Friday, February 4, 2011

அப்பரும் ஐ. சி. நம்பரும்


நண்பன் மிகவும் சந்தோஷப்பட்டான். அவசரமாக ஒரு சிறு பேப்பரில் எழுதினான். அவனுக்குப் பிடித்த ஒரு பெண்ணின் ஐ.சி.(ஐடென்ட்டிட்டி கார்ட்) நம்பர் அது.
சரி அத வச்சு என்ன பண்ணலாம்?

அவளுடைய பிறந்த நாளைக் கண்டுபிடிக்கலாம். அதுக்குத்தான் சந்தோசம்!
முதல் இரண்டு இலக்கம் பிறந்த ஆண்டு அது மட்டும் எங்களுக்குத் தெரிந்திருந்தது.

'எப்பிடிடா பாக்கிறது?'
'அடுத்த மூண்டு நம்பர்ல தாண்டா இருக்கு'

'ஒவ்வொரு மாசமா கழிச்சு பாக்கணும்டா...சின்ன வயசில இங்க்லீஷ் புக்ல இருந்திச்சுடா'
அந்நிய மொழி பிடிக்காதென்ற ஒரே காரணத்துக்காக அதைப் படிக்கவில்லை (வேற ஒண்டுமில்லை)

கண்டு பிடிக்கும் பொறுப்பு எனது தலையில்.

நான் பொதுவாக வீட்டில் யாருடனும் அதிகமாக கதைப்பதில்லை. இது போன்ற முக்கியமான(?) விஷயங்களில் அதைப் பார்க்க முடியுமா?

வீடு வந்ததும் அப்பாவிடம் படு இயல்பாக ஆரம்பிதேன்,

அப்பா இந்த ஐ.சி.நம்பர்ல இருந்து date of birth எப்பிடி பாக்கிறது?
அப்பா சொன்னார்.

இப்போ நம்பர் 84220 ன்னு ஆரம்பிச்சா 84 பிறந்த ஆண்டு.220 ல இருந்து 31,30 என்று மாறி மாறிக் கழிக்க (பெப்ரவரிக்கு மட்டும் 29),  8 முறை கழித்த பின், இறுதியில் 7 எஞ்சும். ஆகவே 8 ம் மாசம் 7 ம்  திகதி. இதுதான் விஷயம்! (இவ்வளவு தானா?)

'ஒக்கே' நான் பெரிதாக சுவாரஸ்யமில்லாமல்.
'ஏண்டா?' அப்பா
'இல்ல சும்மாதான்'

அப்பா மீண்டும் தனது வேலையில் கவனமாக,
யாரோ என்னையே கவனிப்பது போல்......அக்கா!

படித்துக் கொண்டு, இவ்வளவு நேரம் நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டு.
ஆகா இவள் வேற.. டவுட் வந்திட்டுது!
இப்போ உடனே என்னோட ரூமுக்குள்ள போக ஏலாது. பாத்திடலாம் யாருகிட்ட?

நான் ரேடியோவைப் போட்டேன். ஒரு பாட்டு!
டி.வியை 'ஒன்' பண்ணி சானல்களை மாற்றி,
நேரத்தைக் கடத்தி, சும்மா நோட்டம் விட்டேன். யாரும் கவனிக்கல.

இப்ப போகலாம். (எப்பிடிடா உன்னால மட்டும்?!)

மெதுவாக, படு இயல்பாக எனது ரூமை நோக்கி நடக்க,

பின்னாலிருந்து அப்பாவின் குரல்,

'தம்பி! girls எண்டா 500 ஐ டிடக்ட் பண்ண வேணும்'

'-------'


குறிப்பு 1: நாங்கெல்லாம்  அப்பாகிட்டயே 'பல்ப்' வாங்கினவய்ங்க!

குறிப்பு 2: நான் திரும்பி வந்துவிட்டேன்.
இது கூட பரவாயில்லை. அவர் சொல்லியிருக்காவிட்டால் என்ன ஆகியிருக்கும்? திரும்ப அவரிடம் நானே போய் 500 கூட இருக்கே ன்னு கேட்டு, வலிய மாட்டி...ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா!

குறிப்பு 3: இது சிலவருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்... அல்ல அல்ல சரித்திரம்!

21 comments:

 1. hi.... hi....... super comedy.ok..... who is that girl? anyway advance wishes!

  ReplyDelete
 2. புத்திசாளியோட புள்ள.....

  ReplyDelete
 3. ஹா...ஹா..புள்ள முழியை வச்சே கண்டுபிடிச்சிருப்பார்!!

  ReplyDelete
 4. என்ன சார் இது தெரியாமலா இவ்வளவு நால் இருந்தீங்க! எங்களிட்ட கேட்டிருக்கலாமெல? அப்பாகிட்ட மாட்டிட்டிங்களே!! அதுசரி அது உங்களுக்கா நண்பனுக்கா!!

  ReplyDelete
 5. //ஆர்.கே.சதீஷ்குமார் said...
  சூப்பர் பதிவு//
  :-)

  //மாத்தி யோசி said...
  hi.... hi....... super comedy.ok..... who is that girl? anyway advance wishes//
  நீங்கவேற பாஸ்! இது பழைய கதை!

  //கனாக்காதலன் said...
  Ha ha... Nice :)//
  //சி. கருணாகரசு said...
  நல்ல கணக்கு!//
  //Chitra said...
  ha,ha,ha,ha,ha...//
  :-)
  நன்றி!

  //வைகை said...
  புத்திசாளியோட புள்ள...//
  :-)

  //செங்கோவி said...
  ஹா...ஹா..புள்ள முழியை வச்சே கண்டுபிடிச்சிருப்பார்!//
  ஆமா நம்ம முழிய நீங்க எப்ப பாத்தீங்க? ஓ! இமாஜின் பண்ணி சொல்றீங்களா? :-)

  //கார்த்தி said...
  என்ன சார் இது தெரியாமலா இவ்வளவு நால் இருந்தீங்க! எங்களிட்ட கேட்டிருக்கலாமெல? அப்பாகிட்ட மாட்டிட்டிங்களே!//
  இது இப்போ நடந்ததில்ல வரலாறு பாஸ்! வரலாறு....ரொம்ப முக்கியம் இல்லையா?
  //அதுசரி அது உங்களுக்கா நண்பனுக்கா!//
  என்னடா இன்னும் யாரும் கேக்கலையேன்னு பார்த்தேன்! கேட்டுட்டீங்க! உணமியச் சொன்னா யாரு நம்புறீங்க! :-)

  ReplyDelete
 6. 500 ஐ டிடக்ட் பண்ண வேணும்'

  நானே போய் 500 கூட இருக்கே ன்னு கேட்டு, வலிய மாட்டி...ஸ்ஸ்ஸ்ஸப்ப்பா!

  எனக்கு இது புரியலையே... கொன்சம் புரியும்படி சொல்லுங்கலேன்.

  ReplyDelete
 7. //நா.மணிவண்ணன் said...
  ஹி ஹி ஹி//
  :-)

  //ஆதவா said...
  எனக்கு இது புரியலையே... கொன்சம் புரியும்படி சொல்லுங்கலேன்//

  இப்போ என்னோட நம்பர் 84220 ன்னு இருந்தா அதே தேதில பிறந்த ஒரு பெண்ணோட நம்பர் 84720 ஆக இருக்கும்! பெண்களுக்கு அடிஷனலா 500 சேர்க்கப்பட்டிருக்கும்!

  ReplyDelete
 8. அப்பாடி...என்ன ஒரு புத்திசாலித்தனம் !

  ReplyDelete
 9. புத்திசாலி அப்பா.
  பல்பு வாங்கின பையன்
  நல்லதோர் குடும்பம்

  ReplyDelete
 10. நல்லா சிரிச்சேன் ஜீ...அப்பா செம ஆப்பு வச்சிருக்கார் போல...குட்..குட்...:)))))

  ReplyDelete
 11. அடடா லேட் ஆய்டுச்சு... சாரி..

  ReplyDelete
 12. ஜீ.. அட என்னங்க நீங்க...

  ReplyDelete

Followers

Powered by Blogger.

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |