலும் சில!
Posted under oskar schindler on November 16, 2011 by Unknown with
14 comments

Oskar Schindler
ஷிண்ட்லெர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான மனிதனல்ல. மண வாழ்க்கையில் தோல்வி! தான் எடுத்துக் கொண்ட எந்தத் தொழிலிலும் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பொது வாழ்க்கையில் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாமனிதனாக உயர்ந்து நிற்கிறார். அதற்கு காரணம் தன்னலமற்ற மனித நேயமும், அன்புமே!
Monday, November 14, 2011
Schindler's List
Posted under Hollywood, oskar schindler on November 14, 2011 by Unknown with
21 comments

Thursday, November 10, 2011
Tuesday, November 8, 2011
வேலாயுதம் Vs ஏழாம் அறிவு - ஒரு நடுநிலை ரிப்போர்ட்!
Posted under பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது on November 08, 2011 by Unknown with
38 comments

Friday, November 4, 2011
Thursday, November 3, 2011
Tuesday, November 1, 2011
Monday, October 31, 2011
Wednesday, October 26, 2011
ஏழாம் அறிவும் போதி தர்மனும்!
Posted under 7am arivu, bodhidharma on October 26, 2011 by Unknown with
30 comments

Monday, October 24, 2011
Tuesday, October 11, 2011
Eyes Wide Shut (1999)
Posted under eyes wide shut, Hollywood, Nicole Kidman, Stanley Kubrick, Tom Cruise on October 11, 2011 by Unknown with
34 comments

Tuesday, October 4, 2011
புத்தரின் வாரிசுகளும், மிருக நேயமும்!
on October 04, 2011 by Unknown with
29 comments

'ஓரிரு தடவை சாப்பிட்டிருக்கிறேன்!'
'வீட்டில்?'
'அனுமதிப்பதில்லை!'
'நல்லது! நாங்களும் சாப்பிடுவதில்லை! அது பெரும்பாவம்!'
- தனது கோப்பையிலிருந்த மீன்துண்டைப் பிரித்து மேய்ந்துகொண்டே சீரியசாகப் பேசினார் நம்ம அலுவலக அங்கிள், உணவருந்தும்போது! அவர் ஒரு சிங்களவர். பௌத்தமதத்தவர்.
- தனது கோப்பையிலிருந்த மீன்துண்டைப் பிரித்து மேய்ந்துகொண்டே சீரியசாகப் பேசினார் நம்ம அலுவலக அங்கிள், உணவருந்தும்போது! அவர் ஒரு சிங்களவர். பௌத்தமதத்தவர்.
Wednesday, September 28, 2011
Friday, September 16, 2011
இரத்தப்படலம்,விகடன்,பன்னிக்குட்டி ராம்சாமி-நன்றி!
Posted under Blogger, Comics, XIII on September 16, 2011 by Unknown with
45 comments

இரத்தப்படலம்! (XIII Comics)
ஒரு வழியா இரத்தப்படலம் கையில கிடைச்சிட்டுது! நீண்ட நாட்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பூபாலசிங்கம் புத்தகசாலையில் (கொழும்பு)சொல்லிவைத்துவிட்டு (அப்போது வரவில்லை) அந்தப்பக்கம் போகவில்லை. சமீபத்தில் பதிவர் Vimalaharan எனது பதிவின் பின்னூட்டத்தில் இது பற்றி தெரிவித்திருந்தார். நன்றி நண்பா!
எனக்காக ஒரு புத்தகம் எடுத்து வைத்திருந்தார்கள் போய் 'லபக்!'. என்னை மீறி சந்தோஷம் முகத்தில் பரவ...முன் பின் புரட்டிப்பார்க்க - தடவிப் பார்த்ததாகக் கூட ஞாபகம்! - கடையில் நின்ற ரெண்டு அங்கிள்ஸும் சிரித்தவாறே பாத்திட்டிருந்தாங்க! சின்னப்புள்ளத்தனமா இருந்திருக்குமோ?
ஒரு காலத்தில வெறித்தனமா அலைஞ்சு திரிஞ்சது, எவ்வளவோ தேடியும் முதல் மூன்று பாகமும் யாழ்ப்பாணத்தில கிடைக்காதது - எல்லா பிளாஷ் பேக்கும் வந்து போச்சு! இதெல்லாம் அவர்களுக்குத் தெரிய நியாயமில்லையே!
Wednesday, September 14, 2011
Thursday, September 8, 2011
Wednesday, September 7, 2011
The Grand Voyage
Posted under Father, World Cinema, உலக சினிமா on September 07, 2011 by Unknown with
25 comments

Friday, September 2, 2011
அப்பா!
Posted under Father on September 02, 2011 by Unknown with
43 comments

'அந்தாளோட தொல்லை தாங்கலடா' - அப்பா குறித்து அன்பாக நண்பர்களிடம் அடிக்கடி கூறியதுண்டு! இப்படிச் சொல்லாத பையன்கள் இருக்கிறார்களா?
அப்பரின் தொல்லை தாங்கமுடியவில்லை என்ற மகன்களின் புலம்பலும், என் பேச்சை மதிக்கிறானில்லை என்ற அப்பாக்களின் ஆதங்கங்களும் கலந்த புகார்கள் அம்மாக்களின் பார்வைக்கு வருவதை பல வீடுகளில் பார்க்கலாம்!
சின்னவயதில் அப்பாவின் நெஞ்சில் தூங்கி, அப்பா தூக்கிக்கொண்டு நடந்து செல்கையில் தோளில் முகம்புதைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நாட்கள் நினைவுகளின் இடுக்குகளில் எங்கோ ஒளிந்திருந்து எப்போதாவது எட்டிப்பார்க்கும்!
Friday, August 26, 2011
Thursday, August 25, 2011
Monday, August 22, 2011
Wednesday, August 17, 2011
லவ் பண்ணுங்க! ஈழத்து அண்ணி! பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
Posted under பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது on August 17, 2011 by Unknown with
35 comments

பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது!
வார இறுதிப் பேரூந்துப் பயணங்களில் ஏதாவது மொக்கைப் படம் போட்டு நம்மாளுக தூங்கவே விடுறதில்லையா? கொட்டக் கொட்ட முழிச்சுக் கொண்டிருக்கும் போதுதான் நம்முடைய மகா சிந்தனையைத் கோக்குமாக்கா தூண்டி விடுறமாதிரியே ஏதாவது சம்பவம் நடக்குது!
இப்பிடித்தான் போனவாரம் அர்ஜூன் நடிச்ச அன்புச்சகோதரன்னு ஒரு படம்! சின்னவயது அண்ணனும், தங்கச்சியும் ரொம்ப பாசமா இருக்காங்களா, அம்மாவும் அதப்பாத்து சந்தோஷப்படுறாங்களா..அப்புறம் அடுத்த சீன்லயே அம்மா மேல டிக்கட் வாங்கிடுறா! - இந்த சீன்ல சுத்தி இருந்த சிலபேர் உச், ஸ்ஸ்..போன்ற இன்னபிற ஒலிகளை எழுப்பினார்கள்!
அப்பத்தான் எனக்குள்ள தூங்கிட்டிருந்த சிந்தனாவாதி முழிச்சுக்கிட்டான்!
Friday, August 12, 2011
லண்டன் கலவரத்தை அடக்க கோத்தாபாய?, மங்காத்தா!
Posted under mankatha, mankatha trailer on August 12, 2011 by Unknown with
23 comments

'எங்கள் நாட்டு பாதுகாப்பு செயலரை (கோத்தாபாய ராஜபக்சே) லண்டனுக்கு அனுப்பினா, ரெண்டு நாள் மேக்சிமம்! கலவரம் முடிவுக்கு வந்திடும்'
Wednesday, August 10, 2011
Don't Look Down (2008)
Posted under Sex, World Cinema, உலக சினிமா on August 10, 2011 by Unknown with
40 comments

எலாய் - 19 வயது இளைஞன். சிமேட்ரியில் வைக்கப்படும் சிலைகள் வடிப்பவன். நீண்ட பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு நடக்கக் கூடியவன். அவ்வப்போது ஒரு bun போல மாறுவேடமணிந்து விளம்பரப் பிரசுரங்களை விநியோகிப்பவன். அவனது அப்பா இறந்தபின், அடிக்கடி அவர் தன்னோடு வந்து பேசுவதாக தன அண்ணனிடம் சொல்கிறான். மயானத்திற்கு வெளியே இறந்தவர்கள் எல்லோரும் வரிசையில் அமர்ந்திருப்பது போன்ற மாயத்தோற்றத்தையும் அவன் அடிக்கடி காண்கிறான்.
Thursday, August 4, 2011
Maria Full of Grace (2004)
Posted under World Cinema, உலக சினிமா on August 04, 2011 by Unknown with
31 comments

Monday, August 1, 2011
Saturday, July 30, 2011
காதல் வலி!
Posted under Jaffna, Love on July 30, 2011 by Unknown with
28 comments

ஷன்னுக்கு காதல் வந்திருந்தது! எத்தனையாவது என்பது நமக்கு அவசியமாகப் படவில்லை! கூடவே காதலின் வலியும்! காதல்வலி என்றதுமே சட்டென ஒரு முடிவுக்கு வந்து விடலாம் அது ஆண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று. ஏன் அது பெண்களுக்கு வருவதில்லை? இல்லை வெளிக்காட்டிக் கொள்வதில்லையா? இல்லை எதையும் 'லைட்'டாகத்தான் செய்வார்களா? இது டீப்பா ஆராய வேண்டிய விஷயம் என்றாலும் இப்ப அது நமக்கு வேணாம்.
இந்தக் காதல் வலியைப் பற்றித்தான் எத்தனை கவிதைகள், கதைகள். எத்தனை பேர் அனுபவிச்சு, உருகி,உருகி எழுதியிருக்கிறார்கள். ஆனா நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒருவன் காதலிக்கத் தொடங்கியதுமே அவனது நண்பர்களுக்கு ஏற்படும் வலி இருக்கிறதே, அதைப் பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா? அந்தக் கொடுமைய அனுபவிச்சுப் பார்த்தா தான் தெரியும். ஒரு பய நிம்மதியா இருக்க முடியுமா?
எனது முதல் காதல்வலி...! டீன் ஏஜின் நடுப் பகுதி, அப்பல்லாம் ஜக்கு ஒழுங்காகக் கோவிலுக்குச் செல்வான். அவனின் கடவுள் பக்தி பற்றி எனக்கு எந்தவித சந்தேகமுமில்லாததால் என்னால் உறுதியாகக் கூறமுடியும், சைட் அடிக்கத்தான் போறான் என்று!
திரும்பி வந்ததுமே ஆரம்பிச்சுடுவான்.
'மச்சான் கோயில்ல ஒரு பொண்ண பாத்தேண்டா'
'நீ போனதே அதுக்குத் தானேடா'
'சூப்பரா இருந்திச்சுடா' , 'அப்பிடியா?' (உனக்கு காமாலைக் கண்தானே)
'நான் பாத்திட்டே இருந்தேண்டா' (இத சொல்ல வேற வேணுமா?)
'அவளும் பாத்தாள்டா' , 'ஓ' (பார்ரா)
' நான் சிரிச்சேண்டா', 'ம்ம்' (நீ இழிச்சவாய் தானேடா)
'அவளும் சிரிச்சாள்டா', 'ஓ' (அவளும் லூசா)
'நீ என்ன நினைக்கிறே?' , 'என்னது?' (எல்லா இழவையும் நீ பண்ணிட்டு என்னைக் கேட்டா?)
இனி அவள் தான் ஜக்குவின் கதை நாயகி, அதாவது இன்னொரு நாள் வேறு ஒருத்தியைச் சந்திக்கும்வரையில்.முதல் ஒன்றிரண்டு கதைகளில் நானும் ஆர்வம் காட்டினேன். ஆனா இதே வேலையா ஒருத்தன் இருந்தா என்ன பண்ண முடியும்? அதுக்குப் பிறகு எப்பவுமே நண்பர்களுக்கு எனது 'அட்வைஸ்' முடிவு பண்ணிட்டா உடனேயே அந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்லி விடுங்கள் என்பதாகத்தான் இருக்கும்! இல்லாட்டி நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே!
நாங்களும் கதை கேட்டுட்டே. ஒரு கட்டத்தில வெறுத்துப் போய் நானே லவ் பண்ணலாமான்னு கூட யோசிச்சிருக்கேன்னா பார்த்துக் கொள்ளுங்க எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பேன்னு.
காலங்காலமாக யாராவது ஒருத்தன் காதலை வாழ வைத்தே தீருவேன் ன்னு கங்கணம் கட்டிட்டுத்தான் இருந்தாங்க. இப்பக்கூட நம்ம ஜேப்பி இருக்கானே, அவனுக்கு ஒரு ராசி அவன் ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளி, லவ் பண்ணப் போறேன்னு எங்ககிட்ட சொன்னான்னு வையுங்க, இவன் இங்க முடிவு பண்ணேக்க, அது யாரையாவது லவ் பண்ண ஆரம்பிச்சிடும்! இவன் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னா, அதுக்கு வெளிநாட்டுல மாப்பிள்ளை கிடைச்சிடும்! இல்லேன்னா யாரோடாவது ஓடிப்போயிடும்! அவனால எத்தனை பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கிடைச்சிருக்கு! எவ்வளவு பெரிய சமூக சேவைய சத்தமில்லாம செய்திட்டு இருக்கிறான்! ஆனா கொடுமையைப் பாருங்க, இந்த விஷயம் எதுவுமே அந்தப் பொண்ணுங்களுக்கு தெரியாது!

இரண்டு
வகையான காதல் இருந்திச்சு! இரண்டுமே ஒருதலைதான்!
ஒரு பெண்ணைப் பார்த்து, பிடித்துப் போய் காதலிப்பது.
இது முதல் வகை. சாதாரணமானது.
சிலபேருக்கு, காதல் முதல்லயே வந்திடும். பிறகுதான்
காதலிக்க ஆள் தேடுவானுகள்.
ஷன்னின் காதல்கள் இரண்டாம்
வகை. அவன் தனது அனுபவங்களை, சாகசங்களை ஒவ்வொரு முறையும் 'புதுசா' சொல்றமாதிரியே.. விறுவிறுப்பு
குறையாமல் விவரிக்க, நாங்களெல்லாம் பிரமித்துப்
போய் ( நாங்களெல்லாம் எப்பதான் இதெல்லாம் தெரிஞ்சு கொள்ளப் போறமோ?) கேட்டிட்டு இருப்போம்.
இந்த முறை ஷன் மிகத் தீவிரமாக
இருந்தான் அல்லது எங்களுக்கு அப்படித் தோன்றியது. இந்த மாதிரி சமயங்களில
எல்லாப் பசங்க 'குறூப்' புக்குமே ஒரு அட்வைசர்
இருப்பார்.எங்களுக்கும். அநேகமாக தொடர் தோல்வியை சந்தித்து, விளையாட்டிலிருந்து ஓய்வு
பெற்று 'கோச்' ஆன
மாதிரி. அண்ணன் பல களங்கள், விழுப்புண்கள் கண்ட
அனுபவத்திலிருந்து, (அநேகமாக
நான்கைந்து வயது பெரியவராக வேறு இருப்பார்) ஆழ்ந்த
சிந்தனையுடன், நிதானமாக 'இப்பிடித்தான்
நானும் ஒரு நாள்...' என்று ஆரம்பிக்கும்போது, நாங்களெல்லாம் அமைதியாகி....
எங்களில் பலர் நாம லவ்
பண்ணலையே தவிர அடுத்தவன் காதல பீல் பண்ற நல்ல மனசு வாய்க்கப் பெற்றிருந்தோம்.
அண்ணனின் சந்தோஷ தருணங்களில், சந்தோஷித்து, துக்கத்தில் பீலாகி, 'டச்' ஆன சமயங்களில் ஒருவரை ஒருவர்
பார்த்து, (அண்ணன்
நிஜமாவே பெரிய ஆளுதாண்டா! நாங்களும் இருக்கிறம்?!..ம்ம்ம்ம்) சில நேரங்களில் அண்ணன் ரொம்ப
பீலாகி, குரல் தடுமாற
கதை சொல்லும்போது, எல்லாரும் அழுவாரைப் போல
உட்கார்ந்திருப்போம். ஆனா அப்போ, லவ்
பண்ணிடிருக்கிறவன் மட்டும் லூசுத்தனமா எதையோ நினச்சு சிரிச்சுட்டே கேட்டிட்டு இருப்பான்.கொஞ்ச நாள்ல தனியா அழப் போறது தெரியாமல்!
அதில எங்க எல்லோருக்கும் ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தது - அதாவது இப்ப இல்லாட்டியும்
என்றைக்காவது ஒருநாள் நாங்களும் லவ் பண்ணுவோம்! அப்ப எங்களுக்கும் இதெல்லாம் 'யூஸ்' ஆகும்னு!
அப்புறமென்ன 'அண்ணனின்' நேரடி வழிநடத்தலில், எங்காளு ஷன் போய்
காதலை கடிதத்தில வடிச்சுக் கொடுக்க, பொண்ணு கலவரமாகிக் கடாசி எறிய, எங்களின் பிரகடனப்
படுத்தப்படாத அந்தத் துக்கதினம். ஏன் ? நல்லா தானே போயிட்டிருந்திச்சு? அவளும்தானே பாத்திட்டிருந்தாள்?(உன்னத்தானா?) என்னப் பாக்கேக்க எல்லாம்
சிரிப்பாளே (எதுக்கு சிரிச்சாளோ?) அப்போ
இதுக்கு என்ன அர்த்தம்? அதுக்கு என்ன அர்த்தம்? ஏராளமான கேள்விகள் ஷன்னாலும்
மற்றவர்களாலும் மாறி மாறிக் கேட்கப்பட்டது.
விடை தெரியாத
பல கேள்விகளின் முடிவில் அண்ணன், 'இதுக்குத் தாண்டா
முதல்லயே சொன்னேன்...' ( என்ன ஒரு தீர்க்க தரிசனம்!
இதுதான் அண்ணன்! ) ஆரம்பிச்சு, தனது
சொந்த அனுபவங்கள், சில பல சம்பவங்கள், உதாரணங்களின் மூலம் அந்த
மாபெரும் உண்மையை(?!) முன்வைத்தார். 'பொண்ணுங்களே
இப்பிடித்தான்'.
அமைதி.
அண்ணன் 'இந்தப் பொண்ணுங்களையே நம்பக் கூடாதுடா' அந்த நிசப்த இரவில், 'ஆமாமா' எங்களின் கோரஸுடன், தூரத்தில் குறைக்கும் நாய்களின் பின்னணியுடன், பெண்களுக்கெதிரான அந்தத் தீர்மானம் மீண்டுமொருமுறை நிறைவேற்றப் பட்டது, எந்தப்பெண்ணுமே அறியாமல்!
ஷன்னும் இந்தமுறை ரொம்பப் பாதிக்கப்பட்டதால் மிகத்தெளிவாக தன் முடிவை அறிவித்துக் கொண்டான் 'இனி வாழ்கையில லவ் பண்ணக் கூடாது!' சில நாட்கள் அவனைக் காண முடியவில்லை! திடீரென்று ஒருநாள் , 'மச்சான் அவசரமா போறேண்டா பிறகு சந்திக்கிறேன்' சைக்கிளில் பேய் மாதிரி ஓடிட்டிருந்தான்!
சற்றுத் தொலைவில் சென்றுகொண்டிருந்தது ஒரு பெண்கள் கூட்டம்!
சற்றுத் தொலைவில் சென்றுகொண்டிருந்தது ஒரு பெண்கள் கூட்டம்!
Thursday, July 28, 2011
விஜய் துரோகியா? - ஒரு ரசிகனின் குமுறல்!
on July 28, 2011 by Unknown with
29 comments

விஜய் ராஜபக்ஷேவுக்கு எதிராக கையெழுத்திட மறுத்ததால் அவர் துரோகியா என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்!
இது பற்றி நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் தனது உள்ளக் குமுறலை என்னிடம் கொட்டியிருந்தார்! அதில் ஒரு பகுதியை அப்படியே..
கடந்த காலத்தில் அதாவது காவலன் வந்த காலத்தில் அண்ணன் டாக்டர் விஜய் ஈழத்தமிழருக்கு ஆதரவா கொந்தளித்து குரல் கொடுத்தது உண்மைதான்! அப்போது கூட சிலர், விஜய் தனது சுயநலத்திற்காக அப்படிச்செய்கிறார் என அறிவுகெட்டதனமாக அண்ணனின் இதயசுத்தியை, நேர்மையைச் சந்தேகித்தார்கள்!
அவர்கள் இப்போது வேலாயுதம் படம் ரிலீசாவதால் இந்த நேரத்தில் எதையாவது பண்ணினால் படம் இலங்கையில் தடை செய்யப்பட்டு விடுமென்பதால் அண்ணன் பம்முவதாகவும் கூறுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது இவர்களைப் பார்த்தால்! என்ன ஒரு அறியாமை!
அவர்களுக்காக நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்!
அண்ணன் தனது இடைவிடாத நற்பணிகளுக்கு மத்தியிலும் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து தூக்கி விடுவதாக அண்ணன் விட்ட சவால் உங்களுக்கு நினைவிருக்கா?அண்ணனே மறந்திருந்தாலும் நாங்க மறக்கமாட்டோம்! அண்ணனின் அந்தப் பேச்சால் அண்ணனின் எத்தனை ரசிகர்கள் இலங்கையைவிட்டே அவசரமா வெளிநாடுகளுக்கு ஓடினார்கள், எத்தனை பேர் இன்னும் பீதியுடன் இங்கே வாழ்கிறார்கள் என்று தெரியுமா?
இந்த சம்பவத்திற்குப் பிறகு சர்வதேசமே அண்ணனின் நடவடிக்கைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இந்தக்கையெழுத்து எவ்வளவு தீவிரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஏன் இவர்கள் புரிந்த கொள்ள மறுக்கிறார்கள்?
அவரது பேச்சில் பாதி புரியாததால் அதில் நியாயமிருப்பதாகவே தோன்றியது!
இந்த விஷயத்தில், 'சரியாகப் புரிந்துகொள்ள முடியாத கருத்துக்கள் பெரும்பாலும் நியாயமானவையாகவே இருக்கின்றன' என்ற ஜியோக்கியூட்ரசின் (கி.மு.781 - 827) வார்த்தைகளை நான் நம்புகிறேன்!
நான் சில பதிவுகளில் டாக்டர் விஜயை கலாய்த்ததாக வருத்தப்பட்டார்கள் சில நண்பர்கள்! இனி அப்படி நடந்து கொள்வதாக இல்லை - அதனால்தான் எனது கருத்தைச் சொல்லாமல் ஒரு ரசிகனின் குமுறலை பதிவு செய்திருக்கிறேன்!
தமிழகத்தின் ஒரு பிரபல 'நடுநிலை' நாளிதழ்தான் இந்த விஷயத்தில் இப்படி விஜய்யைக் கோர்த்து விட்டதாகவும் சொல்கிறார்கள்! இதுவும் உண்மையாகவே இருக்கலாம்!
அதே நாளிதழ்தான் மூன்று வருஷத்துக்கு முதல் அஜித்தைக் கோர்த்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்!அந்த நேரத்தில் நம்ம நண்பர்களான புலம்பெயர் நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் சிலர் உற்சாகமாக ஏகனைப் புறக்கணிப்போம்னு Facebook ல ஒரு Page கிறியேட் பண்ணி இருந்தார்கள்!
புலம்பெயர் தமிழர் எல்லாரும் வெற்றிகரமாக புறக்கணித்ததால்,'எஸ்' ஆகிட்டாய்ங்க! நாமதான் தெரியாம போயி.. சோகன் ஆகிட்டோம்.
அந்தப் புறக்கணிப்பாலதான் அந்த அருமையான படம் ஊத்திக்கிச்சுன்னு இன்னும் சிலபேர் சீரியஸா நம்பிட்டிருக்காய்ங்க - இயக்குனர் ராஜூசுந்தரம் உட்பட!
அதே நேரம் இந்த சர்ச்சைக்கு தகுந்த பதில் சொல்வதற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் உட்கார்ந்து கடுமையாக யோசித்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் நல்லதொரு பதில் தருவார் என்றும் அவர் சொன்னார்!
மேன்மை தங்கிய திரு.எஸ்.ஏ.சியின் அறிக்கைகள், கருத்துகள் என்றுமே பொருள் பொதிந்தவை! ஆழமாக சிந்திக்கத் தூண்டுபவை!
திமுக வின் படுதோல்விக்கு என்ன காரணம்? இதற்கான பதில் தேடி பத்திரிகையாளர்கள், பதிவர்கள், உடன்பிறப்புகள், ஏன் ஜெயலலிதா கூட தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது எஸ்.ஏ.சி. அதற்கான காரணத்தை மிக எளிமையாக விளக்கினார். அதாகப்பட்டது,
'கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்களில் ஐம்பது வீதமானோர் விஜய் ரசிகர்கள்!'
மீதி ஐம்பது வீதம்?
அவர்கள் எஸ்.ஏ.சி.யின் ரசிகர்கள் என்பதை அவர் சொல்லி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை!
Monday, July 25, 2011
தாய்மண் நோக்கி ஓர் பயணம்!
Posted under Jaffna, அனுபவம், யாழ் on July 25, 2011 by Unknown with
45 comments

சொந்த மண்ணில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு நாடோடிகளாக வாழும் அனுபவத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா?
சின்னசிறு வயதில் மட்டுமே பார்த்த ஊரின் எந்தக் காட்சிகளையும் கற்பனை பண்ண முயன்று, முடியாமல் நினைவுகளால் மட்டும் உணர்ந்திருக்கிறார்களா?
ஏதொ சில வாசனைகள், சிறுவயதில் கேட்ட பாடல்கள் அடிமனதில் இருக்கும் சிறுவயது ஞாபகங்களை எப்போதாவது கிளறிவிட, தூக்கம் தொலைந்ததுண்டா?
மீண்டும் பல வருடங்களின் பின் தாய்மண் திரும்பும்போது, அது தன் பழைய அடையாளங்களைத் முற்றிலும் துறந்து, அந்நியமாய் தெரியும்போது, என்ன தோன்றும்?
முதன் முதலாக சிறுவயதில் நீங்கள் நடைபயின்ற வீதியில் மீண்டும் நடந்து செல்கையில், பள்ளிக்கூடம், சின்னவயது நண்பர்களுடன் விளையாடி, உருண்டு, புரண்ட கோயில் மணல் வீதி எல்லாம் பார்க்கும்போது, பழைய நினைவுகள் மெதுவாக மீட்டப்படுவதை உணர்ந்ததுண்டா?
ஒருவேளை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும்! நண்பர்களின், உறவுகளின் அனுபவங்களைச் சொல்லக் கேட்டிருக்கக்கூடும்! நானும் கூட கேட்டிருக்கிறேன்! ஆனால் அந்த அனுபவங்களை வார்த்தைகளால் விபரிப்பதென்பது சாத்தியமானதல்ல என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும்!
எனக்கும் இப்போது புரிகிறது.....இருபது வருடங்களின் பின் என் சொந்த மண்ணை காண யாழ்ப்பாணம் சென்றபோது...
யாழ்ப்பாணம் 1996 இல் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தபின்னரும் உயர் பாதுகாப்பு வலயம் என்று அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று நமது ஊர்! கடந்த மாதம் முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது! இன்னும் அனுமதிக்கப்படாத பிரதேசங்களும் உண்டு!
சிலர் ஆச்சரியமாகக் கேட்டார்கள், 'அப்ப நீ சின்னப்பிள்ளையெல்லே! உனக்கு ஞாபகமிருக்கா?' என.
எனக்கும் ஆச்சரியம்! 'எப்படி என்னால் மறந்துவிட முடியுமென்று நினைக்கிறார்கள்?'
நண்பன் எபியும் என்னுடன் வந்தான். காங்கேசன்துறை வீதியால் பேரூந்தில் செல்கையில் இனம்புரியாத ஒரு உணர்வு! தெல்லிப்பழைச் சந்தியை அடைந்ததும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது! தொடர்ந்த சில நிமிடங்களில் எனது ஊர்...!
மாவிட்டபுரம்!
பேரைச் சொன்னதுமே ஊரின் மையமாக இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமே நினைவில் வரும் யாழ்ப்பாணத்தவருக்கெல்லாம்! கம்பீரமான இராஜ கோபுரத்துடன் அந்தப் பிரதேசத்துக்கே அழகு சேர்ப்பதாக!
கோயில் பிரகாரத்தில் நடக்கும்போது நான் கற்ற பாலர் பாடசாலை, ஆரம்ப பாடசாலை எல்லாவற்றையும் நண்பனுக்கு சொல்லிக்கொண்டே வந்தேன்!
என்றைக்குமில்லாமல் கோயிலுக்குப் போகும் நல்லபுத்தியுடன் நான் இருந்தேன்,
ஆனால் கொடுமையைப் பாருங்க கோயில் பூட்டி இருந்திச்சு! 'என்ன கொடுமை முருகா?'
நம்ம ராசி அப்பிடி என்பதால், அலட்டிக் கொள்ளாமல் கீரிமலை வீதியூடாக நடந்து சென்றோம்!
எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு அங்கமாக திகழ்ந்த, ஒரு சாட்சியாகவே கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்த, நான் முதன்முதலில் நடந்த வீதி ஜீவனை இழந்து..!
பொன்விளையும் பூமியாகத்தான் இருந்தது...இப்போ, வறண்டு, கட்டாந்தரையாகி, புழுதிக்காடாக..! இங்கே எல்லாம் வீடுகள் இருந்திருக்க வேண்டுமே?
ஒரு பிரபல அலுமினிய தொழிற்சாலை சிதைந்த நிலையில்..!
கூரைகள் அகற்றப்பட்டு, கதவு - யன்னல்கள் உடைத்தெடுக்கப்பட்டும், மரங்கள், பற்றைகளால் மூடிய சிதைந்த நிலையிலும் வீடுகள்!
ஏற்கனவே பற்றைகள் வெட்டித் துப்பரவு செய்யப்பட்டிருந்தாலும் மிதிவெடிகள் பற்றிய எந்த உத்தரவாதமும் இல்லையென்பதாலும், நம்ம ராசி பற்றி நன்றாகவே தெரிஞ்சதாலும் நண்பனிடம், 'மச்சான் நான் முன்னால போறேன் என்னோட ஸ்டெப்ஸை கவனமா Follow பண்ணி வா!' காணிக்காரனுக்கு கால் போனாலும் அதில ஒரு நியாயமிருக்கு ஆனா கூட போறவனுக்கு?
ஊரின் சுடலையின் அருகே.... காவல் தெய்வமான வைரவர் கோயில்! அருகிலுள்ள பெரும் ஆலமரம்!
சின்னஞ்சிறு வயதில் பாய்ந்து, தொங்கி ஊஞ்சலாடி மகிழ்ந்த அந்த பெரிய ஆலமரத்தின் விழுதுகள், வேர்களாகிப் பரந்து பருத்து...!
மீளக் குடியமரும் நோக்கில் வீடுகளைப் பலர் திருத்தவும், புதிதாகக்கட்டவும் தயராகுவதைக் காண முடிந்தது! இதுதான் நம்மவரின் தனித்தன்மை, எவ்வளவு துயர் வந்தபோதும் துடைத்தெறிந்து, தளராது மீண்டும் மீண்டும் எழுவோம்! இதில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதைச் சொல்லியே ஆகணும்!
இதுல இன்னொரு விஷயம், 'எரிகிற வீட்டில பிடுங்கிறது லாபம்'ன்னு, எஞ்சியிருக்கிற வீடுகளில் எது கிடைத்தாலும் திருடுவது, காணிகளிலுள்ள மரங்களை வெட்டி விற்பது என்று, திருட்டு அன்பர்கள் பலரும் வியாபார நோக்கத்துடன் அடிக்கடி விஜயம் (எங்கள் வீட்டிலும் நடந்தது!) செய்கிறார்கள்! - இதுவும் தமிழன்தான்!
எது எப்படியோ, என்னவானாலும், இன்னும் ஓரிரு வருடங்களில் மீண்டும் புது(பழைய)பொலிவுடன் என் தாய்மண்ணைப் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கையுடன் ஜீ...!
டிஸ்கி : இது பற்றிப் பதிவிடுமாறு கூறிய பதிவர் மதிசுதாவிற்கு நன்றி! ஆரம்பத்தில் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை! அதனால் ஒழுங்காகப் படமெடுக்கவில்லை!