Thursday, November 3, 2011

துணிந்துவிடு தமிழா! -ஏழாம் அறிவுக் கதைகள்!

டீ.என்.ஏ!

விஞ்சானி சுபா! சுபாவிற்கு அறிமுகம் தேவையில்லை!


அப்படியே நான் அறிமுகப்படுத்தினாலும் மேலேயுள்ள படத்தை விட என்ன பெரிதாகச் சொல்ல முடியும்?

இப்போது சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்! 

தமிழ்நாட்டின் ...இல்லை இல்லை இந்தியாவின் தலைசிறந்த விஞ்சானி அவள்! அவள் அப்பாவும் உலக அளவில் பிரபலமான விஞ்சானிதான்!

வில்லன் டோங்க்லி கொல்லப்பட்ட நிம்மதி, சீனாவிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றிய மகிழ்ச்சியையும் மீறி மனதில் ஏதோ சஞ்சலம்!

டோங்க்லியும் ஒரு பெரிய ஜீனியஸ்தான் இல்லையா அதனால்தான்  அவனது பரம்பரையையும் ஆராய முனைந்தாள்!

தனது ஆய்வுச்சாலையில் நுழைந்தாள். அது கிராமத்திலிருக்கும் அவளது பாட்டியின் பங்களா ஸ்டைலிலேயே அமைக்கப்பட்டது!

அப்போதுதான் வந்திருந்த டோங்க்லியின் டீ.என்.ஏ ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தவள்...

ஆச்சரியம், அதிர்ச்சி,குழப்பம் எல்லாம் கலந்து கட்டி தொலைபேசியில் அடிக்குரலில் கோபத்துடன் தந்தையிடம் கேட்டாள்....


'அப்பா நீங்க சீனா போயிருந்தீங்களா?'



*****************************


துணிந்துவிடு தமிழா!


இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது!

அடிச்சுடணும்!

எதுக்குப் பயப்படணும்? 
யாருக்குப் பயப்படணும்? 
நான் ஒரு தமிழன் இல்லையா? 
எப்படிப்பட்ட வரலாறு எங்களுடையது? 
தமிழன்னா ஒரு வீரம் வரணுமா இல்லையா? 

இந்த நினைப்பே நரம்புகளை முறுக்கேறச் செய்தது!

முடிவு செய்துவிட்டான் சுற்றுமுற்றும் பார்த்து........

இப்பவே இந்த இடத்திலயே...... 

...........


ஷ்.....ஷிப்ப்ப்!

ஸ்ஸ்...அப்பாடா இப்பதான் நிம்மதியாச்சு! 


மூணு பாட்டில் பியர்னா சும்மாவா!

19 comments:

  1. சூப்பர் ஜோக்

    ReplyDelete
  2. ஜீ நீங்க அந்த விஞ்ஞானியளை மிஞ்சிட்டிங்க போல...

    அதுக்குள்ள பியர் என்று வேற கதை மாத்திறிங்களோ... அடி செருப்பால..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

    ReplyDelete
  3. ஆகா.. ஏழாம் அறழவை வச்சி நல்லாவே யாசிக்கிறிங்கப்பா...

    ReplyDelete
  4. ஷ்.....ஷிப்ப்ப்!

    ஸ்ஸ்...அப்பாடா இப்பதான் நிம்மதியாச்சு!



    மூணு பாட்டில் பியர்னா சும்மாவா
    >>
    அடக்கடவுளே நான் வேறென்னவோ நினைச்சுட்டேன்

    ReplyDelete
  5. ஹா,ஹா!சூப்பர் கதை!

    மூணு பாட்டில் பியருக்கு அப்புறம் எழுதிய கதையா?!:)

    ReplyDelete
  6. //
    மூணு பாட்டில் பியர்னா சும்மாவா!
    //

    அப்பஇப்படிதான் வரும் ...

    ReplyDelete
  7. அடப்பாவி சீனாகாரியையும் விட்டு வைக்கலாயா? உங்களுக்கு செம நக்கல்தான்...

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா ஏழாம் அறிவு!!?

    ReplyDelete
  9. ஆஹா, அடுத்த ஆட்டம்..

    ReplyDelete
  10. ஆஹா கிளம்பிட்டாயிங்க ஏ ஏலேய் மக்கா ஒடுங்கலேய் ஒடுங்கலேய் அது நம்மை நோக்கிதாம்லேய் வருது....

    ReplyDelete
  11. கலக்கிட்டீங்க ஜீ..

    ReplyDelete
  12. லேடி விஞ்சானியோட அப்பா நல்லவரா? கெட்டவரா?

    ReplyDelete
  13. //செங்கோவி said...
    லேடி விஞ்சானியோட அப்பா நல்லவரா? கெட்டவரா?//

    ஏண்ணே ஏன்??
    அண்ணே வேணாம்...அப்பா பற்றி பேசாதீங்க...இது அந்த அப்பா இல்ல இது வெறும் கதை அவ்வ்வ்வ்!

    ReplyDelete
  14. என்னமா கத விடுது பயபுள்ள.... ஒரு வேள அவங்க முன்னோரும் யாரும் சீனா போயிருப்பாங்களோ? அப்புறம் அந்தே பீர் மேட்டர் யாருக்கு?

    ReplyDelete
  15. ஏய்யா தாங்க முடியல்ல!

    ReplyDelete
  16. ஹா ஹா ஹா :)
    வாய் விட்டு சிரித்தேன் நண்பர் :)

    விஞ்சானி - திட்டமிட்டதா? ;)

    ReplyDelete
  17. AnonymousJuly 06, 2018

    Amazing squirt

    ReplyDelete