உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு! தினமும் ஏதோ ஒரு சீரியலிலாவது, யாரோ ஒருவர் இன்னொருவரைப்பார்த்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்! (நிஜத்தில் நடக்குமா? அப்படி வசனம் பேச்சுவழக்கில்தான் உள்ளதா?)
நான் தொலைகாட்சி பார்ப்பது மிக அரிது! எப்போதாவது பார்த்தாலும் நகைச்சுவை, டிஸ்கவரி. டீ.வி.யைக் கடந்து செல்லும்போது கவனிப்பதுண்டு. பொழுது போகாமல் ஒருநாள் தொலைகாட்சியில் ஒரு ரவுண்டு வந்தபோது!
எல்லாரும் நல்லாயிருக்கனும்! - இதுவும் ஒரு டெம்ப்ளேட் காட்சி! கோவிலுக்குப் போனா நல்லவங்க (சீரியல்ல!) எல்லாம் இப்பிடித்தான் கும்பிடுறாங்க! (எந்தப் பிள்ளையாரோ, முருகனோ இப்படி ஒருவரைப் பார்த்திருப்பர்ர்களா? அவர்களுக்கே வெளிச்சம்!)
அப்புறம் ஒரு சொல் வழக்கத்திலுள்ளது மூலியமா - அதாவது சேகர் மூலமா தெரிஞ்சது என்பதை சேகர் மூலியமா தெரிஞ்சது (இதை நான் வேறு எங்குமே கேட்டதில்லை, சீரியல் தமிழென்று ஒன்றுள்ளதோ?)
*******************************************************************************************************
ஜெயா டீ.வி.ல மம்மி வழக்கம்போல மைனாரிட்டி தி.மு.க.வையும், அய்யாவையும் திட்டிட்டிருந்தாங்க! (விடுங்க மம்மி இவிய்ங்க எப்பவுமே இப்பிடித்தான்!)
தூர்தர்ஷனில் யாரோ ஒரு ஹிந்தித் தாத்தா! பல்லில்லாததாலோ என்னவோ கஷ்டப் பட்டு கதைத்தார் (யாராவது எம்.பி.யாக இருக்ககுமோ!)
*******************************************************************************************************
ஏதோ சீரியல் டைட்டிலில் எழில்வரதன் என்ற பெயர் கண்டு, மனம் பின்னோக்கி...
எழில்வரதன் - ஆனந்த விகடனில் 2005,6 களில் என்று நினைக்கிறேன் அட்டகாசமான சிறுகதைகளை எழுதி வந்தவர். அவரது கதைகளின் கரு அநேகமாக துன்பியல் சார்ந்ததாக இருந்தாலும், அதைச் சொல்லும்போது நக்கல், நகைச்சுவையில் பின்னியெடுத்துவிடுவார்.
இப்போது சீரியலில்? பொருளாதார ரீதியில் வளம் பெறமுடிந்தால் சரிதான். இருந்தாலும் சினிமா வசனகர்த்தா என்றால் நன்றாயிருக்கும்! (எல்லா சீரியல்களிலும் ஒரே காட்சிகள், வசனங்களைத்தானே பெயர்கள், ஆட்களை மாற்றி?)
*******************************************************************************************************
சில (அல்லது பல?) நாட்களுக்குமுன் சன் டீவியில்(?) இராமாயணம் ஒளிபரப்பானபோது, கவனித்தேன்..
அதில் வந்த ராவணனைப் பார்த்தபோது, சிறுவயதில் எங்கள் ஸ்கூல் வாசலில் மாங்காய் விற்றுக் கொண்டிருந்த 'அங்கிள்' போலவே இருந்தார்! ஒரு நிமிஷம் அவர்தான் நடிக்கிறாரோன்னு அசந்து போயிட்டேன்னா பார்த்துக்கொள்ளுங்க!
