ஹா ஹா ஹா ஹா ஹா..!
சீரான இடைவெளியில், நிதானமாக, நிறுத்தி நிறுத்தி அழகாக...மிக அழகாக சிரித்தான்! எலோருக்கும் ஆச்சரியம், சிரிப்பாக இருந்தது என்ன இது புதுசா? யாரைப்பார்த்து இப்படி?
இதில ஆச்சரியப்பட என்ன இருக்கு என்கிறீர்களா?
சிரித்தவனுக்கு மூன்று வயது!
அப்புறம் அவனையே கேட்க, சொன்னான் 'ரச்சினி!'
கொஞ்ச நாட்களாக பயபுள்ள தொடர்ந்து 'நினைத்தாலே இனிக்கும்' படத்தை DVD யில் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்திட்டிருந்தான்! அதிலும் குறிப்பாக 'நம்ம ஊரு சிங்காரி' பாடலைத்தான்.
ஒழுங்கா இரண்டு வார்த்தை சரியான உச்சரிப்பில் வராத, ஒரு குழந்தையின் மனதில் ஒரு பார்வையிலேயே பார்த்ததும் இடம்பிடித்துக் கொள்ளும் 'பவர்', 'காந்தசக்தி' ரஜினி!
எனக்கும் அப்படித்தான் சிறுவயதில் ரஜினியை மிகவும் பிடிக்கும்! எனக்கு மட்டுமல்ல அநேகமாக எல்லோருக்குமே அப்படித்தானென்று நினைக்கிறேன்.
உண்மையில் ரஜினி ஒரு ஆச்சரியம்தான்! சில விஷயங்களை ரஜினி செய்வது/செய்தால் மட்டுமே ரசிக்க முடிகிறது! உதாரணம் எந்திரன்! எந்திரனுக்கான எதிர்மறை விமர்சனகள் எல்லாம் ஷங்கருக்கானதே! அதில் ரஜினியின் பங்களிப்பு கனகச்சிதமானது. வேறு யார் செய்தாலும் ரசித்திருக்காது!
வயது போன ஹீரோக்கள், பேத்திகளுடன் நடிப்பது குறித்த குற்றச்சாட்டுகளில் விலக்களிக்கக் கூடிய ஒருவர் ரஜினிதான். எந்திரன் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது..ஒரு விஞ்ஞானியை ஒரு கல்லூரி மாணவி காதலிக்கலாம், இயல்பானது! ஆனா மாணவிக்காக ஒரு ஆன்டியை (ஐஸ்) நடிக்க வச்சிட்டாங்களே! இளவயது ஹீரோயினாக தேர்ந்தெடுத்திருக்கலாமேன்னு!
நம் தமிழர்களுக்கு ஒரு பழக்கம். சில சமயங்களில் எனக்கும் கூட (இது தமிழர்களுக்கு மட்டுமா என்று சரியாகத் தெரியாது..நான் ஒரு தமிழன் என்பதால் அப்படிச் சொல்கிறேன்)
எதை பற்றியுமே உடனடியாக ஒரு வரையறை அல்லது முடிவு தேவைப்படுகிறது! புதிதாக ஒருவருடன் பேசும்போது, நான்கைந்து வசனங்களிலேயே அவர் பற்றி ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறோம். அவர் விருப்பங்கள், காரெக்டர் பற்றி அறிந்து கொள்வது நல்ல விஷயம். ஆனால், இதுதான் இவர் என்ற முடிவுக்கு வருவது தவறு! பிறகு அவர் சொல்வது எல்லாமே எமது முடிவுடனான ஒப்பீடாகவே பார்க்கப்படும்!
நாம் சில டெம்ப்ளேட்டுகளை வைத்துக் கொண்டிருப்போம். பார்ப்பவர்களை எல்லாம் இவர் எதற்குள் அடங்குவார்? புத்தி உடனே விழித்துக் கொள்ளும் உடனே முத்திரை குத்திவிட!
எதையாவது சொன்னால் உடனே ஒரு முடிவு பண்ணிடுவோம்!
நான் கமல் ரசிகன் என்றால் அப்போ இவனுக்கு ரஜினி பிடிக்காது! (ஏன் இருவரையும் பிடிக்கக் கூடாது?)
விஜய்யை கலாய்த்தால் - அஜித்தோட ரசிகன்! (இருவரையுமே பிடிக்காம இருக்கலாமே?)
ஒரு மதத்தில் ஒரு சிலர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் - அந்த மதத்துக்கு எதிரானவன், மதவாதி, குறித்த மதத்தினரை புண்படுத்திட்டான்!
சாதாரணமானவர்களுக்கே இந்தநிலை என்றால் சூப்பர் ஸ்டாருக்கு? ஒவ்வொரு முறையும் அவரை நோக்கி வீசப்படும் விமர்சனங்கள் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு, சமாளித்து வருவதற்குள் பார்த்துக் கொண்டிருக்கும் எங்களுக்கே தாங்கமுடியாது!
நடிப்பு என்பதை ஒரு தொழிலாகப் பார்க்காமல் ஒரு நடிகனை, சமுதாயத்தின் வழிகாட்டி, அறிவுரை வழங்குனர், கலாச்சாரச் சின்னம், கருத்துக் கருவூலம் என்றெல்லாம் கருதும் மனநிலை வேறு எந்த நாட்டிலாவது இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களான எங்களுக்கே வாய்க்கப் பெற்ற அற்புதமான வரப்பிரசாதம்!
இந்த மாதிரியான ஒரு சூழலில் சூப்பர் ஸ்டாராக இருப்பது எவ்வளவு கொடுமை? ரஜினி நின்றால், இருந்தால், நடந்தால் எதற்குமே ஒரு அர்த்தம் கற்பிக்கப்படும் நிலையில் (தெரிந்தோ தெரியாமலோ இரண்டு விரலைச் சேர்த்து வைத்திருந்தால்..அதுவே பெரிய பரபரப்பாகி அதற்கு ஆய்வுக்கட்டுரைகள்) அவர் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு கொடுத்த விலை....அவரால் இஷ்டப்பட்டதை செய்ய, பேச, நினைத்த இடத்திற்குச் செல்ல, அதைவிடக் கொடுமை அவர் இஷ்டப்படாத இடத்திற்குச் செல்லாமல் விட முடிவதில்லை! (ஒரு வருஷத்தில எத்தனை பாராட்டு விழா? விரும்பியா சென்றிருப்பார்?)
பல சந்தர்ப்பங்களில் மிக மோசமாக அலைக்கழிக்கப்படும் ஒரு நல்ல மனிதர் ரஜினி!
எல்லோருக்கும் பிடிக்கிறதோ, இல்லையோ, விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் சினிமாவில் என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமே!
பாவம் தான் உயர் அந்தஸ்த்திலுள்ளவர்கள்
ReplyDeletewon the toss.........me
ReplyDeletenice......
come back after morning...
//பல சந்தர்ப்பங்களில் மிக மோசமாக அலைக்கழிக்கப்படும் ஒரு நல்ல மனிதர் ரஜினி!// Very true.
ReplyDeleteரஜினி காந்தம்தான்...நச் பதிவு.
ReplyDeleteஎழுத்துக்கு சுஜாதாபோல திரைக்கு இவரும். இவர் பானி எப்போதும் தனி எல்லோரையும் கவரும் விதம் இருக்கும்.
ReplyDeleteஅருமை....
ReplyDeleteரஜனி....- பாட்ஷாவின் பாடலில் உள்ளது போல “இவன் பேருக்குள்ளே காந்தம் உண்டு..உண்மைதானடா...”
ஃஃஃஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமேஃஃ
உண்மையில் பாவப்பட்ட ஜீவன் ரஜினி
ReplyDelete= எந்த ஆட்சி வந்தாலும் கூப்பிட்டு வாழ்த்து சொல்லவைக்கிறார்கள்.
சூப்பர் பதிவு
ReplyDeleteஎன்ன ஜீ திடீர்னு ரஜினி பத்தி பதிவு???
ReplyDelete/////நான் கமல் ரசிகன் என்றால் அப்போ இவனுக்கு ரஜினி பிடிக்காது! (ஏன் இருவரையும் பிடிக்கக் கூடாது?)
ReplyDeleteவிஜய்யை கலாய்த்தால் - அஜித்தோட ரசிகன்! (இருவரையுமே பிடிக்காம இருக்கலாமே?)/////
இது தான் எனக்கும் எற்படும் பிரச்சனை ஜீ...
இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..
//தமிழ் சினிமாவில் என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமே!//
ReplyDeleteமறுக்கமுடியாத ஒரு உண்மை. உண்மையில் ரஜினி அற்புதமான ஒரு சிறந்த மனிதர்.
(ஒரு வருஷத்தில எத்தனை பாராட்டு விழா? விரும்பியா சென்றிருப்பார்?)
ReplyDeleteவேற வழி இல்லையே
எல்லோருக்கும் பிடிக்கிறதோ, இல்லையோ, விரும்பியோ, விரும்பாமலோ தமிழ் சினிமாவில் என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமே!///
ReplyDeleteமிக சரி நண்பா....
நடிப்பு என்பதை ஒரு தொழிலாகப் பார்க்காமல் ஒரு நடிகனை, சமுதாயத்தின் வழிகாட்டி, அறிவுரை வழங்குனர், கலாச்சாரச் சின்னம், கருத்துக் கருவூலம் என்றெல்லாம் கருதும் மனநிலை வேறு எந்த நாட்டிலாவது இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களான எங்களுக்கே வாய்க்கப் பெற்ற அற்புதமான வரப்பிரசாதம்!
ReplyDelete//////////////////////////////////////////////
உண்மை இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு ஜீ..............
நிச்சயமாய் ரஜினி ரஜினி தான் . அவருக்கு மாற்று இல்லை அப்பாவும் பிள்ளையும் ஒரு நடிகருக்கு ரசிகனாய் இருக்கிறார்கள் என்றால் அது ரஜினிக்குத்தான்.
ReplyDelete®theep said...
ReplyDelete//நடிப்பு என்பதை ஒரு தொழிலாகப் பார்க்காமல் ஒரு நடிகனை, சமுதாயத்தின் வழிகாட்டி, அறிவுரை வழங்குனர், கலாச்சாரச் சின்னம், கருத்துக் கருவூலம் என்றெல்லாம் கருதும் மனநிலை வேறு எந்த நாட்டிலாவது இருப்பதாகத் தெரியவில்லை. தமிழர்களான எங்களுக்கே வாய்க்கப் பெற்ற அற்புதமான வரப்பிரசாதம்!
// இந்த வரிக்கு ரஜனிக்கு மட்டும் (வரி)விலக்கு அளிக்கலாம்.அவரை பார்த்து சமுதாயம் கற்க வேண்டிய உன்னத விடயம் நிறைய உண்டு.
//பல சந்தர்ப்பங்களில் மிக மோசமாக அலைக்கழிக்கப்படும் ஒரு நல்ல மனிதர் ரஜினி!//
ReplyDeleteஇது ரொம்பவே உண்மை...அவரின் பர்சனல் வாழ்க்கையில் எளிமையான,ஆர்ப்பாட்டமில்லாத மனிதர் ..
உண்மை உண்மை ஜீ.இப்போ பிறந்து வளரும் 4 வயதுக் குழந்தைகளுக்கு ரஜனியைப் பிடிக்கிறதே.ஏதோ ஒரு காந்தம்தான் அவர் !
ReplyDeleteம்ம்.. எதற்கும் ஒரு விலை..
ReplyDeleteதமிழ் சினிமாவில் என்றும் ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமே!
ReplyDeleteமறுக்க முடியாத உண்மை ஜீ..
ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமே!
ReplyDeleteநல்லதொரு பதிவு..
ReplyDeleteதலைவரோட ஸ்டைல் தனி ஸ்டைல்தான்.. அது யாருக்குமே வராது. அருமையான பதிவு
ReplyDelete