Tuesday, February 15, 2011

எஸ்.எம்.எஸ். செய்வினை! - நம்மவர்ஒன்றரை வருடத்திற்கு முன், நண்பன் ஒருவனோடு பேசிக்கொண்டிருந்தபோது, தாயுடன் வந்த எங்கள் வயதொத்த ஒருவனைக் கண்டதும் ஆ...! எப்ப வந்தது? கையைக் காட்டிக்கொண்டே அருகில் சென்றான்.

லண்டனிலிருந்து ஸ்டூடண்ட் விசால போய் படிச்சிற்று வந்திருப்பான் - நினைத்துக் கொண்டேன். கொழும்பில் நிறையப் பசங்க   நிற்பாங்க  திடீர்னு  காணமுடியாது  லண்டன்  போயிருப்பாங்க ! ஒரு வருடம் சந்திக்காமல் இருந்திட்டு பார்த்தாலே எங்கயாவது வெளிநாடு போய் வந்தாயா? என்று கேட்பவர்கள் அநேகம். நண்பன் அவர்களோடு பேசிக்கொண்டிருக்க, அதுக்கிடையில...  


வாங்க ஒரு சின்ன Flashback!

இரண்டு வருடங்களுக்கு முன் ஏகன் ன்னு ஒரு அஜித்தின் மகா மொக்கைப்படம் ஒன்று வந்ததே ஞாபகமிருக்கா?

அந்தப் படம் வெளிவரும்போது அஜித் இலங்கைத் தமிழருக்கு எதிரானவர் என்று ஒரு பிரபல 'ஓட்டுமாட்டு', 'ஸ்டன்ட்' பத்திரிகை, போகிற போக்கில் கொளுத்திப்போட்டுவிட, அதை நம்பி நம்ம தன்மானத் தமிழர்கள் கொந்தளித்து, கொதித்து, கொப்பளித்..

நம்ம புலம்பெயர் தமிழர் சிலர் ஏகனைப் புறக்கணித்தார்களாம். நம்ம நண்பர்களும் பலர் Facebookல இதுக்கு ஒரு குரூப்பே ஓப்பன் பண்ணி வச்சிருந்தாங்க. அதில போய் பார்த்தா, நம்ம கூட படிச்ச தீவிர விஜய் ரசிகர்கள் எல்லாம் ஒண்ணு கூடி கும்மியடிச்சிட்டிருந்தாங்க. அடப்பாவிகளா தன்மானத்தக் காட்டிட்டீங்களேடா!

ஆனா ஒண்ணு! படத்தோட ஸ்டில்ஸ் பார்க்கும்போதே தெரிஞ்சிடிச்சு ....வெளங்கிரும்னு! எனக்குத் தோணிச்சு, ஒரு மொக்கைப் படத்தை எதுக்கு வீணாப் புறக்கணிக்கனும்? அது வழமையா தானா நடக்குறதுதானே? 

அப்புறம், எஸ்.எம்.எஸ் எல்லாம் அனுப்பினாங்க. கனடாவில இருந்தெல்லாம் வந்திச்சு. பயபுள்ளக சிலர் அதை சின்சியரா அனுப்பினாங்க. அப்புறம் படம் வந்ததும் முதல்ல அவங்கதான் பார்த்தாங்க வழக்கம்போல!

இப்போ எதுக்கு இதைச் சொல்றேன்னு கேக்குறீங்களா? இருங்க... நண்பன் திரும்பி வர்றான்...'அவனைத் தெரியுமாடா?'


'இல்ல'


'அப்போ அவனோட கதை உனக்குத் தெரியாது?'


புரியாமல் பார்க்க,


'ஏகனைப் புறக்கணிக்கச் சொல்லி ஒரு மெசேஜ் வந்திச்சே..'


'எப்பவோ வந்திச்சு அதுக்கென்ன இப்போ?'


'கனடாவில இருந்து முதல்ல இவனோட மொபைலுக்குதான் வந்திச்சாம். கொழும்பில முதன்முதல் இவன் மொபைல்ல இருந்துதான் மற்றவங்களுக்கு மெசேஜ் போயிருக்கு'


'அதுக்கு?'


