கஜினி படத்தில் கல்பனா (அசின்) கண்தெரியாத பெரியவர் ஒருவரைக் கை பிடித்து ரோட்டைக் கடகும்போது சுற்றிவர என்ன நடக்கிறது என்பதைச் சொல்லிக்கொண்டே வரும் காட்சியை யாராலும் மறக்கமுடியாது!
அதைப்பார்க்கும் சூர்யாவுக்கு அவர்மேல் இன்னும் மரியாதை, காதல் ஏற்படுவதுபோல அமைக்கப்பட்ட அந்தக் காட்சிக்கு ஏற்ப இசையும் சேர்ந்து ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கும்! அசினைப் பிடிக்காத எனக்கே ஒரு இது வந்துச்சுன்னா பாருங்க! (அந்தப்படத்தில மட்டும்!)
ஆனாலும் ஒரு விஷயம் அப்பவே தோணிச்சு! அதுவரை ஏன் இதுவரை கூட பிறருக்கு உதவும் இளம் தமிழ்ப் பெண்களை நான் பார்த்ததே இல்லை! உதவியா? உபத்திரவம் செய்யாமலிருப்பதே பெரியவிஷயம் என யாரும் சொல்லாதீங்க!
தங்களுக்கு ஏதும் உதவி தேவையெனில் தயங்காமல் யாரிடமும் கேட்கிறார்கள். பெரும்பாலும் அதற்கு அவசியமே இல்லாமல் யாராவது சபலிஸ்டுகள் ஓடி வருகிறார்கள்! இதைவிட பார்த்ததுமே அடையாளம் காணக்கூடிய புன்னகை மன்னன்களும் நம்மிடையே பரவலாகக் காணப்படுகிறார்கள்! புன்னகைமன்னன் - இழிச்சவாயன்னும் சொல்வார்கள்!
நம்ம தமிழ்ப்பெண்கள் இப்படியெல்லாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்களா? கண்தெரிஞ்ச ஆளுங்க ஏதாவது கேட்டால்கூட உதவி செய்வார்களா? - நான் பார்த்ததே இல்லையா அதான் இப்பிடி ஒரு சந்தேகம்.
ஆனால் அநேகமாக எந்தப் பெண்களுமே பசங்களைக் கண்டதுமே 'பீட்டர்' விட ஆரம்பித்து விடுகிறார்கள் - இதை மட்டும் தவறாது செய்கிறார்கள்! சந்தேகமேயில்லை - இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்! ஏனிப்படி? - சத்தியமாப் புரியல!
அநேகமாக இயக்குனர் முருகதாசும் இப்படியான இரக்க குணமுள்ள பெண்களைப் பார்த்திருக்கமாட்டார். ஆனாலும் எவ்வளவு அழகா, அதீதமா கற்பனை செய்திருக்கார்னு ஒரே ஆச்சரியம்! பிரமிப்பு! - உண்மையிலேயே பெரிய விஷயம்தான் இல்லையா?
இருந்தாலும் இப்படி ஒரு பெண்ணைப் பார்க்க முடியுமான்னு அப்பப்ப கேணத்தனமா யோசிச்சிருக்கேன்.........ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அமேலியைப் பார்க்கிற வரைக்கும்!
அமேலி யாரோ பார்வையில்லாத பெரியவரை அப்படித்தான் அழைத்துச் சென்றாள். ஆனால் மிகவிரைவாக...கிட்டத்தட்ட தர தரவென இழுத்துச் செல்லாத குறையாக...! அதைவிட அவளின் பேச்சு இன்னும் விரைவாக...ஒண்ணுமே புரியல - பிரெஞ்சில் பேசியதால்!
இருபத்துமூன்று வயதான அமேலி சிறுவயதில் மற்றக் குழந்தைகளோடு சேர அனுமதிக்கப்படாமல் தனியாக வளர்க்கப்பட்டவள்! தனிமையில், ஒரு கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அவள், பிறருக்கு உதவும் இரக்கமனமும், நகைச்சுவை உணர்வும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும் கொண்டவள்!
பாரிசிலுள்ள Café des 2 Moulins இல் Waitress ஆக வேலை செய்பவள் - அப்படித்தான் சொல்கிறார்கள் படத்தில்!
2001 இல் வெளிவந்த இந்த பிரெஞ்சுப்படத்தில் அமெலியாக நடித்த Audrey Tautou (படங்களில் இருப்பவர்) - European Film Awards, Cesar Awards, BAFTA உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுக் கொண்டார். சிறந்த நடிகைக்கான Accademy Award க்கும் பரிந்துரைக்கப்பட்டார்.
Amelie யில் அந்தக்காட்சி சென்டிமென்டலாக இருக்காது. கஜினியில் அதை ஒரு அற்புதமான காட்சியாக மாற்றியிருப்பார் முருகதாஸ். எனக்கு இயக்குனர் முருகதாஸை பிடிக்கும்! ஏழாம் அறிவுக்கு வெய்ட்டிங்!
கிறிஸ்டோபர் நோலனின் Memento வை சுட்டுத்தான் முருகதாஸ் கஜினி எடுத்தார் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டாலும், சில விஷயங்கள் தவிர அப்படிக் கூற முடியாது! ஏனெனில் Memento வைத் தமிழில் எடுத்தால் நிச்சயமாகத் தயாரிப்பாளர் 'கஜினி' ஆகி விடுவார்!
சரி இப்போ என் கேள்விக்கு வருவோம்! (மறுபடியும் முதல்ல இருந்தா?) இப்படியான தமிழ்ப் பெண்கள் இருக்கிறார்களா?
// புன்னகைமன்னன் - இழிச்சவாயன்னும் சொல்வார்கள்!//
ReplyDeleteஅட இளிச்சவாயன் எண்டத எவ்வளவு டீசன்ரா சொல்லுறாங்க
தமிழ்லையும் இருப்பங்கள் அப்பு. தேடி பாருங்கோ!
ReplyDeleteஇப்படியான தமிழ்ப் பெண்கள் இருக்கிறார்களா?////
ReplyDeleteபெண்கள் மட்டும் தானா? ஆண்களில் சிலரும் இருக்கிறார்களே..
எப்படியெல்லாம் யோசிக்கரய்யா....சிக்குவனா ஹிஹி!
ReplyDeleteநல்ல கேள்வி.....விடை தெரியாது....
ReplyDeleteஅந்த ஃப்ரெஞ்சுப் படத்துப் பேரு என்ன ஜீ?
ReplyDeleteதமிழ்பெண்கள் உதவி செஞ்சு பார்த்திருக்கேனே..ஆனா நீங்க சொல்ற மாதிரி ஜீன்ஸ் பேண்ட் போட்ட பெண்கள் இல்லை..கூலி வேலை செய்கிற, சாதாரண நடுத்தட்டுப் பெண்கள் பிறருக்கு உதவவே செய்கிறார்கள்..
ReplyDeleteமேல்தட்டு அசின்கள் உதவி நான் பார்த்ததில்லை, ஆனால் மேல்தட்டு சூர்யாக்கள் மட்டும் உதவுகிறார்களா என்ன..
ReplyDeleteஎப்போதும் நத்தை போல் தன்னை ஒருகூட்டுக்குள் சுருக்கிக்கொள்ளும் இயல்பு நம் பெண்களுக்கு இருக்கவே செய்கிறது..நம் சமூகச் சூழலும் ஒரு காரணமோ..
