Wednesday, May 11, 2011

ஒருத்திக்கு ரெண்டு பேர்?


ஒருத்திக்கு ரெண்டு பேரா?!

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஒரு ஓய்வான பொழுதில் சகோதர (சிங்கள) மொழி கன்சல்டன்ட் சொன்னார். பழைய காலத்தில் மக்களிடம் (சிங்களவர்) ஒரு வழக்கம் இருந்ததாம்! 

ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி இருவரும் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதுதான் அது!
சும்மா கதை விடுதா பயபுள்ள? -அதிர்ச்சியுடன் சந்தேகமாகப் பார்க்க, புரிந்து கொண்டு சொன்னார். 

காட்டுப் புறங்களில் விவசாயம் செய்யும் போது வீடும், விவசாய நிலமும் அதிக தூரத்தில் இருக்கும். இரவில் காட்டு விலங்குகள் காரணமாக பயிர் நிலத்தைக் கண்காணிக்க வேண்டும். அதே நேரத்தில் வீட்டில் மனைவி தனியாக! அப்போ வேறு ஆண்கள் இடையில் வந்துவிடாமல் மனைவியை ஒருத்தரும், பயிர்நிலத்தை ஒருத்தரும் மாறி,மாறி!?

ஏன் இரண்டு பேரும் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யலாமே? - நான்.
ஒருத்தன் ரெண்டு பெண்களைப் பார்த்துக் கொள்றதா?- சிரித்தார்! 
இல்ல! ரெண்டுபேரும் வீட்ல இருந்திட்டா..? 
ஹா ஹா ஹா? - இதுதான் அவருக்கு சிரிப்பா இருக்காமாம்! 

அவர் சீரியசாதான் சொன்னார்! என்னாலதான் நம்ப முடியல! 

***************

கன்சல்டன்ட்ஸ்!

புது அலுவலகத்திலும் வழமை போல வயது முதிர்ந்த கன்சல்டன்ட்ஸ் உடனேயே வேலை! ஆனால் ஒண்ணு இங்கே தாத்தாக்கள் இல்லை! எல்லாம் மாமாக்கள்தான்! எல்லாரும் சிங்களவர்கள்! ஒன்றிரண்டு ஞாபக மறதிக்கேசுகள் ஒன்றிரண்டு இருந்தாலும், பிரச்சினை இல்லை! 

தமிழ்த் தாத்தாக்களுடன் வேலை செய்வதுதான் ரொம்பக் கஷ்டம்! (யாராவது அனுபவப்படிருந்தால் தெரியும்.எனது முதல் வேலை அப்படித்தான் அமைந்தது! 

பல நேரங்களில் செம காமெடியாகவும், சில நேரங்களில் எரிச்சல், கொலைவெறி எல்லாம் வரும்! சிவில் என்ஜினியரிங்கில் வயது போகப் போக எக்ஸ்பீரியன்ஸ் காரணமாக கன்சல்டன்ட்ஸ்க்கு டிமான்ட் அதிகமென்பதால் இது ஒரு தொல்லை ! வீட்டில் ரிட்டையர்டாகி ஓய்வெடுக்க வேண்டியவர்களெல்லாம் அலுவலகத்தில் வந்து தூங்கிட்டு....! சும்மா தூங்கிட்டுப் போனாக்கூட பரவாயில்லை அப்துல் கலாம் சொன்னார்னு உட்கார்ந்து கனவு கண்டுவிட்டு ஏதாவது புதுசா செய்யக் கிளம்பி அடுத்தவன் வேலையைக் கெடுப்பது என்று செம அட்டகாசம்! இருந்தாலும் நல்லவர்கள்! 

அதில் ஓரிருவர் எந்த வேலையுமே செய்யாமல், எதுக்கு வந்தார்கள் என்று எங்களுக்கும் தெரியாது ஏன் அவர்களுக்கே தெரியாமல் வந்து போனார்கள்! அவர்களைப் பார்க்கும்போது 'கன்சல்டன் பூனை' ஜோக் தான் ஞாபகத்து வரும்! 

பலருக்குத் தெரிந்திருக்கலாம்! தெரியாதவர்களுக்கு பதிவின் இறுதியில்! குழந்தைகள், நல்லவர்கள் தவிர்க்கவும்! 



*****************

பெண் ராசி! 


நம்முடைய ராசிப்படி வழக்கம்போல புது அலுவலகத்திலும், ஏன் எங்கள் ரெசிடென்ஸ் இருக்கும் ஏரியாவில் கூட பெண்களே இல்லை! அதென்னவோ தெரியல... நமக்கு படிக்கிற காலத்திலருந்தே அப்பிடித்தான்! ஆவுறதில்ல!ம்ம்ம்...!

*****************


நன்றி! 
கடைசியாக நன் எழுதிய பதிவு பற்றி! சும்மா ஜாலியாத்தான் எழுதினேன்! நிறைய நண்பர்கள் அக்கறையாக தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள்! பின்னூட்டங்களைப் பார்த்த பின்புதான் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் ஆனதைப்போல் தோன்றியது! எனவே நீக்கி விட்டேன்! 

தங்கள் நேரத்தை ஒதுக்கி அக்கறையுடன் கருத்துத் தெரிவித்த அன்புள்ளங்களுக்கு நன்றி! நன்றி!  

******************

'கன்சல்டன்ட்' பூனை! 

அந்த ஏரியால நிறையப்பூனைகள்! அதில் ஒரு ஆண் பூனை செம்ம குழப்படி! எந்த நேரமும் பெண்பூனைகளை தொந்தரவு பண்ணியபடியே இருந்திச்சாம்.  

தொல்லை பொறுக்கமுடியாமல் இனி அந்த மேட்டரில் ஈடுபட முடியாதவாறு அந்தப் பூனைக்கு ஒரு ஆபரேஷன் பண்ணி விட்டார்கள்!

மறுநாள்...

ஓர் அதிர்ச்சி....! ஏரியாவில் ஒரு பூனையையும் காணவில்லை! 

தேடிப்பார்க்க...ஒரு பெரிய மரத்தின் கீழ் எல்லாப்பூனைகளும் ஒரு பெரிய மாநாடு போலக் கூடியிருக்க, மேலே நடுநாயகமாக 'அந்தப் பூனை!' - என்னாச்சு?

வேறொன்றுமில்லை அது 'அந்த மேட்டர்ல' கன்சல்டன்ட் ஆகிடுச்சாம்! 



19 comments:

  1. //நம்முடைய ராசிப்படி வழக்கம்போல புது அலுவலகத்திலும், ஏன் எங்கள் ரெசிடென்ஸ் இருக்கும் ஏரியாவில் கூட பெண்களே இல்லை! அதென்னவோ தெரியல... நமக்கு படிக்கிற காலத்திலருந்தே அப்பிடித்தான்! ஆவுறதில்ல!ம்ம்ம்...!


    உங்களுக்குமா

    ReplyDelete
  2. அடேய் மாப்ள அடங்கோ!

    ReplyDelete
  3. விளக்கம் தெளிவாதான் இருக்குதுங்கோ ...

    ReplyDelete
  4. நிகழ்கால
    நிகழ்வுகளை
    நிதர்சனமாய்
    நிருபனமாக்கும்
    நகைச்சுவை பதிவு
    நல் நன்றி

    ReplyDelete
  5. AnonymousMay 11, 2011

    ஒருத்திக்கு ரெண்டா அநியாயம்

    ReplyDelete
  6. AnonymousMay 11, 2011

    பட்டைய கிளப்பும் மசாலா

    ReplyDelete
  7. AnonymousMay 11, 2011

    அடேய் மாப்ள அடங்கோ//
    அம்பேத்கார் படத்தை வெச்சிகிட்டு,இந்தாளு பண்ற ரவுசு தாங்க முடியலை

    ReplyDelete
  8. AnonymousMay 11, 2011

    நம்முடைய ராசிப்படி வழக்கம்போல புது அலுவலகத்திலும், ஏன் எங்கள் ரெசிடென்ஸ் இருக்கும் ஏரியாவில் கூட பெண்களே இல்லை! அதென்னவோ தெரியல... நமக்கு படிக்கிற காலத்திலருந்தே அப்பிடித்தான்! ஆவுறதில்ல!ம்ம்ம்...!//
    சிங்கத்துகிட்ட மான் எப்படிய்யா வரும்?

    ReplyDelete
  9. AnonymousMay 11, 2011

    வேறொன்றுமில்லை அது 'அந்த மேட்டர்ல' கன்சல்டன்ட் ஆகிடுச்சாம்! //
    செம குத்து

    ReplyDelete
  10. AnonymousMay 11, 2011

    ///நம்முடைய ராசிப்படி வழக்கம்போல புது அலுவலகத்திலும், ஏன் எங்கள் ரெசிடென்ஸ் இருக்கும் ஏரியாவில் கூட பெண்களே இல்லை! அதென்னவோ தெரியல... நமக்கு படிக்கிற காலத்திலருந்தே அப்பிடித்தான்! ஆவுறதில்ல!ம்ம்ம்...! // ரைட்டு, எனக்குஇதே ராசி தான் பாஸ்..)

    ReplyDelete
  11. பூனை ஜோக் தூள்..கேள்விப்பட்டதில்லை ஜீ..வாய் விட்டுச் சிரிச்சேன்..

    ReplyDelete
  12. //நம்முடைய ராசிப்படி வழக்கம்போல புது அலுவலகத்திலும், ஏன் எங்கள் ரெசிடென்ஸ் இருக்கும் ஏரியாவில் கூட பெண்களே இல்லை! அதென்னவோ தெரியல... நமக்கு படிக்கிற காலத்திலருந்தே அப்பிடித்தான்! // நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது..நானும் இதைப் பத்தி ஒருநால் புலம்பனும்னு இருக்கேன் ‘நானா யோசிச்சேன்ல’.

    ReplyDelete
  13. //ஒருத்திக்கு ரெண்டு பேரா? // அய்யய்யோ...ஆணாதிக்கம்!!!!

    ReplyDelete
  14. உட்கார்ந்து யோசிப்பீங்களோ,
    சினிமா விமர்சனம் தவிர்த்து உங்களிடமிருந்து முதன் முதலாக நான் படிக்கும் வெரைட்டியான பதிவு...

    கலக்கல் சகோ.

    ReplyDelete
  15. சினிமா விமர்சனத்துல அடக்கி வாசிக்கிற நீங்க இந்தப்பதிவுல செம கலக்கலா காமெடி சேர்த்திருக்கிங்க.. ம் ம்

    ReplyDelete
  16. >>//நம்முடைய ராசிப்படி வழக்கம்போல புது அலுவலகத்திலும், ஏன் எங்கள் ரெசிடென்ஸ் இருக்கும் ஏரியாவில் கூட பெண்களே இல்லை! அதென்னவோ தெரியல... நமக்கு படிக்கிற காலத்திலருந்தே அப்பிடித்தான்! ஆவுறதில்ல!ம்ம்ம்...!

    ஹி ஹி நம்பிட்டோம்ல

    ReplyDelete
  17. கலக்கல் ஜி

    நேற்று ஒரு கதை படித்தேன் .'உங்களின் ஒருத்திக்கு ரெண்டு பேரா ' என்ற விடயத்திற்கு ,பா.ராகவனின் 'ரெண்டு ' நாவல் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன் ,சமீபத்தில் நான் படித்த மிக சிறந்த என்று கூறமுடியாது ஆனாலும் ஒரு வித்யாசமான நாவல்

    ReplyDelete