*******************************************************************************************************
ஊட்டச் சத்துக்கள் நிறைந்த, பெரியோர்களுக்கு ரொம்பநல்ல, குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் ஏதோ பதார்த்தத்தை ஒரு ஆன்டி செய்திட்டிருந்தாங்க!
இப்படியான நிகழ்ச்சிகளுக்கு இல்லத்தரசிகள் ஆதரவு எப்பவுமே இருக்கும்போல! பலர் ஆர்வமா பார்ப்பதை கவனித்திருக்கிறேன். சிலர் நோட்ஸ் கூட எடுப்பாங்க.ஆனா எதுவும் செய்கிறார்களா தெரியவில்லை!
மூன்று வருடங்களுக்கு முன், நம்நாட்டு டீ.வி ஒன்றில் சமையல் நிகழ்ச்சி செய்யும் ஆன்டி, பிரபல பேக்கரியொன்றில் பாண் (பிரெட்) வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்! பக்கத்தில் நின்ற நண்பன் சொன்னான் தான் அடிக்கடி பார்ப்பதாகவும், வீட்டில் அநேகமாக நாட்களில் இரவுச்சாப்பாடு பாண் போல என்றான்!
நாங்கெல்லாம் ஒரு காலத்தில தூர்தர்ஷனில் வசந்த் அன்கோ ஓனர் சாப்பிடுவதை வாய் பார்த்தவய்ங்க..தெரியும்ல!
*******************************************************************************************************
விஜய் டீ.வி.யின் ஆன்மீக விளம்பர சேவைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. நித்திக்கும் ஒரு 'ஸ்லாட்' கொடுக்கலாமே!
பகலில் 'ஆன்மிகம்' இரவில் 'நடந்தது என்ன?'
*******************************************************************************************************
நம்நாட்டு தனியார் சானல் ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளினிகளை எப்படி செலக்ட் செய்யக்கூடாதுன்னு தெரியவேண்டுமா? அந்த சானலை பார்க்க! (எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள் என்றே புரியவில்லை!)
காலைல ஆரம்பிப்பாங்க பாருங்க, நண்பன் ஒருவன் சொன்னான் 'எங்க இருந்துடா இதுங்களைப் பிடிச்சிட்டு வந்தாங்க? காலைல முழிச்சா, நாள் வெளங்கிரும்! அவர்களின் பேச்சு,ஸ்டைல்(?),தமிழ் எல்லாம் பார்க்கும்போது கொழும்பில் ஒரு குறித்த பிரதேசத்திலிருந்தே 'பிடிச்சுக்கொண்டு' வந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது!
இதில் இந்தியத் தொகுப்பாளினிகளை பார்த்து இவர்கள் அதேபோல் ட்ரை பண்ணுகையில் கானமயிலாட...'தான் ஞாபகத்துக்கு வருகிறது! வான்கோழி ஆடினாக்கூட போனாப் போகுதுன்னு விட்டுவிடலாம் (தோகையாவது இருக்கே!) வாத்துகள், காக்காய்கள் எல்லாம் ஆடினா? ஸ்ஸ்ஸ..ப்பா!
*******************************************************************************************************
ஏதோ சானலில் ஒரு விளம்பரம் கவர்ந்தது,
டாக்டர் எக்ஸ் நிகழ்ச்சியில் பாலியல் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார் Dr.காமராஜ்! (பார்ரா!)
********************************************************************************************************
ஏதோ ஒரு சீரியலில் (பார்க்கல காதில் கேட்டது) இளையராஜாவின் 'How to name it? வயலின் இசையை அப்பட்டமாகக் copy அடித்து பின்னணி இசை போட்டுத்தாக்குகிறார்! (மாற்றியிருந்தாலும் அப்படியே தெரிகிறது) அலறல்கள், கதறல்கள், கத்தல்கள் இடையே கிடைக்கும் 'கேப்'பில் வயலின் இழைகிறது!
********************************************************************************************************
மொத்தமாக ஆராய்ந்ததில் நமக்கு டிஸ்கவரிதான் சரி! நம்மளயே டிஸ்கவரி சானலில் வரும் ஒரு காரெக்டர்(?!) போலவே வீட்டில் அதிசயமாகப் பார்ப்பது போலத்தோன்றுவதால் எதுக்கு வம்பு? டீ.வியே வேணாம்!
கரெக்ட் ஜீ...நமக்கு டிஸ்கவரி தான் சரி..சும்மா பிரிச்சு ’மேஞ்சுட்டீங்க’
ReplyDeleteஏதோ சானலில் ஒரு விளம்பரம் கவர்ந்தது,
ReplyDeleteடாக்டர் எக்ஸ் நிகழ்ச்சியில் பாலியல் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு விடை அளிக்கிறார் Dr.காமராஜ்! (பார்ரா!)////
அது வசந்த் டி.வி.-யில் வரும் விளம்பரம் (நாங்க இதிலெல்லாம் கரக்டா இருப்போம்ல....)
ரொம்ப நொந்துட்டாரே.......
ReplyDeleteஅப்புறம் ஒரு சொல் வழக்கத்திலுள்ளது மூலியமா - அதாவது சேகர் மூலமா தெரிஞ்சது என்பதை சேகர் மூலியமா தெரிஞ்சது (இதை நான் வேறு எங்குமே கேட்டதில்லை, சீரியல் தமிழென்று ஒன்றுள்ளதோ?)////////////
ReplyDeleteஇது சுத்த தமிழ் வார்த்தையா இல்லையா என்று தெரியாது, ஆனால் எங்கள் காரைக்குடி பக்கம் வழக்கத்தில் உள்ள வார்த்தை ஜீ!
////'எங்க இருந்துடா இதுங்களைப் பிடிச்சிட்டு வந்தாங்க? காலைல முழிச்சா, நாள் வெளங்கிரும்! ////
ReplyDeleteஹ...ஹ...ஹ.. அவங்களும் என்ன செய்வாங்க கல்லிருந்தா நாயிருக்காது நாயிருந்தா கல்லிருக்காது.. இங்க கல்லும் இருக்காது நாயும் இருக்காது.. அப்ப என்ன இருக்கும்...
பாஸ் டி வி களை வெறுக்காதீங்க! டி வி களை வெறுக்கும் ஆண்களுக்கு ஓயாமல் சீரியல் பார்க்கும் பொண்ணுங்கதான் மனைவியா வருவாங்களாம்! அப்டீன்னு காரமட ஜோசியர் சொல்றாரு! ( இந்தக் காரமட ஜோசியர் யாருன்னு எனக்குத் தெரியாது எங்கோ படித்த ஞாபகம் )
ReplyDeleteதொல்லை காட்சியா தொலைகாட்சியா ?
ReplyDelete//வான்கோழி ஆடினாக்கூட போனாப் போகுதுன்னு விட்டுவிடலாம் (தோகையாவது இருக்கே!) வாத்துகள், காக்காய்கள் எல்லாம் ஆடினா? ஸ்ஸ்ஸ..ப்பா!//
ReplyDeleteஹா...ஹா...!!
ராசா.. மவராசா... இப்டீல்லாம் ஈவ் டீசிங் பண்ணப்டாது...!! இந்தியா'வா இருந்தா செக்ஷன் 298'ல உள்ள தள்ளி கணிதப் பாடம் கத்து குடுத்துடுவாய்ங்கடீ மாப்ளேய்....!!!
வாத்துக்கள், காக்கைகளை எல்லாம் வேற வம்புக்கு இழுத்து இருக்கிறீர்கள்...! ப்ளூ கிராஸ்....ஜாக்ரதை...!
//செங்கோவி said...
ReplyDeleteகரெக்ட் ஜீ...நமக்கு டிஸ்கவரி தான் சரி..சும்மா பிரிச்சு ’மேஞ்சுட்டீங்க’//
:-)
//ரஹீம் கஸாலி said...
அது வசந்த் டி.வி.-யில் வரும் விளம்பரம் (நாங்க இதிலெல்லாம் கரக்டா இருப்போம்ல....)//
பார்ரா! :-)
//MANO நாஞ்சில் மனோ said...
ரொம்ப நொந்துட்டாரே....//
வாங்க! :-)
//வைகை said...
'மூலியமா' இது சுத்த தமிழ் வார்த்தையா இல்லையா என்று தெரியாது, ஆனால் எங்கள் காரைக்குடி பக்கம் வழக்கத்தில் உள்ள வார்த்தை ஜீ!//
அப்படியா! புதிய தகவல்! நன்றி பாஸ்!
//பார்வையாளன் said...
தொல்லை காட்சியா தொலைகாட்சியா ?//
:-)
//Sathish Kumar said...
வாத்துக்கள், காக்கைகளை எல்லாம் வேற வம்புக்கு இழுத்து இருக்கிறீர்கள்...! ப்ளூ கிராஸ்....ஜாக்ரதை...//
ஆமாங்க வாத்து, காக்கா எல்லாம் கோவிச்சுக்கப் போகுது! :-)
டி வி நீங்கள் பார்த்தபோது அனுபவித்த கஷ்டம்
ReplyDeleteஉள்ளடக்கத்தில்தான் இருந்தது.
உங்கள் எழுத்து மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.
வாழ்த்துக்கள்
//ம.தி.சுதா said...
ReplyDeleteஹ...ஹ...ஹ.. அவங்களும் என்ன செய்வாங்க கல்லிருந்தா நாயிருக்காது நாயிருந்தா கல்லிருக்காது.. இங்க கல்லும் இருக்காது நாயும் இருக்காது.. அப்ப என்ன இருக்கும்..//
வாங்க பாஸ்! ரொம்ப நாளா நம்ம பக்கம் காணவே இல்ல? :-)
//மாத்தி யோசி said...
பாஸ் டி வி களை வெறுக்காதீங்க! டி வி களை வெறுக்கும் ஆண்களுக்கு ஓயாமல் சீரியல் பார்க்கும் பொண்ணுங்கதான் மனைவியா வருவாங்களாம்! அப்டீன்னு காரமட ஜோசியர் சொல்றாரு!//
அய்யய்யோ! என்னண்ணே இப்பிடி குண்டைத்தூக்கி போடுறீங்க?
காரமட ஜோசியர் - நம்ம பன்னிக்குட்டி ராம்சாமி யோட ஆஸ்தான ஜோசியர் அவர்! :-)
//Ramani said...
டி வி நீங்கள் பார்த்தபோது அனுபவித்த கஷ்டம்
உள்ளடக்கத்தில்தான் இருந்தது.
உங்கள் எழுத்து மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.
வாழ்த்துக்கள்//
நன்றி சார்! :-)
ரசிக்கும்படியான எழுத்துங்க....
ReplyDeleteதொலைக்காட்சியைப் பொறுத்தவரைக்கும் நமக்கு சில சீசனல் சேனல்கள்தான்///
கிரிக்கெட்டுன்னா, ஸ்போர்ட்ஸ் சேனல், இல்லாட்டி மூவீஸ், HBO, இப்போ புதுசா மூவீஸ் நவ், அதிலயும் லொட லொடன்னு பேசிட்டே இருந்தாங்கன்னா, இருக்கவே இருக்கு ஆதித்யா (பாத்தா ஆயுசு நூறாம்ல?) இந்தியாவிலயே அதிக சேனல்கள் இருக்கிறது தமிழ்நாட்டுக்குத்தான்.. ஆனா ஒரு சேனல்லயும் உறுப்படியான நிகழ்ச்சி போடறதேயில்ல.
நாயித்தி கெழம (ஞாயிறுதாங்க) ஜீ டிவி பாருங்க, அப்பப்போ புதுசா படம் போடறானுங்க.
-----------------
மூலியமா (மூலமா) - வழக்கில இருக்கிற சொல்தான், நானும் நிறைய தடவ ஊஸ் (யூஸ்?) பண்ணியிருக்கிறேன்.
நல்ல அலசல் :) :)
ReplyDelete//விஜய் டீ.வி.யின் ஆன்மீக விளம்பர சேவைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. நித்திக்கும் ஒரு 'ஸ்லாட்' கொடுக்கலாமே!
ReplyDeleteபகலில் 'ஆன்மிகம்' இரவில் 'நடந்தது என்ன?'
அருமையான ஐடியா
//நாங்கெல்லாம் ஒரு காலத்தில தூர்தர்ஷனில் வசந்த் அன்கோ ஓனர் சாப்பிடுவதை வாய் பார்த்தவய்ங்க..தெரியும்ல!//
ReplyDeleteகரெக்ட் ஜி , யோவ் சீக்கிரம் சாப்பிட்டு போய்யா அப்பதான் படத்த போடுவாய்ங்கனு கடுப்புல உக்கார்ந்திருப்போம் ,அவரு அசால்ட்ட வந்து " வாங்கம்மா என்ன செஞ்சிருக்கீங்க " ராகம் போட்டு கிட்டு இருப்பாரு . ஆனா இன்னைக்கு நெனைச்ச படத்த DVD யா வாங்கிட்டு வந்து பார்த்து கிட்டு இருக்கோம்
கார்ட்ரூன் நெட்வேர்க், ஜெட்டெக்ஸ், பாருங்க என் சிபாரிசு!!
ReplyDeleteஹிஸ்ரி சனலும் நல்லாயிருக்கு.. பிரஞ்ச் மன்னர்களைப்பற்றி இரவில் போகுது
super nanba, anaithum arumai ...
ReplyDelete//ஆதவா said...
ReplyDeleteரசிக்கும்படியான எழுத்துங்க..
மூலியமா (மூலமா) - வழக்கில இருக்கிற சொல்தான், நானும் நிறைய தடவ ஊஸ் (யூஸ்?) பண்ணியிருக்கிறேன்//
:-)நன்றி
//கனாக்காதலன் said...
நல்ல அலசல் :) :)//
நன்றி!
//Speed Master said...
அருமையான ஐடியா//
நன்றி!
//நா.மணிவண்ணன் said...
கரெக்ட் ஜி , யோவ் சீக்கிரம் சாப்பிட்டு போய்யா அப்பதான் படத்த போடுவாய்ங்கனு கடுப்புல உக்கார்ந்திருப்போம் ,அவரு அசால்ட்ட வந்து " வாங்கம்மா என்ன செஞ்சிருக்கீங்க " ராகம் போட்டு கிட்டு இருப்பாரு//
ஹா ஹா உண்மை நண்பா! :-)
//Jana said...
ஹிஸ்ரி சனலும் நல்லாயிருக்கு.. பிரஞ்ச் மன்னர்களைப்பற்றி இரவில் போகுது//
ஓ!நன்றி!
//இரவு வானம் said...
super nanba, anaithum arumai ...//
நன்றி!
நல்ல அலசல்... சூப்பர்
ReplyDelete//எழில்வரதன்// - You might also like: http://selections.wordpress.com/2009/04/16/எழில்வரதன்/
ReplyDeleteRegards
Venkatramanan
தொலைகாட்சியா அது தொல்லைகாட்சி ...............?
ReplyDeleteபயத்துல படிக்கவேண்டாம்னு பார்த்தேன்.
அட நாம சொல்ல நினைச்சதை பதிவுல பார்த்ததும்
நன்றியுடன் செல்கிறேன்.
நீங்கள் எந்த சேனலையும் விட்டுவைக்கவில்லை போலிருக்கிறது. தொலைகாட்சி பல நேரங்களில் தொல்லைகாட்சியாக இருப்பது என்னவோ உண்மைதான்
ReplyDelete