Saturday, June 25, 2011

அவன்-இவன்! கிரேட் எஸ்கேப்பான திருட்டுப்பதிவர்!

என்னமோ தோணிச்சு!
வரலாறுகள் என்றுமே வெற்றி பெற்றவர்களின் பார்வையில்தான் எழுதப்படுகின்றனவா?
நியாயமும், தர்மமுமே என்றும் வெற்றியடையும் என்பது முட்டாள்தனமான மூட நம்பிக்கையாகவே எனக்குத் தோன்றுகிறது!
நீங்கள் அதை நம்புகிறீர்களா?
அப்படியானால் தோற்றுப் போனவர்கள் எல்லோரும் கொடியவர்கள், அநியாயவாதிகளா?
வென்றவர்கள் எல்லாம் தர்மத்தின் பிரதிநிதிகள், நீதியின் காவலர்களா? ஒண்ணுமே புரியல!

*************

அவன் -இவன்!

படத்தின் கதையில் திருப்பத்தைக் கொண்டுவரும் காரெக்டர் திடீரென்று என்ட்ரி ஆகக் கூடாது. ஆரம்பத்திலேயே அட்லீஸ்ட் படத்தில் இப்படி ஒருவர் இருக்கிறார் என்று ஒரு சின்ன சீனில் காட்டினாலே போதுமானது என்பது ஹாலிவுட்டின் பொதுவான விதி என்று வாத்தியார் சுஜாதா சொல்லுவார். அதிலும் வில்லனுக்கு அதிக முக்கியத்துவம். அநேகமாக ஹீரோ அறிமுகமாகமுன் அல்லது அடுத்த சீனில் வில்லனின் அறிமுகம் இருக்கும்! தமிழிலும் அவ்வாறே!

ஆனால் இந்தப்படத்தில் திடீரென்று வில்லன்! ஒருவேளை வித்தியாசமாக எல்லா விதிகளையும் மீற முயன்றிருக்கிறாரா பாலா? செம்படைத் தலை, வித்தியாசமான மனிதர்கள், கொடூரமான அதிரவைக்கும் கொலை இவற்றில் தெரிகிறது பாலா படம் என்று! விஷால் அதகளம் பண்ணியிருக்கிறார்! 
Hats off விஷால்! ஆனால் எதுக்காக இவ்வளவு கஷ்டமெல்லாம்? 

*****************

திருட்டுப் பதிவர்!
வீட்டில் உள்ளோருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகப் பதிவெழுதுவது கொஞ்சம் அசௌகரியமாகவே! யாரவது அறைக்குள் வந்தால் உடனே அரக்கப் பரக்க வின்டோவை க்ளோஸ் பண்ணுவது இசகு பிசகான சந்தேகத்தை ஏற்படுத்துமோ?
இருந்தாலும் இதைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளவா முடியும்?


இன்றுடன் பதிவுலகிற்கு வந்து ஒருவருடம்! ஸ்கூல் படிக்கும்போது உருப்படியா ஒரு கட்டுரைகூட எழுதியதில்லை. எந்த நோக்கமுமில்லாம திடீரென்று பதிவுலகிற்கு! எனக்கு ஊக்கம், ஆதரவு தரும் பதிவுலக நண்பர்கள், சகோதர சகோதரிகளுக்கு நன்றி!

யாருமற்ற, வெறுமையாய் உணரும் பொழுதுகளில் ஏதோ ஒரு ஆறுதலாய்...
எங்கெங்கோ இருக்கும் முகம்தெரியாத, உணர்வுகளால் நெருக்கமான உறவுகளுக்கு நன்றிகளும், வணக்கங்களும்!

******************

ம்ம்ம்...?
ருவாண்டா இனப்படுகொலைக்கு (1994) உடந்தையாக இருந்தவர்களில் ஒருவரான முன்னாள் பெண் அமைச்சருக்கு ஆயுள்தண்டனை வழங்கியுள்ளது ஐ.நா.குற்றவியல் நீதிமன்றம்!
இது பற்றிய திரைப்படம்! Hotel Rwanda
8 -10 லட்சம் பேரைக் கொன்றவர்களுக்கு 10 வருஷம் விசாரணை நடத்தி, 7 குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இந்தத் தண்டனை! ம்ம்ம்... 

*******************

கிரேட் எஸ்கேப்!
கடல் அலைகளை எவ்வளவு நேரமானாலும் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கப் பிடிக்கும்! அப்பப்ப வெள்ளவத்தை பீச்சுல நண்பர்களுடன் செல்லும்போது எனக்கு ரெயில்வே டிராக்கில், ஸ்லிப்பர் கட்டையில் அமர்ந்திருப்பதே எப்போதும் பிடிக்கும். என்ன அடிக்கடி ட்ரெயின் வரும். எழுந்து செல்ல வேண்டியிருக்கும்!

அருகருகே அமைந்த இரண்டு ட்ராக்குகளில் நகர் நோக்கி வரும் புகையிரதங்கள் கடற்கரைப்பக்கமாகவும், நகரிலிருந்து செல்பவை மற்றையதிலும்!

சில நாட்களுக்குமுன் இரவு நானும் பார்த்தியும் மியூசிக், கம்போசிங் பற்றி உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். பார்த்தியும் ரஹ்மானின் தீவிர விசிறி! கம்போசிங், அது தொடர்பான தொழில்நுட்பங்கள் (அது தொடர்பான ஏராளமான மென்பொருள்கள் வைத்திருக்கிறான்) பற்றி கிட்டத்தட்ட ஆராய்ச்சியே பண்ணிட்டு இருப்பவன்!

பேச்சு சுவாரஷ்யத்தின் இடையே ட்ரெயின் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தேன்! அது நாங்கள் இருந்த ட்ராக்குக்கு பக்கத்து ட்ராக்கில் செல்லுமென்பதால் மீண்டும் பேச்சில் கவனமாகி..

ஏதோ உள்ளுணர்வில் எதேச்சையாகத் திரும்ப...வழமைக்கு மாறாக நாங்கள் இருந்த ட்ராக்கில் ட்ரெயின் வர...டேய்ய்ய்ய்!!!! - அவசரமாக எழுந்தோடி...கிரேட் எஸ்கேப்!!!    

37 comments:

 1. பதிவு உலகம் வந்து ஒரு வருடமா.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. நல்ல ரசனை

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. ஜீ ஒரு வருடத்திற்கு வாழ்த்துக்கள், அவன் இவன் படம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை, ஆனாலும் டிரெயின் வரும் பாதையில் அமராதீர்கள், படித்த நாமே இப்படி செய்யலாமா???

  ReplyDelete
 5. எல்லாவற்றையும் ரசித்தேன்...

  ReplyDelete
 6. AnonymousJune 25, 2011

  ///வரலாறுகள் என்றுமே வெற்றி பெற்றவர்களின் பார்வையில்தான் எழுதப்படுகின்றனவா?// ஆமாம் பாஸ் நான் கூட இது சம்மந்தமாக ஜோசிச்சதுண்டு, ராமாயணத்திலிருந்து இன்று வரை பல வரலாறுகள் ,புராணங்கள் அப்படி தானோ ..!!

  ReplyDelete
 7. தம்பிக்கு ஒரு வயது பூர்த்தியாகிறதா..சந்தோசம். தொடர்ந்து மென்மேலும் நல்ல படைப்புகளை வழங்க வாழ்த்துகள். மேலும் பல நல்ல சினிமாக்களை அறிமுகப்படுத்துங்கள்.

  ReplyDelete
 8. AnonymousJune 25, 2011

  //////வீட்டில் உள்ளோருக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகப் பதிவெழுதுவது கொஞ்சம் அசௌகரியமாகவே! யாரவது அறைக்குள் வந்தால் உடனே அரக்கப் பரக்க வின்டோவை க்ளோஸ் பண்ணுவது இசகு பிசகான சந்தேகத்தை ஏற்படுத்துமோ?
  இருந்தாலும் இதைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளவா முடியும்?///எனக்கும் இதே நிலை தான் , ஒரு சில நண்பர்களை தவிர நான் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை..)))

  ReplyDelete
 9. AnonymousJune 25, 2011

  //// 8 -10 லட்சம் பேரைக் கொன்றவர்களுக்கு 10 வருஷம் விசாரணை நடத்தி, 7 குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் இந்தத் தண்டனை! ம்ம்ம்.../// பத்து வருஷம் வாழ்ந்துட்டானே...காலம் தாழ்த்தி வழங்கப்படும் தண்டனைகளில் பிரயோசனம் தான் என்ன..!!

  ReplyDelete
 10. AnonymousJune 25, 2011

  ///ஏதோ உள்ளுணர்வில் எதேச்சையாகத் திரும்ப...வழமைக்கு மாறாக நாங்கள் இருந்த ட்ராக்கில் ட்ரெயின் வர...டேய்ய்ய்ய்!!!! - அவசரமாக எழுந்தோடி...கிரேட் எஸ்கேப்!!! /// ஹும்.. )=(

  ReplyDelete
 11. AnonymousJune 25, 2011

  முதலாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..))

  ReplyDelete
 12. முதலில் என் உளமார்ந்த வாழ்த்துக்கள் ஜீ...

  ஒரே வயது குழந்கைகளிடம் உயர்வான அந்நியொன்யம் இருக்கும் என்பார்கள் உதாரணம் எமது அறிமுக காலப்பகுதியாகும்..

  ReplyDelete
 13. இவ்வளவு நாளும் நிங்க போட்ட படத்தை கண்ணில் பட்டால் பார்த்தேன் இப்ப கொஞ்ச நாளா நான் பார்த்த படத்தை தான் நிங்க பொடறிங்கள்.. (சும்மா சொன்னேம்பா நானும் ஹோட்டல் ருவாண்டா பார்த்திட்டேம்பா )


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

  ReplyDelete
 14. வானம் தாண்டி சிறகு விரித்து ஒரு வருடமாகிறதோ... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. //யாருமற்ற, வெறுமையாய் உணரும் பொழுதுகளில் ஏதோ ஒரு ஆறுதலாய்...
  எங்கெங்கோ இருக்கும் முகம்தெரியாத, உணர்வுகளால் நெருக்கமான உறவுகளுக்கு நன்றிகளும், வணக்கங்களும்!//


  எதார்த்தமான வார்த்தைகளில்
  எல்லோரையும் கவர்ந்திழுக்கும் வரிகள் அருமை சகோதர
  வாழ்த்துக்கள்
  முதல் பிறந்தநாளுக்கு

  ReplyDelete
 16. நண்பரே வாழ்த்துக்கள்.நான் விரும்பிப்படிக்கும் வலைப்பூக்களில் தங்களுடையது மிகமுக்கியமானது.இரண்டாம் ஆண்டில் இன்னும் அதிகமாக உலகசினிமாவுக்கு பரப்புரை செய்யுங்கள்.

  ReplyDelete
 17. கலந்து கட்டி அடிச்சிருக்கீங்க பாஸ்...
  தமிழ்மண டேக்னிக்க்ஸ் புரிஞ்சு வைச்சிருக்கீங்க...ஹிஹி புரியுதா??
  அப்புறம் வாழ்த்துக்கள் பாஸ் ரெண்டாவது வருடமும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. கதை சுவார்ஸத்தில் ரெயினை மறந்துவிடாதீர்கள். இனிய நண்பனை ஒருவனை அவ்வாறு இழந்து துயரம் மனத்தில் பல வருடங்கள் சுமையாக..

  ReplyDelete
 19. ஒரு வருடம் ஓடிவிட்டதா வாழ்த்த்துக்கள் .ஒட்டல் ரூவாண்டா சிறந்த படம் கோல்பேஸ் பக்கம் அதிகம் காற்று வாங்குறீங்களா இரு மாப்பூ பின்னாடி வாரன் சுண்டல் வாங்க.

  ReplyDelete
 20. முதலில் வாழ்த்துக்கள்.
  எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க வேண்டுமென்பதற்கு, ட்ரெயின் சம்பவம் உதாரணம்.

  ReplyDelete
 21. வாழ்த்துக்கள் ஜி . ட்ரைன் வரும் பாதையில் அமர்ந்து கடைசியில் நேரத்தில் எழுந்தது ,உண்மைலே திக் திக் நிமிடங்களுக்காகவே இருந்திருக்கும் , எங்கள் ஊரிலும் ட்ரைன் வரும் பாதையில் அமர்வோம் ஆனால் வேற ஒன்றுக்காக ,

  ReplyDelete
 22. என்னமோ தோணிச்சு!//

  அப்படியானால் தோற்றுப் போனவர்கள் எல்லோரும் கொடியவர்கள், அநியாயவாதிகளா?
  வென்றவர்கள் எல்லாம் தர்மத்தின் பிரதிநிதிகள், நீதியின் காவலர்களா? ஒண்ணுமே புரியல!//

  மச்சி, இது எனக்கும் தான் புரியாத புதிராக இருக்கு...

  நான் நினைக்கிறேன், வெள்ளரசுகளின் நிழலின் கீழ் எழுதப்படும் புதிய சித்தாந்தம் இது என்று..

  ஹி...

  அவந் இவன்; பார்க்கலை மச்சி, பார்த்தப்புறம் சொல்றேன்.

  திருட்டுப் பதிவர்!//

  வாழ்த்துக்கள் மச்சி, தொடர்ந்தும் வித்தியாசமான, கலக்கல் பதிவுகளைத் தருவீங்க என்று எதிர்பார்க்கிறேன்.

  ம்ம்ம்...?//

  ம்....எங்கள் மத்தியில் இது தொடர்பாக நிலவும் மௌனத்திற்கான பதிலாக வந்திருக்கிறது...

  ஹி....

  //கிரேட் எஸ்கேப்!//

  யோ... கொய்யாலா.. ஜாக்கிரதை மச்சி,
  விளையாட்டு, விபரீதமாகிடும்,

  நீங்க மியூசிக் எல்லாம் கம்போஸ் பண்ணுவீங்களா...

  நாம பாட்டு செய்து பார்ப்போமா மாப்ளே..

  ReplyDelete
 23. பதிவு கதம்ப மலர்மாலையாக மணக்கிறது. எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இன்னுமா விளையாட்டுப்பிள்ளையாய் இருப்பது?
  வாழ்த்துக்கள். மேலும் மேலும் புகழுடன் விளங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. வாழ்த்துக்கள்.. எனக்கு ஜுலை 17 ல் ஒரு வருஷம் முடியுது.. அப்போ நீங்க எனக்கு இதிலும் சீனியரா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 25. நன்றி நண்பர்களே! :-)

  ReplyDelete
 26. //எதேச்சையாகத் திரும்ப...வழமைக்கு மாறாக நாங்கள் இருந்த ட்ராக்கில் ட்ரெயின் வர...டேய்ய்ய்ய்!!!! - அவசரமாக எழுந்தோடி...கிரேட் எஸ்கேப்!!! //

  enakkum rendu thadawa ipadi nadanthuthu aana wanthathu werum engin mattum thaan

  ReplyDelete
 27. இனி ரயில் பாதை வேண்டாம்.

  ReplyDelete
 28. முதலாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 29. எல்லா விடயங்களையும் நல்லா சொல்லியிருக்கிங்க

  ReplyDelete
 30. ஜீ........!

  ///என்னமோ தோணிச்சு!////

  வரலாறுகள் வெற்றிபெற்றவர்களாக கூறிக்கொள்பவர்களின் பார்வையில் அதீத கற்பனை வாதங்களுடனேயே எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனாலும், காலச்சக்கரம் ஏதோவொரு தருணத்தில் அடுத்தபக்க நியாயத்தையும் சொல்லிச் செல்கின்றது.

  ////அவன் -இவன்!////

  அவன்- இவன் பாவப்பட்டவர்களின் வாழ்க்கையை படம்பிடிக்கிறேன் என்று பாலா விஷால்- ஜி.எம்.குமார் ஆகியோரை பாவப்பட்டவர்களாக மாற்றியது மட்டுமே நடந்திருக்கிறது.

  நீங்கள் கூறுகின்ற ஹொலிவுட் திரைக்கதை விதி, சுஜாதா “கற்றதும் பெற்றது“மில் கூறியது. ஓரளவுக்கு திரைக்கதை யுத்திகளை தேடிப்படிப்பவர்கள் அறிந்து கொள்ளமுடியும்.

  ////திருட்டுப் பதிவர்!////

  பாஸ்.....! நீங்களும் திருட்டுப்பதிவரா?! ஓராண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். நல்ல படங்கள் தொடர்பில் அடிக்கடி தங்களின் தளத்தை பார்த்து தெரிந்து கொள்கிறேன்.

  ///ம்ம்ம்...?///

  எங்கள் நாட்டிலும் இந்த 'ம்ம்ம்' சாத்தியப்பட வேண்டும்.

  ////கிரேட் எஸ்கேப்!////

  யம்மா........................!!!!

  ReplyDelete
 31. வாழ்த்துக்கள் நண்பா
  இதேமாதிரியான ட்ரைன் அனுபவம் அதுவும் வெள்ளவத்தை ட்ரைன் ட்ராக்கில் எனக்கும் ஏற்பட்டது
  அதன் பின் அந்த பக்கம் போறதே இல்ல மாபு

  ReplyDelete
 32. my first visit, good and keep it up!

  ReplyDelete
 33. அட! ஒரு வருசமா? சொல்லவேஇல்ல!!
  வாழ்த்துகள் ஜீ!

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |