Sunday, May 15, 2011

இனி சரவெடி ஆரம்பம்!

தமிழினத் தலைவர்?
உண்மையில் தமிழினத்தின் தலைவராவதற்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை தனது சொந்த அரசியல் காரணங்களுக்காக் கோட்டை விட்டு இப்போது கோட்டையையும் விட்டு விட்டார்!


ஈழத்தமிழர்களுக்கு எதுவும் செய்யாமல் விட்டிருந்தால் கூட ஒரு சின்ன வருத்தத்தோடு கடந்து போயிருக்கும்! அனால், ஒரு இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது தனது குடும்ப அரசியலுக்காக மிகக்கேவலமான முறையில் விளையாட்டுத்தனமாக மூன்று மணிநேர உண்ணா விரதமிருந்தது கூட போனாப் போகுதுன்னு விடலாம்...அதெப்படி கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் தனது போராட்டத்தால் இலங்கை தாக்குதலை இடைநிறுத்திவிட்டது என்று கூறி...? (உண்மையில் அந்த மூன்று மணி நேரத்தில் படு கோரமான தாக்குதல் நடத்தப்பட்டது!) அந்த அதிர்ச்சிதான் தாங்க முடியல! அது...

ஜெயிலுக்குப் போகும் கனிமொழி சிரித்தவாறே கையசைத்துக்கொண்டு போஸ் கொடுக்கும்போது கலைஞருக்கு ஏற்படப்போகும் அதிர்ச்சி இருக்கே அதைவிட அதிகமான அதிர்ச்சி!

உண்மையாகவே அந்த நேரத்தில் மட்டுமாவது சற்று நேர்மையுடன் நடந்திருந்தால், கனி மொழி உள்ளிட்டவர்கள் உண்மையாகவே ராஜினாமாச் செய்ய வைத்து, காங்கிரசுடனான கூட்டணியை ரத்துச் செய்திருந்தால், உண்மையாகவே உலகத் தமிழர்களின் தலைவராக என்றைக்குமே கொண்டாப்பட்டிருப்பார்!

இனி...?
எந்தக் குடும்பத்துக்காக பாடுபட்டாரோ, அவர்கள் ஒருவருக் கொருவர் குழிபறித்துக் கொள்வதை, காலை வாருவதைப் பார்த்துக்கொண்டு..

ஆனா ஒண்ணு! குடும்பத்தில ஒரு பயபுள்ள ராத்திரி நிம்மதியா தூங்க முடியாது! எந்தச் சாமத்தில யாரோ..?

கலைஞரின் கதை, வசனத்தில் பல படங்கள் வெளிவரக்கூடிய அபாயமான சூழ்நிலை இருந்தாலும், இனி அவரின் படங்களை கலைஞர் குடும்ப வாரிசுகளே தயாரிக்க வேண்டிய நிலை இருப்பதால் சூழ்நிலையின் தாக்கம் சற்றுக் குறைவாகவே!

விடுகதையா இந்த வாழ்க்கை..?


வழக்கை எதிர்கொள்ள வடக்கே நீ போனால் நாங்கள் போவதெங்கே...நாங்கள் போவதெங்கே! - கலைஞர்.

*******************

இனி சரவெடி ஆரம்பம்!


சண்டைன்னா மக்கள் சாகத்தான் செய்வார்கள்! - மிகத் தெளிவாக தனது ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாட்டை தெரிவித்துக் கொண்டவர். 
பட், அம்மாவின் இந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருந்தது! தான் கொண்ட நிலைப்பாடு சரியோ, தவறோ அதை மழுப்பாமல் நேரடியாகத் தெரிவிக்கும் துணிச்சல் தான் அது!

ஆட்சிக்கட்டில் சார்ந்து ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் கலைஞரைவிட எப்போதுமே எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, அதைத் தெளிவாகச் சொல்வது அம்மாவின் நேர்மை! 

ஆனாலும் கடைசிநேர பதட்டத்திலோ என்னவோ தமிழீழம் அமைக்க உதவி செய்வேன் என்று ஒரு 'பிட்'டைப் போட்டார். ஆனா அது வெறும் 'பிட்'டுத தான் என்பது உணர்ந்தோ என்னவோ யாருமே அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை! அதேபோல் இந்தமுறை வென்றதுமே ராஜபக்சேவை போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்துவேன் எனக் கூறியதாகச் செய்திகள்! - இதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது! ஏதோ வென்ற மகிழ்ச்சியில் ஒரு உற்சாகத்தில் கூறிய வார்த்தையாக எடுத்துக் கடந்து செல்ல வேண்டும். ஏனெனில் இப்போதே அவர் அதை மறந்திருக்கக்கூடும்!

அப்படியே அவர் உண்மையாகவே (ஒரு பேச்சுக்கு) நினைத்தாலும், ராஜபக்சவைக் காப்பாற்ற இறுதிவரை இந்தியா துணை நிற்கும்போது (நிற்கும்) எப்படி சாத்தியம்?

கொஞ்சமாவது யோசிக்கத் தெரிந்த ஈழத்தமிழர்கள் பலருக்கும் இங்கே தெரிந்திருந்த உண்மை இந்தியா எப்போதுமே ஈழத்தமிழருக்கு எதிராகவே இருக்குமென்பது!

கொஞ்சமாவது யோசிக்கக் கூடிய இந்திய மத்திய அரசியல்வாதிகள் தெரிந்திருக்கும் உண்மை, இலங்கை எப்போதுமே இந்தியாவிற்கு நன்றியுடனோ, விசுவாசத்துடனோ இருக்கப்போவதில்லை! 

சரி அதெல்லாம் இருக்கட்டும்...

ஆமா, அந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் இப்பல்லாம் சரியா வேலை செய்யுதா?

அந்தக் கண்ணகி சிலை பத்திரமா இருக்கா?

இனி சீமான், வைகோ போன்றவர்கள் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து பேச முடியுமா? இல்லை பேசினால் ரிவிட் அடிக்கப்படுவார்களா?

****************

கனிமொழி சார்பில் வக்கீல் வண்டு முருகன்....

ராங்கா பேசினா என்ன ராடியா கூட பேசினா என்ன அதெப்பிடி ஒட்டுக் கேக்கலாம்? ரெண்டு பேர் பேசிக்கிட்டிருந்தா நாகரீகமா நழுவிப் போயிடனும்கிற அடிப்படை நாகரீகம் கூடவா தெரியாது? அதானேய்யா உலக வழக்கம்? கடுப்பேத்துகிறார்கள் யுவர் ஆனர்!

தபத....ப..உங்களுக்குத் தெரியாத சட்டமில்லை...! நீங்களே பாத்து ஏதாவது பிரிவுல .....வரட்டுங்களா!

கலைஞர் ஐயா உள்ள வச்சு வாளமீன் குடுப்பேங்கிறாங்க....வஞ்சிரமீன் குடுப்பேங்கிறாங்க....அயிரமீன் குடுப்பேங்கிறாங்க...சுறாகூட குடுப்பேங்கிறாங்க...

ஆனா ஜாமீன் மட்டும் குடுக்க மாட்டேனுட்டாங்கையா...அவ்வ்வ்வ்!

*****************

கொஞ்சம் ஓவராய்த்தான் போயிட்டமோ?


26 comments:

  1. அரசியல இதுல்லாம் சகஜம்...
    நான் செல்லல வடிவேலு சொல்லுறாரு.. ))))

    ReplyDelete
  2. ஹிஹி ஆரம்பம் எனக்கு இன்னிக்கே ஆரம்பமாகிரிச்சு!@!!

    ReplyDelete
  3. வடிவேலு தான் பாவம்!!

    ReplyDelete
  4. AnonymousMay 16, 2011

    //உண்மையில் தமிழினத்தின் தலைவராவதற்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை தனது சொந்த அரசியல் காரங்களுக்காக் கோட்டை விட்டு இப்போது கோட்டையையும் விட்டு விட்டார்!// உண்மை தான் தன் குடும்பம் சுயநலம் என்று பலவற்றை இழந்து நிற்கிறார்.

    ReplyDelete
  5. AnonymousMay 16, 2011

    ////அதெப்படி கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் தனது போராட்டத்தால் இலங்கை தாக்குதலை இடைநிறுத்திவிட்டது என்று கூறி...?/// என்றுமே மன்னிக்க முடியாத செயல் அது...

    ReplyDelete
  6. AnonymousMay 16, 2011

    ////ஆட்சிக்கட்டில் சார்ந்து ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் கலைஞரைவிட எப்போதுமே எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது, அதைத் தெளிவாகச் சொல்வது அம்மாவின் நேர்மை! //// நானும் இக்கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் ஐயாவுக்கும் அம்மாவுக்கும் பெரிசாய் வேறுபாடு இல்லை ..

    ReplyDelete
  7. யோவ் என்னய்யா பயமூட்டுறே! அம்மாவின் ஆட்சியில் புலம் பெயர் தமிழர்களாகிய நாம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம்!!

    ReplyDelete
  8. AnonymousMay 16, 2011

    //// கடைசிநேர பதட்டத்திலோ என்னவோ தமிழீழம் அமைக்க உதவி செய்வேன் என்று ஒரு 'பிட்'டைப் போட்டார். /// தனி ஈழம் என்பது கடையில் விற்கும் பொருள் என்று நினைத்தாரோ என்னமோ..


    இது அன்று அவர் தன் வெற்றிக்கு பயன்படுத்திய கடைசி ஆயுதம்..

    ReplyDelete
  9. AnonymousMay 16, 2011

    ///கொஞ்சமாவது யோசிக்கத் தெரிந்த ஈழத்தமிழர்கள் பலருக்கும் இங்கே தெரிந்திருந்த உண்மை இந்தியா எப்போதுமே ஈழத்தமிழருக்கு எதிராகவே இருக்குமென்பது!/// உண்மையான கருத்து . அவர்களுக்கு ஈழ தமிழனிடம் பிடிங்கி கொள்ள ஒன்றும் இல்லையே... ஏதாவது இலங்கை அரசிடம் இருந்து சாதிக்க வேண்டும் என்றால் ஈழ தமிழர்களை பகடை காயாக பயன்படுத்துவார்களே ஒழிய அக்கறை என்பது என்றும் இராது

    ReplyDelete
  10. AnonymousMay 16, 2011

    நல்ல பதிவு நண்பரே

    ReplyDelete
  11. //காங்கிரசுடனான கூட்டணியை ரத்துச் செய்திருந்தால், உண்மையாகவே உலகத் தமிழர்களின் தலைவராக என்றைக்குமே கொண்டாப்பட்டிருப்பார்!// அருமையாகச் சொன்னீர்கள் ஜீ.

    ReplyDelete
  12. //வாளமீன் குடுப்பேங்கிறாங்க....வஞ்சிரமீன் குடுப்பேங்கிறாங்க....அயிரமீன் குடுப்பேங்கிறாங்க...சுறாகூட குடுப்பேங்கிறாங்க...

    ஆனா ஜாமீன் மட்டும் குடுக்க மாட்டேனுட்டாங்கையா..// நீங்க ஏன்யா அந்த மீனுதான் வேணும்னு அடம்பிடிக்கீங்க? கிடைக்கிற மீனை வச்சு சந்தோஷப்படுங்கய்யா.....

    ReplyDelete
  13. நிகழ்கால அரசியலை
    நடைமுறை தமிழில்
    விலாவரியாக
    வரிக்கு வரி
    விளாசிய
    விதம் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. ரைட்டு! மாப்ள பொங்க வச்சிட்டியா ஹிஹி!

    ReplyDelete
  15. இனி சரவெடி ஆரம்பம் மட்டும் இல்ல

    அப்பறம் வடிவேலு எங்க வீட்டு பக்கத்துல உள்ள ஹோட்டல்ல தான் ஒளிஞ்சிருக்காப்புல

    ReplyDelete
  16. உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் ..
    நேரம் இருந்தால் பார்க்கவும்..


    என்னை அதிசயப் படவைத்த பதிவர்கள் - 2

    ReplyDelete
  17. தமிழின தலைவர் ப்பூப்ப்....!!!

    ReplyDelete
  18. ம்...நடுநிலையான அலசல் ஜீ!

    ReplyDelete
  19. ஆனா ஒண்ணு! குடும்பத்தில ஒரு பயபுள்ள ராத்திரி நிம்மதியா தூங்க முடியாது! எந்தச் சாமத்தில யாரோ..?//

    அவ்...........இது தானே யதார்த்தம் சகோ.

    ReplyDelete
  20. என் கருத்தை அப்படியே பிரதி எடுத்தார் போல் உள்ளது உங்கள் பதிவு...நன்றி.
    இந்த ஆளை பற்றி...இது மட்டுமா, அந்த மூன்று மணி நேரத்தின் முடிவில், சில ஈழ அதரவு கருத்து உடையவர்களை வரவழைத்து (Ex. சத்யராஜ், ) எல்லாம் தன்னால் முடித்தது போல் காட்டி கொண்டது..."இன்னமும் குண்டு பொழிகிறதே" என்றதற்கு "தூவானம்" என்று மனசாட்சி இல்லாமல் உளறிய மனிதன்...

    உண்மையில், இந்த கிரிமினல் mind உள்ள ஆளுக்கு, அந்த நேரத்தில் பதவியை தூக்கி எறிந்து ஈழ ஆதரவு நாடகம் போட்டு இருந்தால் (he is capabale of reading people 's mind of any gerneration ) நாமளும் ஏமாந்து போய் இருப்போம்... இந்த ஆளின் பதவி வெறியால் மற்றும் குடும்ப அரசியலால்தான், இந்த ஆளின் உண்மையான நய வஞ்சக முகம் வெளியே தெரிந்து உள்ளது...

    ReplyDelete
  21. தமிழகத்தின் அரசியல் பற்றிய நடு நிலையான பார்வையினைத் தந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  22. அண்ணன் சினிமா விமர்சனமா இருந்தாலும்,.அரசியல் விமர்சனமா இருந்தாலும் கலக்கிடராரே.. அது எப்படி?

    ReplyDelete
  23. அருமையான அலச்ல். படங்களும் உணர்வைப் பிரதிபலிக்கின்றன. ,கருத்துக்களும் நடுநிலயான பார்வைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  24. மிகச் சரியாக சொன்னீர்கள்.தமிழினத் தலைவராக வேண்டியவர், ஐயோ பாவம் என்று சொல்லும் அளவுக்கு ஆக்கிக் கொண்டார்,

    ReplyDelete
  25. AnonymousMay 19, 2011

    தான் கொண்ட நிலைப்பாடு சரியோ, தவறோ அதை மழுப்பாமல் நேரடியாகத் தெரிவிக்கும் துணிச்சல் தான் //
    உண்மைதான் அதுவே சில நேரங்களில் பாதிக்கவும் செய்கிறது!

    ReplyDelete