Sunday, November 20, 2011

Water (2005)


கடந்த நூற்றாண்டில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு பெரும் கொடுமையைப் பற்றிச் சொல்கிறது படம்! இன்றும்கூட இந்தியாவின்/உலகின்  ஏதோ ஒரு மூலையில் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்துகொண்டிருக்குமோ எனத் தோன்றுகிறது!


1938 ஆம் ஆண்டு! ஏழு வயதுச் சிறுமி சூயாவின் (Chuyia) நடுத்தரவயதுக்(?!) கணவன் இறந்து போக, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதே தெரியாமல், மொட்டையடிக்கப்பட்டு, வெள்ளைச் சேலை அணிவிக்கப்பட்டு, வாரணாசியிலுள்ள விதவைகள் தங்கி வாழும் ஒரு மடத்திற்கு தந்தையால் கூட்டிச்சென்று விடப்படுகிறாள். அவர்களின் தலைவி போல இருப்பவள் ஷகுந்தலா.

முதலில் அம்மாவிடம் செல்லவேண்டுமென்று முரண்டுபிடித்து அழும் சூயா அடுத்த சில நாட்கள் நாளை அம்மாவிடம் சென்று விடுவேன் எனக் கூறுகிறாள். பின்னர் நிஜம் புரிய தான் எப்போதுமே வீடு செல்ல முடியாது என உணர்ந்து அமைதியாகிவிடுகிறாள். அங்குள்ள சூழ்நிலையே முற்றிலும் வித்தியாசமாக, புதிதாக இருக்கிறது. எதுவுமே புரியவில்லை. பிடிக்கவில்லை!


அவளின் சந்தேகங்களுக்கு, அங்குள்ள யாரிடமுமே சரியான பதில்கள் கிடையாது! அதே கேள்விகள் அவர்களுக்குள்ளும்! அவர்களும் தங்கள் சிறிய வயதில் பலரிடமும் கேட்டு பதில்வராத கேள்விகள் அவை! பின்பு நமக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று சமாதானமடைந்து வாழப் பழகிவிட்டவர்கள் அவர்கள்! அதனால் கேள்விகள் கேட்கப்படுவதை அங்கு யாரும் விரும்புவதில்லை!

அங்குள்ள அழகிய இளம்பெண்ணான கல்யாணியுடன் நெருங்கிய தோழியாகிறாள் சூயா! கல்யாணியும் தனது சிறுவயதில் விதவையாகி அங்கு வந்தவள்தான்! ஒரு நாள் சூயாவும் கல்யாணியும், காந்தியின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட, மாற்றுச் சிந்தனை கொண்ட இளைஞனான நாராயணைச் சந்திக்க, அவர்களுடன் நட்பாகும் நாராயண் கல்யாணியைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். தனது, தாய் தந்தையர் சம்மதத்தைப் பெற்றும் விடுகிறான். பின்பு என்னவாகிறது?


கல்யாணி மறுமணம் செய்வதை தீவிரமாக எதிர்க்கிறாள் அங்குள்ள வயது முதிர்ந்த விதவையான மதுமதி. ஏன்?
அங்கே தங்கியிருக்கும் பெண்களுக்கான ஜீவனோபாயத்திற்கு என்ன வழி? அவர்களது வாழ்க்கையை அப்படி நெறிப்படுத்தியது யார்? - இதுபோன்ற கேள்விக்குப் பதில்கூறும் சர்ச்சைக்குள்ளான விஷயங்கள் பற்றிப் பேசுகிறது படம்!

ஆரம்பத்தில் (2000 ஆம் ஆண்டு?) வாரணாசியில் நடந்த படப்பிடிப்பு, அங்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளால் நிறுத்தப்பட்டு, பின்னர் 2004 இல் இலங்கையில் படமாக்கப்பட்டது! இலங்கையின் Bolgoda ஏரியில் 'செட்' அமைத்து படமாகியதாக இணையத்தில் தகவல்கள் கிடைக்கின்றன்!