ReplyDelete//நம்ம தமிழ்ப்பெண்கள் இப்படியெல்லாம் அடுத்தவர்களுக்கு உதவி செய்வார்களா? கண்தெரிஞ்ச ஆளுங்க ஏதாவது கேட்டால்கூட உதவி செய்வார்களா? - நான் பார்த்ததே இல்லையா அதான் இப்பிடி ஒரு சந்தேகம்.//
ReplyDeleteஆண் பெண் இருபாலரும் இருக்கிறார்கள் .(நானே பார்த்திருக்கிறேன் )
////ஆனால் அநேகமாக எந்தப் பெண்களுமே பசங்களைக் கண்டதுமே 'பீட்டர்' விட ஆரம்பித்து விடுகிறார்கள் - இதை மட்டும் தவறாது செய்கிறார்கள்! சந்தேகமேயில்லை - இதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்! ஏனிப்படி? - சத்தியமாப் புரியல! ////// ஹிஹி
ReplyDelete@தமிழ்வாசி )))
ReplyDeleteசரி இப்போ என் கேள்விக்கு வருவோம்! (மறுபடியும் முதல்ல இருந்தா?) இப்படியான தமிழ்ப் பெண்கள் இருக்கிறார்களா?///கூடும்!
ReplyDeleteதமிழ்ப்பெண்களா இப்படி?//
ReplyDeleteஎன்ன பாஸ்,,கையைப் புடிச்சு இழுத்திட்டாளுங்களா....
ஹா...ஹா..இருங்க படிச்சிட்டு வாரேன்.
தமிழ்ப் பெண்களின் இயல்பான, சுயநலக் குணத்தினை முதலில் விளித்திருக்கிறீங்க.
ReplyDeleteஅதனுடன் சேர்த்து கஜனியில் தொட்டு வைத்த காட்சியினையும் சுட்டியிருக்கிறீங்க.
ஆளை விடுங்க பாஸ்..
நான் இதில பதில் சொல்லப் போயி, பிறகு நமக்கே ஒரு எதிர்ப் பதிவு போட்டுடுவாங்க.
மீ.........எஸ்..........
இருக்கத்தானே செய்கிறார்கள்.....
ReplyDeleteமறுபடியும் முதல்ல இருந்தா?
ReplyDelete-:)
இப்படியெல்லாம் நம்ம பொண்ணுக இருந்தா பசங்க சும்மா இருப்பானுகளா...? ஆளுக்கொரு கறுப்பு கண்ணாடிய மாட்டிக்கிட்டு வந்துட மாட்டாய்ங்களா? அப்புறம் பொண்ணுங்க புல்டைமா இந்த வேலதான் பண்ணனும்......!
ReplyDeleteநீங்க என்னவோ நிஜத்துல அப்படியொரு தமிழச்சியை கண்டுபிடிச்சிட்டீங்க போலன்னு லைட்டா பொறாமை பட்டேன்... சினிமாதானா...??
ReplyDeleteமாப்பிள நானும் உந்த படத்த பார்தேன் அருமையான படம் மொழியும் ஓரளவு புரிந்தது.. ஆனா நீங்க சொல்வது போல் படம் 2001இல் வரவில்லைன்னு நினக்கிறேன் ஆனால் நிச்சயமாய் தெரியாது..
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்..
ஆண்கள் பெண்கள் எல்லோரும் இப்படியே... இதுக்கு விதிவிலக்கு இல்லை பாஸ்
ReplyDeleteதமிழ் மணம் 12.
ReplyDeleteஉண்மையில் கஜினியில் அசின் கேரக்டர் பிரமாதமான கேரக்டர்.... ரியலாக அப்படி ஒரு கேரக்டரை பார்க்கும் எவனும் மனதை பறிகொடுப்பான்.... நானும் தங்களைப்போல் ஏழாம் அறிவுக்காக காத்திருக்கும் ஆறாம் அறிவு.
ReplyDeleteஅந்த மாதிரி பெண்கள் இருந்தால் சொல்லுங்க..அட..நீங்க சொல்ற மாதிரி நல்ல பொன்ணுங்களை சொன்னேங்க
ReplyDeletenalla pengalum irukirargal
ReplyDeleteகஜினி காட்சிய விவரிச்சதும் பயந்திட்டன், எங்க நீங்களும் காப்பி, அட்ட காப்பி, ஈ அடிச்சான் காப்பின்னு எதாச்சும் சொல்லப்போறீங்கன்னு. ஆனா ஆமாலி பாத்திருந்தும் நாகரீகமா ஒப்பிட்டது ஆறுதல் தருது.
