Showing posts with label Blogger. Show all posts
Showing posts with label Blogger. Show all posts
Monday, April 9, 2012
Friday, September 16, 2011
இரத்தப்படலம்,விகடன்,பன்னிக்குட்டி ராம்சாமி-நன்றி!
இரத்தப்படலம்! (XIII Comics)
ஒரு வழியா இரத்தப்படலம் கையில கிடைச்சிட்டுது! நீண்ட நாட்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பூபாலசிங்கம் புத்தகசாலையில் (கொழும்பு)சொல்லிவைத்துவிட்டு (அப்போது வரவில்லை) அந்தப்பக்கம் போகவில்லை. சமீபத்தில் பதிவர் Vimalaharan எனது பதிவின் பின்னூட்டத்தில் இது பற்றி தெரிவித்திருந்தார். நன்றி நண்பா!
எனக்காக ஒரு புத்தகம் எடுத்து வைத்திருந்தார்கள் போய் 'லபக்!'. என்னை மீறி சந்தோஷம் முகத்தில் பரவ...முன் பின் புரட்டிப்பார்க்க - தடவிப் பார்த்ததாகக் கூட ஞாபகம்! - கடையில் நின்ற ரெண்டு அங்கிள்ஸும் சிரித்தவாறே பாத்திட்டிருந்தாங்க! சின்னப்புள்ளத்தனமா இருந்திருக்குமோ?
ஒரு காலத்தில வெறித்தனமா அலைஞ்சு திரிஞ்சது, எவ்வளவோ தேடியும் முதல் மூன்று பாகமும் யாழ்ப்பாணத்தில கிடைக்காதது - எல்லா பிளாஷ் பேக்கும் வந்து போச்சு! இதெல்லாம் அவர்களுக்குத் தெரிய நியாயமில்லையே!
Saturday, June 25, 2011
அவன்-இவன்! கிரேட் எஸ்கேப்பான திருட்டுப்பதிவர்!
என்னமோ தோணிச்சு!
வரலாறுகள் என்றுமே வெற்றி பெற்றவர்களின் பார்வையில்தான் எழுதப்படுகின்றனவா?
நியாயமும், தர்மமுமே என்றும் வெற்றியடையும் என்பது முட்டாள்தனமான மூட நம்பிக்கையாகவே எனக்குத் தோன்றுகிறது!
நீங்கள் அதை நம்புகிறீர்களா?
அப்படியானால் தோற்றுப் போனவர்கள் எல்லோரும் கொடியவர்கள், அநியாயவாதிகளா?
வென்றவர்கள் எல்லாம் தர்மத்தின் பிரதிநிதிகள், நீதியின் காவலர்களா? ஒண்ணுமே புரியல!
*************
அவன் -இவன்!
படத்தின் கதையில் திருப்பத்தைக் கொண்டுவரும் காரெக்டர் திடீரென்று என்ட்ரி ஆகக் கூடாது. ஆரம்பத்திலேயே அட்லீஸ்ட் படத்தில் இப்படி ஒருவர் இருக்கிறார் என்று ஒரு சின்ன சீனில் காட்டினாலே போதுமானது என்பது ஹாலிவுட்டின் பொதுவான விதி என்று வாத்தியார் சுஜாதா சொல்லுவார். அதிலும் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம். அநேகமாக ஹீரோ அறிமுகமாகமுன் அல்லது அடுத்த சீனில் வில்லனின் அறிமுகம் இருக்கும்! தமிழிலும் அவ்வாறே!
ஆனால் இந்தப்படத்தில் திடீரென்று வில்லன்! ஒருவேளை வித்தியாசமாக எல்லா விதிகளையும் மீற முயன்றிருக்கிறாரா பாலா? செம்படைத் தலை, வித்தியாசமான மனிதர்கள், கொடூரமான அதிரவைக்கும் கொலை இவற்றில் தெரிகிறது பாலா படம் என்று! விஷால் அதகளம் பண்ணியிருக்கிறார்!
Hats off விஷால்! ஆனால் எதுக்காக இவ்வளவு கஷ்டமெல்லாம்?
*****************
திருட்டுப் பதிவர்!
வீட்டில் உள்ளோருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகப் பதிவெழுதுவது கொஞ்சம் அசௌகரியமாகவே! யாரவது அறைக்குள் வந்தால் உடனே அரக்கப் பரக்க வின்டோவை க்ளோஸ் பண்ணுவது இசகு பிசகான சந்தேகத்தை ஏற்படுத்துமோ?
இருந்தாலும் இதைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளவா முடியும்?
இன்றுடன் பதிவுலகிற்கு வந்து ஒருவருடம்! ஸ்கூல் படிக்கும்போது உருப்படியா ஒரு கட்டுரைகூட எழுதியதில்லை. எந்த நோக்கமுமில்லாம திடீரென்று பதிவுலகிற்கு! எனக்கு ஊக்கம், ஆதரவு தரும் பதிவுலக நண்பர்கள், சகோதர சகோதரிகளுக்கு நன்றி!
யாருமற்ற, வெறுமையாய் உணரும் பொழுதுகளில் ஏதோ ஒரு ஆறுதலாய்...
எங்கெங்கோ இருக்கும் முகம்தெரியாத, உணர்வுகளால் நெருக்கமான உறவுகளுக்கு நன்றிகளும், வணக்கங்களும்!
******************
ம்ம்ம்...?
ருவாண்டா இனப்படுகொலைக்கு (1994) உடந்தையாக இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் பெண் அமைச்சருக்கு ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது ஐ.நா.குற்றவியல் நீதிமன்றம்!
இது பற்றிய திரைப்படம்! Hotel Rwanda
8 -10 லட்சம் பேரைக் கொன்றவர்களுக்கு 10 வருஷம் விசாரணை நடத்தி, 7 குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இந்தத் தண்டனை! ம்ம்ம்...
*******************
கிரேட் எஸ்கேப்!
கடல் அலைகளை எவ்வளவு நேரமானாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கப் பிடிக்கும்! அப்பப்ப வெள்ளவத்தை பீச்சுல நண்பர்களுடன் செல்லும்போது எனக்கு ரெயில்வே டிராக்கில், ஸ்லிப்பர் கட்டையில் அமர்ந்திருப்பதே எப்போதும் பிடிக்கும். என்ன அடிக்கடி ட்ரெயின் வரும். எழுந்து செல்ல வேண்டியிருக்கும்!
அருகருகே அமைந்த இரண்டு ட்ராக்குகளில் நகர் நோக்கி வரும் புகையிரதங்கள் கடற்கரைப்பக்கமாகவும், நகரிலிருந்து செல்பவை மற்றையதிலும்!
சில நாட்களுக்குமுன் இரவு நானும் பார்த்தியும் மியூசிக், கம்போசிங் பற்றி உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். பார்த்தியும் ரஹ்மானின் தீவிர விசிறி! கம்போசிங், அது தொடர்பான தொழில்நுட்பங்கள் (அது தொடர்பான ஏராளமான மென்பொருள்கள் வைத்திருக்கிறான்) பற்றி கிட்டத்தட்ட ஆராய்ச்சியே பண்ணிட்டு இருப்பவன்!
பேச்சு சுவாரஷ்யத்தின் இடையே ட்ரெயின் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தேன்! அது நாங்கள் இருந்த ட்ராக்குக்கு பக்கத்து ட்ராக்கில் செல்லுமென்பதால் மீண்டும் பேச்சில் கவனமாகி..
ஏதோ உள்ளுணர்வில் எதேச்சையாகத் திரும்ப...வழமைக்கு மாறாக நாங்கள் இருந்த ட்ராக்கில் ட்ரெயின் வர...டேய்ய்ய்ய்!!!! - அவசரமாக எழுந்தோடி...கிரேட் எஸ்கேப்!!!
Subscribe to:
Posts (Atom)