எனது The Prestige பதிவின் தொடர்ச்சியாக, அதிலுள்ள குழப்பங்கள், கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியும் முயற்சியில் (பார்ரா! ரொம்ப முக்கியம்!) அண்ணன் செங்கோவியினது பின்னூட்டங்களும், எனது பதில்களும்! படம் பார்த்தவர்கள் பங்கு கொள்ளுங்க!
படம் பற்றிய பதிவு இங்கே! The Prestige
போர்டன் போட்ட அந்த முடிச்சு தற்செயலா? திட்டமிட்டதா?
எனக்கு வெளங்குனதைச் சொல்றேன்..தப்புன்னு தோணுச்சுன்னா,வாங்க சண்டை போடுவோம்!(இப்போ ஃப்ரீதான்!) போர்டன் போட்ட அந்த முடிச்சு தற்செயலா? திட்டமிட்டதா? தற்செயலானதுதான்...வேணும்னே போட காரணம் இல்லையே..அவனுக்கு முடிச்சு போடத்தெரியலைன்னு முதல்லயே காட்றாங்களே..(அவன் முடிச்சுப் போடும்போது, கீழ(!) ஆன்சியர் முத்தம் கொடுப்பானே..அந்தக் கடுப்பா?..இருக்காது, அவன் பொண்டாட்டுக்குத் தானே கொடுத்தான்! :-)
தற்செயலானதென்றே நானும் நினைக்கிறேன்!
ஆனால் போர்டனுக்கு அந்த வழக்கமான முடிச்சிடுவதில் குழப்பம் இருப்பதாகச் சொல்கிறான். அப்போது, ஜூலியா தன்னால் எந்த முடிச்சையும் விடுவிக்கமுடியும் எனக்கூற, கட்டர் அது ஆபத்தானது, முயற்சிக்கவேண்டாம் என்று கூறுவார். குறித்த அந்த நாளில் போர்தான் முடிச்சிடும்போது ஒருகணம் தயங்கியவாறு பார்க்க, ஜூலியா தலையை அசைப்பாள்! அப்படியானால்..ஜூலியாவின் சம்மதத்தோடு மற்றைய முடிச்சு?
போர்டன், ஆன்ஜியர் இருவரில் யார் நல்லவர்? இருவருமா?
ரெண்டு பேரும் நல்லவங்கதான்..ஆனா, போர்டன் வேணும்னே முடிச்சுப் போட்டதா தப்பா புரிஞ்சுக்கிட்டு, பழிக்குப்பழின்னு இறங்குனதால ஆன்ஞியர் ரொம்பக் கெட்டவனாவும், போர்டன் கொஞ்சம் கெட்டவனாவும் ஆகிடறாங்க!
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்! சந்தர்ப்ப சூழ்நிலை! அப்படிப் பார்க்கப் போனால் போர்டனை கொஞ்சம் கெட்டவனாகவும் கூறமுடியாது. மிக நல்லவன்! எப்படி? அடுத்த கேள்வியில்!
முடிச்சு பற்றி ஏன் போர்டனால், ஆன்ஜியரிடம் ஒழுங்காகப் பதில் சொல்ல முடியவில்லை?
போர்டன் தான் ஒழுங்காத் ‘தெரியலை’ன்னு சொல்றான்ல! (இங்க பவுடர் டப்பா எங்க வச்சீங்கன்னு கேட்டாலே மறந்து போய் முழிக்கிறோம்..யோவ், கல்யாணம் பண்ணுங்கய்யா..எல்லா டவுட்டும் தீர்ந்திடும்! :-)
இது கொஞ்சம் குழப்பமா இல்ல? வழமையான முடிச்சுன்னு கொல்லி 'எஸ்' ஆகியிருக்கலாமே! இங்குதான் போர்டன் அநியாயத்துக்கு நல்லவனாகிறான்! ஒருவேளை குற்றவுணர்வு?
ஒருவேளை முடிச்சு போட்டதும், கேள்வி கேட்கப்பட்டதும் வேறு வேறு ஆட்களிடமா?
வேற வேற ஆள்னாலும் ஒரு போர்டன், இன்னொரு போர்டன்கிட்ட சொல்லியிருப்பார்ல..உண்மையிலேயே தெரியலங்கிறேன்!
சொல்லியிருப்பான்! அப்போ அவனும் அநியாயத்துக்கு நல்லவன்? என்ன கொடுமை பாஸ்! :-)
அப்படியானால் தூக்கிலிடப்பட்டது?
இது கேள்வி! அருமையான கேள்வி..சூப்பரான கேள்வி...முடிச்சுப் போட்டவராத்தான் இருக்கணும்..இல்லேன்னா வெளில இருக்குறவர் ஃபீல் பண்ணியிருப்பாரே..ஆனாலும் குழப்பம்தான்!
குழப்பம்! அநேகமாக முடிச்சுப்போட்டவனே தொடர்ந்து போர்டன் காரெக்டரை மெயின்டெயின் பண்ணி இருக்கலாம்! ஆனாலும் குழப்பம்தான்!
நீதி மன்றத்திலும் போர்டன் ஒழுங்காகப் பதில் சொல்லாதது ஏன்? விரக்தியா?
அவருக்கே தெரியலையே..!
இல்லை பாஸ்!
போர்டன் நீதிமன்றத்தில் நிற்பது ஆன்ஜியரைக் கொன்ற குற்றச்சாட்டில்! உயிர்போகும் விஷயத்தில், கோர்ட்டில் எந்தவிதமான அக்கறையும், கவலையுமின்றி (உண்மையில் குற்றம் செய்யாதபோது ஏற்படும் வலியின்றி) போர்டன் இருப்பது உறுத்துகிறது! ஒருவேளை தன மனைவி சாரா இறந்ததால் ஏற்பட்ட விரக்தியா? அப்படியானால் இன்னொரு குழப்பம் அடுத்த கேள்வியில்!
சாரா, ஒலிவியாவைக் காதலித்தது யார்?
சத்தியமா நான் இல்லீங்க..தூக்குல தொங்கினவரும் சாராவைக் காதலிக்கலை..’சாரி அபௌட் சாரா’ன்னு வெளில இருக்குற போர்டன்கிட்ட சொல்றாருல்ல! அதனால வெளில இருந்தவர்-சாரா, தொங்குனவரு-ஒலிவியா
சத்தியமா நானும் இல்லை! :-)
உண்மைதான்! 'சாரி அபௌட் சாரா’ன்னு வெளில இருக்குற போர்டன்கிட்ட சொல்றதால, அவருக்கு சாரா இறந்த விரக்தி இல்லை!
சாராவைக் காதலித்தது போர்ட னா? பெல்லனா? - இது சொல்லப்படவில்லை!
இறுதியில் உயிரோடு இருப்பவன் யார்?
ஆன்ஜியரிடம் கூறும்போது, We were both Borden. We were both Fallon என்கிறான்!
அதே போல் I loved Sarah. He loved Olivia! - என்கிறான்!
போர்டன் பற்றிய ரகசியத்தைத் தெரிந்து கொண்டதால்தான் சாரா தற்கொலை செய்தாளா?
ஆமாம், எங்கயாவது வெளிலபோகணும்னா இன்னொரு போர்டனைத் துணைக்கு அனுப்புறதா ஒரு சீன் வருமே..’இந்த மாதிரி என்னால வாழமுடியாது’ன்னு சாகற சீனுக்கு முன்னாடி சாரா சொல்லுமே!
நான் நினைத்தேன் சாராவுக்கு முதலிலேயே போர்டனின் ரகசியம் தெரிந்திருக்கும்! ஒலிவியா பற்றிய குழப்பத்தால் தற்கொலை பண்ணியிருக்கலாமென்று!
போர்டனைக் காதலிக்கும்போதே சாராவுக்கு தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு - சாரா வழியனுப்பியபின் வீட்டிற்குள் போர்டன்!- எங்களுக்குக் 'க்ளூ'வான அந்தக் காட்சி!
சராவுக்குத் தெரியும் ஆனால் ஒலிவியா முன் நடிக்கவேண்டிய கட்டாயம்! சாராவுக்கும், போர்டனுக்கும் இல்லையா?
போர்டன், ஆன்ஜியரின் பழிவங்களில் சிக்கியது தற்செயலானதா? அல்லது ஆன்ஜியரால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா?
எதிர்பார்த்திருக்கலாம்..!
அப்படித்தான் நானும் நினைக்கிறேன்! எதிர்பார்த்திருக்கலாம்! அப்படியானால் கட்டருக்கும் அதில் பங்கிருக்க வேண்டுமென நான் நினைக்கிறேன்!
கட்டர், ஆன்ஜியரின் பழிவாங்கலுக்கு உடந்தையாக இருந்தாரா? ஆன்ஜியர் பற்றிய உண்மை தெரிந்திருந்ததா?
உடந்தை இல்லை பாஸ்..ஆன்ஞியரே கட்டர்கிட்ட சொல்வானே ‘உங்களை நான் இன்வால்வ் ஆக வேண்டாம்னு சொன்னேன்’ன்னு..உடந்தைன்னா கடைசீல ஏன் போர்டன்கூட இருக்காரு!
ஆன்ஜியர் கட்டரிடம் ‘உங்களை நான் இன்வால்வ் ஆக வேண்டாம்னு சொன்னேன்’ன்னு சொல்வதுதான் குழப்புது! அப்படியானால் கட்டருக்கு, ஆன்ஜியர் ஏதோ கோல்மால் பண்ணுகிறான் என்பது புரிந்திருக்க வேண்டும்!
அப்படியானால், போர்டனுக்கு நியாயமாக அந்த தண்டனை கிடைக்க வேண்டியதுதான் என்று நினைத்தாரா?
போர்டன் சாகிறவரைக்கும் ஆன்ஞியர் ரகசியம் கட்டருக்கே தெரியாதே..அதனால தண்டனை வாங்கிக் கொடுத்தார், தெரிஞ்சப்புறம் போர்டன் கட்சியில சேர்ந்துட்டார்.(தேர்தல் ஸ்பெஷல் எழுதி எழுதி இப்படியே வருது!
ஆன்ஜியரைத் நீர்த் தொட்டிக்குள்ளிருந்து காப்பாற்ற போர்டன் முயல்வதை அவர் நேரடியாகப் பார்த்திருந்தாரே! அதைவிடவும் அந்தத் தொட்டி எப்போதுமே உயிருக்கு உத்தரவாதம் இல்லாதது என்ற உண்மையும் அவருக்குத் தெரியும்! இருந்தும்...!
அன்ஜியர் உயிர் பிழைத்ததை அவர் அறிந்திருக்கவில்லை! புத்திசாலித்தனமாக டூப்ளிக்கேட்டைப் போட்டு கட்டரை நம்பவச்சிடான் அன்ஜியர் இல்ல? - இந்த இடத்தில் எனக்குக் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு அது எப்படின்னு! இன்னொரு தரம் ?
aajar...present sir
ReplyDelete//குறித்த அந்த நாளில் போர்தான் முடிச்சிடும்போது ஒருகணம் தயங்கியவாறு பார்க்க, ஜூலியா தலையை அசைப்பாள்!// ஆமா, ஜூலியா தலையை அசைப்பா..அப்போ முடிச்சு?..அய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா..! யாராவது வந்து காப்பாத்துறாங்களான்னு பார்ப்போம்.
ReplyDelete//ஆன்ஜியரைத் நீர்த் தொட்டிக்குள்ளிருந்து காப்பாற்ற போர்டன் முயல்வதை அவர் நேரடியாகப் பார்த்திருந்தாரே!// போர்டன் காப்பாற்ற முயன்றான்னு நமக்குத் தானே தெரியும்..கட்டர் அவன் லாக் பண்ணதாத் தானே நினைப்பார்!
ReplyDeleteஇந்த அளவுக்கு அந்த படத்தை, வேறு யாரும் அலசி இருக்க முடியாது... நடத்துங்க... நடத்துங்க... :-)
ReplyDeleteஅந்த ஸ்டில்லுக்கு நன்றி!
ReplyDeleteசூப்பர் பிகரு அத தவிர வேற ஒன்னும் சொல்றத்துக்கு இல்ல ஹி ஹி!
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
ReplyDeleteவாழ்த்துக்கள்....
என்னப்பா என் அன்பு தம்பிகள் செங்கோவி,ஜீ தங்கங்களா..இன்னும் முடியலையாப்பா ? :)..அலசி..துவைச்சு காயபோட்டிங்களே இந்த பட review வை...படம் பார்த்து இருந்தால் எனக்கு இன்னும் ரசித்திருக்க முடிந்திருக்கும்..இந்த அலசலில் நானும் கலந்திருக்க முடியும்....:(((
ReplyDelete//இந்த இடத்தில் எனக்குக் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு //
ReplyDeleteஇங்கதான் நான் தெளிவா இருந்தேன்.. ஹி..ஹி...
கவிதை காதலன்
Are You watching closely?
ReplyDeleteNo sir..I can't. But You Watching Every Good Films Very Closely...
ஆனால் சில படங்களை பார்த்துவிட்டு இப்படி கேள்விகள் மனதிற்குள் வருவது மட்டும் உண்டு.
//மதுரை சரவணன் said...
ReplyDeleteaajar...present sir//
:-)
//Chitra said...
இந்த அளவுக்கு அந்த படத்தை, வேறு யாரும் அலசி இருக்க முடியாது... நடத்துங்க... நடத்துங்க... :-)
நன்றி! :-)
//விக்கி உலகம் said...
அந்த ஸ்டில்லுக்கு நன்றி!
சூப்பர் பிகரு அத தவிர வேற ஒன்னும் சொல்றத்துக்கு இல்ல ஹி ஹி!//
ஆஹா! :-)
//sakthistudycentre-கருன் said...
அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்// நன்றி!
//ஆனந்தி.. said...
என்னப்பா என் அன்பு தம்பிகள் செங்கோவி,ஜீ தங்கங்களா..இன்னும் முடியலையாப்பா ? :)..அலசி..துவைச்சு காயபோட்டிங்களே இந்த பட review வை...படம் பார்த்து இருந்தால் எனக்கு இன்னும் ரசித்திருக்க முடிந்திருக்கும்..இந்த அலசலில் நானும் கலந்திருக்க முடியும்....:(((//
முடிந்தால் பாருங்கள் நல்ல படம்! :-)
//கவிதை காதலன் said...
//இந்த இடத்தில் எனக்குக் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கு //
இங்கதான் நான் தெளிவா இருந்தேன்.. ஹி..ஹி..//
:-)
//செங்கோவி said...
போர்டன் காப்பாற்ற முயன்றான்னு நமக்குத் தானே தெரியும்..கட்டர் அவன் லாக் பண்ணதாத் தானே நினைப்பார்!//
ம்ம்ம்..? சரிதான்!
//செங்கோவி said...
ஆமா, ஜூலியா தலையை அசைப்பா..அப்போ முடிச்சு?..அய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா..! யாராவது வந்து காப்பாத்துறாங்களான்னு பார்ப்போம்//
:-)
//Jana said...
Are You watching closely?
No sir..I can't. But You Watching Every Good Films Very Closely...//
நீங்க பாக்கலன்னா, மிஸ் பண்ணாம உடனே பாருங்க பாஸ்! அருமையான ஒரு அனுபவம்! :-)
//ஆனால் சில படங்களை பார்த்துவிட்டு இப்படி கேள்விகள் மனதிற்குள் வருவது மட்டும் உண்டு//
உங்கள் பதிவுகள் படிக்கும்போது தெரிகிறது! :-)
இப்படிநான் அலசனுமா.???
ReplyDeleteநல்ல அவதானிப்பு !
ReplyDeleteஓகே ஓகே
ReplyDelete>>தப்புன்னு தோணுச்சுன்னா,வாங்க சண்டை போடுவோம்!(இப்போ ஃப்ரீதான்!)
ReplyDeleteoohoo ஓஹோ பிஸியா இருந்தா சண்டை போட வர முடியாதோ..?
சி.பி.சார், வேலை வெட்டியை விட்டுப் போட்டா சண்டை போட முடியும்..அதுக்குன்னு மூடு வரவேண்டாமா..
ReplyDeleteஓ.கே ஜீ...சொன்னபடியே கலக்கிட்டீங்க..பின்னூட்டமிட்டு ஆதரவளித்த அனைவருக்கும் நானும் நன்றி சொல்லிக்கிறேன்..அடுத்த பொழப்பை(பதிவை)ப் பார்ப்போமா...
ReplyDelete@தீபிகா
ReplyDelete@கனாக்காதலன்
@நா.மணிவண்ணன்
@சி.பி.செந்தில்குமார்
நன்றி நண்பர்களே!
@செங்கோவி
கண்டிப்பா!
நன்றி பாஸ்! :-)
/////போர்டன் போட்ட அந்த முடிச்சு தற்செயலா? திட்டமிட்டதா?////
ReplyDeleteஏங்க அவர் மூணு முடிச்ச ஒண்ணும் போடலியே... ஹ..ஹ..ஹ..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டன
பதிவு அருமை.ஆனால், முன் கதை சுருக்கம் மாதிரி எதுமில்லை என்பதால், என்னை போன்ற புதியவர்கள் படிக்கும் போது சற்று சிரமமாக இருக்கிறது.
ReplyDeleteஜனா அவர்களால் இந்த வார பதிவர் என தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅஜித் பத்தின பதிவு புடிச்சிது. மத்தது எல்லாம் எதுவும் புரியல எனக்கு. சாரி தலைவா
ReplyDeleteவிபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html
ஓ, இதுக்குப்பேருதான் அலசலா? ஒ, கே, ஓ, கே.
ReplyDeletehttp://jeeno.blogspot.com/2011/02/prestige-2006.html
ReplyDeleteDid you read the post? I understood some clarifications about this film.