Wednesday, January 26, 2011

Christopher Nolan


2006 இல் ஒருநாள். தற்செயலாக ஒரு DVD கடையில் அந்த ஆண்டில் வெளியான  The Prestige  என்று ஒருபடம். டைரக்க்ஷன் கிறிஸ்டோபர் நோலன் என்றிருந்தது! ஏதோ ஒன்று பார்த்ததும் ஈர்க்க, (அப்போது நோலன் பற்றி எதுவும் தெரியாது!)  வாங்கினேன்.

நல்ல தரமான DVD. அருமையான ஒளிப்பதிவு, அழகான ஆர்ட் டைரக்சன்! ஆனா, படத்தில என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியல! அப்போதிருந்த மனநிலையில் பொறுமையில்லாமல் அரைமணி நேரம் பார்த்துவிட்டு நிறுத்திவிட்டேன் (முடியல!)

சரியாக இரண்டு வருஷங்களின்பின் ஒரு ஆர்வக்கோளாறில படம் பார்க்க முடிவு செய்து, மேஜிக் கலைஞர்கள் பற்றிய கதை என்பதால் ஈடுபாட்டுடன் பார்த்தேன். ஒன்றும் புரியாமலே சும்மா படம் பார்க்க , கதையில் வரும் சில ட்விஸ்டுகள் அசரவைக்க (ச்சே! இவ்வளவு நாளா மிஸ் பண்ணிட்டியேடா!)

இருந்தாலும் படம் சரியாக பிடிபடவில்லை. படம் என்பதை படத்தில் பேசப்படும் ஆங்கிலம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு, தமக்கு இங்லீஷ் நல்லா தெரியும் அதால படம் புரிந்ததுவிட்டது எனக் கூறும் பயபுள்ளைகள் நம்மிடையே பலர். அப்படியானவர்களுக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலைப் பரிந்துரைக்கிறேன்.
  

கதை - இரண்டு மேஜிக் கலைஞர்கள் தொழில் போட்டி மற்றும், தனிப்பட பழிவாங்கல் காரணமாக முட்டிக் கொள்ள... என்னவாகிறது? - என்பதுதான்! திரைக்கதையில்தான் இருக்கு உண்மையான மேஜிக்!

இது  ஒரு Nonlinear ஸ்டைலில் அமைந்திருக்கும். (இது நோலனின் ஸ்பெஷாலிட்டி)

இரண்டாம் முறை பார்க்கும்போதுதான் (நம்முடைய அறிவுக்கு?!)தெளிவாக(??) விளங்கியது. கூடவே சில குழப்பங்களும்! 
மூன்றாம் முறை பார்க்கையில் இன்னும் புதிய சில விஷயங்கள், கூடவே அதிகரித்த குழப்பங்களும்! 
நான்காம் முறை....வேணாம் இத்தோட நிறுத்திக்குவோம்!

ஏன்?, எப்படி?, எதற்காக?, யார்?, யார் நல்லவன்?, உண்மை என்ன? - இப்படி ஏராளமான கேள்விகள், குழப்பங்கள். மண்டை காய்ஞ்சிருச்சு! அந்தக் காலகட்டத்தில் நம்ம தலையில் ஏராளமான முடி இருந்திச்சு....அப்புறம் கணிசமாகக் குறைந்ததுபோல ஒரு உணர்வு!

படம் பார்த்த நமக்கே இவ்வளவு குடைச்சல்னா, திரைக்கதை அமைக்க எப்படி உட்கார்ந்து யோசிச்சிருக்கணும்? அண்ணன் கிறிஸ்டோபர் நோலன் வாழ்க!

Christopher Nolan
வயது 40. ஹாலிவுட் இயக்குனர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்

லண்டனில் பிறந்தவர் - அதனால்தான் லண்டனில் பிறந்த ஹாலிவுட் நடிகர் Christian Bale, இங்க்லீஷ் நடிகர் Michael Caine இருவரையும் அதிகமாகத் தான் படங்களில் பயன்படுத்துகிறார்? (எப்பூடி??...தமிழேண்டா!!! )

நோலனின் முதல் படம் 1998 இல் வெளியான Following. இவரே எழுதி, இயக்கிய சின்ன பட்ஜெட் படம் (6000 டொலர்ஸ், black & white ). லண்டனில் படமாக்கப்பட்ட இப்படத்தின் வெற்றி ஹாலிவுட் வாய்ப்பை ஏற்படுத்தியது!

ஆறுமாசம் ஹோட்டலில் ரூம் போட்டு கதை யோசிச்சு, படமெடுத்து ரிலீஸ் பண்ணினா எங்கே கதை? ன்னு தேட அதுக்கு தனியா ரூம் போட்டு யோசிக்கணும் - பல படங்களில் பார்த்த அனுபவம்.

கதையென்ற ஒன்றையே முடிவு பண்ணாமல் ஒரு பெரும்படையுடன் காமெராவைத் தூக்கிக்கொண்டு போய் மூன்று வருடங்களாகப் படமெடுக்கும் அறிவுஜீவி இயக்குனர்களையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

அனால் கதையை தேர்ந்தெடுத்த பின்னர் திரைக்கதைக்கான அசுர உழைப்பு நோலனின் படங்களில் (Memento, The Prestige) தெரியும்!

தமிழில் கஜினி வெளியானபோது நோலனின் இன்னொரு புகழ்பெற்ற படைப்பான Memento (2000) குறித்துப் பேசப்பட்டது!


Memento பார்த்தபோது அது இன்னொரு விதமான அனுபவம்!

- மனைவி/காதலியின் கொலைக்கான பழிவாங்கல்
- Short term memory loss,
- உடலில் பச்சை குத்துதல்,
- Polaroid Photography
என்ற 'கஜினி' யுடனான ஒற்றுமைகள் தவிர்த்து, திரைக்கதையமைப்பு முற்றிலும் புதிய அனுபவம்!

அதுவும் முதல் தடவை எதுவும் புரியவில்லை, பின்பு புரிந்தபின் அதிலும் விடை காண முடியாத கேள்விகள், குழப்பங்கள்!

மெமெண்டோ ஒரு Revers Chronological ஸ்டைலில் எடுக்கப்பட்ட Psychological Thriller படம்! அதுவரை இல்லை அதைத்தவிர அப்படி ஒரு படத்தைப் பார்த்ததில்லை நான்.

வழமையான த்ரில்லர்/பழிவாங்கல் படங்களில் அடுத்து என்ன நடக்கும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருக்க, மெமெண்டோவில் இதுக்கு முதல் என்ன நடந்திருக்கும்? என எதிர்பார்க்க வைப்பது புதிதாக!

ஆனால் கதை (அல்லது தீம்?) என்று பார்க்கும்போது மெமெண்டோ, கஜினி இரண்டுமே,
மனைவி/காதலியின் கொலைக்காக, Short term memory loss பிரச்சினையுடைய ஒருவனின் பழிவாங்கல் - என்பதுதானே!

'கஜினி' இந்திக்குப் போனபோது, படத்தின் கதை உரிமை(?!) உன்னோடதா? என்னோடதா? ன்னு சண்டை போட்டாங்க இயக்குனரும், தயாரிப்பாளரும். ஆனால் இது எதுவுமே பாவம் ஜொனதன் நோலனுக்கு தெரியாது! ஜொனதன் நோலன்? அவரோடதுதான் 'மெமெண்டோ' கதை!

Jonathan Nolan
எழுத்தாளர், திரைக்கதையாசிரியர்
கிறிஸ்டோபர் நோலனின் தம்பி.
Memento Mori என்ற இவரது சிறுகதையே மெமெண்டோ திரைப்படமானது!

இவரும், அண்ணனும் சேர்த்தே கிறிஸ்டோபர் நோலன் படங்களின் திரைக்கதையைப் பின்னுகிறார்கள்!

கிறிஸ்டோபர் நோலனின் மற்றைய படங்கள்,
Insomnia (2002), Batman Begins (2002), The Dark Night (2008), சென்ற வருடம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய Inception.

Inception நான் இன்னும் பார்க்கவில்லை (பார்த்தால் மட்டும் உனக்கு புரிஞ்சிடுமா?) எல்லாம் ஒரு பாதுகாப்பு நடவடிக்கைதான் (இருக்கிற தலைமுடியைக் காப்பாற்றிக் கொள்ள வேணாமா?) அதுதான் நோலனின் master piece என்கிறார்கள்.

இயக்குனர் முருகதாஸ், கிறிஸ்டோபர் நோலனின் ரசிகர் போலும்! தற்போது இயக்கிவரும் 'ஏழாம் அறிவு' படம், The Prestige + Inception என்று சந்தேகிக்கப் படுகிறது. சூர்யா வேறு மேஜிக் கலைஞராக நடிக்கிறார் என்கிறார்கள்! 'கஜினி' போலவே  நன்றாயிருக்கும் என நினைக்கிறேன்!    

30 comments:

 1. Nice,

  See,

  http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_26.html

  ReplyDelete
 2. நல்ல அலசல் ...
  பதிவும் அருமை

  ReplyDelete
 3. ஜீ..நீங்க எங்கயோ போய்ட்டீங்க...

  சரியாகச்சொன்னீங்க..சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் பலர் கண்டிப்பாக படித்துவிடவேண்டிய புத்தகம். இதுபற்றி அடுத்த ஹொக்ரெயில்ல விபரங்கள் வரும்.

  இயக்குனர் முருகதாஸ் கிறிஸ்டோபர் நோலனின் ரசிகர் போலும்!

  போலும் என்ன அவரே சொல்லியிருக்காரே!!

  ஜீ..நீங்க எங்கயோ போய்ட்டீங்க.. சிறகுகள் வானத்தை தாண்டிவிட்டது போன்ற உணர்வு.
  வாழ்த்துக்கள்..நாங்க கீழே இருந்தே பார்த்துக்கிறோம்.

  ReplyDelete
 4. நச்சுனு ரெண்டு ஒட்டு....அதுவும் முதல் ஒட்டு போட்டு விட்டு கிளம்பியாச்சு...

  ReplyDelete
 5. என்னதான் சொல்லுங்க, நோலனின் மாஸ்டர்பீஸ் மெமண்டோ தான். நான் முதல்ல பார்த்ததும் அந்த படம்தான். அப்பறமாத்தான் தேடித்தேடி அவரோட ஒவ்வொரு படமா பார்த்து வந்தேன். இன்செப்ஷன் பார்க்காட்டி உங்களை சினிமா விமர்சகர் லிஸ்டில் இருந்து தூக்கிடுவாங்க !!

  ReplyDelete
 6. @ரஹீம் கஸாலி
  @sakthistudycentre-கருன்
  @அரசன்
  @NKS.ஹாஜா மைதீன்

  நன்றி!

  //Jana said...
  //போலும் என்ன அவரே சொல்லியிருக்காரே!!//
  ஓ! அப்படியா?

  //ஜீ..நீங்க எங்கயோ போய்ட்டீங்க...//
  ஆகா! ஏண்ணே! ஏன்! வேணாம்..!
  :-)

  //ஆதவா said...
  இன்செப்ஷன் பார்க்காட்டி உங்களை சினிமா விமர்சகர் லிஸ்டில் இருந்து தூக்கிடுவாங்க !!//
  அய்யய்யோ நான் சினிமா விமர்சகன் எல்லாம் இல்லை! சும்மா பகிர்ந்து கொள்கிறேன்!
  பார்த்துவிடுவேன் ஒரு வாரத்திற்குள் (ஒருமுறை! :-) )

  ReplyDelete
 7. நம் தமிழ் இயக்குனர்களின் சொந்த கற்பனையில் உதித்த கதைகள் என்னென்ன என்று ஒரு பதிவு போடுங்களேன் ஜீ.

  ReplyDelete
 8. Surya is a good choice.

  ReplyDelete
 9. @கனாக்காதலன்
  @Chitra
  நன்றி!

  //சிவகுமாரன் said...
  நம் தமிழ் இயக்குனர்களின் சொந்த கற்பனையில் உதித்த கதைகள் என்னென்ன என்று ஒரு பதிவு போடுங்களேன் ஜீ//
  ஆகா! நான் நினைக்கிறேன் விக்கிரமன், பேரரசு, 'சுறா' பட இயக்குனர் இவர்களெல்லாம் சொந்த கற்பனைல தான் படம் எடுப்பாங்கன்னு! :-)

  ReplyDelete
 10. ரொம்ப தெளிவா இருக்கு ஜி..

  ReplyDelete
 11. நல்ல அறிமுகம் ஜீ... நீங்க பட்டியலிட்ட படங்களை பார்ப்பதுதான் என் அடுத்த வேலை...

  ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்

  ReplyDelete
 12. மிகவும் ரசித்துப் படித்தேன். நல்ல தகவல்கள்.

  ReplyDelete
 13. The Prestige நேற்றுதான் டவுன்லோட் செய்திருக்கிறேன்..இன்று உங்கள் பதிவு...இன்செப்ஷனை விட மெமெண்ட்டோதான் டாப்..இருந்தாலும் பாருங்க.

  ReplyDelete
 14. இவரது படங்களில் The Dark Night, Inception இரண்டும் மட்டுமே பார்த்தேன். ஆனால் இங்கிலீசு மட்டென்பதால் பல குழப்பங்கள்!

  ReplyDelete
 15. @தோழி பிரஷா
  @பார்வையாளன்
  @Dr.எம்.கே.முருகானந்தன்

  நன்றி!

  //செங்கோவி said...
  The Prestige நேற்றுதான் டவுன்லோட் செய்திருக்கிறேன்..இன்று உங்கள் பதிவு...இன்செப்ஷனை விட மெமெண்ட்டோதான் டாப்..இருந்தாலும் பாருங்க//
  அப்படியா?
  நீங்க The Prestige பார்த்துவிட்டு சொல்லுங்க! :-)

  //கார்த்தி said...
  இவரது படங்களில் The Dark Night, Inception இரண்டும் மட்டுமே பார்த்தேன். ஆனால் இங்கிலீசு மட்டென்பதால் பல குழப்பங்கள்!//
  குழப்பம் இங்லீஷ் இல் இல்லையென்று நினைக்கிறேன்! :-)

  ReplyDelete
 16. சொல்லிடுவோம்...

  ReplyDelete
 17. // இயக்குனர் முருகதாஸ், கிறிஸ்டோபர் நோலனின் ரசிகர் போலும்! தற்போது இயக்கிவரும் 'ஏழாம் அறிவு' படம், The Prestige + Inception என்று சந்தேகிக்கப் படுகிறது. //

  உங்கள் சந்தேகம் முழுக்க முழுக்க உண்மை.,..

  ReplyDelete
 18. நல்ல அலசல் ...
  பதிவு அருமை

  "படம் என்பதை படத்தில் பேசப்படும் ஆங்கிலம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு, தமக்கு இங்லீஷ் நல்லா தெரியும் அதால படம் புரிந்ததுவிட்டது எனக் கூறும் பயபுள்ளைகள் நம்மிடையே பலர்"

  இந்த இடம் டாப்பு!

  ReplyDelete
 19. ஜீ...ரொம்ப எக்ஸ்ட்ராடினரி ஆ யோசிக்கிறிங்க...ஆங்கில இயக்குனரை அறிமுகபடுத்தி...அப்டியே அவரின் பெஸ்ட் ஐ சொல்லி...தமிழ் இயக்குனர்களின் போங்கினை:) அப்புறம் சின்னதா ஒரு உள்குத்தாய் ஜே ஜே குறிப்புகளை சொல்லி..:)) இன்னும் நிறைய நிறைய சுருக்கமா சொல்லி இருக்கீங்க...உங்க ரசனை ரொம்ப வித்யாசம் ஜீ...இதை படிக்கவே ஒன்னு நான் நிறைய தெரிஞ்சுக்கணும்...இல்லாட்டி நான் நிறைய தெரிஞ்சுக்க உங்க பதிவை படிக்கணும்....ஹ ஹ..சிம்ப்லி superb ஜீ...
  --

  ReplyDelete
 20. இந்த மாதிரி படம்லாம் நமக்கு புரியாது ஜி .அதுனால் ஓட்ட மட்டும் குத்துட்டு போறேன்

  ReplyDelete
 21. Jana said...
  ஜீ..நீங்க எங்கயோ போய்ட்டீங்க...//

  வெள்ளவத்தையில் இனி காண முடியாதா?

  பகிர்வுக்கு நன்றி ஜி, நீங்க உலக மகா ரசிகன் போல!

  ReplyDelete
 22. நல்ல பதிவு.....அறிமுகத்திற்கு நன்றிகள்....

  சில படங்கள் பார்த்துள்ளேன்..


  ஏழாம் அறிவு வரட்டும் பார்ப்போம்...

  ReplyDelete
 23. ரொம்ப அருமையா யோசிச்சுருக்கீங்க

  சூப்பர்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. பதிவு அருமை.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. //அந்தக் காலகட்டத்தில் நம்ம தலையில் ஏராளமான முடி இருந்திச்சு....அப்புறம் கணிசமாகக் குறைந்ததுபோல ஒரு உணர்வு!//


  இந்த ஆராய்ச்சிக்காக பல இழப்புக்களை தாண்டி வந்திருக்கிறீர்கள் போல..

  ReplyDelete
 26. இந்த பதிவை படிக்க ஏ. ஆர். முருகதாஸ் அவர்களுக்கு பரிந்துரைக்கிறோம்..

  ReplyDelete
 27. ஏழாம் அறிவு நெருங்கி வருது! பார்க்கலாம்!

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |