விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, எந்தவித கேள்விக்கும் உள்ளாக்காமல் மிகச்சிலரை மட்டுமே ரசிக்க, நேசிக்க முடிகிறது. அப்படி எந்த சமரசமும் செய்துகொள்ள விரும்பாமல் நான் ரசிக்கும் ஒருவர் சுஜாதா! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது தன்னை நினைவு படுத்திப் போகிறார். என்னைப் போல பலருக்கும் இப்படியிருக்கலாம்.
Monday, February 27, 2012
சுஜாதா! சுஜாதா!
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, எந்தவித கேள்விக்கும் உள்ளாக்காமல் மிகச்சிலரை மட்டுமே ரசிக்க, நேசிக்க முடிகிறது. அப்படி எந்த சமரசமும் செய்துகொள்ள விரும்பாமல் நான் ரசிக்கும் ஒருவர் சுஜாதா! ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது தன்னை நினைவு படுத்திப் போகிறார். என்னைப் போல பலருக்கும் இப்படியிருக்கலாம்.
Tuesday, February 21, 2012
Monday, February 13, 2012
கவனிப்பு!
"ஐந்தரை மணிக்கு ஐட்டம் பஸ் ஸ்டாப்புக்கு வந்துடும்"- அறிவுறுத்தப்பட்டிருந்தேன்.
எனக்கு இது முதல் அனுபவம். உள்ளே இருக்கிற டென்ஷன் கண்களில் தெரிந்து விடாமல் கவனமாக,சுற்றுமுற்றும் போலீஸ் நடமாட்டம் இருக்கிறதா என கவனித்தேன்.
கவனிப்பு என்பது மிக முக்கியமான விஷயம். அதுவும் சில விஷயங்களில் அதீத கவனிப்புத் தேவை.
அவளின் அடையாளம் - அழகி! ப்ளூ ஜீன்ஸ், வைட் டீ ஷர்ட்! டீ ஷர்ட்டின் மார்பில் Shut the front door! என்று எழுதியிருக்கும். ரீபோக் ஷூ அணிந்திருப்பாள்.
அவள்தான் ஐட்டம்! - அப்படி நீங்கள் நினைத்தால், நான் பொறுப்பல்ல!
அவள் தோளில் Laptop பை. அதற்குள் கன கச்சிதமாக அடுக்கப்பட்ட சிறிய பாக்கெட்டுகளில்...ஐட்டம், பிரவுன் சுகர்!
அதோ அவள்தானா!எதிர்பார்த்த மாதிரியே என்னருகே வருகிறாள்! ஆனாலும் எதிர்பார்க்கவில்லை - இவ்வளவு அழகாயிருப்பாள் என்று! இவளுக்கு ஏன் இந்த வேலை? இவள் எல்லாம் பணம் சம்பாதிக்க இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா? எவ்வளவு ஈசியா..
எனது அடையாளம் சொல்லப்பட்டிருக்கும். ஆனாலும் கண்டு கொண்ட மாதிரியே காட்டிக்கொள்ளவில்லை - அனுபவசாலி! ஒரு சிறு சலனம்...சிறு கீற்றுப் புன்னகை...ம்ஹூம்!
ஆனால் நான்...அவள் ஒரு 'ம்..' சொன்னால் என் ஜாதகத்தையே ஒப்புவித்து விடுவேனோ எனத் தோன்றியது. வைட் டீ ஷர்ட்டின் மார்பில் 'Shut the front door!' பார்த்து பாதி திறந்த வாயை மூடிக்கொண்டேன்.
'எதுவும் பேசாமல் உன்னோட பெட்டியை அவள் பக்கத்துல வக்கிறே நம்ம சங்கேத கேள்வி கேட்டு, பதில் கன்ஃபர்ம் பண்றே'
முதல் கேள்வி 'மன்மோகன் உப்பு யூஸ் பண்ணுவாரா?', பதில் மௌனம்!
கேட்டேன். மௌனமாயிருந்தாள்! லேசாகப் புன்னகைத்தது போல் தோன்றியது, பிரமையாகக் கூட இருக்கலாம்.
இரண்டாவது கேள்விதான் உதைத்தது. எதுக்கு இப்பிடி ஒரு கேள்வி? நானெல்லாம் பொண்ணுங்க கிட்ட வலியப் போயி பேசினதே இல்ல! பெயர்கூடக் கேட்காத என்னைப் போய்...கேள்வி இதுதான்!
- ப்ரா சைஸ் என்ன?
- 16 GB
என்ன பார்க்கிறீர்கள்? கேள்விக்கும் பதிலுக்கும் சம்பந்தம் இருந்தா பிறகென்ன சங்கேத வார்த்தை?
அது சரி..எப்படிக் கேட்பது? தயங்கி..ஒருவாறு தொழில் தர்மத்தை(?!) நினைத்து மனதைத் தேற்றித் திடப்படுத்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் நெருங்கி...
அவள் காதிலிருந்து ஹெட் ஃபோனை அகற்றுவதற்கும், நான்கேட்பதற்கும் சரியாக இருந்தது
'ஏழாக இருக்கலாம்!'
- இது பதிலில்லையே என்கிறீர்களா? அது பதிலில்லை..... அவளின் செருப்பு சைஸ்!
நல்ல கனமான ஹீல்! ஒரே அடியில் வாயில் உப்புக் கரித்தது!
காலையிலிருந்து அஃபீசில் மேலதிகாரியிடம் திட்டு வாங்கியவன், திடீரெனக் காதலி சந்திக்க வர முடியாதென்றதில் காண்டானவன், ஒரு 'பைல்ஸ்' ஆன்டி, பஸ்ஸில் இடித்து ஒரு பெண்ணின் முறைப்பைச் சம்பாதித்த ஆசைமட்டும் நரைக்காத பெரிய மனுஷன், முப்பத்தைந்து கடந்தும் திருமணம் கூடிவராத பெண்மணி - எல்லோரும் ஏக காலத்தில் சமுதாய அக்கறை கொண்டதில்...
இதற்குமேல் சொல்ல வேண்டுமா?
'அய்யய்யோ என் பெட்டி தொலைந்தால் உயிரோடு விடமாட்டாங்களே...' மனம் அலறியபோது...
கையில் தவறிய எனது பெட்டியுடன், ஏதோ சொல்லிக் கூட்டத்தை விலக்கி, கீழே விழுந்து கிடந்த என்னை நோக்கி எழுவதற்குக் கைகொடுத்தாள் அவள்..
அழகி!
ப்ளூ ஜீன்ஸ், வைட் டீ ஷர்ட்.
Shut the front door! தோளில் Laptop பை. முக்கியமாக...ரீபோக் ஷூ!
Tuesday, February 7, 2012
Samaritan Girl
சியோலிலுள்ள பள்ளி மாணவிகளான யோ-ஜின், ஜே-யோங் இருவரும் நெருங்கிய தோழிகள். ஐரோப்பாவைச் சுற்றிபார்க்க வேண்டுமென்ற ஆசை இருவருக்கும்! அதற்கு நிறையப் பணம் வேண்டுமே? என்ன செய்வது? உழைத்துச் சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறார்கள். குறுகிய காலத்தில் பள்ளி மாணவிகளால் அப்படி என்ன தொழில் செய்து சம்பாதிக்க முடியும்? உலகின் புராதன தொழில்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்! ப்ராஸ்டிட்யூஷன்!
ஜே-யோங் பாலியல் தொழிலாளியாக, யோ-ஜின் அவளது ஏஜண்டாக செயற்பட, பணம் சேரத் தொடங்குகிறது! ஜே-யோங் தனது வாடிக்கையாளர் பற்றி, அவர்களுடனான உரையாடல்களை விபரித்துக் கூறுவாள். இது யோ-ஜினுக்குப் பிடிப்பதில்லை. அவர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்கிறாள் யோ-ஜின்!
தன்னை வசுமித்ரா என அழைக்குமாறு கூறுகிறாள் ஜே-யோங். வசுமித்ரா ஆதி காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த பெண் என்றும், அவளுடன் உறவுகொண்ட ஆண்கள் எல்லாரும் புத்தபிட்சுகளாக மாறிவிடுவார்கள் என்றும் அவளது அன்பு அவ்வாறு அவர்களை மாற்றிவிடுமாம் என்றும் கூறுகிறாள் ஜே-யோங்.
தனது வாடிக்கையாளர்களில் ஒரு இசைக்கலைஞனுடன் காதல் கொள்கிறாள் ஜே-யோங். இது தெரிந்ததும் யோ-ஜின் கோபப்படுகிறாள். அவன் யோ-ஜினிடம் வந்து டின்னருக்கு இருவரையும் அழைத்துச் செல்வதாகக் கூற, கடுமையாக திட்டி அனுப்பிவிடுகிறாள் யோ-ஜின்.
ஒருநாள் ஜே-யோங்கை ஒரு வாடிக்கையாளருடன் அனுப்பிவிட்டு அவளுக்காக அந்த மாடிக்கட்டடத்தின் கீழே யோ-ஜின் காத்திருக்கிறாள். திடீரென்று போலீஸ் சோதனைக்காக வர, ஜே-யோங் தான் இருந்த அறையின் யன்னலில் ஏறி கீழே குதிக்க ஆயத்தமாக நின்றுகொள்கிறாள். அறைக்குள் நுழைந்த போலீஸ் தங்களிடம் வரும்படியும் அவளைத் துன்புறுத்த மாட்டோமென்றும் கூற, கீழே ஜோவும் அவளைக் குதிக்க வேண்டாமென்று கூறி அலறுகிறாள்.
சிறிது நேரம் தடுமாறும் ஜே-யோங் எதையும் காதில்வாங்காமல் ஒரு புன்னகையுடன் கீழே குதித்துவிட, படுகாயமடையும் அவளை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகிறாள் யோ-ஜின்!
சிறிது நேரம் தடுமாறும் ஜே-யோங் எதையும் காதில்வாங்காமல் ஒரு புன்னகையுடன் கீழே குதித்துவிட, படுகாயமடையும் அவளை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகிறாள் யோ-ஜின்!
மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் ஜே-யோங் அந்த இசைக்கலைஞனை ஒருமுறை பார்க்கவேண்டுமெனக் கூற யோ-ஜின் அவசரமாக அவனைத் தேடி ஓடுகிறாள். அவன் கொஞ்சமும் இரக்கமில்லாமல் யோ-ஜினைத் தன்னுடைய இச்சைக்கு இணங்கினால் மட்டுமே வருவேனெனக் கூறி, அவளுடைய சூழ்நிலையின் இயலாமையைச் சாதகமாக்கிக் கொள்கிறான். மிக நிதானமாக அவளது பொறுமையைச் சோதித்து ஒருவழியாக இருவரும் மருத்துவமனையை அடைய, அங்கே ஜே-யோங் இறந்து விட்டிருக்கிறாள்.
தோழியின் இறப்பினால் பெரும் துயரடைகிறாள் யோ-ஜின். இப்போது தன்னிடமுள்ள பணம் அவளுக்குத் தேவையில்லை. அதேபோல ஒருவித குற்றவுணர்வும் சேர்ந்து கொள்ள, ஜே-யோங்கின் பழைய நண்பர்களைத் தொடர்பு கொண்டு ஜே-யோங் போலவே அவர்களிடம் அன்பாக நடந்துகொண்டு அவரவர் பணத்தை உரியவர்களிடமே திருப்பிக் கொடுக்க முடிவு செய்கிறாள்.
இதன் மூலம் தோழியின் துயர் நிறைந்த நினைவுகளிலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் விடுபட முடியுமென்று ஏதோ ஒரு அடிப்படையில் நம்பிக்கை கொள்கிறாள் யோ-ஜின்.
ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தின் மூலம் ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு அவர்களுடன் தன்னைப் பகிர்ந்துகொண்டு, அவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க, அனைவரும் ஆச்சரியப்பட்டு மறுக்க, யோ-ஜின் வற்புறுத்திக் கொடுக்கிறாள்.
இதன் மூலம் தோழியின் துயர் நிறைந்த நினைவுகளிலிருந்தும், குற்ற உணர்விலிருந்தும் விடுபட முடியுமென்று ஏதோ ஒரு அடிப்படையில் நம்பிக்கை கொள்கிறாள் யோ-ஜின்.
ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தின் மூலம் ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு அவர்களுடன் தன்னைப் பகிர்ந்துகொண்டு, அவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்க, அனைவரும் ஆச்சரியப்பட்டு மறுக்க, யோ-ஜின் வற்புறுத்திக் கொடுக்கிறாள்.
ஒருநாள் தந்தை ஒரு கொலை தொடர்பாக சம்பவ இடத்தில் விசாரணைக்குச் செல்லும் போலீஸ்காரரான யோ-ஜின்னின் தந்தை,எதிரிலுள்ள மாடிக்கட்டடத்தின் திறந்திருக்கும் யன்னல் வழியே, யோ-ஜின் ஒரு ஆணின் அணைப்பில் இருப்பதைப் பார்த்துவிடுகிறார். அதிர்ச்சியடையும் தந்தை இரவு யோ-ஜின் தூங்கியபின் அவள் வைத்திருக்கும் ஜே-யோங்கின் குறிப்புப் புத்தகத்தைப் பார்த்து தன மகள் பற்றிய கொடுமையான விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார்!
பின்பு அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடர்கிறார், தொடர்ந்து...? என்னவாகிறது?
பின்பு அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின்தொடர்கிறார், தொடர்ந்து...? என்னவாகிறது?
தனக்குப்பின் தனது மகளின் வாழ்க்கைக்காக அவளுக்கு அவசியம் தேவையான விஷயங்களை கற்பிக்கும் ஒரு பொறுப்புள்ள தந்தையாக யோ-ஜினுக்கு கார் பழக்கும் காட்சி!
வழக்கமான கிம் கி-டுக்கின் வழமையான படங்களின் கதாபாத்திரங்கள் போலல்லாமல், எல்லோரும் தேவையான அளவு பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இறுதிக்காட்சிகளில் மௌனமே கவிதைபோல!
ஒரு நடுத்தர வயது மனிதனின் செல்பேசியை தந்தை கையில் வைத்திருக்க, அது தெரியாத ஜோ வாடிக்கையாலரென நினைத்து தந்தையிடம் பேசும்போது அவர் சத்தம் செய்யாமல் அழும் மிகை நடிப்பில்லாத காட்சி!
கிம் கி-டுக்கின் படமாச்சே! ஏதாவது வில்லங்கம் வருமேன்னு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வரும் அந்தக் கனவு, ஒருகணம் அதிரவைத்தது!
2004 இல் வெளியான இந்தப்படம் வழமைபோல சொந்தநாட்டில் தோல்வியைத் தழுவ, உலகத் திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது!
Berlin International Film Festival 2004 இல் இரண்டாம் இடமான வெள்ளிக்கரடி விருதைப் பெற்றது!
இயக்கம்: Kim Ki-duk
மொழி: Korean
நாடு: தென் கொரியா
2004 இல் வெளியான இந்தப்படம் வழமைபோல சொந்தநாட்டில் தோல்வியைத் தழுவ, உலகத் திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது!
Berlin International Film Festival 2004 இல் இரண்டாம் இடமான வெள்ளிக்கரடி விருதைப் பெற்றது!
இயக்கம்: Kim Ki-duk
மொழி: Korean
நாடு: தென் கொரியா
இயக்குனர் கிம் கி-டுக்கின் மற்றைய படங்களையும் பாருங்கள்! பிடித்திருந்தால் திரட்டிகளில் வாக்களியுங்கள்!
Spring, Summer, Fall, Winter... and Spring
Spring, Summer, Fall, Winter... and Spring
Wednesday, February 1, 2012
Subscribe to:
Posts (Atom)