சமீபத்தில் மன்மதன் அம்பு பார்க்கும்போது, படத்தில் த்ரிஷா ஓட்டிச் செல்லும் ஹமர் கமலின் காரை இடித்து, இடைவேளை விட்டதும் நண்பன் பார்த்தியும் நானும் ஹமர் (Hummer) பற்றி பேச ஆரம்பித்து விட்டோம்!
எப்போதுமே எனக்கு ஹமர் மீது தனி ஈர்ப்பு! SUV க்களிலேயே (Sports Utility Vehicles) ஒரு தனித்தன்மை, முரட்டுத்தனமான வடிவமைப்பு, ஒரு கம்பீரம். மிக அரிதாகவே காணக்கிடைப்பதால், கண்டவுடன் தொற்றிக்கொள்ளும் ஒரு உற்சாகம்!
முதன் முதலாக நான் நேரில் பார்த்தது ஆறு வருடங்களுக்கு முன். அகலமான, வலப்பக்கம் வீதியிலும், இடப்பக்கம் பிளாட்போர்ம் இலுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விதமே தனி அழகாக, ஒரு விளையாட்டுப் பொம்மை போல (Toy) பார்ப்பவர்களை நிச்சயம் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகோடு! கடந்து வந்தபின் திரும்பிப் பார்த்தேன். பின்பு அடிக்கடி அதே இடத்தில். (கிரிக்கெட் வீரர் அரவிந்த டீ சில்வாவுடையது..? அவருக்கு சொந்தமான உணவக வாசலில் நிறுத்தப்பட்டிருந்தது)
டோனி, ஹர்பஜன்சிங், உதயநிதி ஸ்டாலின், ஹரிஷ் ஜெயராஜ் ஆகியோர் ஹமர் வைத்திருக்கும் சில பிரபலங்கள். அதில் ஹர்பஜன்சிங்கின் ஹமர் கொள்வனவு தொடர்பாக, வரி ஏய்ப்பு சம்பந்தமான சர்ச்சை எழுப்பப்பட்டது! இது இலங்கையில் இருந்து வாங்கப்பட்டிருந்தது.
டோனி, ஹர்பஜன்சிங் ஆகியோர் இலங்கையிலிருந்து வாங்கியிருக்கிறார்கள். இலங்கையிலுள்ள ஒரு பிரபல Left Hand Drive வாகனங்களை Right Hand Drive ஆக மாற்றும் (அதிலும் விஷேஷமாக Hummer) கம்பனியியிடமிருந்து.
அமெரிக்க கனரக வாகன உற்பத்தி நிறுவனமான AM General மூலம் 1992 லிருந்து பொது மக்கள் பாவனைக்காக ஹம்மர் வாகனங்களைத் தயாரித்தது. இந்த நிறுவனம் மிலிட்டரிக்காக தயாரித்த ஹம்வீ (Humvee) வாகனங்கள் 1984 லிருந்து பாவனையில்.
பொதுமக்கள் பாவனைக்கான தயாரிக்கப்படுபவை மிகக் குறைந்தளவே (ஒப்பீட்டளவில்) அநேகமான அமெரிக்காவின் இராணுவத்தின் கனரக வாகனங்கள், ட்ரக்குகள், அம்புலன்ஸ் எல்லாமே Humvee தயாரிப்புகள்.
1998 இல் பிரபல அமெரிக்க நிறுவனமான General Motors பொது மக்கள் பாவனைக்கான ஹமர் தயாரிப்புரிமையை வாங்கி Hummer H1, Hummer H3, Hummer H3 தயாரித்து வருகிறது.
Hummer H1- இது இராணுவ வாகனங்களை போன்றே வடிவமைக்கப்பட்டது.
Hummer H1
Hummer H2, H3 - இவை அழகான வடிவமைப்பைக் கொண்டவை.
Hummer H2
Hummer H3
என்னதான் H3 லேட்டஸ்ட் வெர்சன் ஆகவிருந்தாலும் H2 இன் ஸ்டைலே தனித்தன்மையாக, ஏனைய SUV க்களிலிருந்து வேறுப்பட்டு, கம்பீரமாக தெரிகிறது!
நல்லாத்தான் இருக்கு...ஹ்ம்ம் (வேறென்ன? பெருமூச்சு தான்!)
சில Humvee வாகனங்கள்
சூப்பர். நன்றாக எழுதி இருக்கீங்க சார்! வயிறு வலிக்க சிரித்தேன்!!
ReplyDeleteஏங்க வயிற்தெரிச்சலை கிளப்புறீங்க.. ம்ம்ம்ம்.. வாங்க வேண்டாம்.. ஒரு வாட்டி ஓட்ட வாய்ப்பு கிடைச்சாக்கூட போதும்.
ReplyDeleteவெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
ஓ இதுக்கு பேர் ஹம்மர்ரா!
ReplyDeleteசெகண்ட் ஹேண்ட் ஹெம்மர் என்ன விலைக்கு கிடைக்கும் ?
ReplyDeleteமுதன் முறையா இப்போ நான் SUV வாங்கியிருக்கிறேன்.saloon carகளை விட SUV வாகனங்களை ஓட்டும் அனுபவமே தனி.
ReplyDeleteஎன்ன ஜீ..வாகன பலன் என்று ஏதாவது சாத்திரி சொல்லிவிட்டாரோ என்னமோ? ம்ம்ம்ம்... என்ன கனவு? எப்போதோ ஒருநாள் இதை வாங்குவீங்க நிங்க..
ReplyDeleteஅட . இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா
ReplyDeleteமுதல் k f c கோழி எனக்கு....உண்மையில் எனக்கு தெரியாத தகவல்கள்....நன்று....
ReplyDeleteNice Info :)
ReplyDeleteIts cool! But gas guzzler. :-(
ReplyDelete//டோனி, ஹர்பஜன்சிங், உதயநிதி ஸ்டாலின், ஹரிஷ் ஜெயராஜ் ஆகியோர் ஹமர் வைத்திருக்கும் சில பிரபலங்கள்.//
ReplyDeleteநீங்கள் வாங்குவதாக உத்தேசமோ?
படங்களோடு விளக்கியதற்கு நன்றிகள் ஜீ...
ReplyDeleteஇதன் வடிவம் ரொம்ப நல்லயிருக்கு ...
ReplyDeleteதகவலும் படமும் அருமை.... ஆனா இது எனக்கு பயன் படாது... வாங்கினாதானே பயன்பட????
பகிர்வுக்கு நன்றி
உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
//sakthistudycentre-கருன் said...
ReplyDeleteவயிறு வலிக்க சிரித்தேன்!//
சிரிச்சீங்களா?!!! எதுக்கு?
//கவிதை காதலன் said...
ஏங்க வயிற்தெரிச்சலை கிளப்புறீங்க.. ம்ம்ம்ம்.. வாங்க வேண்டாம்.. ஒரு வாட்டி ஓட்ட வாய்ப்பு கிடைச்சாக்கூட போதும்//
ஆமால்ல! :-)
//THOPPITHOPPI said...
ஓ இதுக்கு பேர் ஹம்மர்ரா!//
ஆமா பாஸ்!:-)
//Vinoth said...
செகண்ட் ஹேண்ட் ஹெம்மர் என்ன விலைக்கு கிடைக்கும் ?//
இந்தியால ஒரு கோடிக்கு கிடைக்கும்னு நினைக்கிறேன் :-)
//ரிஷபன்Meena said...
முதன் முறையா இப்போ நான் SUV வாங்கியிருக்கிறேன்.saloon carகளை விட SUV வாகனங்களை ஓட்டும் அனுபவமே தனி//
ஓ! வாழ்த்துக்கள்! :-)
//Jana said...
ReplyDeleteஎன்ன ஜீ..வாகன பலன் என்று ஏதாவது சாத்திரி சொல்லிவிட்டாரோ என்னமோ? ம்ம்ம்ம்... என்ன கனவு? எப்போதோ ஒருநாள் இதை வாங்குவீங்க நிங்க..//
ஆ! Heartஅ டச் பண்ணிட்டீங்க அண்ணே! :-)
//பார்வையாளன் said...
அட . இதுல இவ்வளவு மேட்டர் இருக்கா//
இன்னும் எழுதலாம்னா... இன்னொரு பதிவுதான் போடணும்! :-)
//NKS.ஹாஜா மைதீன் said...
உண்மையில் எனக்கு தெரியாத தகவல்கள்....நன்று....//
:-)
//கனாக்காதலன் said...
Nice Info :)//
:-)
//Chitra said...
Its cool! But gas guzzler. :-(//
அதென்னவோ உண்மைதான்! Guzzler! அப்படித்தானே இருக்கும்!:-)
///பாரத்... பாரதி... said...
//டோனி, ஹர்பஜன்சிங், உதயநிதி ஸ்டாலின், ஹரிஷ் ஜெயராஜ் ஆகியோர் ஹமர் வைத்திருக்கும் சில பிரபலங்கள்.//
நீங்கள் வாங்குவதாக உத்தேசமோ///
அதுக்கு அந்த வரிசைல நாம வரணும்ல! அவ்வ்வ்வ்...!!! :-)
//சி. கருணாகரசு said...
இதன் வடிவம் ரொம்ப நல்லயிருக்கு ...தகவலும் படமும் அருமை.... ஆனா இது எனக்கு பயன் படாது... வாங்கினாதானே பயன்பட????//
ஸ்ஸ்ஸ்ஸ...பா! :-)
சிறப்பான தகவல்கள்.
ReplyDeleteஆனால் என்ன?
நல்லாத்தான் இருக்கு...ஹ்ம்ம் (வேறென்ன? பெருமூச்சு தான்!)
அருமை...
ReplyDeleteநன்றாக எழுதி இருக்கீங்க.
ReplyDeleteகூடிய சீக்கிரமே பிரபலங்கள் லிஸ்டில் நீங்களும் சேர போறீங்கன்னு சொல்லுங்க ;)
ReplyDeleteitha ennum konjam "jhoom" panni eluthi irukkalaamo endu thonuthu...
ReplyDeleteமன்மதன் அம்பு படத்தில் பார்க்கும்போது கூட அந்த கார் இந்த அளவிற்கு வசீகரிக்கவில்லை...
ReplyDeleteஇந்த ஹம்மர் குடிக்கும் பெட்ரோல் காரணமாக அமெரிக்காவில் பாபுலாரிட்டிஐ இழந்துவிட்டது. 2009 -இல் இதன் தயாரிப்பாளர் General Motors திவாலான பிறகு ஹம்மர் தயாரிக்கும் உரிமையை சீன நிறுவனம் ஒன்றிற்கு விற்று விட்டது. அமெரிக்காவில் ஹம்மர் டீலர்கள் பலர் அதை விற்பதை நிறுத்திவிட்டனர்.
ReplyDeleteஅமெரிக்காவின் பல வண்டிகளை போல பார்க்க சூப்பராக இருக்கும். அவ்வளவு தான்!
சிறப்பாக தொகுத்து பதிவிட்டுள்ளீர்கள் அருமை நண்பரே
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ஹம்மர் பத்தி ஒரு கிளாசே எடுத்திட்டீங்க... உங்க ஆர்வம் தெரயுதுங்க.. உங்க எழுத்தில்..!!
ReplyDeleteசீக்கிரமா.. ஒரு ஹம்மர்-க்கு ஓனர் ஆகி விடுங்க.. :-))
நீங்க சொன்ன மாதிரி.. H2 மாடல் தான் சூப்பர்-ஆ இருக்கு..
பகிர்வுக்கு நன்றிங்க..
தெரியாத புது தகவல்கள்...Hummer H2 செம தோரணையா இருக்குது...இத்தனை ஹம்மர் வாங்கி போட்டு இருக்கீங்க உங்க ப்ளாக் கில்...டாக்ஸ் ஒழுங்கா கட்டினிங்களா??
ReplyDeleteஎதுக்கு கனவு கானுட்டு...அதான் எட்டு வண்டி நிக்குதே உங்க போஸ்ட் டில்...ட்ரீட் ப்ளீஸ்..:)))
ReplyDeleteஎன்னங்க கார் பத்தியெல்லாம் போஸ்ட் போடுறீங்க . என் கிட்ட சைக்கிள் கூட கிடையாதேங்க. ஹம்மர் இப்படி ஒரு கார் இருக்குனு நீங்க சொல்லித்தாங்க தெரியுது
ReplyDeleteஹம்மரை கோவாவில் ஒருமுறை பார்த்திருக்கிறேன். என்ன ஒரு கம்பீரம்!!! நிறைய தகவல்களை அறிந்து வைத்திருக்கிறீர்கள்....
ReplyDeleteஜி! உங்க ஆசைக்கு அளவே இல்லையா? ரொம்ப தான் தேடுறீங்க போல!,
ReplyDeleteஹம்மர் வாகனமொன்றை வாங்க வாழ்த்துக்கள்.
Commercial Bank முன்னாடி அதையா தேடினீங்க..
@Dr.எம்.கே.முருகானந்தன்
ReplyDelete@தோழி பிரஷா
@ஆயிஷா
@மாணவன்
@ Philosophy Prabhakaran
நன்றி! :-)
//ஆமினா said...
கூடிய சீக்கிரமே பிரபலங்கள் லிஸ்டில் நீங்களும் சேர போறீங்கன்னு சொல்லுங்க ;)//
ஆகா ஹமர் பற்றி எழுதினதுக்கே இப்படியா?
//®theep said...
itha ennum konjam "jhoom" panni eluthi irukkalaamo endu thonuthu...//
எழுதி இருக்கலாம்....இன்னொரு பதிவே போடலாம்! பின்னூட்டத்திலேயே சில தகவல்கள் இருக்கே!
//ஆனந்தி.. said...
எதுக்கு கனவு கானுட்டு...அதான் எட்டு வண்டி நிக்குதே உங்க போஸ்ட் டில்...ட்ரீட் ப்ளீஸ்..:)//
:-)
@bandhu
ReplyDelete//அமெரிக்காவின் பல வண்டிகளை போல பார்க்க சூப்பராக இருக்கும். அவ்வளவு தான்!//
:-)
நன்றி உங்கள் பகிர்தலுக்கு!
அந்த சீன நிறுவனமும் ஹமர் தயாரிக்கவில்லை என்றே தெரிகிறது! ஏதோ சிக்கல் இருப்பதாக...எங்கோ பார்த்த நினைவு!
//Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
சீக்கிரமா.. ஒரு ஹம்மர்-க்கு ஓனர் ஆகி விடுங்க.. :-)//
ஆகா! மறுபடியும் என்னை வச்சு காமெடியா? :-)
//ஆதவா said...
ஹம்மரை கோவாவில் ஒருமுறை பார்த்திருக்கிறேன். என்ன ஒரு கம்பீரம்!!!//
:-)
//KANA VARO said...
ஜி! உங்க ஆசைக்கு அளவே இல்லையா? ரொம்ப தான் தேடுறீங்க போல!,//
ரொம்ப ஓவராத்தான் போயிட்டமோ?
//ஹம்மர் வாகனமொன்றை வாங்க வாழ்த்துக்கள்//
நல்லூர்த் திருவிழா வரட்டும். வாங்கிடுவோம்! :-)
//Commercial Bank முன்னாடி அதையா தேடினீங்க..//
பப்ளிக்..பப்ளிக்...:-)
////Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
ReplyDeleteசீக்கிரமா.. ஒரு ஹம்மர்-க்கு ஓனர் ஆகி விடுங்க.. :-)//
ஆகா! மறுபடியும் என்னை வச்சு காமெடியா? :-)///
ஹலோ.. எவ்ளோ அக்கறையா.. உண்மையா வாழ்த்து சொல்றேன்.. உங்களுக்கு காமெடி பண்ற மாதிரியா இருக்கு??.. நெஜம்மா ஹம்மர் வாங்க வாழ்த்துக்கள்.. வாங்கினா கண்டிப்பா ட்ரீட் தரனும்.. சொல்லிட்டேன்.. :)
//Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
ReplyDeleteஹலோ.. எவ்ளோ அக்கறையா.. உண்மையா வாழ்த்து சொல்றேன்.. உங்களுக்கு காமெடி பண்ற மாதிரியா இருக்கு??.. நெஜம்மா ஹம்மர் வாங்க வாழ்த்துக்கள்.. வாங்கினா கண்டிப்பா ட்ரீட் தரனும்.. சொல்லிட்டேன்.. :)//
அவ்வ்வ்வ்!!!
ஆக்சுவலா எனக்கு பஸ்ஸில தொங்குறதுதான் பிடிச்சிருக்கு! (எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)
//அவ்வ்வ்வ்!!!
ReplyDeleteஆக்சுவலா எனக்கு பஸ்ஸில தொங்குறதுதான் பிடிச்சிருக்கு! (எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)///
ஹா ஹா.. தெரியாம ட்ரீட் கேட்டுட்டேன்.. இட்ஸ் ஓகே..
டோன்ட் ஒரி :-)
//Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
ReplyDeleteஹா ஹா.. தெரியாம ட்ரீட் கேட்டுட்டேன்.. இட்ஸ் ஓகே..
டோன்ட் ஒரி :-)//
சொல்ல முடியாது! எதிர்காலத்தில் ஒரு SUV வாங்கலாம் (இது நடக்கும் நிச்சயமா!) இப்போ Hummer தயாரிப்பதையே நிறுத்திட்டாங்களே!
நல்லா வயித்தெரிச்சலை வாங்கிக்கிட்டீங்க ஜீ
ReplyDeletekonjam kastama than irruku... innum nammala vanga mudiyalaiye innitu.....
ReplyDeleteநான் ஒரு கார் பைத்தியம் சார். சென்னையில அடிக்கடி ஹம்மர் கார்கள பார்க்கமுடியும். பார்க்கும் போதெல்லாம் பெருமூச்சு விடுவேன். இந்த பதிவை பார்த்தும் ஸேம் பீலிங் தான்...ம் ம் ம் ம் ம்........ எப்ப இதுக்குல்ல போயி பார்க்குறது.
ReplyDelete