'பிடிச்சு 'உள்ள' போட்டுட்டாங்க. ரெண்டு நாளைக்கு முதல்தான் ரிலீஸ் பண்ணாங்களாம்!'
 

நாம ஒரு safe ஆன இடத்தில செட்டில் ஆகிட்டு, அடுத்தவன உசுப்பேத்தி அடிவாங்க விடுறதில இருக்கிற ஆனந்தம் இருக்கே அட அட அட!

டிஸ்கி - அப்பப்ப 'நம்மவர்' என்று ஒரு சீரிஸா (Series) எழுதலாம் என்று ஒரு ஐடியா - கிடைக்கிற வரவேற்பைப்(?!) பொறுத்து!  


   

26 comments:

 1. என்ன சொல்ல வரீங்க........மன்னிக்கவும் நான் கொஞ்சம் மக்கு!

  ReplyDelete
 2. uma,Can you believe it i saw this movie in a mini theatre in Oddusuddan just five days after it released in Chennai.hi....... hi.......

  ReplyDelete
 3. ஏதோ சொல்லிருகிங்க ஆனா என்னனு தெரியல

  ReplyDelete
 4. 'கனடாவில இருந்து முதல்ல இவனோட மொபைலுக்குதான் வந்திச்சாம். கொழும்பில முதன்முதல் இவன் மொபைல்ல இருந்துதான் மற்றவங்களுக்கு மெசேஜ் போயிருக்கு'


  'அதுக்கு?'


  'பிடிச்சு 'உள்ள' போட்டுட்டாங்க. ரெண்டு நாளைக்கு முதல்தான் ரிலீஸ் பண்ணாங்களாம்!'


  ......இதுக்கெல்லாமா investigation நடந்துச்சு...... ம்ம்ம்ம்.....

  ReplyDelete
 5. தலைக்கு தளபதி தாயத்து கட்டுற படாத போட்ருக்கீங்க ....

  தளபதி சூனியம் வச்சிட்டாருன்னு நாளைக்கு எவனாவது மெசஜ் பண்ணிட போறான் ...

  ReplyDelete
 6. என்னத்தை சொல்ல போங்க...

  ReplyDelete
 7. தலைவர்கள் சேர்ந்து கொள்வார்கள் , தொண்டர்கள் அடித்துக்கொள்வார்கள்

  ஹீரோக்கள் நட்பு பாராட்டுவார்கள், ரசிகர்கள் வன்மம் வளர்ப்பார்கள்

  இது தமிழ்நாட்டின் தலை எழுத்து

  ReplyDelete
 8. ஆதங்கம் ஜீ !

  ReplyDelete
 9. உண்மையில் மிகவும் அருமையான பதிவுஜீ..உண்மைகளை உங்களைப் போன்றோர் பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி..சீரியஸா எழுதப் ’போறீங்களா’..அப்போ இவ்வளவு நாளா எழுதுனது?

  ReplyDelete
 10. எனக்கு இந்த செய்தி நன்றாக நினைவில் உள்ளது ஜீ. அவர் இப்போதுதான் விடுவிக்கப்பட்டாரா? அழுவதா சிரிப்பதா என்று இருக்கு! ஆனானப்பட்டவனுகள் எல்லாம் எங்கும்போய் மீட்டிங் வைக்கிறாங்க, பாதுகாப்போட திரியுறாங்க, அப்பாவிகள்தான்..எல்லோருக்கும் கிடைத்த தொட்டுக்கும் ஊறுகாய்போல!! என்னத்தை சொல்ல..

  ReplyDelete
 11. இது எப்போதும் விஜய் படத்துக்கு நடக்கிறதுதானே?

  ReplyDelete
 12. @விக்கி உலகம் - இதுக்கு மேல சொல்லக்கூடாது!
  @அரசன் - :-)
  @அஞ்சா சிங்கம் - அட ஆமால்ல! :-)

  //மாத்தி யோசி said...
  i welcome this post.your post indicates the real situation of srilanka// நன்றி!

  //Chitra said...
  இதுக்கெல்லாமா investigation நடந்துச்சு...... ம்ம்ம்ம்//
  நடந்திருக்கு!

  //MANO நாஞ்சில் மனோ said...
  என்னத்தை சொல்ல போங்க//
  ம்ம்ம்

  //சி.பி.செந்தில்குமார் said..
  இது தமிழ்நாட்டின் தலை எழுத்து//
  தமிழ்நாடு மட்டுமில்ல. தமிழர்களின்!!

  //ஹேமா said...
  ஆதங்கம் ஜீ !//
  ம்ம்

  //செங்கோவி said...
  சீரியஸா எழுதப் ’போறீங்களா’..அப்போ இவ்வளவு நாளா எழுதுனது?//
  சீரிஸா (Series) என்று சொன்னேன் பாஸ்!
  நம்மால எப்புடி பாஸ் சீரியஸா? :-))

  //Jana said...
  எனக்கு இந்த செய்தி நன்றாக நினைவில் உள்ளது ஜீ. அவர் இப்போதுதான் விடுவிக்கப்பட்டாரா?//
  இது ஒன்றரை வருடத்திற்கு முன் நடந்த சம்பவம்!நான் நினைக்கிறேன் ஒரு மாதத்தில் அல்லது ஆறுமாதத்தில் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்!

  ReplyDelete
 13. ஓகே ஜி நீங்க ஏதோ மெசேஜ் சொல்ல வர்றீங்கன்னு தெரியுது

  ReplyDelete
 14. இதுக்கெல்லாம் கூடவா ஜீ restriction கொழும்புவில்...சே..என்ன பொழப்பு பா..கஷ்டமா இருக்கு :((

  //நாம ஒரு safe ஆன இடத்தில செட்டில் ஆகிட்டு, அடுத்தவன உசுப்பேத்தி அடிவாங்க விடுறதில இருக்கிற ஆனந்தம் இருக்கே அட அட அட!///
  ம்ம்....ரொம்ப நேர்மையான வரிகள் ஜீ...எனக்கு நல்லா புரிஞ்சது...

  ReplyDelete
 15. சி.பி.செந்தில்குமார் said...

  தலைவர்கள் சேர்ந்து கொள்வார்கள் , தொண்டர்கள் அடித்துக்கொள்வார்கள்

  ஹீரோக்கள் நட்பு பாராட்டுவார்கள், ரசிகர்கள் வன்மம் வளர்ப்பார்கள்

  இது தமிழ்நாட்டின் தலை எழுத்து
  ரிப்பீட்டு

  ReplyDelete
 16. “ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு”

  :))

  ReplyDelete
 17. //அப்பப்ப 'நம்மவர்' என்று ஒரு சீரிஸ்ஸ்ஸா எழுதலாம் என்று ஒரு ஐடியா - கிடைக்கிற வரவேற்பைப்(?!) பொறுத்து! //

  தொடர்ந்து எழுதுங்க ஜீ :)

  ReplyDelete
 18. தொட்ரந்து எழுதுங்க...எங்க ஆதரவு எப்பவும் உண்டு

  ReplyDelete
 19. 'பிடிச்சு 'உள்ள' போட்டுட்டாங்க. ரெண்டு நாளைக்கு முதல்தான் ரிலீஸ் பண்ணாங்களாம்!'//

  நெசமாத்தானுங்களா???

  ////அப்பப்ப 'நம்மவர்' என்று ஒரு சீரிஸ்ஸ்ஸா எழுதலாம்////

  எழுதுங்க!!! ஆனா இந்த பதிவு சீரியஸ் இல்லையே!!

  ReplyDelete
 20. நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.com/2011/02/2-thursday-in-valaichcharam-rahim.html

  ReplyDelete
 21. //அப்பப்ப 'நம்மவர்' என்று ஒரு சீரிஸ்ஸ்ஸா எழுதலாம் என்று ஒரு ஐடியா - கிடைக்கிற வரவேற்பைப்(?!) பொறுத்து! //

  தொடர்ந்து எழுதுங்க ஜீ ... வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 22. உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு...

  ReplyDelete
 23. நாம ஒரு safe ஆன இடத்தில செட்டில் ஆகிட்டு, அடுத்தவன உசுப்பேத்தி அடிவாங்க விடுறதில இருக்கிற ஆனந்தம் இருக்கே அட அட அட!//

  புரிஞ்சா சரி!!

  ReplyDelete
 24. மேல உள்ள படத்திற்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

  ReplyDelete

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |