சில சமயங்களில், எதிர்பார்த்தேயிராத, எந்தப் பொது இயல்புகளும் இல்லாத இருவர் சாதாரணமாகப் பழகிக் கொண்டிருக்கும்போதே சட்டென்று ஒருநொடியில் நிகழ்ந்துவிடும் ஆச்சர்யம்..காதல்!......அப்படீன்னு அனுபவப்பட்டவங்க சொல்றாங்க!
அப்படித்தான் இந்தப் படத்திலும்.
எதற்கும் கவலைப்படாத, அலட்டிக் கொள்ளாத மற்றவர் மனநிலை பற்றிக் கவலைப்படாத ஈகோ உள்ள இளைஞன் கார்ட்டர்! பாதிரியாரான தந்தையின் சொல் தட்டாத, கடவுள், தன் சொந்த நம்பிக்கைகளுன் வாழும் அமைதியான அழகான நல்ல பெண் ஜேமி!
ஆரம்பத்தில் எந்த வித ஈடுபாடுமின்றி பழகிக்கொண்டிருக்கும் கார்ட்டர் படிப்படியாக ஜேமியிடம் ஈர்க்கப்படுகிறான். அதுவும் உயர்பள்ளியில் நிகழும் ஒரு நாடகத்தில் இருவரும் இணைந்து நடிக்கையில், ஜேமி பாடும்போது முற்றுமுழுதாக அவள் வசம்...!
ஒரு நல்ல காதல் எப்படி ஒருவனது வாழ்க்கையில், நடத்தையில், உறவுமுறை குறித்த புரிதல்களில்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனக்கூறுகிறது படம்.
ஜேமிக்கு Leukemia என்றதும் கார்ட்டரை விட எனக்கு அதிர்ச்சியாகிடுச்சு! அந்தக் காட்சியில் இருவரதும் நடிப்பு...என்ன சொல்றது!
ஜேமியை மகிழ்விக்க தனக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை எல்லாம் (அம்மாவிடம் டான்ஸ் கற்றுக் கொள்வது, இரவு பகலாக் ஒரு பெரிய தொலைநோக்கியை வடிவமைப்பது- ஜேமியின் ஆசை) மகிழ்ச்சியுடன் செய்கிறான்.
குறிப்பாக தனக்குப் பிடிக்காத, பேச விரும்பாத ஆனால் பாசத்தைக்காட்டும் தந்தையிடம் சென்று உதவி கேட்பது, பின்னர் அவரிடம் சென்று நன்றி சொல்லும் காட்சி.
என்னதான் காதல், சென்டிமென்ட் என்றாலும் அலட்டலில்லாமல் அதைச் சொன்னவிதம் ...ஹாலிவுட் காரங்களை Copy அடிப்பவங்க இதைக் கவனிப்பதே இல்லையா?
இதுவே தமிழ்ல நாயகனுக்கோ, நாயகிக்கோ பிளட் கான்சர் வந்தா என்னென்ன கொடுமைய எல்லாம் பார்க்க நேரிடும்!
தன்னோட காதலி தன்னை வெறுக்கணும்னு இன்னொரு பெண்ணோட சேர்ந்து நாடகம் போட்டு, வாழ்க்கைத் தத்துவப் பாடல் பாடி, உள்ள ஆபாச, ஆபத்துக் கூத்துகளையெல்லாம் அரங்கேற்றி, சாகும்போது கூட ரத்தவாந்தி எடுத்துக் கொண்டே பாட்டுப்பாடி, அவன் இம்சை தாங்காம படம் பார்க்கிறவங்க 'எப்படா இவன் சாவான்'னு யோசிக்க வைக்க மாட்டாங்க?!
படம் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் ஒரு தமிழ்க் 'காவியம்' நினைவுக்கு வந்து தொலைத்தது!
மனதை வருடும் பின்னணி இசை- Mervyn Warren
பிரபல Pop Singer, நடிகை Mandy Moore ஜேமியாக!
A walk to remember என்ற நாவலை அடிப்படியாகக் கொண்டு 2002 இல் வெளிவந்த படம் இது.
படத்தில் வரும் மேற்கோள்களில்? (Quotes) ஒன்று இது,
"Love is always patient and kind. It is never jealous. Love is never boastful or conceited. It is never rude or selfish. It does not take offense and is not resentful"
படம் பார்த்து, சில வருடங்களாக, எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று! இதைக் கொஞ்சம் கேட்டு...பார்த்து....இதுவே கதை சொல்ற மாதிரி இருக்கு!
