இருக்கைகள் அனைத்தும் பயணிகளால் நிறைக்கப்பட்டு, எந்த மேலதிக வசதிகளும் இல்லாத ஒரேயொரு பேரூந்துதான் அந்த நேரத்திற்கு! திருகோண மலையிலிருந்து யாழ்ப்பாணம்! வழக்கம் போல இல்லாமல் ஒருபக்கத்தில் மட்டும் மூன்று பேர் அமரும்படியான இருக்கை அமைப்பு வேறு!
எனக்குப் பக்கத்தில் ஒரு அங்கிள் சிநேகமாகப் புன்னகைத்து, தன்னைப்பற்றி, என்னைப்பற்றி அளவளாவிக் கொண்டார்! பக்கத்தில் அவர் மனைவி. ஆன்டி கொஞ்சம் சந்தேகப் பார்வையுடன் (எங்கே தன் மகளைப் பொண்ணு கேட்டு வந்துடுவானோ என்பது போல) ஒரு அரைச்சிரிப்பு!
முன்பக்கத்தில் சலசலப்பு! ஒரு அங்கிள் தனது சூட்கேசை மேலே வைக்க, கண்டக்டர் ' பெட்டியை கீழே வைக்குமாறும், கீழே இருப்பவரின் தலையை பதம்பார்த்து மண்டை 'பணால்' ஆனா, கம்பெனி பொறுப்பல்ல என்று கூற, அங்கிள் 'போன கிழமையும் தான் இப்படியே வைத்துச் சென்றதாகவும் அப்படி எதுவும் நடக்காததால் அதற்கான சாத்தியம் இல்லையென்று வாதிட, 'விழுமா-விழாதா' ஒரு குட்டிப் பட்டிமன்றம்!
அந்தப் 'பதம்' பார்க்கும் பரிசோதனையின் 'எலி'யான அந்தப் பயபுள்ளையும் ஆர்வமாக இருதரப்பு வாதங்களையும் அமைதியாக கவனித்தது வேடிக்கையாக இருந்தது - நான் அந்த இருக்கையில் இல்லாததால்!
A-9 பாதையூடாக வரும்போது, வழிநெடுகிலும் இருமருங்கிலும்...ஏன் எல்லாப்பக்கங்களிலும் எதுவுமே தெரியாமல்! இரவு நேரத்தில் இருட்டாக இருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்பதால் இதுபற்றி மேற்கொண்டு விவரிக்கவில்லை!
அப்புறம் அங்கிள் தூங்க ஆரம்பித்ததும் நமக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிட்டுது! அதுவும் அவர் ஆன்டி இருக்கிற பக்கம் சாயாமல் சரியா நம்ம பக்கமே தூங்கி விழுந்தார். ஆனாலும் ரொம்ப நல்லவரா, நேர்மையானவரா இருந்தார். தனது செயலுக்கு அடிக்கடி மன்னிப்புக் கேட்டார். அட! இவ்வளவு அவஸ்தையிலும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம்பித்த என்னை தட்டி எழுப்பி ஸாரி சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்க!
***********
எப்பிடி யாழ்ப்பாணம்? நல்லா டெவலப் ஆகிட்டுது பார்த்தியா? - கேட்டார் ஒரு ஆன்டி! ஒரு கதையுமில்லாமல் அவசரமாக ஆமோதித்துக் கொண்டேன்!
நிறைய புதிய வங்கிகள் ,கடைகள், தனியார் நிறுவனங்கள் காலூன்றிக் கொள்வதை வைத்து அப்படிச் சொல்வதில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும், அது அந்தந்த நிறுவனங்களின் வளர்ச்சி என்றுதானே...ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது முதலில் அதன் தரமான சாலைகளிலும், வீதி ஒழுங்குகளிலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதை நான் அப்படியே நம்புகிறேன்! - யாழ் குடா நாடெங்கும் சாலைகளை அகலப்படுத்தி தரமான கார்ப்பெட் வீதிகள் போடும் பணி நடைபெறுவது மகிழ்ச்சியாக இருந்தது!
எல்லா வங்கிகள், நிறுவனங்களும் குறிப்பிட்ட சில பகுதிக்குள்ளேயே முண்டியடிப்பதால், ஏற்கெனவே நெருக்கடி மிகுந்த பகுதிகள் மேலும் நெருக்கடியாக! கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடங்களில் அமையும் பட்சத்தில் நகரம் விஸ்தரிக்கப்படுவதுடன், நெருக்கமும் குறையும் என்று தோன்றுகிறது! குறிப்பாக பிரதான வீதி, முதலாம், இரண்டாம் குறுக்குத் தெருக்கள் இன்னும் யாராலும் கவனிக்கப் படாமலேயே! ஏனைய நகரங்களில் இந்த வீதிகளே அதிக புழக்கத்துடன்!
**********
என்ன இருந்தாலும், சில விஷயங்களில் 'கன்னா பின்னா'ன்னு 'டெவலப்' ஆகியிருப்பதை நல்லாவே உணர முடிந்தது!
**********
காதில் விழுந்த தொலைபேசி உரையாடல் ஒன்று!
ஹலோ! ஆ...என்னமாதிரி ### தானே நிக்கிறீங்க?
"---"
அங்க இல்லையே? மாறிட்டீங்களே...நான் நீங்க அங்கதான் எண்டு நினைச்சன்.. பிரண்டு ஒருத்தன் ரூம் எடுக்கலாமோன்னு கேட்டான் அதான்...எவ்வளவு போகுது ரெண்ட் இப்ப?
"---"
அதெல்லாம் என்னமாதிரி...எல்லாம் கொண்டு போகலாம்தானே?
"---"
பிரச்சனை இல்லையே?
"---"
ஓக்கே...ஓக்கே!
ஒண்ணுமே புரியல! நாம இன்னும் வளரணுமோ?
**********
ஹெல்மெட், பொது இடங்களில் சிகரெட் பிடித்தல் தொடர்பாக நான் நினைக்கிறேன் நான் பார்த்த அளவில் நாட்டின் ஏனைய இடங்களைவிட மிகக் கடுமையான கெடுபிடிகள் போலீசாரால்! - நல்ல விஷயம்!
**********
பதிவர் ஜனா, பாலவாசகன் சந்தித்தார்கள்! யாழ் சென்று வந்த பின் பிரபல பதிவர் மதிசுதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். நிறையப் பேசினோம். பிலாக் பற்றி நிறைய புதிய விஷயங்கள் சொன்னார்.அடுத்தமுறை வரும்போது சந்திப்பதாக முடிவு!
**********
எல்லாவற்றுக்கும் மேலாக இருபது வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமென்று கூறி, பார்க்கக் கூட அனுமதிக்கப்படாத எங்கள் சொந்த ஊரை, தாய்மண்ணை சென்று பார்த்தேன்! மிகச் சமீபத்திலேயே செல்ல அனுமதிக்கப்பட்டது! இதுபற்றி பதிவிடுமாறு பதிவர் மதிசுதா கூறினார். அதுவரை அப்படியொரு யோசனை இருக்கவில்லை! பார்க்கலாம்!
///அட! இவ்வளவு அவஸ்தையிலும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம்பித்த என்னை தட்டி எழுப்பி ஸாரி சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்க!/// ஆக எவ்வளவு பொறுப்புணர்ச்சி அந்த ஐயாவுக்கு ;-)
ReplyDelete//இவ்வளவு அவஸ்தையிலும் சமாளித்து லேசாகத் தூங்க ஆரம்பித்த என்னை தட்டி எழுப்பி ஸாரி சொன்னார் என்றால் பார்த்துக் கொள்ளுங்க!// ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே.
ReplyDeleteசொந்த ஊரை பார்க்கவே இத்தனை காலம் ஆனது வருத்தமான விசயம்தான், நல்ல பயண அனுபவம்
ReplyDeleteஎன்ன ஒரு அருமையான பயண அனுபவம்..
ReplyDelete//இருபது வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமென்று கூறி, பார்க்கக் கூட அனுமதிக்கப்படாத எங்கள் சொந்த ஊரை, தாய்மண்ணை சென்று பார்த்தேன்!//
ReplyDeleteமண்ணை முத்தமிட்டீர்களா?
நல்ல பயண அனுபவம்!
திருகோண மலையிலிருந்து யாழ்ப்பாணம்! வழக்கம் போல இல்லாமல் ஒருபக்கத்தில் மட்டும் மூன்று பேர் அமரும்படியான இருக்கை அமைப்பு வேறு!//
ReplyDeleteஆரம்பமே அமர்க்களமாக இருக்கே, ஒரு சிறுகதையின் தொடக்கத்திற்கான வரணனை போன்று அற்புதமான எழுத்தாற்றலை பதிவின் அறிமுகப்படைப்பாக தந்திருக்கிறீங்க.
பக்கத்தில் அவர் மனைவி. ஆன்டி கொஞ்சம் சந்தேகப் பார்வையுடன் (எங்கே தன் மகளைப் பொண்ணு கேட்டு வந்துடுவானோ என்பது போல) ஒரு அரைச்சிரிப்பு!//
ReplyDeleteரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு வேண்டிக் கிடக்கு..
மூன்று சீட் இருக்கையில் ஒரு பெண் பக்கத்தில் வந்து உட்காராதா என்று, ஓமந்தை தாண்ட முதல் யோசித்திருப்பீங்களே:-))))
என்ன இருந்தாலும், சில விஷயங்களில் 'கன்னா பின்னா'ன்னு 'டெவலப்' ஆகியிருப்பதை நல்லாவே உணர முடிந்தது!//
ReplyDeleteஆகா.. நேரடியாகச் சொல்ல பயத்திலை, மறைமுகமா அண்ணர் தொக்கி நிற்கும் பதத்தில் சொல்றாரே.
அதெல்லாம் என்னமாதிரி...எல்லாம் கொண்டு போகலாம்தானே?//
ReplyDeleteமச்சி, இது கொஞ்சம் புரியாத புதிராக இருக்கிறதே...
மகிழ்ச்சியான தருணம்தான்
ReplyDeleteபதிவர் ஜனா, பாலவாசகன் சந்தித்தார்கள்! யாழ் சென்று வந்த பின் பிரபல பதிவர் மதிசுதா தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். நிறையப் பேசினோம். பிலாக் பற்றி நிறைய புதிய விஷயங்கள் சொன்னார்.அடுத்தமுறை வரும்போது சந்திப்பதாக முடிவு!//
ReplyDeleteநான் ஒரு நாதாரி, பண்ணைப் பாலத்திற்கு கிட்ட இருக்கேன் என்பது தெரிந்தும், என்னையை மனுடன் என்ற கணக்கில் உள்ளடக்காது, கண்டுக்காது- கணக்கெடுக்காது விட்ட ஜீ அவர்களுக்கு வன்மையான கண்டனங்கள்.
அடுத்த முறை வரும் போது,,,
இவற்றுக்கெல்லாம் பிரதி உபகாரமாக, பரிகாரமாக அழுகிய தோசை, புளிச்ச இட்லி கூட்டுறவு கண்டீனில் இருந்து வாங்கித் தரப்படும்.
இதுபற்றி பதிவிடுமாறு பதிவர் மதிசுதா கூறினார். அதுவரை அப்படியொரு யோசனை இருக்கவில்லை! பார்க்கலாம்!//
ReplyDeleteஏன் மச்சி கவலை. சொந்த ஊரைப் பார்க கொடுத்து வைச்சிருக்கிறீங்க. ஆனாலும் இருபது வருடங்களின் பின்னர் என்றால் நினைவுகளில் இருந்து பல விடயங்கள் மறைந்திருக்கும்.
அனுபவக் கட்டுரை....கிளு கிளுப்பாக இருக்கு.
இருபது வருடங்கள்....
ReplyDeleteஅடேயப்பா...
எத்தனை வேதனையை அனுபவித்திருப்பீர்கள்!!!
உங்கள் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
//ஒரு நகரத்தின் வளர்ச்சி என்பது முதலில் அதன் தரமான சாலைகளிலும், வீதி ஒழுங்குகளிலும் பிரதிபலிக்கவேண்டும் என்பதை நான் அப்படியே நம்புகிறேன்! -///
ReplyDeleteநானும் கூட உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் ஜீ
நல்லப் பதிவு
குட் ஒன்
ReplyDeleteபாஸ்........!
ReplyDeleteபஸ் பயணங்களின் பக்கத்திலிருந்து துாங்கி விழுவோரால் பயங்கர அவஸ்தை. நீங்களும் பட்டிருக்கிறீர்கள்.
ஜனா- பாலவாசனுடனான சந்திப்பு எனக்கும் தொலைபேசியினுாடு பகிரப்பட்டது. அதுவும், பாலவாசனை ஜனா அழைத்த விதம் பயங்கர திரில்லிங்கானது!
சொந்த மண்ணில் கால் வைப்பது நிம்மதியானது. ஆனாலும், சிதைந்த தேசத்தில் கால் வைப்பது பயங்கர வலிகளை கொடுக்கும். எனக்கு கடந்த டிசம்பரில் அந்த அனுபவம் கிடைத்தது.
பயண அனுபவங்கள் கலக்கம் பாஸ்.
சொந்த ஊர் உன்னை வா வா என்று அழைக்குது தோழா
ReplyDeleteபயண விபரம் அருமையா இருக்கு ஜி
ReplyDeleteஅதுவும் இருபது வருடங்களுக்கு பிறகு
சொந்த மண்ணுக்கு சென்ற அனுபவம்
திருகோணமலை-யாழ்ப்பாணம் நினைக்கவே கண்கலங்கினபடி சந்தோஷமாயிருக்கு.கன்னா பின்னா வளச்சியோ...என்னத்தை....என்னமோ சொல்றீங்கள் கேக்கிறம் ஜீ !
ReplyDeleteகலக்கல் ஜி
ReplyDeleteமாப்ள வளர்ச்சி நல்ல திசை கொடுக்கட்டும்..உங்க கண் மூலம் நாங்கள் காண்கிறோம் நன்றி!
ReplyDeleteஅசத்தலான பதிவு..
ReplyDeleteவாழ்த்துக்கள்...
jaali drip? ஜாலி ட்ரிப்?
ReplyDeleteTHALAIPPEY ARUMAIYA ERUKKU NANBA..
ReplyDeleteVERAVIL VARUKIREN..
//ஒண்ணுமே புரியல! நாம இன்னும் வளரணுமோ?//
ReplyDeleteஐயோ ஐயோ! இன்னும் சின்ன பிள்ளையாயே இருக்கீங்க ஜீ!
தளத்தில் நல்ல தடத்தின் பதிவு பாராட்டுக்கள்
ReplyDelete