இரத்தப்படலம்! (XIII Comics)
ஒரு வழியா இரத்தப்படலம் கையில கிடைச்சிட்டுது! நீண்ட நாட்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பூபாலசிங்கம் புத்தகசாலையில் (கொழும்பு)சொல்லிவைத்துவிட்டு (அப்போது வரவில்லை) அந்தப்பக்கம் போகவில்லை. சமீபத்தில் பதிவர் Vimalaharan எனது பதிவின் பின்னூட்டத்தில் இது பற்றி தெரிவித்திருந்தார். நன்றி நண்பா!
எனக்காக ஒரு புத்தகம் எடுத்து வைத்திருந்தார்கள் போய் 'லபக்!'. என்னை மீறி சந்தோஷம் முகத்தில் பரவ...முன் பின் புரட்டிப்பார்க்க - தடவிப் பார்த்ததாகக் கூட ஞாபகம்! - கடையில் நின்ற ரெண்டு அங்கிள்ஸும் சிரித்தவாறே பாத்திட்டிருந்தாங்க! சின்னப்புள்ளத்தனமா இருந்திருக்குமோ?
ஒரு காலத்தில வெறித்தனமா அலைஞ்சு திரிஞ்சது, எவ்வளவோ தேடியும் முதல் மூன்று பாகமும் யாழ்ப்பாணத்தில கிடைக்காதது - எல்லா பிளாஷ் பேக்கும் வந்து போச்சு! இதெல்லாம் அவர்களுக்குத் தெரிய நியாயமில்லையே!
நான் எதிர்பார்த்ததைவிட புத்தகம் பெரிசா இருந்திச்சு! ஆனா தனித்தனியா வந்தபோது இருந்த தரம் (அச்சு, காகிதம்) குறைந்துவிட்டதுபோல தோன்றுகிறது! ஒருவேளை விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க இப்பிடி..? இன்னும் தரமாக வெளியிட்டிருக்கலாம் விஜயன் சார்! இரண்டுமடங்கு விலை கொடுக்கவும் ரெடி! ஆனா கொடுமையைப் பாருங்க வாங்கி வச்சுட்டு, உடனேயே திருமலை வந்துவிட்டேன்! வீடு போய் வாசிக்கணும்...ஒரே பரபரப்பா இருக்கு!
XIII காமிக்ஸ்
மிகப்பிரபலமான பிரெஞ்சு - பெல்ஜியம் காமிக்ஸ் தொடர்! 1984 இல் முதலாம் அத்தியாயம் வெளியானது. பிரபல காமிக்ஸ் காதாசிரியர் Jean Van Hamme, ஓவியர் William Vance இருவரின் கடுமையான உழைப்பு கதையை வாசிக்கும்போது புரியும். குறிப்பாக William Vance இன் படங்கள் ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போலவே இருக்கும்! விற்பனையில் சாதனை படைத்த இந்தத் தொடர் வீடியோ கேம் ஆகவும் மினி டீ.வி தொடராகவும் வெளியானது! கதையை ஒரே லைனில் சொல்வதாக இருந்தால் - தான் யார் என்பது தெரியாமல் தேடிக்கொண்டிருப்பவனின் கதை!
தன்னையே யாரென்று தெரியாதவனுக்கு, இடைவிடாது தன்னைத் துரத்தும் எதிரிகள் பற்றி எப்படித் தெரிந்திருக்கும்?
XIII காமிக்ஸ் உருவாவதற்கு காரணமாயிருந்தது பிரபல அமெரிக்க எழுத்தாளர் Robert Dudlum எழுதி 1980 இல் வெளியான The Bourne Identity என்ற த்ரில்லர் நாவல்தானாம்! இது பின்னர் திரைப்படமாக The Bourne Identity -1998 இல் வெளிவத்ததாம்! Matt Damon நடித்து 2002 இல் வெளியான The Bourne Identity நான் பார்த்திருக்கிறேன்!
XIII காமிக்ஸ்
மிகப்பிரபலமான பிரெஞ்சு - பெல்ஜியம் காமிக்ஸ் தொடர்! 1984 இல் முதலாம் அத்தியாயம் வெளியானது. பிரபல காமிக்ஸ் காதாசிரியர் Jean Van Hamme, ஓவியர் William Vance இருவரின் கடுமையான உழைப்பு கதையை வாசிக்கும்போது புரியும். குறிப்பாக William Vance இன் படங்கள் ஒரு ஹாலிவுட் படம் பார்ப்பது போலவே இருக்கும்! விற்பனையில் சாதனை படைத்த இந்தத் தொடர் வீடியோ கேம் ஆகவும் மினி டீ.வி தொடராகவும் வெளியானது! கதையை ஒரே லைனில் சொல்வதாக இருந்தால் - தான் யார் என்பது தெரியாமல் தேடிக்கொண்டிருப்பவனின் கதை!
தன்னையே யாரென்று தெரியாதவனுக்கு, இடைவிடாது தன்னைத் துரத்தும் எதிரிகள் பற்றி எப்படித் தெரிந்திருக்கும்?
XIII காமிக்ஸ் உருவாவதற்கு காரணமாயிருந்தது பிரபல அமெரிக்க எழுத்தாளர் Robert Dudlum எழுதி 1980 இல் வெளியான The Bourne Identity என்ற த்ரில்லர் நாவல்தானாம்! இது பின்னர் திரைப்படமாக The Bourne Identity -1998 இல் வெளிவத்ததாம்! Matt Damon நடித்து 2002 இல் வெளியான The Bourne Identity நான் பார்த்திருக்கிறேன்!
வெகுஜன இதழ்களில் விகடன் வாசிப்பவர்கள் தரமான ரசனை உள்ளவர்களாக நாங்கள் ஒரு வரையறையை வைத்துக் கொண்டிருந்தோம். இப்போதும்கூட! விகடன் எந்த வயதில் அறிமுகமாச்சுன்னு சரியா ஞாபகம் இல்லை! ஒரு காலத்தில் விகடனின் திரைவிமர்சனம் பலரையும் பெரிதும் கவர்ந்தது!
எனது Malena , Dancer in the Dark, Samaritan Girl போன்ற பதிவுகளை ஓரிரு மாதங்களுக்கு முன்னர் முகப்புப் பக்கத்தில் கொண்டுவந்தது விகடன்! யூத் புல் விகடனில் Dancer in the Dark இருக்கும்போது நான் Samaritan Girl பற்றி எழுத அவர்களும் மாற்றிவிட, தூக்குத்தண்டனை பற்றிக்கூறும் அந்த நல்ல படம் முகப்பில் இடம்பெறாதது எனக்கு வருத்தமே! அது பற்றி இங்கே! Dancer in the Dark
எனது மூன்று திரைப்பட பதிவுகளையும் பிரபலப்படுத்திய விகடனுக்கு நன்றிகள்!
எனது மூன்று திரைப்பட பதிவுகளையும் பிரபலப்படுத்திய விகடனுக்கு நன்றிகள்!
சமீபத்தில கூட ஒரு இணையத்தளம் என்னை பிரபலப்படுத்த விரும்பி என்னுடைய பதிவை, படங்கள் முதற்கொண்டு அப்படியே தங்கள் தளத்தில் பிரசுரித்தார்கள்! ஆனா பாருங்க, நம்ம வலைப்பூவின் முகவரியோ, லிங்கோ கொடுப்பதற்கு மறந்துவிட்டிருந்தார்கள்!
பன்னிக்குட்டி ராம்சாமி!
என்ன இருந்தாலும் முதன்முதலா நான் பதிவெழுத வந்த புதிதில், நானும் பதிவர்தானா என்று எனக்கே சந்தேகமாயிருந்தபோது என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துவைத்த மாம்ஸ் பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களுக்கு மிக்க நன்றி! எனக்கு மிகவும் பிடித்த ஒருவரால் அறிமுகப் படுத்தப்பட்டபோது மிக மகிழ்ச்சியடைந்தேன்! அவரைத் தொடர்ந்து அறிமுகப்படுத்திய பலருக்கும் நன்றிகள்!
பின்னூட்டமும் பதில்களும்!
வழமையாக பின்னூட்டங்களுக்கு நான் பதில் போடுவதில்லை.நான் பதில் போடா விட்டாலும் எனக்கு பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு மிக நன்றி! பலவேளைகளில் நான் பதிலிடாதது என்னைச் சங்கடப் படுத்துகிறது! இது நிச்சயமா என்னோட சோம்பேறித்தனத்தினால்தான் என்றாலும், அதைவிட முக்கியமா நான் பதில் போடுவது பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அநாவசியமாக நானே அதிகரித்து விடுவதாகப் போய்விடும் என்பதும் ஒரு காரணம்! இது நல்லதா,கூடாதா என்று தெரியவில்லை! பின்னூட்டங்களில் சொன்னா நல்லா இருக்கும்!
இன்றைய பதிவு நன்றிலயே போகுது! வழக்கமா நன்றி சொல்வதெல்லாம் நூறாவது பதிவில்தான் இடம்பெறும். ஆனா நான் நூறு தான்டினப்புறம்தான் நான் அதைக் கண்டுகொண்டாதால் இபோ சொல்கிறேன்! அது சரி நன்றி சொல்வதற்கு எதற்கு நூறும், நூற்றைம்பதும் மனசிருந்தா போதாதா?
பின்னூட்டமும் பதில்களும்!
வழமையாக பின்னூட்டங்களுக்கு நான் பதில் போடுவதில்லை.நான் பதில் போடா விட்டாலும் எனக்கு பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு மிக நன்றி! பலவேளைகளில் நான் பதிலிடாதது என்னைச் சங்கடப் படுத்துகிறது! இது நிச்சயமா என்னோட சோம்பேறித்தனத்தினால்தான் என்றாலும், அதைவிட முக்கியமா நான் பதில் போடுவது பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அநாவசியமாக நானே அதிகரித்து விடுவதாகப் போய்விடும் என்பதும் ஒரு காரணம்! இது நல்லதா,கூடாதா என்று தெரியவில்லை! பின்னூட்டங்களில் சொன்னா நல்லா இருக்கும்!
இன்றைய பதிவு நன்றிலயே போகுது! வழக்கமா நன்றி சொல்வதெல்லாம் நூறாவது பதிவில்தான் இடம்பெறும். ஆனா நான் நூறு தான்டினப்புறம்தான் நான் அதைக் கண்டுகொண்டாதால் இபோ சொல்கிறேன்! அது சரி நன்றி சொல்வதற்கு எதற்கு நூறும், நூற்றைம்பதும் மனசிருந்தா போதாதா?
அட நூறு பதிவு தாண்டீட்டிங்களா..?? வாழ்த்துக்கள்.. எனக்கு தெரிந்த பூபால சிங்கம் புத்தகசாலை யாழ்பாணத்தில இருக்கிறதுதான்.. கொழும்பிலும் இருக்கின்றதா..??
ReplyDeleteவணக்கம் சார், கும்புடுறேனுங்கோ! இனிய வெள்ளிக்கிழமை இரவு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇரத்தப்படலம் இப்போத்தான் கெடைச்சுதா? நல்லது சார், எனக்கு குவாலிட்டி பிடிக்கலை! உடனே விஜயன் சாருக்குப் ஃபோன் போட்டு சொன்னேன்! ‘ ப்ரிண்ட் பண்றது ரொம்ப காஸ்ட்லியா இருக்கும்மா’ன்னாரு!
அப்புறம் இங்க ஊருல இது என்ன விலை சார்?
வில்லியம் வான்சின் ஓவியங்கள் எப்படி சார்?
அப்புறம் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வது உங்களுக்கும், வாசகர்களுக்கும் இடையேயான, உறவை மேலும் வலுப்படுத்தும்!
பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துத்தான் காணப்படும் அதுனால என்ன சார்? அது என்ன தெய்வக் குத்தமா?
- ஆனா எனக்கு எது முக்கியம் தெரியுமா? என்னோட கமெண்டுக்கு பதில் சொல்ல, நீங்க செலவிடும் நேரத்தை, எனக்கு அங்க வந்து கமெண்டு போட நீங்க செலவிடணும்ங்கறதுதான்!
நன்றி சார்!
உங்களுக்கும் நன்றி...
ReplyDeleteஹா ஹா ஹா ஹா நடத்துங்க நடத்துங்க, பன்னிகுட்டி வாழ்க...
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDelete(100வது பதிவிற்குத் தான் வாழ்த்து சொல்லணுமா என்ன? வாழ்த்து சொல்ல 100ஓ 50ஓ எதுக்கு..மனசு இருந்தாப் போதாதா...)
பன்னிக்குட்டியார் நல்ல ரசனை உள்ளவர்.அதான் கரெக்டாப் பிடிச்சு அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
ReplyDeleteஏதாவது விவாதத்தை தூண்டும் பதிவென்றால், பின்ன்னூட்டத்திற்கு பதில் அளிக்கலாம். இல்லை, என்னைப் போல் நேரம் ஒதுக்க முடிந்தால் பதில் அளிக்கலாம்..
ReplyDeleteஇல்லேன்னா, பரவாயில்லை ஜீ.
///சமீபத்தில கூட ஒரு இணையத்தளம் என்னை பிரபலப்படுத்த விரும்பி என்னுடைய பதிவை, படங்கள் முதற்கொண்டு அப்படியே தங்கள் தளத்தில் பிரசுரித்தார்கள்! ஆனா பாருங்க, நம்ம வலைப்பூவின் முகவரியோ, லிங்கோ கொடுப்பதற்கு மறந்துவிட்டிருந்தார்கள்!/// சேம் பீலிங் ;-)
ReplyDeleteபதிவர்களை ஊக்குவிக்கும் விகடனுக்கு நன்றிகள்...
வணக்கம் ஐயா! அப்ப இது 150ஆவது பதிவுதானே??? அப்படி இல்லை என்றாலும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteaanantha vikadan varuththam irukka thaane seiyum ... athai perithaaka kollaa vendaam.. thodarnthu eluthungkal ungkalukkaana ankkikaaram kidaikkum... periya alaa varuvingkal..vaalththukkal
ReplyDeleteகாப்பி அடிச்சுட்டாங்கன்னு எவ்வளவு நாசூக்கா சொல்றாரு, ஐ லைக் தட் அப்ரோச்...
ReplyDeleteவாழ்த்துக்கள் பாஸ்.
ReplyDeleteகாமிக்ஸ் மறக்க முடியாத ஒன்று, ஒரு காலத்தில் காமிக்ஸ் பின்னால் அலைந்த நினைவுகளை இப்போது மீட்டினாலும் ஆனந்தம்தான்.ராணி காமிக்ஸ் தான் நான் அதிகம் படித்து உள்ளேன் , அதில் வரும் ஹீரோ மாயாவியை மறக்கவா முடியும்.
எல்லோருக்கும் பதில் போடுவது கஷ்டம் தான்... முடிந்தவரி ஆக்கப்பூர்வமான கேள்விகளையோ, சந்தேகங்களையோ முன்வைப்பவர்களுக்கு மட்டுமாவது பதில் போடலாம்...
ReplyDeleteGOOD POST KEEP IT UP.
ReplyDelete//காட்டான் said...
ReplyDeleteஎனக்கு தெரிந்த பூபால சிங்கம் புத்தகசாலை யாழ்பாணத்தில இருக்கிறதுதான்.. கொழும்பிலும் இருக்கின்றதா..?//
ஆமா பாஸ்! Sea ஸ்ட்ரீட்ல தான் பிரதான கடை. வெள்ளவத்தையிலும் ஒரு கிளை!
//ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
எனக்கு குவாலிட்டி பிடிக்கலை//
எனக்கும்! :-(
//அப்புறம் இங்க ஊருல இது என்ன விலை சார்?//எங்க ஊர்ல ரூ. 800/-
//வில்லியம் வான்சின் ஓவியங்கள் எப்படி சார்?//அது வழக்கம் போல கலக்கல் தான்! :-)
//ஆனா எனக்கு எது முக்கியம் தெரியுமா? என்னோட கமெண்டுக்கு பதில் சொல்ல, நீங்க செலவிடும் நேரத்தை, எனக்கு அங்க வந்து கமெண்டு போட நீங்க செலவிடணும்ங்கறதுதான்!//
நிச்சயமா! நன்றி பாஸ்! :-)
//ரெவெரி said...
உங்களுக்கும் நன்றி...//
எதுக்கு?..சரி அப்போ உங்களுக்கும் நன்றி! :-)
//MANO நாஞ்சில் மனோ said...
ஹா ஹா ஹா ஹா நடத்துங்க நடத்துங்க, பன்னிகுட்டி வாழ்க...//
நன்றிங்கோ! :-)
//நிகழ்வுகள் said...
பதிவர்களை ஊக்குவிக்கும் விகடனுக்கு நன்றிகள்..//அதே! :-)
//Jana said...
வணக்கம் ஐயா! அப்ப இது 150ஆவது பதிவுதானே??? அப்படி இல்லை என்றாலும் வாழ்த்துக்கள்//இல்லை ஐயா! இது 113 தான்! :-)
//மதுரை சரவணன் said...
vaalththukkal//நன்றி!
//அழகி said...
GOOD POST KEEP IT UP// thanks!
நூறு பதிவு தாண்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள் .
ReplyDelete//செங்கோவி said...
ReplyDeleteவாழ்த்துகள்.// நன்றிண்ணே!
//பன்னிக்குட்டியார் நல்ல ரசனை உள்ளவர்//
தெரியும் உங்களை மாதிரியே!
//ஏதாவது விவாதத்தை தூண்டும் பதிவென்றால், பின்ன்னூட்டத்திற்கு பதில் அளிக்கலாம். இல்லை, என்னைப் போல் நேரம் ஒதுக்க முடிந்தால் பதில் அளிக்கலாம்..//
ம்ம்..செய்கிறேன்!
//Real Santhanam Fanz said...
காப்பி அடிச்சுட்டாங்கன்னு எவ்வளவு நாசூக்கா சொல்றாரு, ஐ லைக் தட் அப்ரோச்..//
ஹி ஹி! நன்றி பாஸ்! நீங்கதானே அதைக் கண்டுபிடிச்சு சொன்னீங்க!
//துஷ்யந்தன் said...
வாழ்த்துக்கள் பாஸ்.
காமிக்ஸ் மறக்க முடியாத ஒன்று, ஒரு காலத்தில் காமிக்ஸ் பின்னால் அலைந்த நினைவுகளை இப்போது மீட்டினாலும் ஆனந்தம்தான்.//
உண்மை! நன்றி பாஸ்!
//Philosophy Prabhakaran said...
முடிந்தவரி ஆக்கப்பூர்வமான கேள்விகளையோ, சந்தேகங்களையோ முன்வைப்பவர்களுக்கு மட்டுமாவது பதில் போடலாம்..//
செய்கிறேன் பாஸ்! நன்றி உங்கள் கருத்திற்கு!
ஜீ..!
ReplyDeleteநீங்களும் காமிக்ஸ் ரசிகரா? ஹஹஹஹ நான் என்னுடைய பதின்ம வயதுகளில் காமிக்ஸ்களுடனேயே அலைந்திருக்கிறேன். இப்போதும் அந்த ஆர்வம் இருக்கிறது.
பின்னுாட்ட விடயம் தொடர்பில் நீங்கள் கூறும் கருத்தே என்னுடையதும். ஹிஹிஹி எவ்வளவு பொருத்தமாக இருக்கு?
சரி நன்றிங்க. நல்ல பதிவுகளை எழுதுவதற்காக.
இனிய காலை வணக்கம் பாஸ்,
ReplyDeleteஇரத்தப் படலம்- உங்களின் வர்ணிப்புக்களைப் பார்க்கையில் எனக்கும் வாங்கிப் படிக்க வேண்டும் எனும் ஆவல் எழுகின்றது.
ஆனால் டைம் இல்லையே...
உங்க பதிவையும் பப்ளிசிட்டி பண்ணிட்டாங்களா...அவ்.......
இதில பெரிய காமெடி என்னவென்றால், என் ஒவ்வோர் பதிவிலும் வரிக்கு வரி ஓரிரு வசனம் சேர்த்திருப்பேன்...
காப்பி பேஸ்ட் பண்ணுவோர் அதனையும் சேர்த்து வெளியிட்டிருந்தார்கள்..
அது எப்படீன்னா...
சீ...தூ...வெட்கம் ரோசம் மானம் ஏதுமின்றி.....................
இப்படி எழுதியிருந்தேன்.
ஹா..ஹா.....
அப்புறம் நீங்கள் விமர்சனத்திற்காகத் தெரிவு செய்யும் திரைப்படங்கள் வித்தியாசமானவை, உயிரோட்டமுள்ள படைப்புக்களை நீங்கள் விமர்சிப்பது எனக்கும் ரொம்பப் பிடிக்கும் பாஸ்..
தூக்குத்தண்டனை விகடனில் வராதது எனக்கும் கவலையளிக்கிறது..
தொடர்ந்தும் எழுதுங்கள்..
விவாதப் பதிவுகள் வைத்தால், இல்லைச் சர்ச்சைக்குரிய பின்னூட்டங்கள் என்றால் பதிலுரைக்கலாம்.
அல்லது பொதுவாக கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று போடலாம்.
பன்னிக்குட்டி சார் என்னுடைய நான்காவது பதிவினைப் பிரபலமாக்க உதவினார். நல்ல மனுசன் பாஸ்..
தொடர்ந்தும் எழுதுங்க.
வாழ்த்துக்கள் சொன்னால்......ஒரு எல்லை போட்டு நின்று விடுவீங்கள் என்பதால்.....
முதல்ல எனக்கு கோசியில் தோசை வாங்கி அனுப்பி விடுங்க.
நான் எதிர்பார்த்ததைவிட புத்தகம் பெரிசா இருந்திச்சு! ஆனா தனித்தனியா வந்தபோது இருந்த தரம் (அச்சு, காகிதம்) குறைந்துவிட்டதுபோல தோன்றுகிறது!//
ReplyDeleteஅவ்...அடப் பாவி...
புத்தகம் பற்றி வர்ணனை கொடுக்கும் போதும் மொக்கையா..
ஹா...ஹா..
வாழ்த்துகள்
ReplyDeleteஇன்று என் வலையில் ...
ReplyDelete“நான் ரொம்ப ஏழைங்க. பக்கத்து ஆளுகிட்ட பைசா கேளுங்க” - கருணாநிதி துயரம்
ஒன்னும் தப்பில்லீங்கோ
ReplyDeleteவாழ்த்துக்கள் .................
ReplyDeleteநானும் காமிக்ஸ் பிரியந்தான், சின்ன வயசில் விரும்பி படிச்சது இப்ப ஏன்னோ படிக்க பிடிக்கலை, பிடிக்கலைங்கறத விட இப்ப அதிகமா எங்கயும் கிடைக்கறதும் இல்ல
ReplyDeleteவிகடனின் அறிமுகம் உங்களுக்கு சாதரணம்தான், அந்தளவு நன்றாக எழுதுகிறீர்கள் ஜீ
பின்னூட்டத்திற்கு பதில் போடுவது உங்கள் விருப்பம்தான் என்றாலும் பொதுவாக மொத்தமாகவாவது ஒரு நன்றி சொல்லலாம் என நினைக்கிறேன், முடிந்தால் பிரபா சொன்னபடி செய்தாலும் நன்றாக இருக்கும் - கருத்துக்காக மட்டும் :-)
வாழ்த்துக்கள் ஜீ உங்களின் பணி இன்னும் சிறக்க..
ReplyDeleteஒரு அருமையான பதிவரைத்தான் அறிமுகப்படுத்தி இருக்கோம்னு ரொம்ப சந்தோசமா இருக்கு. அதை இன்னும் நீங்க ஞாபகம் வைத்திருப்பதும் இல்லாம, பதிவிலும் குறிப்பிட்டிருப்பது உங்கள் பெருந்தன்மை...! ரொம்பவே நெகிழ வெச்சுட்டீங்க. பதிவுலகில் இருக்கும் நல்ல உள்ளங்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்கள்...... விகடன் தாண்டியும் வளர்வீர்கள்...!
ReplyDeleteபின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பது அவரவர் வசதியை பொறுத்ததுதான். பின்னூட்டங்களில் பதிவிற்கு சம்பந்தமான கேள்வியோ, விவாதமோ இருந்தால் பதிலளிப்பதே சிறந்தது. கமெண்ட்டுகளின் எண்ணிக்கையெல்லாம் ஒரு மேட்டரே அல்ல..... அதை பற்றியெல்லாம் யோசிக்காதீங்க ஜீ.
ReplyDelete@kobiraj
ReplyDelete@ "என் ராஜபாட்டை"- ராஜா
@ suryajeeva
@அம்பாளடியாள்
@ ஜ.ரா.ரமேஷ் பாபு
நன்றி!
//மருதமூரான். said..
நீங்களும் காமிக்ஸ் ரசிகரா?//
ஓ! நீங்களுமா...! :-)
//நிரூபன் said...
பன்னிக்குட்டி சார் என்னுடைய நான்காவது பதிவினைப் பிரபலமாக்க உதவினார். நல்ல மனுசன் பாஸ்..
தொடர்ந்தும் எழுதுங்க//
நன்றி நிரூபன்! உங்கள் கருத்துகளுக்கு!
//இரவு வானம் said...
முடிந்தால் பிரபா சொன்னபடி செய்தாலும் நன்றாக இருக்கும் - கருத்துக்காக மட்டும் :-)//
நிச்சயமா! நன்றி!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பின்னூட்டங்களில் பதிவிற்கு சம்பந்தமான கேள்வியோ, விவாதமோ இருந்தால் பதிலளிப்பதே சிறந்தது. கமெண்ட்டுகளின் எண்ணிக்கையெல்லாம் ஒரு மேட்டரே அல்ல..... அதை பற்றியெல்லாம் யோசிக்காதீங்க ஜீ//
நன்றி பாஸ்! உங்கள் கருத்துகளுக்கும், அன்புக்கும்! :-)
சின்ன வயசுல காமிக்ஸ் கதை உள்ள புத்தகம் கடைக்கு வந்த உடனே அன்னைக்கே படிக்கனும்னு உள்ள வெறி பின்னாளில் என்னை புத்தக புழுவாக மாற்றியது .
ReplyDeleteஎனது பழைய நினைவுகளை தூண்டியதற்கு நன்றி நண்பரே
வாழ்த்துக்கள் ஜி ,தொடர்ந்து கலக்குங்க
ReplyDelete//
ReplyDeleteகடையில் நின்ற ரெண்டு அங்கிள்ஸும் சிரித்தவாறே பாத்திட்டிருந்தாங்க! சின்னப்புள்ளத்தனமா இருந்திருக்குமோ?
//
ஹாய் ஜீ..
இந்த மாதிரி அவமானங்கள் எல்லாம் காமிக்ஸ் ரசிகனின் வாழ்க்கையில் ஏற்படும் வழமையான சோதனைகள் :). அரிதாக கிடைப்பதால்தான் இன்னும் காமிக்ஸ் என்பது சுவாரசியமாக இருக்கிறது போலும். காமிக்ஸ் வாசிக்காதவருக்கும் புரியும் வண்ணம் இரத்த படலம் பற்றிய அறிமுகத்தினை கொடுத்திருக்கிறீர்கள்
வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteஇன்று கூடல் பாலாவின் வலையில்
வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்
அட நூறு பதிவு தாண்டீட்டிங்களா...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வணக்கம் சார் இந்த காமிக்ஸ் புந்தகங்களை படிப்பதிலிருக்கும் பிடிப்பு வேறெந்த புத்தகங்களை படிப்பதிலும் வருவதில்லை!
ReplyDelete////ஒரு காலத்தில வெறித்தனமா அலைஞ்சு திரிஞ்சது, எவ்வளவோ தேடியும் முதல் மூன்று பாகமும் யாழ்ப்பாணத்தில கிடைக்காதது////
ReplyDeleteஇப்போ பல சிறுவர்களிடம் இந்த ஆர்வம் குறைந்து விட்டது.
நான் லயன்கமிக்சை விட ராணி காமிக்ஸ் வாசித்ததே அதிகம்..
தங்களது ஹேலிவுட் பார்வைகள் இன்னும் தங்களை உச்சத்துக்கு கொண்டு போகும் என்பது எனது திடமான நம்பிக்கை...
//பதிவுலகில் இருக்கும் நல்ல உள்ளங்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்கள்...... விகடன் தாண்டியும் வளர்வீர்கள்...! //
ReplyDelete+1 :-))
Ji..Entha edition vikandan la suttu irunthanga...???mail me the date to my gmail ..
Naanum Rani comix Paithiyam thaan Munnadi..Ippa tinkle :-))
ReplyDeleteநன்றி நண்பர்களே! உங்கள் கருத்துகளிற்கு!
ReplyDelete@ஆனந்தி..
விகடன் எனது பதிவுகளை குட் - பிலாக்ஸ் பகுதியில் லிங்க் குடுத்து எனது தளத்தைப் பிரபலப்படுத்தினார்கள்!
சுட்டது வேறு ஒரு இணையத்தளம்! :-)
ம்ம்ம்ம்
ReplyDeleteஅந்தப் புத்தகத்திற்கு இந்தப்பாடுபட்டிருக்கிறியளே. அப்புறம் புத்தகம் எப்படி?
ReplyDeleteவாழ்த்துக்கள்.. பின்னூட்டத்துக்கு பதில் எல்லாவற்றுக்கும் போட தேவை இல்லை, டைம் பத்தாது.. சிலவற்றுக்கு மட்டும் போடலாம்..
ReplyDeleteடவுட் -1 - விகடன்ல அவங்களா எடுத்து யூத்ஃபுல்ல போடுவாங்களா? நாம் அனுப்பனுமா?
டவுட் 2 - இந்தப்பதிவை 2 பாகமா பிரிச்சுப்[போட்டிருக்கலாமே?
//சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteடவுட் -1 - விகடன்ல அவங்களா எடுத்து யூத்ஃபுல்ல போடுவாங்களா? நாம் அனுப்பனுமா?//
அவங்களாதான் செலக்ட் பண்ணி போடுவாங்க!
//டவுட் 2 - இந்தப்பதிவை 2 பாகமா பிரிச்சுப்[போட்டிருக்கலாமே?//
அப்பிடியா பாஸ்! தோணல! :-)
rettha padalam oru copy parcel......... :)
ReplyDeleteComment kku nandri nanbaaa... too busy to even check my blog...(sarakku theerndhu pochu... :( )
I coudn't get any lion or mutthu comics here.. I had all the previous collection.. but I had to sell them coz of an unavoidable situation.. Sorry Vijayan Sir, Therinjaa romba varutthapaduveenga.. Coz 5 maasamaa adampudichi I got those books from u... Sowi...
Jeee.... plz let me know if I can get a copy of rettha padalam collection.. Thanks in advance..
BTW happy new year... welcome 2012...... yeaahoooooooooooooo......