Thursday, July 28, 2011

விஜய் துரோகியா? - ஒரு ரசிகனின் குமுறல்!




விஜய் ராஜபக்ஷேவுக்கு எதிராக கையெழுத்திட மறுத்ததால் அவர் துரோகியா என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்! 

இது பற்றி நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் தனது உள்ளக் குமுறலை என்னிடம் கொட்டியிருந்தார்! அதில் ஒரு பகுதியை அப்படியே.. 

கடந்த காலத்தில் அதாவது காவலன் வந்த காலத்தில் அண்ணன் டாக்டர் விஜய் ஈழத்தமிழருக்கு ஆதரவா கொந்தளித்து குரல் கொடுத்தது உண்மைதான்! அப்போது கூட சிலர், விஜய் தனது சுயநலத்திற்காக அப்படிச்செய்கிறார் என அறிவுகெட்டதனமாக அண்ணனின் இதயசுத்தியை, நேர்மையைச் சந்தேகித்தார்கள்!  

அவர்கள் இப்போது வேலாயுதம் படம் ரிலீசாவதால் இந்த நேரத்தில் எதையாவது பண்ணினால் படம் இலங்கையில் தடை செய்யப்பட்டு விடுமென்பதால் அண்ணன் பம்முவதாகவும் கூறுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது இவர்களைப் பார்த்தால்! என்ன ஒரு அறியாமை!

அவர்களுக்காக நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்!

அண்ணன் தனது இடைவிடாத நற்பணிகளுக்கு மத்தியிலும் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து தூக்கி விடுவதாக அண்ணன் விட்ட சவால் உங்களுக்கு நினைவிருக்கா?அண்ணனே மறந்திருந்தாலும் நாங்க மறக்கமாட்டோம்! அண்ணனின் அந்தப் பேச்சால் அண்ணனின் எத்தனை ரசிகர்கள் இலங்கையைவிட்டே அவசரமா வெளிநாடுகளுக்கு ஓடினார்கள், எத்தனை பேர் இன்னும் பீதியுடன் இங்கே வாழ்கிறார்கள் என்று தெரியுமா?

இந்த சம்பவத்திற்குப் பிறகு சர்வதேசமே அண்ணனின் நடவடிக்கைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இந்தக்கையெழுத்து எவ்வளவு தீவிரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஏன் இவர்கள் புரிந்த கொள்ள மறுக்கிறார்கள்? 

அவரது பேச்சில் பாதி புரியாததால் அதில் நியாயமிருப்பதாகவே தோன்றியது!

இந்த விஷயத்தில், 'சரியாகப் புரிந்துகொள்ள முடியாத கருத்துக்கள் பெரும்பாலும் நியாயமானவையாகவே இருக்கின்றன' என்ற ஜியோக்கியூட்ரசின் (கி.மு.781 - 827) வார்த்தைகளை நான் நம்புகிறேன்!

நான் சில பதிவுகளில் டாக்டர் விஜயை கலாய்த்ததாக வருத்தப்பட்டார்கள் சில நண்பர்கள்! இனி அப்படி நடந்து கொள்வதாக இல்லை - அதனால்தான் எனது கருத்தைச் சொல்லாமல் ஒரு ரசிகனின் குமுறலை பதிவு செய்திருக்கிறேன்! 

தமிழகத்தின் ஒரு பிரபல 'நடுநிலை' நாளிதழ்தான் இந்த விஷயத்தில் இப்படி விஜய்யைக் கோர்த்து விட்டதாகவும் சொல்கிறார்கள்! இதுவும் உண்மையாகவே இருக்கலாம்!

அதே நாளிதழ்தான் மூன்று வருஷத்துக்கு முதல் அஜித்தைக் கோர்த்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்!அந்த நேரத்தில் நம்ம நண்பர்களான புலம்பெயர் நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் சிலர் உற்சாகமாக ஏகனைப் புறக்கணிப்போம்னு Facebook ல ஒரு Page கிறியேட் பண்ணி இருந்தார்கள்!  

புலம்பெயர் தமிழர் எல்லாரும் வெற்றிகரமாக புறக்கணித்ததால்,'எஸ்' ஆகிட்டாய்ங்க! நாமதான் தெரியாம போயி.. சோகன் ஆகிட்டோம். 

அந்தப் புறக்கணிப்பாலதான் அந்த அருமையான படம் ஊத்திக்கிச்சுன்னு இன்னும் சிலபேர் சீரியஸா நம்பிட்டிருக்காய்ங்க - இயக்குனர் ராஜூசுந்தரம் உட்பட!


அதே நேரம் இந்த சர்ச்சைக்கு தகுந்த பதில் சொல்வதற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் உட்கார்ந்து கடுமையாக யோசித்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் நல்லதொரு பதில் தருவார் என்றும் அவர் சொன்னார்! 

மேன்மை தங்கிய திரு.எஸ்.ஏ.சியின் அறிக்கைகள், கருத்துகள் என்றுமே பொருள் பொதிந்தவை! ஆழமாக சிந்திக்கத் தூண்டுபவை!

திமுக வின் படுதோல்விக்கு என்ன காரணம்? இதற்கான பதில் தேடி பத்திரிகையாளர்கள், பதிவர்கள், உடன்பிறப்புகள், ஏன் ஜெயலலிதா கூட தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது எஸ்.ஏ.சி. அதற்கான காரணத்தை மிக எளிமையாக விளக்கினார். அதாகப்பட்டது,

'கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்களில் ஐம்பது வீதமானோர் விஜய் ரசிகர்கள்!'

மீதி ஐம்பது வீதம்? 

அவர்கள் எஸ்.ஏ.சி.யின் ரசிகர்கள் என்பதை அவர் சொல்லி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை!     

29 comments:

  1. ஜீ..!

    ////விஜய்யும், எஸ்.ஏ.சியும் வாங்கித்தரப்போகும் தமிழீழத்தில் சத்தியமாக நான் வாழ விரும்பவில்லை! இதனை சீரியஸான கருத்தாக எடுத்துக்கொள்ளுங்கள்!!//////

    இது சற்று முன்னர் நானிட்ட பேஸ்புக் ஸ்ரேற்றஸ். சத்தியமாக விஜய்யின் படங்களை நான் பார்க்கிறேன். மற்றப்படி சிறுபிள்ளைத்தனமாக அரசியலை ஈழத்தமிழர்கள் மீதும் செய்வது கடுப்பையும்- சிரிப்பையும் தான் வரவைக்கின்றன! ஹிஹிஹி.

    ReplyDelete
  2. மவனே பிச்சு பிச்சு யார்கிட்ட!!

    ReplyDelete
  3. நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் அவரும் அவரின் தந்தையும் செய்யும் அரசியல் அலப்பறை வேலைகளை கொஞ்சம் கூட ரசிப்பதில்லை!
    என்ன செய்ய பாவம் இப்பிடியாச்சும் வாழ்கிறார்கள்!!!
    நான் விஜயின் ரசிகன்-படங்களுக்காக!
    அரசியலுக்கு எதிரி!

    ReplyDelete
  4. இது சீரியஸ் பதிவு இல்ல தானே? எனக்கு பயங்கர சிரிப்பு :))

    ReplyDelete
  5. //அண்ணன் தனது இடைவிடாத நற்பணிகளுக்கு மத்தியிலும் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து தூக்கி விடுவதாக அண்ணன் விட்ட சவால் உங்களுக்கு நினைவிருக்கா?அண்ணனே மறந்திருந்தாலும் நாங்க மறக்கமாட்டோம்! அண்ணனின் அந்தப் பேச்சால் அண்ணனின் எத்தனை ரசிகர்கள் இலங்கையைவிட்டே அவசரமா வெளிநாடுகளுக்கு ஓடினார்கள், எத்தனை பேர் இன்னும் பீதியுடன் இங்கே வாழ்கிறார்கள் என்று தெரியுமா?//ஹிஹி ;-)

    ReplyDelete
  6. //அண்ணன் தனது இடைவிடாத நற்பணிகளுக்கு மத்தியிலும் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து தூக்கி விடுவதாக அண்ணன் விட்ட சவால் உங்களுக்கு நினைவிருக்கா?// அண்ணன் ஹன்சிகாவைத் தூக்குவதில் பிஸி என்பது உங்களுக்கு நினைவிருக்கா, இல்லையா?

    ReplyDelete
  7. //ஓரிரு நாட்களில் நல்லதொரு பதில் தருவார் என்றும் அவர் சொன்னார்! // ‘ஈழம் கிடைக்க விஜய் தொடர்ந்து போராடுவார்’னு சொல்லிட்டாருங்கோ!

    ReplyDelete
  8. //மீதி ஐம்பது வீதம்? - அவர்கள் எஸ்.ஏ.சி.யின் ரசிகர்கள் என்பதை அவர் சொல்லி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை! // ஹா..ஹா...சரியான ஜோக் ஜீ..கலக்கிட்டீங்க.

    ReplyDelete
  9. //'சரியாகப் புரிந்துகொள்ள முடியாத கருத்துக்கள் பெரும்பாலும் நியாயமானவையாகவே இருக்கின்றன' என்ற ஜியோக்கியூட்ரசின் (கி.மு.781 - 827) வார்த்தைகளை நான் நம்புகிறேன்! // ஃபூக்கோவும் ஜப்பானிய அறிஞர் சமோசாஜல்சா அவர்களும் இதே போன்ற கருத்தைச் சொன்னதாக ஞாபகம்.

    ReplyDelete
  10. பாவம் விசயை விட்டிருங்க சார்! பாவம் பிழைச்சு போகட்டும்!

    ReplyDelete
  11. தமிழகத்தின் நாளைய முதல்வரை இப்படி வாரியிருக்க வேண்டாம்.
    இப்படி பதிவு போட்ட உங்களுக்கு குருவி,வேட்டைக்காரன்,அழகிய தமிழ் மகன்,சுறா போன்ற உலகசினிமாக்களை பார்சல் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  12. உள்ளக் குமறல் நியாயமே .

    தனி மனித சாடல் தவறு

    ReplyDelete
  13. இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டு சம்பந்தமான நகைச்சுவை .

    வாருங்கள், படியுங்கள் தங்கள் கருத்தை கூறுங்கள் .
    நன்றி

    ReplyDelete
  14. //'கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்களில் ஐம்பது வீதமானோர் விஜய் ரசிகர்கள்!' //
    எஸ்.ஏ.சி க்கு ஏன் இன்னும் டாக்டர் பட்டம் தரவில்லை?!

    ReplyDelete
  15. முதலாவது கருத்து என்னுடையதா...கொஞ்சம் சந்தேகம்...

    எனது கனா.................

    ReplyDelete
  16. நானும் விஜய் ரசிகன்...செய்தி வந்தவுடன் கொஞ்சம் மன வருத்தம் தான்..அனால் நான் இதை ஒழுங்கு செய்தவர்களையோ அல்லது இதை வெளி இட்ட வர்களையோ நம்புவது இல்லை....

    எனது கனா.................

    ReplyDelete
  17. இன்னொரு டி.ஆர். வந்துவிட்டார்

    ReplyDelete
  18. அவர்கள் எஸ்.ஏ.சி.யின் ரசிகர்கள் என்பதை அவர் சொல்லி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை!
    ஹி ஹி

    ReplyDelete
  19. AnonymousJuly 29, 2011

    நல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  20. உங்களை முத்தான மூன்று பதிவை எழுத அழைத்திருக்கிறேன். பார்க்கவும் எனது இன்றைய பதிவு

    ReplyDelete
  21. ஏமாளிகள் என்று ஒரு கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பார் என்பதனை விஜய் மனதில் இருத்தி இப்படி ஒரு அறிக்கையினை விட்டிருக்கலாம், ஆனால் இப்போது மக்கள் முன்பு போல் அல்ல, மாறி விட்டார்கள் என்பது விஜய்க்கு தெரியவில்லைப் போலும்.

    ReplyDelete
  22. விஜய் அவர்களின் பரம வைரி நான் , அவர் எந்த செயல் செய்தாலும் அதற்க்கு எனது எதிர்ப்பே பதிவாகும் , அதனால் அவரது மூஞ்சியில் நான் கர்ர்ர்ர் ........... த்தூ .........

    ReplyDelete
  23. நடுநிலை என்று கூறி தி மு க விற்கு ஜால்ரா அடிக்கும் நக்கீரன் பத்திரிகையை பற்றி அது காசு பாக்க என்ன என்ன வேலையெல்லாம் செய்யும் எண்டும் இலங்கையில இருக்கிற எங்களுக்கே நல்லா தெரியும். நக்கீரா நீ இந்த புளைப்புக்கு நாலு பிட்டுபடம் போட்டு பிழைக்கலாம்

    ReplyDelete
  24. You know, SA chandrasekar once told that, vijay is Tamil nadu's ragul gandhi? What about vijay acted with asin? DMK lost because of 2G, and Electricity problem, not because of vijay.

    ReplyDelete
  25. ஹிக்கி ஹிக்கி..

    பாவம்யா டாக்டர்..

    நிறைய வசனங்களில் உள்ள 'விடயங்களை' நினைத்து ரசித்து சிரித்தேன் :)

    ReplyDelete
  26. அட. 3 போஸ்ட் மிஸ்ஸிங்கா? சாரி..

    ReplyDelete
  27. இது காமெடி பீஸ்தானே??!! எனக்கு ஒரே சிரிப்பு :-)))))

    ReplyDelete