Wednesday, May 18, 2011

Dancer in the Dark

கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிய நிலையில் ஜீன் என்று சத்தமாக அழுகிறாள் சல்மா, தோழி ஓடிவந்து கட்டி அணைத்து 'ஜீன் வெளியில் இருக்கிறான், இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னான்' அது அவனது மூக்குக் கண்ணாடி! 'அவனால் இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறதா?' என மகிழ்ச்சியோடு கேட்கிறாள் சல்மா! கையில் மகனின் கண்ணாடியைப் பற்றிக் கொண்டதும் அழுகை நின்று, அமைதியாகி இப்போது அவள் சன்னமான குரலில் பாடத் தொடங்குகிறாள். 

பாடல் திடீரென்று தடைபட்டு பலகை உடையும் ஓசை....தரையில் விழுகிறது மூக்குக் கண்ணாடி.... ஆழ்ந்த அமைதி..!


சல்மா - செக்கோஸ்லாவாக்கியாவிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வாழ்பவள். சல்மாவுக்கு ஈயத்தகடுகளை பாத்திரமாக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை. பார்வைக்குறைவினால் அவள் செய்யும் தவறுகளால் அடிக்கடி இயந்திரங்கள் செயலிழக்கின்றன. அதனால் மருத்துவ சான்றிதழ் உதவியுடன் வேலையை உறுதி செய்துகொள்கிறாள்.

அவளிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரான போலீஸ்காரர் பில், அவரின் மனைவி இருவரும் சல்மாவிடம் அன்பாக நடந்து கொள்பவர்கள்! சல்மாவின் மகன் ஜீன்.அவனுக்கும் அதே பரம்பரை நோயான கண் பார்வைக் குறைவு இருக்கிறது! அவனுக்கு சத்திரசிகிச்சை செய்தால் குணமாகிவிடும். அதற்காக, தான் உழைக்கும் பணத்தையெல்லாம் ஒரு சாக்லேட் டப்பாவில் இட்டு, ரகசியமாக பீரோவில் வைத்து சேமித்து வருகிறாள்!

ஒருநாள் அவளது வீட்டிற்கு வரும் பில் தனது கவலைகளைக் கூறுகிறார். கடன் காரணமாக தனது வீட்டை வங்கியிடம் இழக்கப் போவதாய்க்கூறிக் கலங்க, அவருக்கு ஆறுதல் கூறும் சல்மா, அதுவரை மறைத்து வைத்திருக்கும் தனது ரகசியத்தைச் சொல்கிறாள். சிறிது நாளில் முற்றாகப் பார்வையை இழக்கப் போகும் தான், மகனின் சிகிச்சைக்காகவே அமெரிக்கா வந்து தங்கிருப்பதாய்க் கூற, ஆச்சரியப்படும் பில் அவளது மன உறுதியைப் பாராட்டுகிறார்.


இந்நிலையில், ஒருநாள் காரில் அவளை அழைத்துவரும் பில் தனக்கு கடனாகப் பணம் தேவை, ஒருமாதத்தில் திருப்பித் தருவதாகக் கேட்க, சல்மா தன்னிடமுள்ள பணம் ஜீனுக்கானது அதைத்தர முடியாதென்று கூறுகிறாள். தான் அதைக் கேட்கவில்லை எனக்கூறும் பில், தனக்கு சுட்டுக் கொண்டு தற்கொலை செய்யலாம் போலுள்ளது என்று கூற, அவருக்கு ஆறுதல் சொல்கிறாள் சல்மா.

ஒருநாள் சல்மா வீட்டிற்குவரும் பில், விடை பெற்றுச் செல்வது போல சென்று, வீட்டிற்குள் மறைந்து நின்று, அவள் பணம் மறைத்து வைப்பதைப் பார்த்து விடுகிறார். மறுநாள் சல்மா அவளது தொடர் கவனயீனத்தைக் காரணம் காட்டி பணிநீக்கம் செய்யப்படுகிறாள். வீட்டிற்கு வரும் சல்மா, தனது சேமிப்புப் பணம் எதுவும் இல்லாத காலி டப்பாவைப் பார்த்து அதிர்ந்து, நேராக பில் வீட்டிற்கு வர, அங்கே அவளது பணத்துடன் பில்!