ReplyDeleteசமூகத்தில் இப்போது எல்லோரும் பொது நலம் மறந்து சுயநலத்தில் ஊறிவிட்டார்கள் என்கிறீர்கள்!கோர்த்துவிட்டாச்சு ஜீ!
ReplyDeleteநல்ல ஒப்பீடுதான்!
உதவி கொண்டு தான் இருக்கி(றோம்)றார்கள்.ஆனால் அப்படி ஒருவரை நீங்கள் சந்திக்கவில்லை என்பதே உண்மை.
ReplyDeleteயோவ்,அது என்னா தமிழ் பொண்ணுங்க?எல்லாமெ அப்படித்தான்.
ReplyDelete:-)
ReplyDeleteall girls selfish
ReplyDeleteநான் ஏதோ பொண்ணுங்களை பற்றி தப்பா பதிவு போட்டிருக்கிங்களோன்னு நெனச்சேன். பரவாயில்லை. ஒரு படத்தோட ஹீரோயினை பற்றி இப்படிக்கூட ஆரம்பிக்கலாமா?
ReplyDeleteதமிழ்ப்பெண்கள், தமிழ் ஆண்கள் என்றெல்லாம் பிரித்துப்பார்க்க முடியாது. ஒரு தனிமனிதன் செய்யும் பல விடயங்கள் அவன்/அவள் வாழும் சமூகத்தின் வாழ்வு முறையைப் பின்பற்றியே வரும். அதை அவனும் அவளும் உணராவிடில் கூட சமூகவியலாளரால் முடியும். இந்த சமூகவியல் தத்துவத்தைச் சொன்னவரும் ஒரு பிரெஞ்சு சமூகவியலாளரான எமிலி டர்கேம்.(Emile Durkhem) இவர் சமூகவியல் அப்படி ஒரு பாடமிருக்கிறது என்று சொன்னவர். ஒரு சமூகத்தின் நடத்தையை, அச்சமூகத்தின் பிரஜையின் நடத்தையிலிருந்து, ஒரு பிரஜையின் நடத்தையை அப்பிரஜை வாழும் சமூக்தின் நடத்தையிலுருந்தும் காணலாம்.
ReplyDeleteநீங்கள் எடுத்துக்கொண்டது ஒரு குருடரை. குருட்டுத்தன்மை உலகமெங்கும் ஒரு பச்சாபிதத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும் ஒன்று. Blindness is visible to others openly.. அதே வேளையில் செவிடருக்கு இப்படிப்பட்ட உதவி கிடைக்காது. மாறாகப் பரிகாசமே கிடைக்கும். Only those who speak to a deaf person know that the person is deaf.
அவனோ / அவளோ அப்படி ஒரு செவிடருக்கு உதவி புரியும்போது, அவர்கள் அவர்களின் சமூகத்தின் நடத்தையைப் பிரதிபலிக்க, நாம் அச்சமூகத்தை ஒரு உயர்ந்த சமூகம் எனச் சொல்லலாம்.
இன்றைய தமிழ்ச்சமூகத்தின் நடத்தையில் பல பரிமாணங்களில் கீழ் நிலையிலேயே இருக்கிறது என்பதை தமிழர்கள் எதற்கெல்லாம் முக்கியம் அளிக்கிறார்கள் என்பதிலிருந்து காணலாம். நகைச்சுவையையே எடுங்கள். ஒரு செவிடனையும் அல்லது ஒரு ஊனமுற்றவனை, அல்லது ஒரு மூதாட்டியைப்பரிகாசம் பண்ணினால், அது நல்ல நகைச்சுவையாகும். ஆனால் பிற சமூகங்களில் அது ஒரு அசிங்கமான நடத்தை. உங்களையே எடுங்கள். இப்படிப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஒரு படிப்பை ஒரு சினிமாவை வைத்து அல்லது அதனால் தூண்டப்பட்டே எழுதுகிறீர்கள். ஏனென்றால், நாம் அதனால் மட்டுமே கவரப்படுகிறோம். சினிமாவின் தாக்கம் மிகப்பெரியது இங்கே. The impact of cinema, whether negative or positive, is impressively huge here. It will surprise the outsiders.
சுட்டுட்டாங்கப்பு. கொஞ்சம் கவனிங்க...
ReplyDeletehttp://kusumbu.com/cinimaread_more.php?newsid=MjcxNg==
நல்ல பெண்களும் இருப்பாங்க சார்!! உங்களுக்கு கிடைக்கும் கவலைப்படதாயுங்க சார்!!
ReplyDeleteநண்பா நீங்க சொல்வது போல் எல்லா பெண்களும் அவ்வாறில்லை..
ReplyDeleteசெங்கோவியின் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்..
நகரத்து பெண்களிடம் அந்த இயல்பு இல்லாமல் இருக்கலாம்.. ஆனால சில கிராமத்து பெண்களிடம் உதவும் மனப்பான்மை இருக்கிறது ஆனால் ரொம்ப குறைவு..
>>ஆனால் அநேகமாக எந்தப் பெண்களுமே பசங்களைக் கண்டதுமே 'பீட்டர்' விட ஆரம்பித்து விடுகிறார்கள் -
ReplyDeleteஎன் அப்பா காலத்தில் இருந்தே இப்படித்தான். தாத்தா காலத்திலும் இப்படி இருந்திருக்கலாம்.
இரண்டு விதமான பெண்களையும் பார்த்திருக்கேன் நண்பரே
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தில் தங்களை
ReplyDeleteஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
வணக்கம் சகோ ...
ReplyDeleteநானும் Amelie படம் பார்த்துவிட்டு ... இதை பார்த்து தான் கஜினி படத்தில் சுட்டிருபார்களோ என்று எண்ணினேன் ... தங்கள் வலைப்பக்கம் உலாவுகையில் விடை கிட்டியது ..!!!
மற்ற பதிவுகளும் அருமை ...!!!
வாழ்த்துகளுடன் ...
ஜெ ..!!!
எனக்கு என்னமோ கஜினி லதான் மொக்கையா இருந்துச்சு. சும்மா Heroine மேல லவ் வர்றதுக்காக create பண்ண சீன்.
ReplyDeleteAmelie படத்துல அந்த பெண் சிறு வயதில் இருந்து தனிமையில் வாழ்ந்த அவள், ஒருவருக்கு உதவி செய்த பின் எழுந்த மிகுதியான சந்தோஷத்தில் இருக்கும் அந்த தருணத்தில் , அவள் மேலும் தான் மனித குலத்திற்கு ஏதானும் செய்யவேண்டும் என்று என்னும் நேரத்தில் இந்த கண் தெரியாத ஒருவருக்கு உதவுவாள்...அந்த படத்தில் அந்த காட்சியை அழகாக விளக்கி இருப்பார்கள். அந்த dialogues இதோ ...
Amélie suddenly feels in perfect harmony with herself.
everything's perfect: the softness of the light,
that little scent in the air, the peaceful sounds of the city .
Life seems so simple and crystal-clear that she's swept
by this desire to help the all mankind.
நீங்கள் சொல்வது உண்மை! அமெலியில் இயல்பான காட்சி அது. அவளின் இயல்புமே அதுதான்.
Deleteதமிழ் சினிமாவில் - ஹீரோயின்மேல் காதல் வருவதற்கு காரணம் வேண்டுமே! என்ன செய்வது! :-)
தங்களது இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு கீழுள்ள முகவரிக்குச் சென்று காணவும்...
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/04/blog-post_25.html