நம் ஒவ்வொருவருக்கும் அடிமனதில் சில ஆசைகள், தேவைகள், ஏக்கங்கள் இனம்புரியாத என்னென்னவோ இருக்கும்! அது என்ன என்று எங்களுக்கே தெரியாமல் இருக்கும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றை கண்டடையும்போது, அடடா! இதைத்தான் எதிர்பார்த்தோமா?...எனத் தோன்றும்!
அப்படித்தான் எனக்கும் தோன்றியது....ஏதோ ஒன்று வித்தியாசமாக, இதுவரை உணராத இனம்புரியாத உணர்வு....முதன்முதலாய் 'சின்ன சின்ன ஆசை' பாடல் கேட்டபோது!
மின்சாரமில்லாத அந்தக் காலத்தில் வீட்டில் இலங்கை வானொலியில், தேநீர்க்கடைகளிலும், அயலவர், உறவினர் திருமண வீடுகளிலும் சக்கை போடு போட்டன ரோஜா பாடல்கள்! பாடல்வரிகளை நான் எப்போதுமே கவனித்ததில்லை. இசை மட்டுமே (இப்போதும்)
அதிலும் எனக்கு 'புது வெள்ளை மழை' அப்படிப் பிடித்துக்கொண்டது! குறிப்பாக அந்தப்பாடலின் பின்னணி இசையே பனிச்சாரலடிப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தியது! சில வருடங்களின் பின்னரே நான் பாடல்காட்சியைப் பார்த்தேன்! (அதே போல் James Horner இன் Titanic theme பாடலில் அலையடிப்பதை உணரலாம்)
ஒரு கட்டத்தில் வெறித்தனமான ரஹ்மான் ரசிகனாக...எல்லாப் பாதையும் ரோமிற்குச் செல்வதைப் போல எந்தப் பேச்சினிடையேயும் ரஹ்மான் வந்துவிட, அப்போது நான் வவுனியாவிலிருந்து யாழ் வந்து பள்ளியில் இணைந்திருந்ததால் 'வவுனியா ரஹ்மான்' என்று வகுப்பில் அழைப்பார்கள்!
அநேகமாக ரஹ்மானின் 2000 இற்கு முன் வெளியான அனைத்துப் பாடல்களும் மிகவும் பிடித்திருந்தது! பிறகு வந்தது பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை முன்பு வந்தது அதிகம் பிடித்தது...இன்றுவரை! அதிலும் ரோஜா, கிழக்குச்சீமையிலே, பம்பாய், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், தேசம் படங்களின் பின்னணி இசை, டைட்டில் இசை என்றும் புதிதாகவே!
பிடித்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே வேறு வேலைகளைச் செய்தல் என்பது என்னளவில் சாத்தியமாவதில்லை! இசையைக் கவனிப்பதும் கரைந்து போவதுமே என்னியல்பு! அதிக சத்தம் பிடிக்காது. ஓசைகள் அடங்கிய ஆழ்ந்த இரவுகளில் எனது அறையை மட்டுமே நிரப்பும் 5.1 surround ஒலியில்...நிசப்தமான பின்னிரவில் 'புத்தம் புது பூமி வேண்டும்' கேட்பது மிகவும் பிடிக்கும். இது யாழ்ப்பாணத்தில் இருந்தவரை மட்டுமே! நாடோடியாய் மாறியபின் mp3 player இல் ஒடுங்கிக்கொண்டது என் இசை.
என் தனிமை, சந்தோஷம், சோகம், உற்சாகம் எல்லாவற்றிலும் என்னோடு பயணம் செய்யும் என் இன்னொரு நிழலாக இசை...அதுவும் குறிப்பாக ரஹ்மானின் பின்னணி (BGM ) இசை!
என் உற்சாகமான பொழுதுகளிலும் , காலையில், இளந்தேன்றல் வீச, நடந்து செல்லும்போதும் இயல்பாகவே எனக்குள் 'முதல்வன் தீம் மியூசிக்' ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது எனக்குமட்டும் கேட்க!
இப்போ அதை நீங்களும் கொஞ்சம்...?
எளிமை, தன்னடக்கம், இறைநம்பிக்கை இவற்றின் வடிவமான இசைப்புயலின் 45 ஆவது பிறந்தநாளில் அடுத்த Academy Award ஐ பெற்றுக்கொள்ள வாழ்த்துவோம்!
எனக்குப் பிடித்த ஒரு Theme Music, Slumdog Millionaire படத்தில் இடம்பெற்றது!
இன்னும் ஏராளம் இருக்கு சொல்ல....எழுத முடியவில்லை! அதான் ஒரு சின்ன பதிவாக!
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெள்ளை மழை பாடலை கேட்க்கையில் எனக்கும் அதே உணர்வு வரும் ஜீ!
ReplyDeleteபுது வெள்ளை மழை பாடலின் ஆரம்ப இசை அட்டகாசம்...நீங்கள் சொல்லாமல் சொன்னது போல் 2000க்கு அப்புறம் வந்த பெரும்பாலான பாடல்கள் அவ்வளவாக மனம் கவரவில்லை..ஆனாலும் ரஹ்மான் ரஹ்மான் தான்.
ReplyDeleteஉண்மையில் அடக்கமான மனிதர்
ReplyDelete//அன்பரசன் said...
ReplyDeleteரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...//
:-)
//வைகை said...
வெள்ளை மழை பாடலை கேட்க்கையில் எனக்கும் அதே உணர்வு வரும் ஜீ!//
:-)
//செங்கோவி said...
புது வெள்ளை மழை பாடலின் ஆரம்ப இசை அட்டகாசம்...நீங்கள் சொல்லாமல் சொன்னது போல் 2000க்கு அப்புறம் வந்த பெரும்பாலான பாடல்கள் அவ்வளவாக மனம் கவரவில்லை..ஆனாலும் ரஹ்மான் ரஹ்மான் தான்//
உண்மை! உண்மை!
//THOPPITHOPPI said...
உண்மையில் அடக்கமான மனிதர்//
நன்றி!
ஜீ நல்ல பதிவு. நன்றி.
ReplyDeleteஎளிமை, தன்னடக்கம், இறைநம்பிக்கை இவற்றின் வடிவமான இசைப்புயலின் 45 ஆவது பிறந்தநாளில் அடுத்த Academy Award ஐ பெற்றுக்கொள்ள வாழ்த்துவோம்!
ReplyDelete....Sure....
நல்ல பகிர்வு. இசை அனைவரையும் மயக்கும் . அதிலும் ரஹ்மான் .. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
ReplyDelete//பாஸ்கர் said...
ReplyDeleteஜீ நல்ல பதிவு. நன்றி//
:-)
//Chitra said...
எளிமை, தன்னடக்கம், இறைநம்பிக்கை இவற்றின் வடிவமான இசைப்புயலின் 45 ஆவது பிறந்தநாளில் அடுத்த Academy Award ஐ பெற்றுக்கொள்ள வாழ்த்துவோம்!
....Sure....//
நன்றி!
//மதுரை சரவணன் said...
நல்ல பகிர்வு. இசை அனைவரையும் மயக்கும் . அதிலும் ரஹ்மான் .. பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்//
நன்றி!
அருமையான பகிர்வு.... புத்தம்புது பூமி பாடலை பின்னிரவில் கேட்பது எனக்கும் பிடிக்கும்... அந்தப்பாடலில் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வுகள் இருக்கின்றன.... நன்றி ஜீ......!
ReplyDeleteரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅவுருக்கு எனது வாழ்த்துக்களையும் சேருங்க ஜீ..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்
//நாடோடியாய் மாறியபின் mp3 player இல் ஒடுங்கிக்கொண்டது என் இசை.//
ReplyDeleteம்..ஜீ...வாட்ஸ் அளவு ஒடுங்கி போனாலும் ரசனை மாறாமல் இருக்குல அது போதும்...
உங்கள் ரசனை...ரசித்த விதம் எல்லாமே படிக்கவும்,உணரவும் நல்லா இருந்தது...my brother jee!,u r an unique...keep it up..
எனக்கு ரட்சகன் படத்தில் அழகான ஒரு மெலடி "கையில் மிதக்கும் காற்றாய் நீ.." ...இது கலக்கல்..
ReplyDeleteஅப்புறம் அதே படத்தில் அட்டகாசமான தீம் மியூசிக் கூட சூப்பர்..
http://www.youtube.com/watch?v=mAax0V4emGs
"எல்லா புகழும் இறைவனுக்கே"ன்னு அடக்கமாக சொன்ன.. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்..
ReplyDelete//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஅருமையான பகிர்வு.... புத்தம்புது பூமி பாடலை பின்னிரவில் கேட்பது எனக்கும் பிடிக்கும்... அந்தப்பாடலில் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வுகள் இருக்கின்றன.... நன்றி ஜீ......!//
ஓ! நீங்களும் நம்மாளா? நன்றி! :-)
//தோழி பிரஷா said...
ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்...//
நன்றி!
//ம.தி.சுதா said...
அவுருக்கு எனது வாழ்த்துக்களையும் சேருங்க ஜீ..//
நன்றி!
//ஆனந்தி.. said...
எனக்கு ரட்சகன் படத்தில் அழகான ஒரு மெலடி "கையில் மிதக்கும் காற்றாய் நீ.." ...இது கலக்கல்..
அப்புறம் அதே படத்தில் அட்டகாசமான தீம் மியூசிக் கூட சூப்பர்..//
உண்மை! அவையும்எனக்குப்பிடிக்கும்!
இன்னும் நிறைய இருக்கு!நன்றி!! :-)
//பதிவுலகில் பாபு said...
"எல்லா புகழும் இறைவனுக்கே"ன்னு அடக்கமாக சொன்ன.. ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள்..//
நன்றி! :-)
எனக்குப் பிடித்த ஒரு Theme Music, Slumdog Millionaire படத்தில் இடம்பெற்றது!//
ReplyDeleteஇது தான் தல எனக்கும், ஏன் எல்லாருக்கும் புடிக்கும்ன்னு நெனைக்கறேன்
அருமை
ReplyDeleteம்ம்ம்ம்...சேம்..பீலிங்ஸ்..
ReplyDeleteநன்றி ஜீ! (இந்தப்பதிவு now in my "collections")
ReplyDeleteரஹ்மான் பற்றிய அருமையான பதிவு
ReplyDeleteஅடக்கம் என்றால் என்ன என்பதை சில ஞானிகள் இவரிடம் கற்பது நன்று!
ReplyDeleteவாழ்துக்கள்
ReplyDeleteஅருமையான பதிவு ஜீ !
ReplyDeleteநானும் ரகுமான் ரசிகன்தானுங்கோ! ரகுமான் Oscarவென்றபோது நான் எழுதிய பதிவு இது!
ReplyDeletehttp://vidivu-carthi.blogspot.com/2009/02/slumdog-millionaire-arrahman-oscar.html
//எனக்குப் பிடித்த ஒரு Theme Music, Slumdog Millionaire படத்தில் இடம்பெற்றது!//லத்திகா தீம் மியூசிக் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு!!!
ReplyDelete