Tuesday, February 8, 2011

The Isle


அமைதியான பெரிய ஏரி. அதற்குள் மிதக்கும் சின்னச் சின்ன மிதவை வீடுகள் (Floating cottages). அவற்றில் தங்கி ஓய்வெடுக்கும், மீன்பிடிக்கும் வாடிக்கையாளர்களுக்கு தரையிலிருந்து படகுச் சேவை, உணவு, போன்றவற்றைக் கவனித்துக் கொள்கிறாள் அந்த அழகான ரிசார்டை (Resort) நடத்தும்/வேலை பார்க்கும் வாய்பேசாத பெண் ஹீ ஜின்! தேவையாயின் பெண்களும் வரவழைத்துக் கொடுக்கப்படும். ஹீ ஜின் விருப்பப்பட்டால் அவளையும்!

அங்கு தங்க வருகிறான் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியான ஹூன் சிக். அவனிடம் அவளுக்கு எந்த விதமான ஈடுபாடும் இல்லை. ஒருமுறை அவன் அழுதுகொண்டிருப்பதைக் காணும் அவள் அவனுக்குள் இருக்கும் ஏதோ பிரச்சினையைப் புரிந்துகொள்கிறாள். அவன் மேல் ஒரு சிறு பரிதாபம் வருகிறது. தற்கொலைக்கு முயலும் அவனைக் காப்பாற்றுகிறாள்.


ஹூன் மீன்பிடிப்பதற்கு போட்டிருந்த தூண்டிலை எடுத்துப்பார்க்க அதில் ஒரு பொம்மை மீன். சிறு சிரிப்புடன் ஒரு புழுவை மாட்டி விடுகிறாள். தூண்டிலில் மீன் சிக்கியவுடன் வந்து பார்க்கும் அவனைச் சிரித்தவாறே, ஊஞ்சலில் ஆடிக்கொண்டு பார்க்கிறாள். தூண்டிலில் இருந்து மீனை விடுவித்து, மீண்டும் கடலில் விடும் அவனை ஆச்சரியமாகப் பார்க்கிறாள். மறுநாள் ஹூன் கம்பியினால் வளைத்துச் செய்யப்பட்ட ஊஞ்சலாடும் பெண் உருவப் பொம்மையை அவளுக்குப் பரிசளிக்கிறான்.

ஒரு மழை நாளில் அவனுக்காக ஒரு பெண் அனுப்பப்பட, அவளை அவனது மிதவையில் கொண்டு சென்று விடும் ஹீ ஜின் அந்தப்பெண் மீது லேசான பொறாமையுணர்வு தலைதூக்க, கரைக்குத் திரும்ப அவளை அழைத்துவரச் செல்லவில்லை. இதனால் அன்றிரவு முழுதும் அங்கேயே அந்தப்பெண் தங்கிவிட நேர்கிறது. அவன் அந்தப்பெண்ணுடன் வெறுமனே போழுதைக்கழிக்கவே விரும்புகிறான். அவனுடைய செயலால் அவன்மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட அவன் கொடுக்கும் பணத்தை மறுத்துவிடுகிறாள். அவன் செய்த சைக்கிள் பொம்மையை எடுத்துக் கொள்கிறாள் மறுநாள் அவளைக் காணாததால் தேடிவரும் பெண்தரகன், அவனைத் தாக்கிவிட்டு, அழைத்துச் செல்கிறான். ஹூனைப் பிடித்துப் போனதால் தனது விடுமுறை நாட்களில் அவனைச் சந்திக்க வருகிறாள் அந்தப்பெண்.


ஒருமுறை ஹூனைத்தேடி அந்த ஏரிக்கு வரும் போலீசாரைப் பார்த்தவுடன் தற்கொலை செய்ய முயலும் ஹூனை மீண்டும் காப்பாற்றி, மறைவான இடத்தில் அவனுடைய மிதவையை நிறுத்தி வைக்கிறாள் ஹீ ஜின். இந்நிலையில், மீண்டும் ஹூனைச் சந்திக்க வரும் அந்தப் பெண் உற்சாகத்துடன் படகில் ஏறுகிறாள். படகைச் செலுத்தும் ஹீ ஜின், ஹூனுடைய மஞ்சள் மிதவையைக் கடந்து வேறொரு மிதவைக்கருகில் நிறுத்த, குழப்பத்துடன் இறங்கும் அந்தப் பெண் உள்ளே எட்டிப் பார்க்கிறாள். அதன் பிறகு?

அவர்களிடையே காதல் உருவாகிவிடுகிறது. அது முழுக்க வன்முறையாலேயே வெளிப்படுத்தப்படுகிறது. உணரப்படுகிறது.  ஓரிரு காட்சிகளைக் கண்களை மூடியவாறே என்னால் பார்க்க(?!) முடிந்தது. தைரியசாலிகள் நேரடியாகப் பார்க்க முயற்சி செய்யலாம். குறிப்பாக ஹூன், ஹீ ஜின்  தற்கொலைக்கு முயலும் காட்சிகள்.