ஷகுந்தலாவாக அதிகம்பேசாத, அமைதியான நடிப்பில் கவர்கிறார் Seema  Biswas கல்யாணியாக Lisa Ray. நாராயணாக ஜான் ஏப்ரஹாம். சூயாவாக இலங்கையைச் சேர்ந்த சிங்களச் சிறுமி சரளா.


அமைதியாக நகரும் படத்தில் பின்னணி இசையும், ஒளிப்பதிவும், வசனங்களும் மிக அருமையானவை. குறிப்பாக சிறுமி சூயா பேசும் வசனங்கள் (அல்லது கேள்விகள்)  

கணவன் இறந்தவுடன் பெண்ணுக்கு வாழ்க்கை இல்லை, மனைவியும் பாதி இறந்துவிடுகிறாள் மதுமதி சொல்ல, சூயா 'இன்னொரு பாதி உயிருடன் இருக்கே?'

ஆண் விதவைகள் எங்கே தங்கியிருக்கிறார்கள்? - இந்தக் கேள்வியே பெரும் தவறாகக் கருதப்பட்டு, மற்றைய பெண்களால் கண்டிக்கப்படுகிறாள்!


ஷகுந்தலா வேத ஆசிரியரிடம் மறுமணம் குறித்த கேள்வி கேட்கும்போது, விதவைகள் மறுமணம் செய்ய வேதம் அனுமதிக்கிறது எனக்கூற, அதிர்ச்சியடைந்து, 'இதை ஏன் யாரும் சொல்லவில்லை?' எனக் கேட்கிறாள். 'அதனால் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை!' அவர்கூறும்போது சகுந்தலாவின் முகத்தில் தெரியும் உணர்ச்சி!

அதனால் எங்களுக்கு ( ஆண்களுக்கு, அதிலும் வசதிபடைத்த ஆண்களுக்கு) எந்தப் பயனும் இல்லை! வேதத்தின் பெயரைச் சொல்லி, ஏராளமான பெண்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி, அவர்கள் வாழ்வையே இருண்டுவிடச் செய்யும் கொடுமையை, தொடர்ந்தும் அவர்களின் அறியாமையைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக்காலத்து மேல்வர்க்க ஆண்களைப் பற்றி ஒரே வசனத்தில் சொல்கிறது!


கல்யாணிக்குத் திருமணம் - இது சகுந்தலாவின் மனதில் மெல்ல மெல்ல ஏற்படுத்தும் மாற்றம், சூயாவிடம் 'நான் பார்க்க எப்படி இருக்கிறேன்?' எனக்கேட்கும்போது, அந்த முகத்தில் தெரியும் எதிர்பார்ப்பு! ஏக்கம்!சிறிய மலர்ச்சி! - அந்த ஒரு கேள்வியிலும், முகபாவத்திலுமே அவளுடைய மொத்த வாழ்க்கையின் சாரமும் அப்படியே!

எதுவுமே அறியாத சின்னஞ்சிறு வயதில் வயது கூடிய ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதும், அவர்களிறந்துவிட்டால், வெள்ளையுடை, இனிப்பான உணவுகள் கூடாது, சொந்தபந்தங்களிடமிருந்து விலக்கப்பட்டு, ஒதுக்குப்புறமாக, கவனிப்பாரின்றி, உறவுகளிருந்தும் அனாதைகளாய் ஒரு இருண்ட வாழ்க்கையில் அவர்களைப் பெற்றவர்களே தள்ளிவிடுவது...படம் பார்த்த சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும்!
  

படத்தின் ஒளிப்பதிவு மிக அருமையானது!வாரணாசிக் காட்சிகளில் குளிர்மை! மழைச்சாரல் நம்மீது தெறிப்பதுபோல! குறிப்பாக 'ஆயோ ரீ சகி' பாடல்காட்சியமைப்பும், இசையும்! பாடல்களுக்கான இசை ஏ.ஆர்.ரஹ்மான்!  இந்தப்பாடல் 2007  ஆம் ஆண்டுக்கான Oscarக்கு பரிந்துரைப்பதாக இருந்து பின்னர் இடம்பெறவில்லை!

2006 ஆம் ஆண்டுக்கான Genie விருதுகளை சிறந்த நடிகைக்காக சீமா பிஸ்வாஸ், ஒளிப்பதிவுக்காக Giles Nuttgens, பின்னணி இசைக்காக Mychael Danna ஆகியோருக்கு வழங்கப்பட்டது. Golden  Kinnaree Award - Bangkok  International  Film  Festival  உள்ளிட்ட பல விருகளைப் பெற்றது!

படத்தில் சூயாவாக நடித்த சிங்களச் சிறுமி சரளாவிற்கு Best Child Actor of the World விருது ஹாலிவுட்டின் Young Artist Foundation ஆல் வழங்கப்பட்டது!

2007 ஆம் ஆண்டுக்கான Oscarக்குப் பரிந்துரைக்கப்பட்டது!

இயக்கம் : Deepa Mehta
மொழி : English, Hindi


2006 இல் இலங்கையில் வெளியாகியிருந்தது. Majestic Cityயில் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தும் தவறவிட்டதற்கு இன்றும் வருந்துகிறேன்! இந்தியாவில் 2007 இல்தான் வெளியானது!

இந்தப்படம் சர்ச்சைக்குரிய படைப்பாளி தீபா மேத்தாவின் படம் என்பதால் மட்டுமே யாராவது பார்க்காமல் விட்டிருப்பார்களானால் (பலர் என்னிடம் அப்படித்தான் கூறினார்கள்) அவர்கள் முடிவு மிகத்தவறானது!    
  

27 comments:

 1. your description itself make me to cry

  ReplyDelete
 2. முதல் விமர்சனம்...

  ReplyDelete
 3. உங்கள் விமர்சனமே படத்தை பார்க்க தூண்டுகிறது....!!!

  ReplyDelete
 4. விமர்சனமே இவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்கே, படம் எப்படி இருக்கும்.

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம்

  ReplyDelete
 6. வணக்கம் ஜீ!
  அருமையான விமர்சனம்.. நான் இதுவரை படத்தை பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது..!!

  ReplyDelete
 7. செம விமர்சனம்... ஆனா இது மாதிரி உலக படங்களை பார்க்குறது அலுப்பா இருக்கு... டை கெடச்சா மூட் இருந்தால் பார்க்கலாம்

  ReplyDelete
 8. அருமையாக விமரிசனம் செய்துள்ளீர்கள்!

  ReplyDelete
 9. தீபா மேத்தா நான் நான்காம் ஐந்தாம் ஆண்டு படிக்கும் சமயம் மிக பிரபலம்!அப்போது தான் அவரை பற்றி முதல் அறிந்தேன்..இந்தப்படம் பல பாராட்டுகளை பெற்றிருந்தது!அதே சமயம் எதிர்மறை விமர்சனங்களையும் தான்!

  ReplyDelete
 10. ம்...இன்னொரு நல்ல படம் ஜீ.நன்றி !

  ReplyDelete
 11. ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க... நான்கூட இது ஏதோ விவகாரமான படம் என்றுதான் நினைத்திருந்தேன்...

  ReplyDelete
 12. >>இந்தப்படம் சர்ச்சைக்குரிய படைப்பாளி தீபா மேத்தாவின் படம் என்பதால் மட்டுமே யாராவது பார்க்காமல் விட்டிருப்பார்களானால் (பலர் என்னிடம் அப்படித்தான் கூறினார்கள்) அவர்கள் முடிவு மிகத்தவறானது!

  ஒரு சின்ன தவறு.. அதாவது நம்மாளூங்க ஃபயர் படம் மாதிரி இதுலயும் சீன் இருக்கும்னு போய் ஏமாந்தாங்க.. அதனால ஒரு நெகடிவ் விமர்சனம் வந்து நல்ல படத்தை கெடுத்துடுச்சு

  ReplyDelete
 13. வணக்கம் பொஸ்,
  வேலை பிசியால் வலைப் பக்கம் வர முடியலை.
  நல்லா இருக்கிறீங்களா?

  வித்தியாசமான பட விமர்சனத்தினைத் தந்திருக்கிறீங்க.

  நானும் நேரம் இருக்கும் போது பார்க்க ட்ரை பண்றேன்.

  ReplyDelete
 14. shooting நடந்த ஏரியா கு நான் போய் இருக்கேன்!!!!
  near to kalutara!!

  ReplyDelete
 15. மீண்டும் வணக்கம் மச்சி,
  நேற்றே இந்த விமர்சனம் குறித்து எழுத வேண்டும் என நினைத்தேன்.
  வேலைப் பளுவால் பின்னூட்டமிட முடியவில்லை.

  மிக மிக விரிவான முறையில் அலசியிருக்கிறீங்க.
  தங்களின் வழமையான விமர்சனப் பாணியிலிருந்தும் மாறுபட்டு இம் முறை திரைப்படத்தின் இதர அம்சங்களைப் பற்றி ஒப்பீட்டு உவமைகளுடன்,
  படத்தினைப் பார்க்க வேண்டும் எனும் அட்ராக்சன் ஏற்படும் வண்ணம் எழுதியிருப்பது இன்னும் சிறபாக இருக்கிறது.

  வாழ்த்துக்கள்!
  வழமையான பாணியினை விட்டுத் தாங்கள் இந்த வழியில் விமர்சனம் எழுதினால் இன்னும் அசத்தலாக இருக்கும்.


  இன்னோர் விடயம் அப்புறமா உங்க ப்ளாக்கில மேல் பக்கத்தில இருக்கிற நவிக்கேசன் பாரை நீக்கிடுங்க. இல்லேன்னா யாராச்சும் வேணும்னே கூகிளுக்கு ஸ்பாம் ரிப்போட் கொடுத்திடுவாங்க.
  இந்த இணைப்பில் நவிக்கேசன் பாரை நீக்குவது தொடர்பாக அறியலாம்.

  http://blogger-templates.blogspot.com/2005/01/remove-navbar.html

  ReplyDelete
 16. @நிரூபன்
  நன்றி நிரூபன்! உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும்!

  ReplyDelete
 17. நான் இந்தப்படம் பார்த்தேன் உங்கள் விமர்சனம் சிறப்பாக இருக்கு

  அன்பு கலந்த வணக்கம் நண்பரே இன்று நான் இந்த வலையுலகம் என்னும் கடலில் நீந்த வந்திருக்கின்றேன்..உங்கள் ஆதரவையும் தாறுங்கள்

  ReplyDelete
 18. வாட்டர் டி.வி.டி. வாங்கி பார்க்கிறேன் ஜீ. மயக்கம் என்ன..A beatiful mind.. உங்கள் ஸ்டைலில் ஓட்டுவீர்கள் என காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 19. இப்பவே படம் பாக்கணும் போல இருக்கு உங்கள் விமர்சனம் படித்ததில் இருந்து..... அவ்ளோ நேர்த்தி அழகு உங்கள் விமர்சனம்.... பாஸ் சீக்கிரமே முன்னணி பத்திரிகைகள் எதிலாவது இருந்து உங்களுக்கு விமர்சனம் எழுத வாய்ப்பு வந்தாலும் ஆச்சரியம் இல்லை... கலக்குறீங்க பாஸ்...

  ReplyDelete
 20. முந்தால் இன்னைக்கே படத்தை பார்த்துவிடுவேன்..... எல்லாம் உங்கள் விமர்சன மாயம்... ஹீ ஹீ... அப்புறம் மயக்கம் என்ன... விமர்சனத்தையும் உங்கள் பாணியில் படிக்க ஆவலாய் காத்து இருக்கேன்..

  ReplyDelete
 21. அழகிய பகிர்வு.

  ReplyDelete
 22. வாட்டர் படம் பத்தி கேள்வி தான் பட்ருக்கேன்..பட்...இப்போ தான் விமர்சனம் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்..லிரில் லிசா ரே வா...சட்டுன்னு ராணி முகர்ஜி மாதிரி இருந்தது...அந்த சிங்கள சிறுமி,இலங்கையில் ஷூட்டிங் மற்றும் அந்த விருது விஷயம் எல்லாம் எனக்கு தகவல்கள் ரொம்பவே புதுசு..பரவால ஜீ...நீங்க ரொம்ப மெனக்கடுறீங்க ஒவ்வொரு ரெவியூ க்கும்...குட்...

  ReplyDelete
 23. எதுவுமே அறியாத சின்னஞ்சிறு வயதில் வயது கூடிய ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதும், அவர்களிறந்துவிட்டால், வெள்ளையுடை, இனிப்பான உணவுகள் கூடாது, சொந்தபந்தங்களிடமிருந்து விலக்கப்பட்டு, ஒதுக்குப்புறமாக, கவனிப்பாரின்றி, உறவுகளிருந்தும் அனாதைகளாய் ஒரு இருண்ட வாழ்க்கையில் அவர்களைப் பெற்றவர்களே தள்ளிவிடுவது...படம் பார்த்த சில நாட்களுக்கு அதன் பாதிப்பு இருக்கும்!


  உங்கள் விமர்சனமே படத்தை பார்க்க தூண்டுகிறது

  ReplyDelete
 24. ஜீ எனக்கு உலக சினிமாக்களின் மேல் உள்ள ஆர்வம் இன்னும் ஒரு படி மேலே செல்வதற்கு உங்களது ரசனைமிகு பதிவுகளே ஒரு காரணம்...

  'வாட்டர்' படத்தை இன்னும் பார்க்வில்லை..... நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.எப்படியாவதுபார்த்துவிடுவேன்.


  போன வாரம்தான் 'Taare Zameen par' படத்தை பார்க்கக் கிடைத்தது... அழகான ஒரு படத்தை அறிமுகம் செய்த உங்களிற்கு நன்றிகள்.எந்தத் திரைப்படத்தையும் தரமான DVD களில் பார்க்கவேண்டும் என்ற எனது மனப்பாங்கே பல படங்களைப் பார்க்கவேண்டும் என்ற எனது ஆசைக்கு தடையாக நிற்கிறது.உங்களால் எப்படி இந்தப் படங்களைப் பார்க்க முடிகிறது? எங்கே கிடைக்கிறது? எனக்கும் சொன்னால் உதவியாக இருக்கும்.....

  ReplyDelete
 25. @க.சுரேந்திரகுமார்
  MC ல சியா கடைகளில் தேடினால் கிடைக்கும்! மற்றபடி டவுன்லோட் பண்ணுவதுதான் இலகுவானது!
  இங்கே தேடுங்கள்

  http://isohunt.com/torrents/axxo

  ReplyDelete
 26. ஒரு வேள நாம சரியா படத்த பாக்காம விட்டுட்டமோ?! திரும்ப பாத்தா போச்சு!
  அப்புறம்,//இந்தப்பாடல் 2007 ஆம் ஆண்டுக்கான Oscarக்கு பரிந்துரைப்பதாக இருந்து பின்னர் இடம்பெறவில்லை!// இப்பாடல் 2007 ஆஸ்கார் ஷோர்ட் லிஸ்டில் இடம் பெற்று நோமிநேசனில் வெற்றி பெற தவறியது என்பதே பொருத்தமாயிருக்கும்.இதே போல் இதுக்கு முன்னாடியும் ஏ.ஆர்.ஆரின் ரன்க்தே பசந்தியும் லகானும் ஆஸ்கார் ஷோர்ட் லிஸ்டில் இடம் பெற்று நோமிநேசனில் வெற்றி பெற தவறியது; அதாவது அவர் ஆஸ்கார் வெல்ல 7 வருடங்கள் முன்பே!!!

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |