எத்தனையோ பாடல்களை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தாலும், அனைவருக்கும் பிடித்த, ஒரு மறக்கமுடியாத பாடல் பூங்காற்று திரும்புமா? என்று நினைக்கிறேன்!
ஒரு காலகட்டத்தில் தமிழிலுள்ள கம்பீரமான, தனித்துவமான குரலென்று அவரது குரல் பற்றிச் சொல்வதுண்டு! அதை நிரூபிப்பதைபோல உள்ளன, சிவாஜிக்கு அவர் பாடிய பாடல்கள்.
(எவ்வளவோ காலமாக நடித்த சிவாஜிக்கு, ஒரு நல்ல இயல்பான, மிகை நடிப்பில்லாத ஒரு பாத்திரத்தை வழங்க ஒரு பாரதிராஜா வரவேண்டியிருந்தது! சிவாஜியின் பிற்பட்ட காலத்திலேயே முதல்மரியாதை, தேவர்மகன் போன்ற 'நல்ல' படங்கள் (அவர் நடித்ததில்) கிடைத்தன!)
சிவாஜிக்கு ஏற்ற குரல்? இதைவிடப் பொருத்தமான குரல், சிவாஜியே பாடியது போல வேறு யாருடைய குரல் பொருந்தும்?
அதேபோல படிக்காதவன் படத்தில் 'ஒரு கூட்டுக் கிளியாக'. எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று!
இது ஒரு ஆச்சரியமளிக்கும் பாடல்! மலேசிய வாசுதேவனின் குரலில் ஒரு வித்தியாசமான முயற்சியா? தனக்கு கம்பீரமாக மட்டுமல்ல, மென்மையாக குழைவாக காதல் வழியும் குரலிலும் பாடமுடியும் என்று நிரூபித்த பாடலா? பாடல் வெளியான காலத்தில் மிகப்பெரிய வரவேற்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்குமோ? தெரிந்தவர்கள்தான் சொல்ல வேண்டும்!
மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றும் வாழ்வார் மலேசியா வாசுதேவன்!
டிஸ்கி - மன்னிக்க வேண்டும் Quality யான லிங்க் கிடைக்கவில்லை!
டிஸ்கி - மன்னிக்க வேண்டும் Quality யான லிங்க் கிடைக்கவில்லை!
திறமையான மனுசர்...ம்ம்
ReplyDeleteஉண்மைதான் ஜி சிவாஜிக்கு இவரின் குரல் மிக பொருத்தமாக இருக்கும் . அவருக்கு எனது அஞ்சலி
ReplyDeleteஆமாங்கோ ஆமாங்கோ
ReplyDeleteரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் மலேசியா வாசுதேவன் அவர்கள் அவ்வளவு எளிதில் மறைந்துவிடமாட்டார்.. அருமையான நினைவு பகிர்வு
ReplyDeleteமறைந்த வாசுதேவன் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..
ReplyDeleteபிரபலங்கள், புகழ்பெற்றவர்களின் மரணங்கள், மரணத்தின் மீதான் பயத்தினை எமக்கும் ஒருமுறை சுட்டிக்காட்டுவதாகவே இருக்கின்றன.
ReplyDeleteமலேசியா வாசுதேவன் பலபாவங்களை தனது குரலால் கொண்டு வரக்கூடியவர்.
குரலில்க்கூட வித்தியாசத்தை காட்டக்கூடியவர் என்பது உண்மை.
"சொந்தங்களே சுற்றங்களே என்ற அடுத்தாக்கு வீட்டு அல்பர்ட் திரைப்பட பாடலும்,
ஆனந்தப்பூங்காற்று தாலாட்டுதே..என்ற பாடலும் அவர் வித்தியாசமான குரலில் பாடிய பாடல்கள்.
மறைந்த மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்..
ReplyDeleteஇந்த அருமையான பாடல்களில் உள்ள ஜீவனில், அவர் என்றும் இருப்பார்.
ReplyDeleteமறைந்த மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்....
ReplyDeleteஇன்னும் நிறைய பாடல்கள் அவர் குரல்களில் இனிமையாக இருக்கும்! அவருக்கு அஞ்சலிகள்!
ReplyDeleteசென்ற ஆண்டு சொர்ணலதா...இந்த ஆண்டு மலேசியா..நமக்குப் பிடித்தமான இரண்டு பாடகர்களை இயற்கை திருப்பி அழைத்துக் கொண்டது. அஞ்சலிகள்.
ReplyDeleteஅற்புதமான பாடல்... கேட்க கேட்க மீண்டும் கேட்க தோன்றும் பாடல்..
ReplyDelete//மறைந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றும் வாழ்வார் மலேசியா வாசுதேவன்!//
ReplyDeleteநிச்சயமாக.......
காலத்தால் அளிக்க முடியாது அவர் பாடல்களை....
ஆனால் கடைசி காலங்களில் அவரை திரையுலகினர் கண்டு கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது....
ஆரம்பகாலத்தில் ரஜினிக்கு இவர் பாடிய பாடல்களும் அருமையாக இருக்கும்!
ReplyDeletem....மறக்க முடியாத சங்கீதம்
ReplyDeleteமறைந்த மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்....
ReplyDeletem m டைமிங்க் அஞ்சலி போஸ்ட்.. இப்போதான் ஜனாவோட பிளாக்ல உங்க பேட்டி படிச்சுட்டு வர்றேன். ம் ம் நல்ல்லாருந்தது
ReplyDeleteவித்தியாசமான குரல் வளமுள்ள பாடகர். ஆத்மா சாந்தியடையட்டும்.
ReplyDeleteநான் வர்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சு போலிருக்கே..
ReplyDeleteஅற்புதமானப்பாடல்... வாழ்த்துக்கள்
ReplyDeleteமனதை கனக்க வைத்தப் போய் விட்டார்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)
பூவே இளைய பூவே எனக்கும் மிகவும் பிடித்த பாடல்...பன்னீர் புஷ்பங்களில் கோடை கால காற்றே எல்லாம் வாசு சார்குனே அமஞ்ச அழகான பாட்டு...இது மாதிரி நிறைய இருக்கு ஜீ...ஆத்மா சாந்தி அடையட்டும்....:(
ReplyDeleteஅருமை ஜி. நல்ல பகிர்வு.
ReplyDelete"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி
ReplyDelete