ஹூன் சிக் எப்படித் தற்கொலைக்கு முயல்கிறான் என்றால், நான்கைந்து முட்கள்  கொண்ட தூண்டிலை விழுங்கி, பின்னர் அதைப் பலங்கொண்ட மட்டும் இழுத்து பார்க்கிறான் பின்னர் அப்படியே தண்ணீருக்குள் குதித்து விடுகிறான். அவனைக் காப்பாற்ற வேண்டுமெனில் தூண்டிலை இழுக்க வேண்டும். அப்படியே அவனைக் காப்பாற்றி விடுகிறாள்.

ஹீ ஜின் அதற்கும் மேல். ஒருநிலையில் ஹீ ஜின் பற்றித் தெரிந்ததும் அவளிடமிருந்து விடுபட்டுச் செல்ல முயற்சிக்கிறான் ஹூன் சிக். அவள் இதை எதிர்பார்த்தே இருந்திருக்கிறாள். கயிற்றின் ஒரு முனை ஹூன் சிக் தப்பிச் செல்லும் படகில் கட்டப்பட்டிருக்கிறது. மறுமுனையில் இணைக்கப்பட்ட தூண்டில் முள்ளைத் தனது..... அதைச் சொல்ல முடியாது முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள். (முடியல! ஏண்டா பார்த்தோம்னு ஆயிடிச்சு!)

என்னால் சிறுபடகு, கப்பல், படு மோசமான பாதையினூடான பயணங்களில் எல்லாம் வாந்தி எடுக்காமல் செல்ல முடியும்! எடுத்ததற்கெல்லாம் வாந்தி எடுப்பவர்கள் பலர். அவர்கள் இந்தப்படத்தைத் தவிர்க்கலாம். அந்தளவிற்கு பாதிப்பான காட்சிகளா என்று எனக்குத் தெரியவில்லை. அனால் வெனிஸ் படவிழாவில் திரையிட்டபோது பலர் வாந்தி எடுத்ததாச் சொல்கிறார்கள். 
 

அழகான அமைதியான இயற்கைக் காட்சிகள். மிக மெதுவாக நகரும் காமெரா, ஒரு கவிதைபோல பயணிக்கும் கதை, மிகக் குறைந்த வசனங்கள். தமிழ் சினிமாவோடு ஒப்பிடுகையில் கொலையை எல்லாம் படு டீசண்டாகத்தான் காட்டுகிறார் இயக்குனர். சொல்லப் போனால் கொலை செய்வதைக் காட்டவே இல்லை.  ஆனால் தற்கொலை தான் முடியல! சுயவதை என்பது எப்படி இருக்கிறது என்று 'டீப்'பா காட்டியிருக்கிறார் இயக்குனர். இதற்கு 'பியானோ டீச்சர்' எவ்வளவோ பரவாயில்ல! 

2000 ஆண்டில் வெளியான இந்த தென்கொரியப்பட்ம் சொந்த நாட்டில் போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், உலக  அளவில்  பேசப்பட்ட, சர்ச்சைக்குரிய திரைப்படம்.

இயக்கம் - Kim Ki-duk
மொழி - Korean           

30 comments:

  1. Kim-ki-duk படம் அப்படின்னா பாக்க வேண்டிய படம்

    ReplyDelete
  2. Tamilmanam first vote endhu.that means vadai

    ReplyDelete
  3. இதையெல்லாம் தேடிப்பிடித்து பார்க்கிறீர்கள்...எனக்கு உலக சினிமா பற்றி புரிதல் இல்லை

    ReplyDelete
  4. , வாந்தி எடுத்தாங்களா ? படத்த பார்த்த அப்படி தெரியலையே ஜி. ஏதோ நீங்க சொல்றீங்க ஹி ஹி ஹி

    ReplyDelete
  5. நம்மில் இதுபோல உலக சினிமாக்களைத்தேடிப்போயி பார்க்கும் ஆர்வம் இருப்பதில்லைதான்.

    ReplyDelete
  6. எங்க பிடிக்கறீங்க இந்த படம் எல்லாம்

    ReplyDelete
  7. கிம் படத்தில் இந்தமாதிரி காட்சிகள் இல்லாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை, இறுதியாக வந்த இரண்டு படங்களில் கொலை ஏதுமில்லை!!!!

    அருமையான படம்.... என் விமர்சனம் நிச்சயம் வரும்.

    ReplyDelete
  8. படத்தை பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள் நண்பா.....

    ReplyDelete
  9. ஓப்பனிங்க முதல் பத்தியே சூப்பர்

    ReplyDelete
  10. விமர்சனம் நல்ல எழுத்து நடையுடன் கவனமாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்வாரஸ்யமாக தொகுத்து இருக்கிறீர்கள்

    ReplyDelete
  11. தங்கள் ரசனைக்கான எடுத்துக் காட்டு.. நன்றாக படைத்துள்ளிர்கள் ஜீ நன்றிகள்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    என் சிங்கக்குட்டி சீறி வந்த நாளும் என் மீள் வருகையும்.

    ReplyDelete
  12. இடுகையைப் படித்த போது படத்தைப் பார்த்தது போல் உணர்ந்தேன்... எழுத்துநடை அருமை!

    ReplyDelete
  13. @சமுத்ரா
    @ஐத்ருஸ்
    @Chitra
    @Lakshmi
    @MANO நாஞ்சில் மனோ
    @வைகறை
    நன்றிஉங்கள் கருத்திற்கு! :-)

    @Arun Prasath
    எல்லாம் 'நெட்'ல தான் பாஸ்! :-)

    @நா.மணிவண்ணன்
    நம்புங்க பாஸ்! :-)

    //ஆதவா said...
    கிம் படத்தில் இந்தமாதிரி காட்சிகள் இல்லாவிட்டால்தான் ஆச்சரியப்படவேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை, இறுதியாக வந்த இரண்டு படங்களில் கொலை ஏதுமில்லை!!!!
    அருமையான படம்.... என் விமர்சனம் நிச்சயம் வரும்//
    சொல்லுங்க! :-)

    //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    விமர்சனம் நல்ல எழுத்து நடையுடன் கவனமாக எழுதி இருக்கிறீர்கள் ஸ்வாரஸ்யமாக தொகுத்து இருக்கிறீர்கள்//
    நன்றி பாஸ்! :-)

    //ம.தி.சுதா said...
    தங்கள் ரசனைக்கான எடுத்துக் காட்டு.. நன்றாக படைத்துள்ளிர்கள் ஜீ நன்றிகள்..//
    வாங்க! நீண்ட நாட்களுக்கு பிறகு!:-)

    ReplyDelete
  14. இந்தப் படத்தைத் தேடிப்பார்க்கவேணுமே ஜீ !

    ReplyDelete
  15. Good review.. Thanks for sharing.
    Lets see this movie.

    ReplyDelete
  16. தமிழ்படம் பாக்கவே நேரத்தை காணல இதுக்குள்ள கொரிய மொழி படமா?? என்னங்க சார்.

    ReplyDelete
  17. ஜீ! அழகான விமரிசனம். படத்தைப் பார்க்கத் தூண்டும் வண்ணம் படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  18. //ஓரிரு காட்சிகளைக் கண்களை மூடியவாறே என்னால் பார்க்க(?!) முடிந்தது// ஹா..ஹா..மாட்னீங்களா..அதுக்குத்தான் நான் பார்க்கலை.

    ReplyDelete
  19. @ஹேமா
    பாருங்க! :-)

    @இளங்கோ
    @கார்த்தி
    @மோகன்ஜி
    நன்றி! :-)

    //செங்கோவி said...
    ஹா..ஹா..மாட்னீங்களா..அதுக்குத்தான் நான் பார்க்கலை//
    அப்படியெல்லாம் சொல்லக்கூடாது நீங்க பாக்கணும் பாஸ்! :-)


    //Philosophy Prabhakaran said...
    18+ படமா...?//
    60 + என்றுகூடச் சொல்லலாமோ எனத் தோன்றுகிறது! அனால் வழமையான 18 + போன்ற படமல்ல!

    ReplyDelete
  20. //Lakshmi said...

    நம்மில் இதுபோல உலக சினிமாக்களைத்தேடிப்போயி பார்க்கும் ஆர்வம் இருப்பதில்லைதான்.//

    ReplyDelete
  21. ம்ம்...உலகப்படங்களை அதிகமாய் பரிச்சயம் பண்ணுவதே ஜீ எனக்கு உங்க ப்லாக் தான்...அப்புறம் என்ன தான் ஆச்சு...முடிவை சொல்லாமல் விட்டுடிங்களே..எனக்கு மெயில் இல் சொல்லுங்க அன்பு தம்பி...அந்த பையனுக்கு யாரு ஜோடி:))) அந்த பொண்ணா..இல்லை ஹீ ஜின் ஆ?

    ReplyDelete
  22. ரசனையான அதேநெரம் அருமையான விபரிப்பு ஜீ..பார்க்கணும்.

    ReplyDelete
  23. very nice review. i have not seen many korean movies. but the way you've narrated the movie here, sounds highly inviting...

    will try to watch this!
    thanks for sharing...

    ReplyDelete
  24. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  25. பகிர்வு super

    ReplyDelete
  26. சாரி ஃபார் லேட்.. படம் எல்லாருக்கும் பிடிக்காது

    ReplyDelete
  27. படத்தினை பார்கின்ற ஆவல் ஏற்படுகின்றது . சிறப்பான விமர்சனம்

    ReplyDelete