"Love is always patient and kind. It is never jealous. Love is never boastful or conceited. It is never rude or selfish. It does not take offense and is not resentful"
ReplyDeleteசிலர் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்றாலும் இது நிதர்சனம்தான். அப்புறம் இந்த படம் எச்.பி.ஓவில் ஒரு தடவை கொஞ்ச கட்டங்கள் மட்டும் பார்த்த நினைவு. பகிர்வுக்கு நன்றி. இதுபோல பல படங்கள் பற்றி எழுதுங்கள்.
நீண்ட நாட்களின் பின்னர் எனக்குத்தான் சுடுசோறு.
சுடு சோறு போச்சே..
ReplyDeleteஇது போல நிறைய எழுதுங்கள்...
ரசித்து படித்தேன்...
//Jana
ReplyDeleteஇதுபோல பல படங்கள் பற்றி எழுதுங்கள்.
நீண்ட நாட்களின் பின்னர் எனக்குத்தான் சுடுசோறு//
:-)
//பார்வையாளன்
இது போல நிறைய எழுதுங்கள்..//
நன்றி!
நல்ல விமர்சனம்..........
ReplyDeleteபாட்டு அருமைங்க.........
புத்தாண்டை விமரிசையாக ஆரம்பித்து விட்டீர்கள் , ஓ.கே...
ReplyDeleteA Walk to Remember - எனக்ககுப்பிடித்த, மறக்க முடியாத படங்களில் ஒன்று ஜீ
ReplyDeleteதேர்ந்தெடுத்து படங்களைப் பற்றிக் கூறுகிறீர்கள். சிறந்தவை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி
ReplyDelete//வழிப்போக்கன் - யோகேஷ் said...
ReplyDeleteநல்ல விமர்சனம்..........
பாட்டு அருமைங்க......//
நன்றி!
//பாரத்... பாரதி... said...
புத்தாண்டை விமரிசையாக ஆரம்பித்து விட்டீர்கள் , ஓ.கே..//
:-)
//Subankan said...
A Walk to Remember - எனக்ககுப்பிடித்த, மறக்க முடியாத படங்களில் ஒன்று ஜீ//
நன்றி!
//Dr.எம்.கே.முருகானந்தன் said...
தேர்ந்தெடுத்து படங்களைப் பற்றிக் கூறுகிறீர்கள். சிறந்தவை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி//
நன்றி!
//
ReplyDeleteஇதுவே தமிழ்ல நாயகனுக்கோ, நாயகிக்கோ பிளட் கான்சர் வந்தா என்னென்ன கொடுமைய எல்லாம் பார்க்க நேரிடும்!
தன்னோட காதலி தன்னை வெறுக்கணும்னு இன்னொரு பெண்ணோட சேர்ந்து நாடகம் போட்டு, வாழ்க்கைத் தத்துவப் பாடல் பாடி, உள்ள ஆபாச, ஆபத்துக் கூத்துகளையெல்லாம் அரங்கேற்றி, சாகும்போது கூட ரத்தவாந்தி எடுத்துக் கொண்டே பாட்டுப்பாடி, அவன் இம்சை தாங்காம படம் பார்க்கிறவங்க 'எப்படா இவன் சாவான்'னு யோசிக்க வைக்க மாட்டாங்க?!
படம் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் ஒரு தமிழ்க் 'காவியம்' நினைவுக்கு வந்து தொலைத்தது! //
இந்தப் பத்தி செம சூப்பர்... வார்த்தைக்கு வார்த்தை ரசிச்சேன்...
//
ReplyDelete//இதுவே தமிழ்ல நாயகனுக்கோ, நாயகிக்கோ பிளட் கான்சர் வந்தா என்னென்ன கொடுமைய எல்லாம் பார்க்க நேரிடும்!
தன்னோட காதலி தன்னை வெறுக்கணும்னு இன்னொரு பெண்ணோட சேர்ந்து நாடகம் போட்டு, வாழ்க்கைத் தத்துவப் பாடல் பாடி, உள்ள ஆபாச, ஆபத்துக் கூத்துகளையெல்லாம் அரங்கேற்றி, சாகும்போது கூட ரத்தவாந்தி எடுத்துக் கொண்டே பாட்டுப்பாடி, அவன் இம்சை தாங்காம படம் பார்க்கிறவங்க 'எப்படா இவன் சாவான்'னு யோசிக்க வைக்க மாட்டாங்க?!
படம் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் ஒரு தமிழ்க் 'காவியம்' நினைவுக்கு வந்து தொலைத்தது! //
இந்தப் பத்தி செம சூப்பர்... வார்த்தைக்கு வார்த்தை ரசிச்சேன்..//
repeattu..:)))
அறிமுகமில்லாத படத்தின் விமர்சனம்! நல்லாயிருக்கு..
ReplyDeleteசன் டிவி யை விட நல்லா விமர்சனம் பண்றீங்க .....கலக்குங்க ஜி....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅருமையான விமர்சனம்...
ReplyDeleteநல்ல விமர்சிச்சீங்க ஜீ....
ReplyDeleteகீ இட் அப் ;)
விமர்சனம் சூப்பருங்க
ReplyDeleteஒன்னு சொல்லிகிறேன்:
இங்கிலீஷ் படமா போச்சுங்களா நான் ட்ரை பண்ணி புரிஞ்சிக்க ஏதுவா உதவும் உங்க விமர்சனம்!
நன்றி நண்பரே
//இதுவே தமிழ்ல நாயகனுக்கோ, நாயகிக்கோ பிளட் கான்சர் வந்தா என்னென்ன கொடுமைய எல்லாம் பார்க்க நேரிடும்!///
ReplyDeleteஹா ஹா ஹா.... சரியா சொன்னிங்க...
A Walk to Remember.... அருமையான விமர்சனம்... :-))
இங்க்லீஷ் படம்லாம் பாக்கறதில்ல. . எங்கே ஜி அதுக்கெல்லாம் நேரம் கெடைக்குது?. நல்ல விமர்சனம். படம் பாத்த திருப்தி கெடச்சது
ReplyDeleteஅருமையான விமர்சனம். நன்றி ஜீ.
ReplyDeleteHaven't see the movie yet... Looks like a good one.
ReplyDeleteLovely song.... :-)
நல்ல பகிர்வு
ReplyDeleteநல்ல எழுத்து நடை
ReplyDeleteஜீ பிந்திய வருகைக்கு மன்னிக்கவும்... படம் ஆழமான காதல் படம் என்பது தெரிகிறது.. உண்மையில் இன்னும் பார்க்கல.. பார்க்கணும் ஏன்ன காரணம் நீங்கள்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel
படத்தோட பேரே நல்லாருக்கு.. விமர்சனமும்!!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க. வாய்ப்பு கிடைச்சா பார்த்துடவேண்டியதுதான்,.
Super continue
ReplyDelete5 வருடத்திற்கு முன் இந்த படம் பார்த்தேன். சப் டைட்டில் புன்னியத்தில் ரசித்தேன். சென்ற வருடம் இதே கதையில் ஒரு தெலுங்கு படம் பார்த்தேன். படத்தின் பெயர் ஓய். சித்தார்த் ஷாமிலி( நம்ம சாலினி தங்கச்சி) நடித்தது. இன்ஸ்ப்ரஸன் என்று walk to remember பெயர் போட்டு விட்டார்கள். மன்னித்து விடுவோல். ஜெமி இரண்டு ஸ்டேடில் நிற்கும் காட்சி உட்பட அப்படியே இருக்கிறது. பாருங்கள்.
ReplyDelete//அவன் இம்சை தாங்காம படம் பார்க்கிறவங்க 'எப்படா இவன் சாவான்'னு யோசிக்க வைக்க மாட்டாங்க?!//
ReplyDeleteஹா ஹா ஹா. சிரித்து முடியவில்லை. அந்த காவியத்தை பாஸ்ட் போர்வேட் செய்து பார்த்த ஞாபகம் இருக்கிறது. அரை மணி நேரம் கூட எனக்கு அதைப் பார்க்க தேவைப்படவில்லை.
இதை மாதிரி லைட் மூவிகளைப் பற்றி எழுதும் போது உங்கள் வரிகளை கண்டிப்பாக சுடப் போகிறேன். இப்பவே சொல்லிட்டேன்.
எல்லாப்பாடல்களும் எனக்குப் பிடிக்கும். அதுவும் மன்டி மோரின் குரல். வாவ். இட்ஸ் கொன்ன பி மீ பேபியும் ரொம்பவே பிடிக்கும். அதுவும் ஓடும் போதோ நடக்கும் போதோ கேட்கும் பாடலில் ஒன்று இதுவும் ஒன்று.
படிக்கும் போதே ஒரு மென்மை இருக்கிறது, ஒரு மேன்மையும் இருக்கிறது
ReplyDelete