ஒவ்வொரு மேஜிக்கும் மூன்று பிரதான பகுதிகளைக் கொண்டது.
The Pledge - மேஜிக் நிபுணர் முதலில் ஒரு பொருளைக்காட்டி, பார்வையாளர்களைச் சோதிக்கச் சொல்வார்.
The Turn - அந்தப்பொருளை வைத்து அசாதாரணமான ஒன்றைச் செய்தல் (உதாரணம் மறையச் செய்தல்)
The Prestige - மறையச் செய்வதோடு நாம் மகிழ்வதில்லை.மறைந்ததை மீளக் கொண்டுவர வேண்டும். இதுதான் மிகவும் கடினமான மூன்றாவது பகுதி. இது தான் The Prestige!
இந்த மூன்று பகுதிகளையும் அடிப்படையாகக் கொண்டு படம் நகர்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் லண்டனில் இருக்கும் இரு மேஜிக் கலைஞர்களான ஆன்ஜியர் (Angier),அல்பிரட் போர்டன் (Alfred Borden) இருவருக்கும் இடையிலான தொழில் போட்டி, தனிப்பட்ட வாழ்க்கையின் பழிவாங்கல்கள் பற்றி சொல்லப்படுகிறது படத்தில்.
ஆன்ஜியர் (Hugh Jackman) - மேஜிக்கை ஒரு கலையாகப் பார்ப்பவன். போர்டன் (Christian Bale) - மேஜிக்தான் வாழ்க்கை, அதற்காக எதையும் தியாகம் செய்யலாம் என நினைப்பவன். அப்படித்தான் வாழ்கிறான்!
ஆன்ஜியரைக் கொன்றதற்காக நீதிமன்றத்தில் போர்டனுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கும் காட்சியிலிருந்து ஆரம்பித்து, சில வருடங்கள் முன், பின்னாக பயணிக்கிறது கதை.
ஆன்ஜியர், ஜூலியா (ஆன்ஜியரின் மனைவி), போர்டன் மூவரும் மேஜிக் காட்சிகளை உருவாக்கும் கட்டரிடம் வேலை செய்கிறார்கள். கை,கால் கட்டப்பட்ட நிலையில் பெரிய தண்ணீர் தொட்டிக்குள் போடப்படும் ஜூலியா அதிலிருந்து தப்பி வெளிவருவதுதான் ஹைலைட்! ஒவ்வொரு முறையும் 'கெட்டப்' மாற்றிக்கொண்டு பார்வையாளர் போன்று உட்கார்ந்திருக்கும் ஆன்ஜியர், போர்டன் இருவரும் காட்சியின்போது முறையே ஜூலியாவின் கால், கை கட்டி முடிச்சுப் போடுவார்கள்!
ஒருநாள் கை முடிச்சினை அவிழ்க்க முடியாமல் ஜாலியா இறந்துபோக, போர்டன் மீது சந்தேகப்படும் ஆன்ஜியர், இறுதிச் சடங்கின்போது 'நீ போட்டது எந்த வகையான முடிச்சு? எனக்கேட்க 'தெரியாது' என்கிறான் போர்டன். இந்தப் பொறுப்பற்ற பதிலால் ஆத்திரமடைகிறான் ஆன்ஜியர்.
போர்டன் Bullet Catching செய்யும்போது,ஆன்ஜியர் மாறுவேடத்தில் குழப்புவதற்காக வந்து பங்கேற்க, வந்திருப்பது யாரென்று புரிந்தாலும் எதுவும் செய்ய இயலாத சூழலில், போர்டனின் இரண்டு விரல்கள் 'அவுட்'. பதிலுக்கு போர்டனும் களத்தில் இறங்க, இப்போது அடுத்தவன் மேஜிக்கைக் குழப்புவது இருவருக்கும் உபதொழிலாகிறது.
ஒருநாள் கை முடிச்சினை அவிழ்க்க முடியாமல் ஜாலியா இறந்துபோக, போர்டன் மீது சந்தேகப்படும் ஆன்ஜியர், இறுதிச் சடங்கின்போது 'நீ போட்டது எந்த வகையான முடிச்சு? எனக்கேட்க 'தெரியாது' என்கிறான் போர்டன். இந்தப் பொறுப்பற்ற பதிலால் ஆத்திரமடைகிறான் ஆன்ஜியர்.
போர்டன் Bullet Catching செய்யும்போது,ஆன்ஜியர் மாறுவேடத்தில் குழப்புவதற்காக வந்து பங்கேற்க, வந்திருப்பது யாரென்று புரிந்தாலும் எதுவும் செய்ய இயலாத சூழலில், போர்டனின் இரண்டு விரல்கள் 'அவுட்'. பதிலுக்கு போர்டனும் களத்தில் இறங்க, இப்போது அடுத்தவன் மேஜிக்கைக் குழப்புவது இருவருக்கும் உபதொழிலாகிறது.
வழமையான மேஜிக்குகள் ஜனங்களுக்கு அலுத்துவிட புதுமையாக ஏதாவது செய்ய வேண்டிய சூழ்நிலையில், திடீரென பிரபலமகிவிடுகிறான் போர்டன் தனது 'Transported Man' என்ற Illusion மூலம். அதாவது மேடையின் ஒரு பக்கத்தில் மறையச் செய்து ஒரே கணத்தில் மறுபக்கத்தில் தோன்றச் செய்வது! இதனால் குழம்பிப்போகும் ஆன்ஜியர் தனது எஞ்சினியர் கட்டரின் உதவியுடன், தன்னைப் போலவே தோற்றமளிக்கும் ஒருவனை வைத்து அதே மேஜிக்கை 'New Transported Man' என்ற பெயரில் செய்ய தொழில் சூடு பிடிக்கிறது.
இருந்தாலும் போர்டனின் மேஜிக் தந்திரம் என்ன? - இந்தக் கேள்வி ஆண்ஜியரை குழப்புகிறது.இதே தந்திரத்தைத் தான் போர்டனும் பயன்படுத்துகிறான் என்ற கட்டாரின் விளக்கத்தை ஏற்க மறுக்கிறான். தன்னுடைய உதவியாளினி (+ இந்நாள் காதலி)ஒலிவியாவை வேவு பார்பதற்காக போர்டனிடம் வேலைக்கு அனுப்ப, அவளுக்கு போர்டன் மீது காதல்வர, அந்தக் களேபரத்தில் போர்டனின் மனைவி சாரா தற்கொலை செய்து கொள்கிறாள் ஒலிவியாவும் போர்டனைப் பிரிந்து சென்று விடுகிறாள். ஒலிவியா போர்டனிடம் திருடிய டைரியைக் கொண்டு ரகசியத்தை அறிய முடியவில்லை ஆன்ஜியரால்! காரணம் அதில் Cryptography முறையில் எழுதப் பட்டிருப்பதால்.
இருந்தாலும் போர்டனின் மேஜிக் தந்திரம் என்ன? - இந்தக் கேள்வி ஆண்ஜியரை குழப்புகிறது.இதே தந்திரத்தைத் தான் போர்டனும் பயன்படுத்துகிறான் என்ற கட்டாரின் விளக்கத்தை ஏற்க மறுக்கிறான். தன்னுடைய உதவியாளினி (+ இந்நாள் காதலி)ஒலிவியாவை வேவு பார்பதற்காக போர்டனிடம் வேலைக்கு அனுப்ப, அவளுக்கு போர்டன் மீது காதல்வர, அந்தக் களேபரத்தில் போர்டனின் மனைவி சாரா தற்கொலை செய்து கொள்கிறாள் ஒலிவியாவும் போர்டனைப் பிரிந்து சென்று விடுகிறாள். ஒலிவியா போர்டனிடம் திருடிய டைரியைக் கொண்டு ரகசியத்தை அறிய முடியவில்லை ஆன்ஜியரால்! காரணம் அதில் Cryptography முறையில் எழுதப் பட்டிருப்பதால்.
போர்டனின் எஞ்சினியர், பெலனை (Fallon) கடத்தி, போர்டனிடம் நேரடியாகக் கேட்க அவன் டெஸ்லா பெயரைச் சொல்கிறான். (Nikola Tesla - எலெக்ட்ரிக்கல் துறையில் இவரது பங்களிப்பைப் பற்றி ஒரு பெரிய பதிவு போடலாம். தாமஸ் அல்வா எடிசனுடனும் இணைந்து பணியாற்றியவர்) ஆன்ஜியர் டெஸ்லாவைச் சந்திக்கிறான். அவனுக்காக அவர் உருவாக்கிக் கொடுத்த, ஒழுங்காக வேலை செய்யுமா இல்லையா என்றே தெரியாத ஒரு ஆபத்தான மெஷினோடு திரும்ப வருகிறான்.
இந்தமுறை, ஆண்ஜியரின் ட்ரிக்கை அறிய வரும் போர்டன், தண்ணீர் தொட்டிக்குள்ளிருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் ஆண்ஜியரைக் காப்பாற்ற முயல்கிறான். ஆனால்....அஞ்சியரைக் கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது! (படத்தின் முதலாவது காட்சி)
பிறகு என்னவாகிறது? - அது கிறிஸ்டோபர் நோலனின் மேஜிக்!
Christopher Priest என்பவரின் Novel ஐ அடிப்படையாகக் கொண்டு 2006 இல் வெளி வந்த படம்.
திரைக்கதை - Christopher Nolan, Jonathan Nolan
இயக்கம் - Christopher Nolan
சிறந்த ஒளிப்பதிவு, ஆர்ட் டைரக்சனுக்கான Oscarக்கு பரிந்துரைக்கப்பட்டது.
படம் ஆரம்பிக்கும்போது கேட்கப்படும் கேள்வி, படம் முடியும்போதுதான் தெரிகிறது அது கிறிஸ்டோபர் நோலன் எங்களைப்பார்த்துக் கேட்ட கேள்வி என்று!
மேலே சொன்ன ஒழுங்கில் காட்சிகள் இருக்காது.கதை நேர்கோட்டில் பயணிக்காமல், வெவேறு காலத்தில் காட்சிகளின் ஒழுங்கு மாறியிருக்கும் (Nonlinear)
Mementoவில் இரண்டாவது காட்சியிலேயே (Scene) படத்தின் காட்சியமைப்பு புரிந்து விடும். காலத்தை பிரித்தறிய கலர்டோன் வேறுபாடு இருக்கும். இதில் அப்படி அல்ல. 'க்ளூ'வாக கதாபாத்திரங்களின் ஆடைகள், ஸ்டைல்.
அஞ்சியர், போர்டன் இருவரும் மற்றவர்களின் டைரியை மாறி, மாறி ஒரே நேரத்தில் படிப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். ஆனால் வேறு வேறு காலப்பகுதி.
பிடித்த காட்சி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது! எல்லாமே அசத்தல்!அதிலும் முக்கியமான சில - அஞ்சியரின் மேஜிக் காட்சியில் புகுந்து போர்டன் பண்ணும் அட்டகாசமான குளறுபடிகள், தற்கொலை செய்துகொள்ள முன் சாராவின் நடிப்பு, டூப்ளிகேட் அஞ்சியரின் அலப்பறைகள், போர்டனின் சாரா, ஒலிவியாவிடம் உண்மை சொல்ல முடியாத தவிப்புகள் (இதை இரண்டாம் முறை படம் பார்க்கும் போதுதான் புரிந்துகொள்ள முடியும்)
முதன்முறை பார்க்கும்போது ஒரு குழப்பம், முடிவில் ஆச்சரியம்! இரண்டாம் முறை எல்லாம் தெளிவாகப் புரியும் (அதாவது காட்சியமைப்பு)
ஒரு நல்ல படத்தைப் பார்க்க விரும்பும் நண்பர்கள் கண்டிப்பாக பாருங்கள்!
சில குழப்பங்கள்...கேள்விகள்!
இது பற்றித் தனிப்பதிவிடும்படிஅண்ணன்,தானைத் தலைவன் செங்கோவி கூறியிருந்தார். படம் பற்றி எனக்கு வெளங்கியது (?!) படம் பார்த்த நண்பர்களின் கருத்துகள், பதில்கள் கிடைத்தால் பார்க்கலாம்!
இது பற்றித் தனிப்பதிவிடும்படிஅண்ணன்,தானைத் தலைவன் செங்கோவி கூறியிருந்தார். படம் பற்றி எனக்கு வெளங்கியது (?!) படம் பார்த்த நண்பர்களின் கருத்துகள், பதில்கள் கிடைத்தால் பார்க்கலாம்!
ஒருமுறை பார்த்தவுடன் நியாயமாக எல்லோருக்கும் தோன்றக்கூடிய
கேள்விகள்!
போர்டன் போட்ட அந்த முடிச்சு தற்செயலா? திட்டமிட்டதா?
போர்டன், ஆன்ஜியர் இருவரில் யார் நல்லவர்? இருவருமா?
முடிச்சு பற்றி ஏன் போர்டனால், ஆன்ஜியரிடம் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியவில்லை? ஒருவேளை முடிச்சு போட்டதும், கேள்வி கேட்கப்பட்டதும் வேறு வேறு ஆட்களிடமா? அப்படியானால் தூக்கிலிடப்பட்டது?
நீதி மன்றத்திலும் போர்டன் ஒழுங்காகப் பதில் சொல்லாதது ஏன்? விரக்தியா?
சாரா, ஒலிவியாவைக் காதலித்தது யார்?
போர்டன் பற்றிய ரகசியத்தைத் தெரிந்து கொண்டதால்தான் சாரா தற்கொலை செய்தாளா?
போர்டன், ஆன்ஜியரின் பழிவங்களில் சிக்கியது தற்செயலானதா? அல்லது ஆன்ஜியரால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா?
கட்டர், ஆன்ஜியரின் பழிவாங்கலுக்கு உடந்தையாக இருந்தாரா? ஆன்ஜியர் பற்றிய உண்மை தெரிந்திருந்ததா?
அப்படியானால், போர்டனுக்கு நியாயமாக அந்த தண்டனை கிடைக்க வேண்டியதுதான் என்று நினைத்தாரா?
பதில்கள் இங்கே! http://umajee.blogspot.com/2011/02/are-you-watching-closely.html
Christopher Nolan
பதில்கள் இங்கே! http://umajee.blogspot.com/2011/02/are-you-watching-closely.html
Christopher Nolan
விமர்சனம் அருமை..
ReplyDeleteSee.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_18.html
விமர்சன பகிர்வுக்கு நன்றி நண்பா :))
ReplyDeleteநோலனின் அற்புதமான படங்களில் ஒன்று.. கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. நல்ல பதிவு.. ஆண்ட்டி கிரைஸ்ட் பத்தி எழுத மாட்டீங்களா? ஹி..ஹி..
ReplyDeleteநல்ல விரிவான விமர்சனம்..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ம்.. போட்டாச்சி.. போட்டாச்சி...
ReplyDeleteநான் இந்த படத்தை பார்த்தேன் சரியாக புரியவில்லை ...........
ReplyDeleteகலக்கீட்டீங்க ஜீ..//அண்ணன்,தானைத் தலைவன் செங்கோவி கூறியிருந்தார்.// ஏன்யா...ஏன் இப்படி..நான் பாவம் இல்லையா...
ReplyDeleteஐயையோ இங்கேயும் சில குழப்பங்களா...:))
ReplyDeleteஜீ ..உன் திரை விமர்சனத்தில் இன்னும் கூடுதல் கவனம் தெரியுது...முன்னை விட இன்னும் முதிர்ச்சி இருக்குது...கீப் இட் அப்..
’படம் பார்க்காதவங்க இந்தப் பதிவை.. சாரி..இந்தப் பதிவுல உள்ள பின்னூட்டங்களை படிக்கவேண்டாம்’னு ஒரு டிஸ்கி போடலாமா..ஓனர் தான் முடிவு செய்யணும்!
ReplyDeleteபோட்டு தாக்குங்க
ReplyDelete//செங்கோவி said...
ReplyDeleteகலக்கீட்டீங்க ஜீ..//அண்ணன்,தானைத் தலைவன் செங்கோவி கூறியிருந்தார்.// ஏன்யா...ஏன் இப்படி..நான் பாவம் இல்லையா..//
சாரி பாஸ்! விடிவெள்ளிய மிஸ் பண்ணிட்டேன்! :-)
இப்போ என பண்றது நான்? தனிப்பதிவா போடவா உங்க பின்னூட்டங்களையும் என்னோட முடிவுகளையும் வைத்து!
இல்ல நீங்க சொன்னமாதிரி டிஸ்கி போடலாமா?
நான் கேட்டிருந்த கேள்விகள் ஒருமுறை பார்த்தவுடன் நியாயமாக எல்லோருக்கும் தோன்றக் கூடிய கேள்விகள்! - இதை சொல்லியிருக்கனும்ல முதல்ல! :-)
எப்படின்னாலும் சரிதான் ஜீ...பூவா தலையா போடுவோமா..!!
ReplyDeleteஓக்கே பாஸ்! தனியா ஒரு பதிவு போட்டுடலாம்! உங்க பதில்களை வைத்து சரியா? :-)
ReplyDeleteஓ.கே...கலக்குங்க!
ReplyDeletekalakkal boss :-)))))))
ReplyDeleteNice review Jee.. One of my favorites movie..
ReplyDeleteவிமர்சனம் அருமை.
ReplyDeleteகேள்விகள் அருமை. :)
ReplyDelete//தாமஸ் அல்வா எடிசனுடனும் இணைந்து பணியாற்றியவர்//
டெஸ்லாவும் எடிசனுடனும் தொழில்முறை எதிரிகள் என்று படித்த ஞாபகம்.
@sakthistudycentre-கருன்
ReplyDelete@மாணவன்
@கவிதை காதலன்
@# கவிதை வீதி # சௌந்தர்
@அஞ்சா சிங்கம்
@ஆனந்தி..
@சி.பி.செந்தில்குமார்
@இரவு வானம்
@கனாக்காதலன்
@ஆயிஷா
நன்றி நண்பர்களே! உங்கள் கருத்துகளிற்கு! :-)
//Anonymous said...
டெஸ்லாவும் எடிசனுடனும் தொழில்முறை எதிரிகள் என்று படித்த ஞாபகம்//
எடிசனின் கம்பெனியில் வேலை பார்த்து பிறகுதான் இருவரும் தொழில்முறை எதிரிகளானதாக எங்கோ படித்த ஞாபகம்! யாராவது தெளிவு படுத்தினால் நல்லது!
நன்றி நண்பரே உங்கள் கருத்திற்கு!
டெஸ்லாவும் எடிசனும் தொழில்முறை எதிரிகள் மட்டும்தானே..நான் படிக்கலை..பார்த்ததை வச்சு சொல்றேன்!
ReplyDelete//செங்கோவி said...
ReplyDeleteடெஸ்லாவும் எடிசனும் தொழில்முறை எதிரிகள் மட்டும்தானே..நான் படிக்கலை..பார்த்ததை வச்சு சொல்றேன்!//
பார்த்ததில் அப்படித்தான் பாஸ்! அவர்கள் பிரிந்த பின்னர்தான் நாம் பார்த்தோம்?
வெகு விரைவில் கொழும்பு வருவேன். திரும்பும்போது எனக்கு நிறைய டி.வி.டிக்கள் தந்துடனும் ஆமா...
ReplyDelete//Jana said...
ReplyDeleteவெகு விரைவில் கொழும்பு வருவேன். திரும்பும்போது எனக்கு நிறைய டி.வி.டிக்கள் தந்துடனும் ஆமா...//
தந்துட்டாப் போச்சு! உங்களுக்கு இல்லாததா? :-)
////ஒரு நல்ல படத்தைப் பார்க்க விரும்பும் நண்பர்கள் கண்டிப்பாக பாருங்கள்!////
ReplyDeleteகட்டாயமாக ஆனா எப்ப பார்க்கிறது எங்க பார்க்கிறது முடிவெடுப்பதில் தான் சிக்கல்...
தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.
ReplyDelete