Wednesday, January 5, 2011

காவலன்?

சத்தம் கேட்டு விழித்துக் கொண்டான் அலெக்ஸ்.

ஏதோ பிரச்சினை பக்கத்தில். வாய்த்தகறாரில் இருந்தது. இனி பேச்சு முற்றி, ரத்தக் காயம் பார்க்காமல் ஓய மாட்டார்கள்!

ஏதோ ஏரியா சண்டை. அலெக்ஸ் அவை எவற்றிலும் பங்கு கொள்வதில்லை. 'எதற்காக வீண் சண்டை? எதுவுமே இங்கு நிரந்தரமில்லை. வர வர சாமியார் மாதிரி ஆகிறோமா? அப்போ சாமியாரெல்லாம்?'

தூக்கம் கலைந்துவிட்டது. சரியான குளிர். நீண்ட கொட்டாவியுடன் உடம்பை இறுக்கி சோம்பல் முறித்து... வெளியே வர...


எதிரிலுள்ள டீக்கடை வாசலில் வழக்கம்போல 'பெருசு' உட்கார்ந்து பழைய பேப்பரை பிரிச்சு மேஞ்சிட்டிருந்தது. 'அப்பிடி என்னத்தத் தான் ஒவ்வொருநாளும்...?'

'முகத்தில் எப்போதும் ஒரு சிரிப்பு! வாழ்கையை நிறைவாய் வாழ்ந்து முடித்த திருப்தியோ? சிரிப்புன்னா சும்மா சிரிப்பில்லை. கடைவாய்ப்பல் தெரியிற அளவு!'

மெதுவாக நடந்தான்.

எதற்கோ(?!) அவசரமா போய்க்கொண்டிருந்தான் அம்பு (அப்படித்தான் சொல்வார்கள்) எப்போதுமே ஒரு அவசரம். அவனைப் பார்க்கும்போதெல்லாம் அலெக்ஸ்சுக்கு ' நாய்க்கு வேலையுமில்லை, நிக்க நேரமுமில்லை' தான் ஞாபகத்துக்கு வரும்!

'நேற்று 'ஒற்றைக்கண்ண'னைப் பிடித்துவிட்டார்களாம். நாளைக்கு எங்களுக்கும் இதேநிலை வரலாம் என்பதால் அதிர்ச்சியாக இருந்தது'.

அனாலும் மனதின் ஒரு மூலையில் ஒரு சின்ன சந்தோஷமும்...அவன் பெரிய ரௌடி அலெக்ஸ்சுடன் ஒரு முறுகல் நிலை வேறு....காரணம்...அவள்!

அவள் நினைப்பே ஒரு தென்றலாய்...இதுவரை அலெக்ஸ் யாரையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை முதன்முதலாய்...அவள் பெயர் தெரியாது ஆனால் பெரிய இடம்!

கொஞ்சம் அலட்சியம்...கொஞ்சம் ஆச்சரியம் கலந்து, தலையைச் சிறிது சரித்து, அவள் பார்க்கும் பார்வை...அலெக்ஸ் கண்களை மூடித்திறந்து லேசாகத் தலையை உதறினான் ஒருமுறை!

 இதோ அவள் வீடு! பெரிய மாடிவீடு, பார்வையால் தேட...பல்கனியில் அவள்!

'ஓ! என்னைப் பார்க்கிறாள்'?! அலெக்ஸ் பரபரப்பானான். நிலை கொள்ளாமல்...

'இல்லையே என்னைத் தாண்டி..?' அனிச்சையாய்த் திரும்ப..


பார்வை நிலைகுத்த...உடல் விறைப்பாக..மூளைஎச்சரிக்க 'நாய்பிடிகாரன்கள்!' நாலுகால் பாய்ச்சலில் ஓடத் தொடங்கினான் அலெக்ஸ்!
  

25 comments:

  1. ha,ha,ha,ha,ha.... good one!

    ReplyDelete
  2. கண்ணா எங்கேயோ போய் எங்கேயொ வந்திட்டிங்களே...

    ReplyDelete
  3. குறைந்த வரிகளில் வித்தியாசமாக சொல்லிவிட்டீர்கள். அற்புதம்...
    அலெக்ஸ் இப்பவும் தப்பிக்கொண்டுதானே இருக்கிறான்!

    ReplyDelete
  4. செம ட்விஸ்ட்..

    ReplyDelete
  5. வித்தியாசமான முடிவு..குட்.

    ReplyDelete
  6. ஓ...இந்த காவலனா...
    நா வேற காவலன்னு பீதியாகி ...

    ReplyDelete
  7. என்ன ஜீ தலைப்பை பார்த்ததும் படம் பார்க்காமலே விமர்சனமோ என்று நினைச்சன்.....

    ReplyDelete
  8. என்ன ஜி இது காவலன்னு போட்டுட்டு எங்க டாகுடர் பத்தி எதுவுமே சொல்லலை...

    ReplyDelete
  9. சுவாரசியமா கொடுத்துருக்கீங்க!!!

    ReplyDelete
  10. //Chitra said...
    ha,ha,ha,ha,ha.... good one!//
    :-)

    //ம.தி.சுதா said...
    கண்ணா எங்கேயோ போய் எங்கேயொ வந்திட்டிங்களே..//
    :-)

    //அன்பரசன் said...
    செம ட்விஸ்ட்..//
    நன்றி!

    //செங்கோவி said...
    வித்தியாசமான முடிவு..குட்.//
    நன்றி!

    //ஆமினா said...
    சுவாரசியமா கொடுத்துருக்கீங்க!!!//
    நன்றி!

    ReplyDelete
  11. //கார்த்தி said...
    குறைந்த வரிகளில் வித்தியாசமாக சொல்லிவிட்டீர்கள். அற்புதம்...
    அலெக்ஸ் இப்பவும் தப்பிக்கொண்டுதானே இருக்கிறான்!//
    ஆகா! இது அதில்ல! :-)

    //வார்த்தை said...
    ஓ...இந்த காவலனா...
    நா வேற காவலன்னு பீதியாகி ..//
    :-)

    //தோழி பிரஷா said...
    என்ன ஜீ தலைப்பை பார்த்ததும் படம் பார்க்காமலே விமர்சனமோ என்று நினைச்சன்....//
    ஒரு படம் பார்த்தா போதாது? :-)

    //Philosophy Prabhakaran said...
    என்ன ஜி இது காவலன்னு போட்டுட்டு எங்க டாகுடர் பத்தி எதுவுமே சொல்லலை...//
    காவலன் வரட்டும்! :-)

    ReplyDelete
  12. நல்ல கற்பனை அருமை ...

    ReplyDelete
  13. அலெக்ஸ் கண்களை மூடித்திறந்து லேசாகத் தலையை உதறினான் ஒருமுறை///
    இந்தக் லைன்லையே தெரிஞ்சிடுச்சி எதோ மாறும்னு சூப்பர்... :)

    ReplyDelete
  14. என் தங்கை பிரஷா சொன்ன மாதிரி...ஐயோ...இப்பவே திருப்பி விஜய் ஆ னு கடுப்போட தான் வந்தேன்..:))) ஏதோ சீரியஸ் சிறுகதை போலே னு...சீரியஸ் :))) ஆ வேற படிச்சு தொலைஞ்சேன்...ஹ ஹ...முடிவை பார்த்து சிரிச்சுட்டேன்...திருப்பியும் ஒரு வாட்டி சிரிச்சுட்டே முதலில் இருந்து படிச்சேன்...சூப்பர் ஜீ...கிட்னி கொஞ்சம் ஜாஸ்தி யூஸ் பண்றீங்க...இதெல்லாம் சரியா இல்ல..ஆமா...சொல்லிட்டேன்...:))))

    ReplyDelete
  15. ஐயையோ நாய் கதை .

    ReplyDelete
  16. avanaaa neeeeeeeeeeeeeeee?



    sema sema sema kalakkal

    ReplyDelete
  17. இது ஒரு கதையாக மட்டும் தெரியவில்லையே ஜீ... அதையும்தாண்டி ஏதோ சொல்லுறிங்க என்று கொஞ்சம் புரியுது.

    ReplyDelete
  18. //அஞ்சா சிங்கம் said...
    நல்ல கற்பனை அருமை //
    நன்றி!

    //karthikkumar said...
    அலெக்ஸ் கண்களை மூடித்திறந்து லேசாகத் தலையை உதறினான் ஒருமுறை///
    இந்தக் லைன்லையே தெரிஞ்சிடுச்சி எதோ மாறும்னு சூப்பர்... :)//
    :-)

    //ஆனந்தி.. said...
    .ஹ ஹ...முடிவை பார்த்து சிரிச்சுட்டேன்...திருப்பியும் ஒரு வாட்டி சிரிச்சுட்டே முதலில் இருந்து படிச்சேன்...சூப்பர் ஜீ...கிட்னி கொஞ்சம் ஜாஸ்தி யூஸ் பண்றீங்க...இதெல்லாம் சரியா இல்ல..ஆமா...சொல்லிட்டேன்...:))//
    :-)சரீங்க்கா!

    //நா.மணிவண்ணன் said...
    ஐயையோ நாய் கதை//
    :-)

    //vinu said...
    avanaaa neeeeeeeeeeeeeeee?
    sema sema sema kalakkal//
    :-)

    //Jana said...
    இது ஒரு கதையாக மட்டும் தெரியவில்லையே ஜீ... அதையும்தாண்டி ஏதோ சொல்லுறிங்க என்று கொஞ்சம் புரியுது//
    ஆகா! ஏண்ணே? ஏன்? இது ஒரு கதை மட்டுமே! வேற ஒண்ணும் இல்லை! :-)

    ReplyDelete
  19. படிக்க ஆரம்பிக்கும்போது இதை எதிர்பார்க்கவில்லை ஜீ! சூப்பர்!

    ReplyDelete
  20. ட்விஸ்ட் சூப்பர்

    ReplyDelete
  21. ஒரு திரைப்படம் பார்த்த திருப்திதான் போங்க.

    ReplyDelete