லெவலிங்!
சென்றவாரம் Leveling செய்ய ஒரு காட்டு (நாட்டுப்) புறமா அனுப்பிட்டாங்க. கூடவே ஒரு கன்சல்டன்ட் மாமாவும்! செம்ம வெயில்! இன்ஸ்ரூமெண்டை 'செட்' செய்யும்போது பார்த்தா..
பார்த்தேனா..
பார்த்தேனா...
சும்மா சொல்லக் கூடாது! நல்லாத்தான் இருந்திச்சு! நாம கொஞ்சம் மெனக்கெட மாமா கண்டுபிடிச்சிட்டாரு! (ஏற்கெனவே 'உனக்கு நல்ல சிங்களப் பொண்ணு பாக்கிறேன், கட்டுறியா?' ன்னு சீரியஸா காமெடி பண்ணிட்டிருப்பார்) அப்புறமென்ன 'நாங்களும் சின்ன வயசில...'ன்னு ஒரு பிளாஷ்பாக்! எல்லாப் பயபுள்ளகளும் ஒரே மாதிரிதானா!
தமிழுக்கு வந்த சோதனை!
நம்ம Blog கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக Blogger in draft ஆக மாறிவிட்டது! பல புதிய வசதிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், User interface மாறி விட்டதால் பழைய வசதிகளைப் பாவிப்பதற்கே கொஞ்சம் சிரமமா இருக்கு! Edit HTML ஐ நேற்றுத்தான் கண்டுபிடித்தேன் என்றால் பாருங்க! (நம்ம அறிவும்(?!) ஒரு காரணமா இருக்கலாம்!)
நேற்று காலை ஒரு புதிய அதிர்ச்சி வேறு! நண்பர்களுக்கு கமெண்ட் போடலாம்னு போஸ்ட்ல போய் பார்த்தா, தமிழ் ட்ரான்ஸ்லேட்டரைக் காணவில்லை! (எனக்கு Phonetic முறைலதான் தட்டச்ச தெரியும்) எங்கே போய் தேடுறதுன்னு தெரியாம...முழிச்சு..தேடி....முடியல!
அதிர்ச்சியா இருந்துச்சு! ஒருவேளை நாம தமிழுக்கு ஆத்துற சேவை பிடிக்காம சதிமுயற்சியா பிலாக்கர்காரனுங்க சூனியம் வச்சிட்டானுங்களோ?
அப்பிடீன்னா இனித் தமிழோட நிலைமை? - ஆடிப் போயிட்டேன்!
சரி பாத்துடலாம்னு நேரா பிலாக்கர் help center போய் பிரச்சினைய சொன்னேன்! மதியம் பார்க்கும்போது சரி பண்ணிட்டாய்ங்க! தீயா வேலை செய்யுறாங்க! Thanks to Blogger!
எழுதிக் கிழிச்சது!
பதிவுலகிற்கு வந்து ஒரு வருஷமாயிற்று! உருப்படியா ஒண்ணும் எழுதினதா தெரியல! இனியும் எழுத முடியும்னு தோணல! பழைய பதிவுகளை பார்க்கும்போது எதுவும் திருப்தியா இல்லை!
குறிப்பாக உலக சினிமா, கொஞ்சம் நல்ல பதிவுகள் (அப்பிடியெல்லாம் இருக்கான்னு கேட்கக் கூடாது!) - சொல்லவந்ததை அவசரத்தாலோ இல்லை சோம்பேறித்தனத்தாலோ எல்லாமே அரைகுறையா இருக்கிற மாதிரியே ஒரு உணர்வு! அதுக்காக நிறுத்திறதா இல்ல! - யாரும் அவசரப்பட்டு சந்தோஷப் பட்டுராதீங்க!
பீதி!
சரியா பன்னிரண்டு மணி! உச்சிவெயில் மண்டைபிளக்க.. நம்ம நண்பர் ராஜன் போன் பண்ணினார்!
ஜீ! அபீஸ்லையா?
இல்லண்ணே! ஒரு காட்டுக்குள்ள நிக்கிறேன்! லெவலிங் செய்றேன்!
ஒரு முக்கியமான மேட்டர் கதைக்கலாமா உங்ககூட!
முக்கியமான....மேட்டரா...அப்போ ஏதும் பொண்ணு விஷயமா? புதுசா இருக்கே
எப்பிடி ஜீ? அதேதான்! உங்களுக்கு ஒரு பொண்ணு பாக்கலாமான்னு? கேக்குறாங்க!
இது வேற ஆரம்பிச்சுட்டீங்களா? சொல்லவே... இல்ல? கைவசம் எத்தினை வச்சிருக்கீங்க?
ஜோக் இல்ல ஜீ! சொல்லுங்க!
போங்கண்ணே சின்னப் பசங்ககிட்ட போய்...
கொஞ்சம் சீரியஸா கதைங்க நீங்க இன்னும் சின்னப்பிள்ள இல்லையே! உங்களுக்கும் .....கழுதை வயசாகுதுல்ல!
போங்கண்ணே சின்னப் பசங்ககிட்ட போய்...
கொஞ்சம் சீரியஸா கதைங்க நீங்க இன்னும் சின்னப்பிள்ள இல்லையே! உங்களுக்கும் .....கழுதை வயசாகுதுல்ல!
ஏண்ணே...? ஏன்? வெயில் நேரத்தில தலைல வெந்நிய ஊத்துறீங்க? ஏற்கெனவே தலையிடிக்குது...நீங்கவேற புதுசா பீதியக் கிளப்புறீங்க! ஆளவிடுங்க!
பல்பு!
அப்பப்ப யாரிட்டயாவது பல்பு வாங்கிறதே வேலையாப் போச்சு! ஆனாலும் அசரமாட்டோமே! நாங்கெல்லாம் அப்பாகிட்டயே பல்பு வாங்கினவய்ங்க!
வலைப்பூவ சொந்த டொமைனுக்கு மாத்திறாங்கதானே அதில என்ன அட்வான்டேஜ்னு தோணிச்சு! சரி தெரிஞ்சுக்கலாம்னு,
நண்பன் பார்த்திகிட்ட சிம்பிளா ஒரு கேள்வி கேட்டேன்!
'அப்பிடி மாத்தினா என்னாகும்? உன்னோட ஐடியா என்ன?'
அதுக்கு அவன் அத விட சிம்பிளா ஒரு பதில் சொன்னான்!
'மாத்தலாம்! ஆனா அதுக்குமுதல் உருப்படியா ஏதாவது எழுதலாமே!'
தேவையா எனக்கு? - பட், அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது!
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கு இல்லை உங்க வலைத்தளத்துக்கு
வலைத்தளம்
ReplyDeleteவந்து
வருடம் ஒன்று ஆனதற்கு
வாழ்த்துக்கள்
மாப்ள நீ இப்படி உருப்படியான விஷயத்த பத்தி பேசும்போது....எனக்கு வெக்க வெக்கமா வருதுய்யா...ஹிஹி!
ReplyDelete//சும்மா சொல்லக் கூடாது! நல்லாத்தான் இருந்திச்சு! நாம கொஞ்சம் மெனக்கெட மாமா கண்டுபிடிச்சிட்டாரு!//
ReplyDeleteலெவலிங் பண்ணீங்களா, இல்லையா..முழுசாச் சொல்லலையே..
//தமிழ் ட்ரான்ஸ்லேட்டரைக் காணவில்லை! (எனக்கு Phonetic முறைலதான் தட்டச்ச தெரியும்) எங்கே போய் தேடுறதுன்னு தெரியாம...முழிச்சு..தேடி....முடியல!// அய்யோ..எனக்கும் ட்ரான்ஸ்லேட்டரைக் காணோம்.
//குறிப்பாக உலக சினிமா, கொஞ்சம் நல்ல பதிவுகள்// ஆமா ஜீ, இன்னும் கொஞ்சம் அதிக சினிமாக்களை நீங்க அறிமுகப் படுத்தலாம்..அப்படியே சில ஹாலிவுட் படங்களைப் பத்தியும் எழுதலாம்.
//கொஞ்சம் சீரியஸா கதைங்க நீங்க இன்னும் சின்னப்பிள்ள இல்லையே! // வெல்கம் டூ த எலைட் குரூப்.
வாழ்த்துகள் அன்பா
ReplyDeleteஅப்ப பொண்ணு பாக்க வெளிக்கிட்டாச்சு எண்டு சொல்லுங்கோ )) வாழ்த்துகள் கூடவே உங்கள் வலைத்தளத்துக்கும்...
ReplyDeleteஅண்ணே.. நீங்க லெவெலிங்க்ல மன்னன் போல.. பிளாக் 2 ஆம் ஆண்டு விழாவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஜீ.........!
ReplyDeleteகலக்கிறீங்க. என்னமா எழுதிறிங்க. ரசிக்கும்படியாக தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்.
சிங்களவங்கள பிடிக்காட்டியும் சிங்கள பெட்டையள ரொம்பத்தான் பிடித்துப் போகிறது எல்லாப் பயபுள்ளைக்கும்.
வாழ்த்துக்கள் கலக்கல் பயணம் தொடரட்டும் ./.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழா..
ReplyDeleteஹி ஹி என்னமோ போங்க
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜி ,' பீதி' உண்மையாக
ReplyDeleteஅப்பறம் சிங்கள பொண்ணுங்கலாம் சூப்பரா இருப்பாங்களா ? அப்படி இருந்தாங்கன்னா எதாவுது நமக்கும் .சரி வேணாம் விடுங்க எதுக்கு உங்க தொழில மாத்திக்கிட்டு
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் தளத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅதுசரி இந்த பதிவில என்ன சொல்ல வந்துிங்க? ஹிஹிஹி
வாழ்த்துகள் ஜீ !
ReplyDeleteவலைத் தளத்தில் வருடம் ஒன்றினைத் தாண்டி நகர்ந்து கொண்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்,
ReplyDeleteபாஸ், வேணும்னா சொல்லுங்க, நானும் ஒரு பொண்ணு பார்க்கிறேன்...
கட்டிக்க நீங்க ரெடியா.
அடடா.. ஜீ சொல்லவே இல்லை..பிடியுங்கள் என் வாழ்த்துக்களை...
ReplyDeleteஜீக்கு சீக்கிரமே கல்யாணம் ஒன்று பேசிடவேண்டியதுதான்.
ஹ்ம்ம்... என்கூட எல்லாம் கம்பேர் பண்ணினா நீ எவ்ளோ எவ்ளோ பெட்டர்யா..
ReplyDeleteவா....வா,,,,,,ழ்....த்....து.....க்...க......ள்..
ReplyDeletenaallayirukkunka,,,,,,,,,,,,,,,
ReplyDeletevalththukkal,,,,,,,,,,,,
namma pakkam..............
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்....neenkalum yochichchu paarungko..
பல்பு எரியுது என்று வந்தால் இப்படி கடாய்க்கிறீங்க பாஸ் வாழ்த்துக்கள் தொடருங்கள் பதிவுகளை இங்க பிரென்ஸ்சுக்கார சகோதர நங்கையைப் பார்க்கவா நண்பா!
ReplyDeleteவாழ்த்துக்கள் தொடருங்கள் தொடர்கிறோம்
ReplyDelete