எல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கும். அது அவர்களால் இனங்கண்டு கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கலாம். பலர் தம்மாலும், பிறராலும் கண்டுகொள்ளாமலேயே பயணத்தை முடித்தும் செல்லலாம். ஆனால் திறமைகள் இருந்தும், உணர்ந்தும் நிரூபிப்பதற்கு சரியான சந்தர்ப்பங்கள் அமையாதுவிடுதல் அல்லது மற்றவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போதல் என்பது எவ்வளவு கொடுமையானது!
1947 , Princeton பல்கலைக்கழகம், அமெரிக்கா. உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று. படிப்பவர்கள் எல்லாரும் எதிர்கால விஞ்ஞானிகள். புதிய மாணவர்களுக்கான முதல்நாள் பார்ட்டி. John Nash புதிய மாணவர். அங்கு ஒரு மாணவனோட Tie டிசைன்ல இருக்கிற தவறை கண்ணாடிக் கோப்பைல பட்டுத் தெறிக்கிற சூரிய ஒளி, பழங்கள் என்பவற்றோடு ஒப்பிட்டு, Mathematical ஆக நிரூபிக்கலாம் என்கிறார். சக மாணவர்களுக்கு அவர் சொல்வது எதுவும் புரியவில்லை. (அவங்களுக்கே புரியலன்னா..எனக்கு சுத்தமா புரியல!)
நம்மைச்சுற்றி நடைபெறும் எல்லா விஷயங்களையுமே, அறிவியலின் அடிப்படையில் சமன்பாடுகளால் விளங்கப்படுத்த முடியுமென்கிறார். அதை எழுதியும் காட்டுகிறார். யாருக்கும் புரியவில்லை. அவர் சொல்வது கிறுக்குத்தனமாகத் தோன்றுகிறது மற்றவர்களுக்கு! விளைவு? கிண்டல் செய்யப்பட, மற்றவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்கிறார் ஜோன்! அவருக்கு நண்பர்கள் யாரும் கிடையாது! (இருந்தாலும் எதையாவது சொல்லித் தெறிச்சு ஓட வைத்துவிடுவார்) தனிமை, தனது திறமைகளைப் புரிந்து கொண்டவர் யாருமில்லை என்ற வலி மனதைச் சோர்வடையச் செய்ய, அந்த நேரத்தில் அவர் தங்கும் அறையினைப் பகிர்ந்து கொள்ள வருகிறார் சார்லஸ். அவர் ஜோனிடம் நன்றாகப் பழகுகிறார். புரிந்துகொள்கிறார்.
ஜோன் உதை பந்தாட்டத்தில் பந்து கொண்டுசெல்லப்படும் முறைக்கு, குருவிக் கூட்டத்துக்கு தீனி போட்டதும் அவை எப்படி கவரப்படுகின்றன என்பதற்கெல்லாம் Formula எழுதுகிறார். வழக்கம்போல யாருமே புரிந்துகொள்ளவில்லை. மற்றவர்கள் போல இல்லாமல் புதுமையாக ஆராய்ச்சி செய்ய வேண்டுமென நினைக்கும் அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவருக்கு வேலை கிடைக்காமல் போகலாம் என்கிறார் அவருடைய ஆசிரியர்.
ஆசிரியரும், ஜோனும் Canteenனில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். அங்கு ஒருவருக்கு எல்லோரும் தங்கள் பேனாவைக் கொடுத்து வாழ்த்திவிட்டுச் செல்வார்கள். தங்கள் ஆராய்ச்சியில் சாதித்தவர்களுக்கு மரியாதை செய்யும் முறை அது. அப்பொழுது ஆசிரியர் ஜோனைக் கேட்பார்.
Teacher : What do you see, John?
John : Recognition
Teacher : Try seeing accomplishment
சாதனையாளர்கள் நிச்சயம் திறமைசாலிகள்தான்! ஆனால் சாதிக்காமல் இருப்பவர்கள் எல்லோருமே திறமையற்றவர்கள் எனக்கூறமுடியாதே! மற்றவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமலோ, அங்கீகாராம் கிடைக்காதவர்களாகவோ இருக்கக் கூடுமல்லவா?
ஒரு நாள் ஜோனும் இன்னும் நான்கு நண்பர்கள் பார்ல இருக்கிறார்கள். ஐந்து பெண்கள் வர்றாங்க. அதில ஒருத்தி ரொம்ப அழகு! ஒருத்தன் சொல்றான் 'நாங்க எல்லோரும் அவளை ட்ரை பண்ணிணா, யாரவது ஒருத்தனுக்கு செட் ஆகும்!' ஜோன் சொல்றார் 'இல்லை அது மற்றைய நான்கு பெண்களையும் அவமானப்படுத்திற மாதிரி. அதுவுமில்லாம அஞ்சு பேர் ட்ரை பண்ணிணா ஒருத்தனுக்கும் கிடைக்காம போககூட வாய்ப்பு இருக்கு. அதனால நாலுபேர் மற்ற நாலு பெண்களை ட்ரை பண்ணிணா, அஞ்சாவதா இருக்கிறவனுக்கு ஈஸியா செட் ஆகும்' (ஆனா நாம என்ன பண்ணுவோம்? எல்லாருமே அஞ்சாவதா இருக்க ட்ரை பண்ணமாட்டோம்? :-)) - இந்த விஷயம் ஜோனை, மேற்கொண்டு இன்னொரு விஷயத்தை சிந்திக்க வைக்கிறது!
Adam Smith என்ற விஞ்ஞானி 150 வருஷத்துக்கு முன் சொன்ன தத்துவம் 'ஒவ்வொருவனும் தன் நலனுக்காக உழைச்சாலே போதும் சமூகத்துக்கு நல்லது நடக்கும்'. ஜோன் அதை மாற்றி 'ஒவ்வொருவனும் தனக்கு மட்டுமல்லாமல் எல்லாருடைய நலனுக்கும் உழைச்சாத்தான் சமூகத்துக்கும் நல்லது நடக்கும்' என சமன்பாடுகளாக எழுதி எல்லோருடைய பாராட்டையும் பெற்றுக் கொள்கிறார். வேலையும் கிடைக்கிறது. தனது மாணவி ஒருத்தியைக் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்.
சில வருடங்கள்..இப்போது சங்கேத குறியீடுகளைக் கண்டுபிடிப்பதில் தேர்ந்தவராக இருக்கும் ஜோனை ரஷ்யா பற்றிய ரகசியத்தகவலை கண்டுபிடிக்க பெண்டகன் அழைக்கிறது. வெற்றிகரமாக வேலையை முடிக்கும் ஜோனை ராணுவ ரகசியம் என்பதால் வெளியில் தெரியாமல் வெறும் பாராட்டோடு அனுப்ப, ஒரு பெரிய கண்டுபிடிப்பு ரகசியமாகவே இருந்துவிட வருத்தமடைகிறார் ஜோன்! இந்த நேரத்தில் பார்ச்சர் என்ற ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரி ரஷ்யா அனுப்பும் ரகசியக் குறியீடுகளைக் கண்டுபிடிக்கும் வேலையைக் கொடுக்கிறார். இந்தவேலையைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக செய்கிறார். இந்தநிலையில் தன் பழைய அறைத்தோழர் சார்லஸ் மீண்டும் தனது எட்டு வயது மருமகளோடு ஜோனை வந்து சந்திக்கிறார்.
ஒருகட்டத்தில் ரஷ்யர்களுக்கு விஷயம் தெரிந்து ஜோனைத் துரத்துகிறார்கள். தப்பித்து ஓடும் ஜோனைப் பிடித்து மயக்கமாக்கி.......மருத்துவமனையில் ஜோன்! ஜோனின் மனைவியிடம் டாக்டர் சொல்வதுதான் ட்விஸ்ட்!
உண்மையில் சார்லஸ், பார்ச்சர், சார்லஸின் எட்டு வயது மருமகள் அப்படி யாருமே கிடையாது! எல்லாம் அவரது கற்பனையே! ஒரு வித மனநோய் - Schizophrenia. எப்போதெல்லாம் ஜோன் தனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என வருந்துகிறாரோ அந்த நேரத்தில் அவர்கள் வந்துவிடுகிறார்கள்! உண்மையில் ரஷ்யர்கள் யாரும் துரத்தவும் இல்லை.
மனைவி அவரது நிலையை புரிந்துகொள்கிறார். ஜோன் நினைக்கிறார் மருத்துவர்கள் சொல்வது ரஷ்யர்களின் சதி என்று. இந்தக்குழப்பத்தில சார்லஸ், பார்ச்சர், ஜோனிடம், உன் மனைவியைக் கொன்றுவிடு எனச் சொல்கிறார்கள். குழம்பிப் போய் யோசிக்கிறார் ஜோன். சார்லஸுக்கும், அவன் மருமகளுக்கும் எத்தனை வருடங்களானாலும் வயது அதிகமாகவேயில்லை என்ற உண்மை புலப்பட, அவர்கள் கற்பனைதான் என்பதை உணர்ந்துகொள்கிறார். கொஞ்சம் கொஞ்சமா அவர்களைத் தவிர்க்க முயற்சிசெய்கிறார்.
1994 ஆம் ஆண்டு! பேராசிரியராக இருக்கும் ஜோன் எல்லோரிடமும் நன்றாக சிரித்துப் பேசி நட்புடன் பழகுகிறார். இதனால் அவர் மனைவியும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஆனால் இப்போதும் பழைய நண்பர் சார்லஸ் வருகிறார். ஜோன் அவர்களுடன் இப்போது பேசுவதில்லை. யாரையாவது மாணவர்களைக் கூப்பிட்டு 'வந்திருப்பவர் உன் கண்ணுக்குத் தெரிகிறாரா?' என்று கேட்டு உறுதிப் படுத்திய பின்னரே புதியவர்களுடன் பேசுகிறார் ஜோன்!
பலவருஷத்துக்கு முன்னர் ஜோன் எழுதிய கேட்பாடுகளுக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பதாகத் தெரியவர, Canteenனில் எல்லோரும் தமது பேனாக்களை கொடுத்து வாழ்த்துகிறார்கள்!
1994 இல் Economic Sciences இற்கான நோபல் பரிசு பெற்ற John Forbes Nash என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதை!
Dr .John Forbes Nash
படத்தில் வரும் வசனங்கள் மிக அருமையானவை. மிக முக்கியமா நோபல் பரிசு வாங்கியபின் ஜோன் பேசும் உரை.
2002 இல் 4 Oscar விருதுகளைப் பெற்றுக் கொண்டது.
இயக்கம் : Ron Howard
Russell Crowe
இந்தப்படத்தில் ரஸல் ஒரு ஆச்சரியம்! Gladiator இல் நடித்த ரஸலா இது? ஏதாவது ஒரு மொக்கைப் படத்தை எடுத்திட்டு ஹீரோ காரெக்டராவே வாழ்ந்திருக்கார் என்று அடிக்கடி கேட்டுப் பழகிப் போனவர்கள் நாங்க! காரெக்டரா வாழ்வது எப்படின்னு இந்த ரெண்டு (Gladiator, A Beautiful Mind ) படத்தையும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்!
சூப்பர் பாஸ், ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்த படம், நினைவுகளை மீட்டிக்க உதவியது உங்கள் பதிவு.
ReplyDeleteமயக்கம் என்ன படத்தில் பல காட்சிகள் இதில் இருந்து சுடப்பட்டுள்ளன்..
ReplyDelete>>
ReplyDeleteஎல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கும். அது அவர்களால் இனங்கண்டு கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கலாம். பலர் தம்மாலும், பிறராலும் கண்டுகொள்ளாமலேயே பயணத்தை முடித்தும் செல்லலாம். ஆனால் திறமைகள் இருந்தும், உணர்ந்தும் நிரூபிப்பதற்கு சரியான சந்தர்ப்பங்கள் அமையாதுவிடுதல் அல்லது மற்றவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போதல் என்பது எவ்வளவு கொடுமையானது
அழகிய வரிகள்
>>
ReplyDeleteசாதனையாளர்கள் நிச்சயம் திறமைசாலிகள்தான்! ஆனால் சாதிக்காமல் இருப்பவர்கள் எல்லோருமே திறமையற்றவர்கள் எனக்கூறமுடியாதே! மற்றவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமலோ, அங்கீகாராம் கிடைக்காதவர்களாகவோ இருக்கக் கூடுமல்லவா?
aahaa, ஆஹா தத்துவமா பொழியறிங்களே.. செம
nice info friend
ReplyDeleteமயக்கம் என்ன படத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்புகள் பற்றி சொல்லவும்...
ReplyDelete//சி.பி.செந்தில்குமார்
ReplyDeleteமயக்கம் என்ன படத்தில் பல காட்சிகள் இதில் இருந்து சுடப்பட்டுள்ளன்..//
அப்பிடியா?
//Philosophy Prabhakaran said...
மயக்கம் என்ன படத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்புகள் பற்றி சொல்லவும்...//
ஆகா! ஏன் பாஸ் ஏன்? :-)
நான் 'மயக்கம் என்ன' பார்க்கவில்லை!இரண்டுக்கும் சம்பந்தம் இருக்குமா? தெரியல! :-)
இந்தப்படத்தில் ஜோனின் உழைப்பை யாரும் திருடவில்லை!
'தன் திறமையை நிரூபிக்க முடியாதவனின் வலி' என்ற ஒரு விஷயத்தில் ஒத்துப்போகலாம்!
வணக்கம் பாஸ்,
ReplyDeleteவித்தியாசமான முறையில் அறிவியலோடு பயணிக்கும் பட விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறீங்க.
நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கலை.
வெகு விரைவில் பார்க்க ட்ரை பண்றேன்.
என்னாது மயக்கமென்ன படம் இதுல இருந்து சுட்டதா அவ்வ்வ்வ்வ்வ்....
ReplyDeleteஜீ...நீங்கள் தரும் சில படங்களைப் பார்க்கமுடியவில்லையே என்கிற கவலை எனக்கு.அழகாக விமர்சனம் தருகிறீர்கள் !
ReplyDeleteThanks JEE!
ReplyDeleteமாப்ள அருமையா விமர்சனப்படுத்தி இருக்கீங்க...பாக்க முயற்சிக்கிறேன்...அந்த கடைசி ரெண்டு படமும் மறக்க முடியாதவைகள் எனக்கு!
ReplyDeleteஎல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கும். அது அவர்களால் இனங்கண்டு கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கலாம். பலர் தம்மாலும், பிறராலும் கண்டுகொள்ளாமலேயே பயணத்தை முடித்தும் செல்லலாம். ஆனால் திறமைகள் இருந்தும், உணர்ந்தும் நிரூபிப்பதற்கு சரியான சந்தர்ப்பங்கள் அமையாதுவிடுதல் அல்லது மற்றவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போதல் என்பது எவ்வளவு கொடுமையானது
ReplyDelete>>>
ஒரு படைப்பாளியின் மனநிலையிலிருந்து சொல்லியிருக்கீங்க சகோ.வாழ்த்துக்கள்
த ம 6
ReplyDeleteவணக்கம் நண்பரே! நான் பதியுலகில் புதியவன். தங்களின் விமர்சனம் அருமை. தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteநம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"
'Beaufiful Mind' மாதிரியே உங்க விமர்சனமும் 'Beautiful'! :)
ReplyDeleteவழக்கம்போல அருமை...ஜீ விமர்சனம் படிச்சால் எதிரில் படம் visible பண்றமாதிரி ஒரு உணர்வு தான் வருது...அந்த ட்விஸ்ட் செமையா இருக்கு...எனக்கு இந்த போஸ்ட்டின் ஆரம்பத்தில் முன்னோட்டமா குடுத்த ஆரம்ப வரிகள் கூட ரொம்ப பிடிச்சது...
ReplyDeleteஅழகாக விமர்சனப்படுத்தி இருக்கீங்க
ReplyDeleteThanks for the review.
அருமையான விமர்சனம்..இந்த படத்தை பற்றி ஏற்கனவே நிறைய கேள்விபட்டிருக்கிறேன்.ஆனால் இன்னும் பார்க்க வாய்ப்பு கிட்டவில்லை..பார்க்க வேண்டும்.நன்றி.
ReplyDeleteநிறைய மற்ற மொழி படங்களும் பாக்கணும் ஆன நேரம்தான் காணம இருக்கு!
ReplyDeleteஅருமையான விமர்சனம் Please read my blog www.rishvan.com
ReplyDelete