திருமணம் நண்பர்களைப் பிரிக்குமா?
நண்பர்களோடு தொடர்புகளைப் பேணுவதில் என்னோட சுறுசுறுப்பு யாருக்குமே வராது. ஆனா நம்ம பிரண்ட்ஸ் இருக்கிறாங்களே அவனுங்க நம்மள விடப் பெரிய கில்லாடிங்க!
இப்பிடித்தான் நம்ம டாக்டர் பிரண்டு (நடிகர் விஜயல்ல உண்மையான டாக்டர்!) ஒருத்தன் கொழும்பில் என்னோட வீட்டுக்கு சற்று தூரத்தில்தான் அவன் வீடு! ஒருநாள் அதிகாலை திரிகோணமலையிலிருந்து நான் வரும் பஸ்ஸில அவனும்! என்னடான்னு கேட்டா...அவனும் அங்கதான் வேலையாம். நானும் நாலுமாசமா அங்கதான் வேலைன்னு சொன்னேன். அவன் எட்டுமாசமா...! ம்ம்ம்..என்ன ஒரு தொடர்பாடல்!
ஆனா..எவ்வளவு நாள் கழிச்சு சந்திச்சாலும் அதே பழைய பாசத்தோட பேசுவோம்! சிலரால் இதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நண்பன் இடைவெளி அதிகமாகிவிடும், சரியாகப் பேசமுடியாது என்கிறார்கள்! பதின் மூன்று வருடங்களின்பின் பள்ளி நண்பன் திலீயைச் சந்திக்க சென்றபோது, 'வா' என்றான். அது முன்பு அவன் வீட்டிற்குச் செல்லும்போது சொல்லும் அதே 'வா'. எந்த மாற்றமும் இல்லை. பழைய மாதிரியே பேசினோம்! கலாய்த்துக் கொண்டோம்!
ஆனாலும் திருமணம் என்பது நண்பர்களுக்கிடையே ஒரு திரையாக வந்துவிடுமோ? மிக நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது! கடந்த ஒருவருஷமா இருவரும் வேற வேற இடத்துக்குப் போனபிறகு தொலைபேசினதே நாலுதரம்தான்!
இவனுக்கு திருமணமான பின்பு நம்ம நட்பு ? பழையமாதிரி சந்திக்கவோ, அரட்டையடிக்கவோ முடியுமா?ஏதோ ஒரு இடைவெளி விழுந்தமாதிரி...ஒவ்வொருத்தனா பிரிஞ்சு போறமாதிரி...தனிமைப் படுத்தப்பட்ட மாதிரி.. ஒரு உணர்வு!
நான் மனம்விட்டு...ஏன் அநேகமாக பேசுவதே நண்பர்களோடு மட்டும்தான் (இப்போது பதிவுகளிலும்) என்பதாலும் அப்படியிருக்கலாம்! அந்த நண்பனும் அப்படித்தான்! அதென்னமோ தெரியல...திருமணமான நண்பர்களிடமிருந்து நாங்களாகவே ஒதுங்கிவிடுகிறோம்!
எங்களில் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சினை, ஒரு நண்பனை அவன் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ எப்படி எதிர்கொள்வது என்பதே! பள்ளிக் காலத்திலிருந்தே நாங்களெல்லாம் தனியாக கல்விகற்று வளர்ந்ததாலும், எவனுக்குமே நண்பிகளே இல்லாததாலும் இப்படி இருக்கலாம்!
இப்படித்தான் ஒவ்வொருவருக்கும் தோணுமா? திருமணம் என்பது நண்பர்களிடையே இடைவெளியை ஏற்படுத்துமா? நானே இவ்வளவு யோசிக்கும்போது பெண்களின் நிலைமை? இந்த விஷயத்தில் அவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்! மனைவியோ, கணவனோ நல்ல புரிந்துணர்வுள்ள சிநேகிதி/தோழனாகவும் வாய்த்துவிட்டால் அதுவே மிகப்பெரிய வரம்தான்!
மங்காத்தா - அஜீத்தும் சில ஆச்சரியங்களும்!
காலங்காலமாக தமிழ்சினிமாவில் இருந்துவந்த சில நம்பிக்கைகளை தகர்த்திருக்கிறது! தமிழில் ஒரு ஹீரோ, ஆன்டிஹீரோவாக நடிக்கும்போது, அவன் ஏன் அப்பிடி ஆனான் என்றொரு விளக்கம் கொடுக்கப்படும்! அப்படி இல்லாமல் வில்லன் என்றால் டபுள் ஆக்டிங் இருக்கவேண்டும்! ஹீரோ இமேஜ், பெண்கள் விஷயத்தில் நல்லவன், அப்படியே கெட்டவனா இருந்தாலும் கடைசியில் திருந்தவேண்டும்! கெட்டவன் கதையின் நாயகனாக இருக்கமுடியாது. அவனுக்கு எந்த விதமான எதிர்மறைக் குணங்களோ, பலவீனங்களோ கூடாது! அவனே புத்திசாலியாக இருப்பான். அவன்தான் கதையில் ட்விஸ்டுகளை நிகழ்த்துவான்! அவனின் எதிர்வு கூறல்கள் சரியாக இருக்கும்!
இதையெல்லாம் உடைக்கிறமாதிரி ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு படம் வருமா? - இப்படிப்பலர் எதிர்பார்த்திருப்பார்கள் என்னைப்போலவே! ஆனால் தமிழ்சினிமாவில் இப்படியான முயற்சியைச் செய்யும்போது ஒரு பெரிய ஹீரோ செய்தால்தான் அந்த மாற்றம் சரியான முறையில் உணரப்படும்! பெரிய ஹீரோக்கள் தங்கள் இமேஜ் கடந்து கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பார்களா? அப்படி நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? இப்படி எல்லா விஷயத்திலும் வெற்றியடைய முடியுமா?
முடியும்! என்று சொல்லியிருக்கிறார்கள்!
சில விஷயங்களைச் சிலரால் மட்டுமே செய்ய முடியும்! சிலர் செய்யும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ள/ ரசிக்க முடியும்! அப்படி ஒருவர் அஜீத்! அஜீத் தவிர்த்து இன்னொருவரால்தான் முடியும்! அவர் சூப்பர்ஸ்டார்! -அதுவும் இருபது வருடங்களுக்கு முன்னைய சூப்பர்ஸ்டார் எனில், கச்சிதம்!
நான் என் நண்பர் ஒருவரை 30 ஆண்டுகள் கழித்து சந்தித்தேன். முன்பை விட இப்போது நட்பின் ஆழம் அதிகமே!
ReplyDeleteதல தலதான்!
நல்ல பகிர்வு!
தமிழ் மணத்தில் இணைக்க முடியவில்லை.
ReplyDelete@சென்னை பித்தன்
ReplyDeleteநன்றி பாஸ்! எனக்கும் முடியவில்லை!
நட்பு பற்றிய உங்கள் கருத்து 100% சரி.
ReplyDeleteபெண்கள் தான் திருமணத்திற்குப் பின்னால் அதிகமாக நட்பை இழக்கின்றார்கள் என்பது சரி தான்..நல்ல பாயிண்ட்.
திருமணத்திற்கு முன்னால் நாம் எப்போது வேண்டுமானாலும் எதுவும் செய்யலாம் என்பதே நிலைமை. ஆனால் அதன்பிறகு....நமக்காக இரு உயிர் வீட்டில் காத்திருக்கும்போது, அதிகம் வெளியில் சுத்த முடிவதில்லை. அதைப் புரிந்துகொண்ட நண்பர்கள் இருந்தால், நட்பு தொடரும்.
ReplyDeleteஅத்தகைய நட்பு தொடர்ந்தால் போதும், மற்றவை உதிர்வது நல்லது தான்!
ReplyDeleteஅஜித் பற்றி நீங்கள் சொன்னது சரி தான். அவரை நெகடிவ் கேரக்டரில்கூட நம்மால் ரசிக்க முடிகிறது.
வணக்கம் ஜீ சார்! இனிய புதன்கிழமை வாழ்த்துக்கள்!
ReplyDeleteநீங்க சொன்ன இரண்டு செய்தியுமே நன்று!
முதலாவது, ஒருவரது திருமணத்துக்கும் ( ஆணோ,பெண்ணோ ) அவரது நட்புக்கும் எதுவித சம்மந்தமும் இல்லை! அதுவேற உறவு! இது வேறு உறவு!
ஆனால், மனதில் வியாதி உள்ள கணவனோ,மனைவியோ வாய்க்கப்பெற்றால், நட்பினைத் தொடரமுடியாதுதான்!
தமிழர்களின் நிலைமை அப்படி இருக்கிறது!
இரண்டாவது - அஜீத்!
தி கிரேட்!!
சரிங்க
ReplyDeleteநட்பு உண்மைஎன்றால் அதை எக்காலத்திலும் பிரியாது பாஸ்.
ReplyDeleteஅப்புறம் தலை தலைதான்.
ReplyDeleteஉண்மைதான் நீங்கள் சொல்வது போல்
இதை ரஜனி அஜித் செய்யும் போதுதான் மக்கள் ரசிப்பார்கள்
மற்ற ஹீரோக்கள் செய்தால் இத்தகைய வரவேற்ப்பு இருக்காது என்றே நினைக்குறேன்
அதை விட அந்த ஹீரோக்களும் இதை விரும்ப மாட்டார்கள்.
நாளைய முதல்வர் கனவில் இருப்பவர்கள் எப்படி இப்படி நடிக்க ஒத்துக்கொள்வார்கள்
முதல் பகுதி நானும் அனுபவிச்சி இருக்கேன் மாப்ள ....ரெண்டாவதும் சர்தான் நன்றி!
ReplyDelete//
ReplyDeleteசில விஷயங்களைச் சிலரால் மட்டுமே செய்ய முடியும்! சிலர் செய்யும்போது மட்டுமே ஏற்றுக்கொள்ள/ ரசிக்க முடியும்! அப்படி ஒருவர் அஜீத்!
//
100 % correct
தல தலைதான்
ReplyDeleteநல்ல பதிவு.வாழ்த்துக்கள்
ReplyDeleteஅப்படி ஒருவர் அஜீத்! அஜீத் தவிர்த்து இன்னொருவரால்தான் முடியும்! அவர் சூப்பர்ஸ்டார்! -அதுவும் இருபது வருடங்களுக்கு முன்னைய சூப்பர்ஸ்டார் எனில், கச்சிதம்!
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள் .
நண்பனை எப்போ சந்திச்சாலும் நண்பன்தானே...அதே அன்பும் நெருக்கமும் இருக்கத்தான் செய்யும்...!!!
ReplyDeleteநட்பும் தலயும் கொண்ட நல்ல பகிர்வு,
ReplyDeleteதமிழ்மணம் 2.
வாழ்த்துக்கள்..!
உண்மையான நட்பு புரிந்து கொண்டால் போதும்... பகிர்வுக்கு நன்றி நண்பா
ReplyDeleteஇப்ப நவீன தொடர்பு சாதனங்களும் வந்து விட்டதால உலகத்தில் எந்த மூலையில இருந்தாலாலும் நற்பை தொடர முடியுது இந்த விடயத்தில் பெண்கள் பாவம்தானைய்யா...
ReplyDeleteநல்ல நட்பு என்றும் தொடரும் ...இடைவேளிகளை தாண்டி...
ReplyDeleteநல்லா எழுதியிருக்கீங்க...
"..திருமணம் என்பது நண்பர்களுக்கிடையே ஒரு திரையாக வந்துவிடுமோ.." வரக் கூடாது. ஆனால் பலருக்கும் வந்துவிடுகிறது. ஆராயப்பட வேண்டியது.
ReplyDeleteதிருமணத்திற்கு பின் நட்பு நல்ல முறையில் தான் தொடரும் அது ஆண்கள் விசயத்தில் சாத்தியம். பெரும்பாலும் பெண்கள் திருமணத்திற்கு பின் தங்களது நட்பு வட்டாரத்தை தொடர்வது இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை. . .
ReplyDelete////மனைவியோ, கணவனோ நல்ல புரிந்துணர்வுள்ள சிநேகிதி/தோழனாகவும் வாய்த்துவிட்டால் அதுவே மிகப்பெரிய வரம்தான்! // உண்மை தான் பாஸ் ...
ReplyDeleteஜயா வணக்கமுங்க...அம்மா வணக்கமுங்க.......நான் தாங்க ஸ்டையில் நாராயணன் கஞ்சிபஜார் வலைப்பதிவின் உரிமையாளர்.இன்றைக்குதானுங்க வலைப்பதிவு எழுதவந்து இருக்கேன்.
ReplyDeleteஎன்னையும் இந்த வலையுலகில் ஏற்றுக்கொள்ளுங்கள் பிரபல பதிவர் பெருமக்களே..நீங்களை எல்லாம் வந்து விடுவீங்கனு நினைக்கிறன்.....எனவே எல்லா பிரபல பதிவரும் வாருங்க உங்க ஆதரவை அள்ளிதாருங்க.
தலைக்கு ஒரு ஓப்போடு....அப்பறம் ஒங்களுக்கு டாக்குத்தர்(விசய்)பிடிக்காதோ..ஹி.ஹி
ReplyDeleteஎன்ன பாஸ் இந்த பதிவே எதற்கோ அடித்தளம் போல இருக்கே????
ReplyDelete/////பள்ளிக் காலத்திலிருந்தே நாங்களெல்லாம் தனியாக கல்விகற்று வளர்ந்ததாலும், எவனுக்குமே நண்பிகளே இல்லாததாலும் இப்படி இருக்கலாம்!////
ReplyDeleteநம்பீட்டம் நம்பீட்டம்...
எல்லாம் அனுபவம்தானேப்பா..
>>எங்களில் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சினை, ஒரு நண்பனை அவன் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ எப்படி எதிர்கொள்வது என்பதே! பள்ளிக் காலத்திலிருந்தே நாங்களெல்லாம் தனியாக கல்விகற்று வளர்ந்ததாலும், எவனுக்குமே நண்பிகளே இல்லாததாலும் இப்படி இருக்கலாம்!
ReplyDeleteஉண்மைதான்.. எல்லா நட்பும் கல்யாணத்திற்கு முன். க பின் என பிரிக்கப்பட்டே பார்க்கப்படும்
சாருக்கு கல்யாண ஆசை வந்திட்டுதோ!
ReplyDeleteமங்காத்தா இன்னும் பார்க்கல.
திருமணத்தாலயே நண்பர்களுக்கிடையில பிரச்சினை வருவதும் உண்டு!! நண்பன் காதலித்த பெண்ணை லவட்டிக்கொண்டு போன பல சந்தர்ப்பங்களும் உண்டு!!
ReplyDeleteமங்காத்தா உண்மையில் நல்ல முயற்சி நல்ல படம்!!
நட்பை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
ReplyDeleteஇதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5
தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5
தல தலதான்
ReplyDeleteநண்பனுக்கு திருமணம்னதும் சாருக்கு பொறாமைய பாரு...
ReplyDelete//எங்களில் பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சினை, ஒரு நண்பனை அவன் காதலியுடனோ அல்லது மனைவியுடனோ எப்படி எதிர்கொள்வது என்பதே! //
இதுதான் சார் பயிண்டு, நாங்களாவே ஒதுங்கிட்டு அடுத்தவங்க மேல பழிய போடறது நியாயம் இல்ல.
மங்காத்தா பத்திய உங்களின் பார்வை ரொம்ப துல்லியமா இருக்கு... நிறைய ஹீரோக்கள் தமிழ் சினிமாவின் வழக்கமான தத்து பித்து தனங்களை தாண்டி நடிச்சுகிட்டு இருந்தாலும் சுப்பர் ஸ்டாருக்கு ஈகுவலானா ஓபனிங் உள்ள ஒரு பெரிய ஸ்டார் செய்யும் பொது அதுக்கு தனி மரியாத எப்பவும் இருக்கு.
மீண்டும் வணக்கம் பாஸ்..
ReplyDeleteதிருமணம் நண்பர்களிற்கு அமையும் மனைவிமாரின் குணவியல்பின் அடிப்படையில் தான் நட்பினைப் பிரிக்கும் என்று நினைக்கிறேன்.
மங்காத்த அஜித்தின் முயற்சி வரவேற்கப்பட வேண்டிய விசயம்.
பார்ப்போம்...அடுத்து யார் தம் இமேஜ்ஜிற்கு முக்கியத்துவம் படம் நடிக்கிறார்கள் என்று?
Hey very cool website!! Man .. Beautiful .. Superb ..
ReplyDeleteI will bookmark your blog and take the feeds additionally?
I am satisfied to seek out a lot of helpful information right here in the post, we
need work out extra strategies on this regard, thank you for sharing.
. . . . .
Hi there, I enjoy reading all of your article post. I
ReplyDeletelike to write a little comment to support you.