சல்மா பணத்தை எடுக்க, கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் பில், தன்னைக் கொன்று விட்டு பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறி சல்மா கையில் துப்பாக்கியைத் திணித்து, பணத்தைப் பறிக்க...இந்த இழுபறியில் தவறுதலாக துப்பாக்கி வெடிக்க...படுகாயமடைந்த நிலையிலும் பில், பணத்தை விடாமல் பற்றிக் கொண்டு தன்னைக் கொன்றுவிடுமாறு கெஞ்ச...மகனின் கண்பார்வை தவிர வேறு எதையுமே எப்போதும் சிந்திக்காத சல்மா...அருகிலிருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து தலையில் ஒரு போடு!
சல்மாவுக்கு தூக்குத் தண்டனை!



பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் சல்மா தனது மனதின் வெறுமையைப் போக்க, தொழிற்சாலையில் இயங்கும் இயந்திரங்களின் ஒலிக்கேற்ப, அந்த ரிதத்தில் ஸ்டெப்ஸ் போட்டு ஆடுவதும், கனவுலகத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் காட்சிகள்.

சிறையின் தனிமையில், பார்வையையும் முற்றாக இழந்து, மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், ஆரம்பத்தில் சத்தமிட்டு அழும் சல்மா மெல்ல மெல்ல அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டு, அங்கு கேட்கும் ஒலிகளை இசையாக்கி காணும் பகல் கனவுகள்!

சல்மாவின் தோழி அவளைத் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்ற, அவள் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்கிறாள் - அவள் சேமித்த பணத்தைக் கொண்டு! சல்மா மறுத்து விடுகிறாள். 'ஜீன்க்கு அவன் அம்மா உயிரோடிருப்பது முக்கியம் இல்லையா?' எனக்கேட்க, 'எனக்கு அவன் கண்பார்வைதான் முக்கியம்' என்கிறாள் சல்மா!




சல்மாவுக்கெதிராக வழக்கறிஞர் முன்வைக்கும் வாதங்களில் ஒன்று! - 'இவள் மனிதகுலத்திற்கு சிறந்தது கம்யூனிசமே என்று கூறியிருக்கிறாள். நமது (அமெரிக்க) நாட்டின் கொள்கைகளை வெறுக்கிறாள்!'

தூக்குக் கயிறை மாட்டும்முன் கறுப்புத் துணியால் முகத்தை மூட, சல்மா நிற்க முடியாமல் துவண்டு விழுகிறாள். ஒரு பலகையில் அவளைக் கிடத்தி நடுங்கும் கை, கால்களைப் பிணைத்துக்கட்டி....பின்னர் பலகையை நிமிர்த்தி அவளை நிற்க வைத்து.... 
- பார்த்து ஒருவாரத்திற்கு பெரும் மன உளைச்சல், காட்சிகளின் பாதிப்பு தொடர்ந்தது!

2000 ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரண்டு Cannes Film Festival 2000 விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுக் கொண்டது.

இயக்கம் - Lars Von Trier
மொழி - English
நாடு - Denmark



தூக்குத்தண்டனை அவசியமா இல்லையா என்ற கேள்விகள், குற்றங்கள் குறைய கடுமையான தண்டனைகள் அவசியம் என்ற வாதங்கள் இவற்றைத் தாண்டி..

குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் மீதான குற்றச் சாட்டுக்கள் சரியான முறையில் தீர விசாரிக்கப் படுகின்றனவா?
சட்டம் எந்த நாடாகிலும், எல்லாத்தரப்பு மக்களுக்கும் நியாயமாக இருக்கிறதா?
திட்டமிட்டு இன அழிப்பையோ, கொலைகளையோ செய்யும் பலர் சட்டத்தின் ஓட்டைகள், அதிகார பலங்கள் காரணமாக தப்பித்து வாழும்போது, சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாக ஆக்கப்பட்ட சல்மா போன்ற அப்பாவிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்?
இதுவரை முறையான விசாரணை இன்றி செய்யாத குற்றத்திற்கு மரணதண்டனை பெற்றவர்கள் எத்தனை! பலவருட சிறைத்தண்டனையில் எத்தனைபேர்!
நான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட உலகின் எங்கோ,ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெறக்கூடுமல்லவா?  

டிஸ்கி: மூன்று வருஷத்துக்கு முதல் பார்த்தது! இப்போ எழுதுவற்காக 'லைட்'டா பார்க்க... முடியல! 

22 comments:

  1. தூக்கு தண்டனைக்கு எதிரா நம்மூர்லயும் ஒரு படம் வந்துச்சு..ஹூம்..

    ReplyDelete
  2. மனதை சோகத்தில் ஆழ வைக்கும் படம் போல இருக்கிறது. நல்ல கருத்துகள். பார்க்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  3. very emotional narration Ji
    iam very much impressed the way you took me in to the flim

    ReplyDelete
  4. Dancer in the Dark விமர்சனத்தை அழகாக அலசியுள்ளீர்கள்.

    இந்தப் படத்தை இனித் தான் பார்க்க வேண்டும்.

    விமர்சனத்தின் அடிப்படையில் நோக்கும் போது ஆதரமற்ற குற்றச் சாட்டுக்களின் விளைவுகளையும், கண் தெரியா விடினும் சாதிக்க வேண்டும் எனும் நம்பிக்கையுடன் வாழும் பெண்ணின் உள்ளத்து உணர்வுகளையும் இப் படத்தில் காணலாம் என்று நினைக்கிறேன்.

    நன்றிகள் தல.(ஜீ)

    ReplyDelete
  5. சல்மா..போன்றவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்!!

    ReplyDelete
  6. விமர்சனம் நன்றாக இருக்கிறது ஆக்‌ஷன் படம் ஒண்ணு காட்டு தலைவா

    ReplyDelete
  7. அண்னே.. செம கில்மா பட விமர்சனம் ஒண்ணு போடுங்க ஹி ஹி

    ReplyDelete
  8. படம் விமரிசனம், பக்காவா இருக்கு.

    ReplyDelete
  9. இந்த படம் பாத்தது இல்ல .. லிஸ்ட்ல சேத்துக்குறேன்.. :)

    ReplyDelete
  10. அவசியம் பார்க்கிறேன்

    ReplyDelete
  11. சிறந்த உலக சினிமா திரைப்படங்களுக்கு தொடர்பு கொள்க
    http://moviesnow69.blogspot.com/

    ReplyDelete
  12. எப்பவோ பார்த்த படம் தலைவரே! நினைவூட்டியமைக்கு நன்றி, உங்கள் பதிவு மறுபடியும் பார்க்கும் ஆசையை கிளர்த்துகிறது. சிடியை தேடனும் :-)

    ReplyDelete
  13. அருமையான விமர்சனம்...

    சுவாரஸ்யமா இருக்கும் போல...

    Pls Visit this Link..
    http://anbudansaji.blogspot.com/2011/05/i-love-you.html

    ReplyDelete
  14. ஜீ...உங்கள் விமர்சனம் பார்த்து யூ டியூப்பில் தேடிப் படம் பார்க்கிறேன்.நன்றி !

    ReplyDelete
  15. உங்கள் விமர்சனம் அருமை நண்பரே.

    ReplyDelete
  16. பாஸ், இந்தப் பதிவிற்கு நான் ஏற்கனவே போட்ட பின்னூட்டம் எங்கே?
    கூகிளின் கொமெண்ட்ஸ் ஸ்பாம் பெட்டியினுள் போய் விட்டதா. ப்ளீஸ் ஒரு தடவை செக் பண்ண முடியுமா.

    ReplyDelete
  17. ஜீ...நன்றி.நேற்று இந்தப் படம் பார்த்து வியந்தேன்.கலங்கினேன்.தமிழ் சினிமா முன்னேற எவ்வளவோ காலம் தேவை !

    ReplyDelete
  18. விமரிசனம் பார்த்தது படமே பார்த்தது போல உள்ளது. அருமையானபடம்.

    ReplyDelete
  19. தவற விட்ட பதிவு ஒன்று மீள கிடைத்திருக்கிறது...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...