சல்மாவின் முகத்தில் கறுப்புத் துணியைப் போர்த்தி, கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டுகிறார்கள். "என்னால் மூச்சுவிட முடியவில்லை நான் மூச்சு விடவேண்டும்" அலறுகிறாள் சல்மா. அருகில் நிற்கும் பெண் அதிகாரி முகத்துணியை அகற்ற, அது விதிமுறைகளுக்கு எதிரானது கத்துகிறான் இன்னோர் அதிகாரி. "அதற்கு அவசியமில்லை. அவள் பார்வையிழந்தவள்" என்கிறாள் அந்தப்பெண் அதிகாரி.
"ஜீன்...!" மகன் பெயரைக் கூப்பிட்டு சத்தமாக அழுகிறாள் சல்மா. கீழே அமர்ந்திருக்கும் தோழி ஓடிவந்து கட்டி அணைத்து "ஜீன் வெளியில் இருக்கிறான், இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னான்" அது அவனது மூக்குக் கண்ணாடி! "ஒப்பரேஷன் முடிந்துவிட்டதா? அவனால் இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறதா?"என மகிழ்ச்சியோடு கேட்கிறாள் சல்மா! கண்ணாடியைப் பற்றிக் கொண்டதும் அழுகை நின்று, அமைதியாகி, இப்போது அவள் சன்னமான குரலில் பாடத் தொடங்குகிறாள் சல்மா.
பாடல் திடீரென்று தடைபட்டு, பலகை உடையும் ஓசை....தரையில் விழுகிறது மூக்குக் கண்ணாடி.... ஆழ்ந்த அமைதி!

சல்மா - செக்கோஸ்லாவாக்கியாவிலிருந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்து வாழ்பவள். ஈயத்தகடுகளை பாத்திரமாக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலை. பார்வைக்குறைவு காரணமாக அவள் செய்யும் தவறுகளால் அடிக்கடி இயந்திரங்கள் செயலிழக்கின்றன. அதனால் மருத்துவ சான்றிதழ் உதவியுடன் வேலையை உறுதி செய்துகொள்கிறாள்.
பார்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கும் சல்மா, தொழிற்சாலையில் இயங்கும் இயந்திரங்களின் ஒலிக்கேற்ப, அந்த ரிதத்தில் ஸ்டெப்ஸ் போட்டு ஆடுவதும், கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டும் தனது மனதின் வெறுமையைப் போக்க முயற்சிக்கிறாள். சல்மாவின் மகன் ஜீன். அவனுக்கும் அதே பரம்பரை நோயான கண் பார்வைக் குறைவு இருக்கிறது! அவனுக்கு சத்திரசிகிச்சை செய்தால் குணமாகிவிடும். அதற்காக, தான் உழைக்கும் பணத்தையெல்லாம் ஒரு சாக்லேட் டப்பாவில் இட்டு, ரகசியமாக பீரோவில் வைத்து சேமித்து வருகிறாள்!

அவளிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரான போலீஸ்காரர் பில், அவரின் மனைவி இருவரும் சல்மாவிடம் அன்பாக நடந்து கொள்பவர்கள்! ஒருநாள் அவளது வீட்டிற்கு வரும் பில் தனது கவலைகளைக் கூறுகிறார். கடன் காரணமாக தனது வீட்டை வங்கியிடம் இழக்கப் போவதாய்க்கூறிக் கலங்க, அவருக்கு தைரியம் சொல்லும் சல்மா, அதுவரை மறைத்து வைத்திருக்கும் தனது ரகசியத்தைச் சொல்கிறாள். சிறிது நாளில் முற்றாகப் பார்வையை இழக்கப் போகும் தான், மகனின் சிகிச்சைக்காகவே அமெரிக்கா வந்து தங்கிருப்பதாய்க் கூற, ஆச்சரியப்படும் பில், அவளது மன உறுதியைப் பாராட்டுகிறார்.
ஒருநாள் காரில் அவளை அழைத்துவரும் பில் தனக்கு கடனாகப் பணம் தேவை எனவும், ஒருமாதத்தில் திருப்பித் தருவதாகவும் கூறுகிறான்.சல்மா தன்னிடமுள்ள பணம் ஜீனுக்கானது, அதைத்தர முடியாதென்று மறுக்கிறாள். தான் அதைக் கேட்கவில்லை எனக்கூறும் பில், தனக்கு சுட்டுக் கொண்டு தற்கொலை செய்யலாம் போலுள்ளது என்று கூற, அவருக்கு ஆறுதல் சொல்கிறாள் சல்மா.
ஒருநாள் சல்மா வீட்டிற்குவரும் பில், விடை பெற்றுச் செல்வது போல சென்று, வீட்டிற்குள் மறைந்து நின்று, அவள் பணம் மறைத்து வைப்பதைப் பார்த்து விடுகிறார். மறுநாள் சல்மா, அவளது தொடர் கவனயீனத்தைக் காரணம் காட்டி அவள் பணிபுரியும் தொழிற்சாலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்படுகிறாள். வீட்டிற்கு வரும் சல்மா, தனது சேமிப்புப் பணம் எதுவும் இல்லாத காலி டப்பாவைப் பார்த்து அதிர்ந்து, நேராக பில் வீட்டிற்கு வருகிறாள். அங்கே அவளது பணத்துடன் பில்!
சல்மா பணத்தை எடுக்க, கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் பில், தன்னைக் கொன்று விட்டு பணத்தை எடுத்துச் செல்லுமாறு கூறி சல்மா கையில் துப்பாக்கியைத் திணித்து, பணத்தைப் பறிக்கிறான்.இந்த இழுபறியில் தவறுதலாக துப்பாக்கி வெடிக்கிறது. படுகாயமடைந்த நிலையிலும் பில், பணத்தை விடாமல் பற்றிக் கொண்டு,தன்னைக் கொன்றுவிடுமாறு கெஞ்சுகிறார். மகனின் கண்பார்வை தவிர வேறு எதையுமே எப்போதும் சிந்திக்காத சல்மா, அருகிலிருந்த ஒரு மரப்பெட்டியை எடுத்து தலையில் அடிக்கிறாள்.
அங்கிருந்து நேராக நண்பர் ஒருவரின் உதவியுடன் கண் மருத்துவரிடம் தன் மகனின் சிகிச்சைக்காகப் பணம் கட்டுகிறாள். போலீசார் அவளைக் கைது செய்கிறார்கள். கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
அங்கிருந்து நேராக நண்பர் ஒருவரின் உதவியுடன் கண் மருத்துவரிடம் தன் மகனின் சிகிச்சைக்காகப் பணம் கட்டுகிறாள். போலீசார் அவளைக் கைது செய்கிறார்கள். கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
மிகவிரைவில் விதிக்கப்படும் தூக்குத்தண்டனையை எதிர்நோக்கி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள். பார்வையையும் முற்றாக இழந்து, மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், ஆரம்பத்தில் சத்தமிட்டு அழும் சல்மா, மெல்ல மெல்ல அந்த சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டு, அங்கு கேட்கும் ஒலிகளை இசையாக்கி, மெல்லிய குரலில் பாடிக்கொண்டும், சிறிய ஸ்டெப்புகள் போட்டுக்கொண்டும் அதிலேயே லயித்திருக்கிறாள்.
சல்மாவின் தோழி அவளைத் தூக்குத் தண்டனையிலிருந்து காப்பாற்ற, ஒரு வக்கீலை ஏற்பாடு செய்கிறாள். அதற்குச் சம்பளமாக தன் மகன் கண் சிகிச்சைக்காகச் சிறுகச் சிறுகச் சேமித்த பணம்தான் பயன்படப்போகிறது என்றதுமே சல்மா கோபமாகப் பேசுகிறாள். மறுத்து விடுகிறாள். அவள் தோழி கேட்கிறாள் "ஜீன்க்கு அவன் அம்மா உயிரோடிருப்பது முக்கியம் இல்லையா?" "எனக்கு அவன் கண்பார்வையுடன் இருப்பதுதான் முக்கியம்" என்கிறாள் சல்மா!

சிறைக்கு தன்மகன் வந்து பார்ப்பதையும் அவள் விரும்பவில்லை. "அவன் இந்த நிலையில் என்னைப் பார்க்க வேண்டாம்"
சல்மாவின் இந்த 'கொடூரமான கொலைக்குற்றத்திற்கான'மரண தண்டனைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் சல்மாவுக்கெதிராக வழக்கறிஞர் முன்வைக்கும் வாதங்களில் ஒன்று, "இவள் மனிதகுலத்திற்கு சிறந்தது கம்யூனிசமே என்று கூறியிருக்கிறாள். நமது (அமெரிக்க) நாட்டின் கொள்கைகளை வெறுக்கிறாள்!"

தூக்குத் தண்டனையை நிறைவேற்றப் போகிறார்கள். மேடை இருக்கும் தளத்துக்குக் கீழே, சல்மாவின் தோழி உட்படப் பலர் அமர்ந்திருகிறார்கள். தூக்குக் கயிறை மாட்டும்முன் கறுப்புத் துணியால் முகத்தை மூட, பயத்தில் சல்மா அழுகிறாள். நிற்க முடியாமல் துவண்டு விழுந்து விடுகிறாள். ஒரு பலகையில் அவளைக் கிடத்தி நடுங்கும் கைகளைப் பிடித்து, கால்களையும் பலகையோடு பிணைத்துக்கட்டி, பின்னர் பலகையை நிமிர்த்தி அபப்டியே அவளை நிற்க வைத்து.... பின்னர் ஆரம்பத்தில் சொன்ன அந்தக்காட்சி!
- பார்த்து ஒருவாரத்திற்கு காட்சிகளின் பாதிப்பு தொடர்ந்து, பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. ஏண்டா பார்த்தோம் என்று தோன்றியது!
- பார்த்து ஒருவாரத்திற்கு காட்சிகளின் பாதிப்பு தொடர்ந்து, பெரும் மன உளைச்சலைக் கொடுத்தது. ஏண்டா பார்த்தோம் என்று தோன்றியது!
2000 ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரண்டு Cannes Film Festival 2000 விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுக் கொண்டது.
இயக்கம் - Lars Von Trier
மொழி - English
நாடு - Denmark
தூக்குத்தண்டனை அவசியமா இல்லையா என்ற கேள்விகள், குற்றங்கள் குறைய கடுமையான தண்டனைகள் அவசியம் என்ற வாதங்கள் இவற்றைத் தாண்டி, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் மீதான குற்றச் சாட்டுக்கள் உண்மையிலேயே நீதியான முறையில் தீர விசாரிக்கப் படுகின்றனவா? சட்டம் எந்த நாடாகிலும், எல்லாத்தரப்பு மக்களுக்கும் நியாயமாக இருக்கிறதா?
திட்டமிட்டு இன அழிப்பையோ, கொலைகளையோ செய்யும் பலர் சட்டத்தின் ஓட்டைகள், அதிகார பலங்கள் காரணமாக தப்பித்து வாழும்போது, சந்தர்ப்ப வசத்தால் குற்றவாளியாக ஆக்கப்பட்ட சல்மா போன்ற அப்பாவிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்? இதுவரை முறையான விசாரணை இன்றி செய்யாத குற்றத்திற்கு மரணதண்டனை பெற்றவர்கள் எத்தனையோ பேர் இருக்கலாம். பலவருட சிறைத்தண்டனையில் எத்தனைபேர்! நான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போது கூட உலகின் எங்கோ,ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் தான் செய்யாத குற்றத்திற்கு தண்டனை விதிக்கப்படலாம்!
டிஸ்கி: மூன்று வருஷத்துக்கு முதல் பார்த்தது! இப்போ எழுதுவற்காக 'லைட்'டா பார்க்கக்கூட முடியல! மன தைரியமுள்ளவர்கள் பார்க்கலாம். முக்கியமாக மரண தண்டைனையை ஆதரிப்பவர்கள் அவசியம் ஒருமுறை பாருங்கள்!
முதல் வருகை..
ReplyDeleteதூக்கு தண்டனைக்கு எதிரா நம்மூர்லயும் ஒரு படம் வந்துச்சு..ஹூம்..
ReplyDeleteinteresting பாஸ்
ReplyDeleteமனதை சோகத்தில் ஆழ வைக்கும் படம் போல இருக்கிறது. நல்ல கருத்துகள். பார்க்கத் தூண்டுகிறது.
ReplyDeletevery emotional narration Ji
ReplyDeleteiam very much impressed the way you took me in to the flim
Dancer in the Dark விமர்சனத்தை அழகாக அலசியுள்ளீர்கள்.
ReplyDeleteஇந்தப் படத்தை இனித் தான் பார்க்க வேண்டும்.
விமர்சனத்தின் அடிப்படையில் நோக்கும் போது ஆதரமற்ற குற்றச் சாட்டுக்களின் விளைவுகளையும், கண் தெரியா விடினும் சாதிக்க வேண்டும் எனும் நம்பிக்கையுடன் வாழும் பெண்ணின் உள்ளத்து உணர்வுகளையும் இப் படத்தில் காணலாம் என்று நினைக்கிறேன்.
நன்றிகள் தல.(ஜீ)
ok...ok..rait....
ReplyDeleteசல்மா..போன்றவர்கள் பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்!!
ReplyDeleteவிமர்சனம் நன்றாக இருக்கிறது ஆக்ஷன் படம் ஒண்ணு காட்டு தலைவா
ReplyDeleteஅண்னே.. செம கில்மா பட விமர்சனம் ஒண்ணு போடுங்க ஹி ஹி
ReplyDeleteஇந்த படம் பாத்தது இல்ல .. லிஸ்ட்ல சேத்துக்குறேன்.. :)
ReplyDeleteஅவசியம் பார்க்கிறேன்
ReplyDeleteஎப்பவோ பார்த்த படம் தலைவரே! நினைவூட்டியமைக்கு நன்றி, உங்கள் பதிவு மறுபடியும் பார்க்கும் ஆசையை கிளர்த்துகிறது. சிடியை தேடனும் :-)
ReplyDeleteஅருமையான விமர்சனம்...
ReplyDeleteசுவாரஸ்யமா இருக்கும் போல...
Pls Visit this Link..
http://anbudansaji.blogspot.com/2011/05/i-love-you.html
ஜீ...உங்கள் விமர்சனம் பார்த்து யூ டியூப்பில் தேடிப் படம் பார்க்கிறேன்.நன்றி !
ReplyDeleteஉங்கள் விமர்சனம் அருமை நண்பரே.
ReplyDeleteபாஸ், இந்தப் பதிவிற்கு நான் ஏற்கனவே போட்ட பின்னூட்டம் எங்கே?
ReplyDeleteகூகிளின் கொமெண்ட்ஸ் ஸ்பாம் பெட்டியினுள் போய் விட்டதா. ப்ளீஸ் ஒரு தடவை செக் பண்ண முடியுமா.
ஜீ...நன்றி.நேற்று இந்தப் படம் பார்த்து வியந்தேன்.கலங்கினேன்.தமிழ் சினிமா முன்னேற எவ்வளவோ காலம் தேவை !
ReplyDeleteவிமரிசனம் பார்த்தது படமே பார்த்தது போல உள்ளது. அருமையானபடம்.
ReplyDeleteதவற விட்ட பதிவு ஒன்று மீள கிடைத்திருக்கிறது...
ReplyDelete