Friday, June 24, 2011

சாட்டிங்! சாரு! சர்ச்சை!


சாரு பற்றி, இணைய உலகில் பற்றியெரிகிறது! 

அது உண்மையான சாருதானா? போலியாகவும் இருக்கலாமல்லவா?

ஏனெனில் நான் பார்த்த ஒரு சாருவின் face book profile இல் (அது போலியா தெரியல!) சமபந்தமே இல்லாமால் சிலரின் புத்தகங்கள், தளங்கள் சாருவின் விருப்பத்துக்குரியவையாக குறிப்பிடப்பட்டிருந்தன! 

ஏற்கனவே நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து லண்டனில் வசிக்கும் நடிகர் அஜீத்குமார் facebook பார்த்திருக்கிறேன்! அவருக்கும்  எக்கச்சக்கமான நண்பர்கள்!

இணைய உலகில் போலி எது நிஜம் எதுன்னு....காலங்காலமா ஏமாறுபவர்களும் ஏமாற்றுபவர்களும்!

அப்படியே சாரு chat பண்ணியிருந்தாருன்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்கலாம்! (பேச்சுக்குத்தான்!)

அந்தப்பொண்ணு உண்மையிலேயே பெண்தானா? இதில் பலருக்கு ஏற்கனவே சந்தேகம் உண்டு!

ஒருவர் பெண் பெயரில் அழகான பெண் புகைப்படத்தோடு ஏதாவது எழுதினால் அது உடனடியாக தனது தளத்தில் லிங்க் கொடுப்பதோடு அது ஒரிஜினல் புகைப்படமா போலியா என்று ஆராயாமலே பகிரங்கமாகவே தனது தளத்தில் ஜொள்ளும் விடுபவர் நம்மாளு! (உண்மைய சொல்லணுமில்ல?)

சாருவின் இந்த ரசனையை அடிப்படையாக வைத்தே யாரோ திட்டமிட்டு விளையாடியிருக்கிறார்களோ என்னவோ? சாரு ஏமாந்துபோய் chat பண்ணியிருக்கலாமே என்றுகூட யோசிக்கலாம்! 

இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது என்ற சந்தேகம் வந்ததே சுய விளம்பரம் என்பது சற்றும் பிடிக்காத, பெண் இனத்தின் விடுதலையை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டு போராடிவரும் பெண்ணீயப் பெருந்தகை தமிழச்சியால்தான்! 

தமிழச்சி சொல்கிறார்,

//அவரது கவிதைகளையும் மற்ற படைப்புகளையும் குடும்பத்தினர் அனுமதி கொடுத்தால் மட்டுமே பிரசுரிக்கபடும் அளவே அவரது சுதந்திரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது// - பெண்விடுதலை குறித்த ஆதங்கத்தைப் பாருங்கள்!

நண்பர்களுக்காகவும் விவாதங்களில் கலந்து கொள்ளவும் புதிய நட்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் பேஸ்புக் பேஸ்புக் தளத்தையும் உபயோகத்தில் வைத்திருந்தார் அவர். அவையும் அவரது குடும்பத்தினரின் கண்காணிப்பிலேயே இருந்திருக்கிறது''

என்ன கொடுமைடா சாமி! அப்போ குடும்பத்தினருக்கு தெரிந்துதான் சாருவுடன் Chat பண்ணினார் என்று சொல்ல விழைகிறார்? சரி அப்படி இல்லையெனில் அங்கேயே அப்பெண் திருட்டுத்தனம் செய்வதாக அல்லவா அர்த்தப்படுகிறது!


அந்தப்பொண்ணு ஒன்றுமே தெரியாத ஒரு அபலைப்பெண், அப்பாவிப்பெண்! அதாவது ஒருவர் ஆபாசமாகப் பேசினால் chat விண்டோவை க்ளோஸ் பண்ணவோ இப்படிப்பேசுவது பிடிக்கவில்லை என்று கூறவோ தெரியாத அளவுக்கு நல்ல பெண்! 

ஆனால் அந்தப் பெண்ணின் எழுத்தைப் பார்க்கும்போது அப்படியா தோன்றுகிறது? ஒருவேளை பழைய தமிழ்சினிமாவில் பேபி ஷாலினி, ஷாமிலி பெரிய மனுஷர் போல வாழ்க்கைத் தத்துவ முத்துக்களை உதிர்ப்பது போலத்தான் இதுவுமா?

சாரு தன் தளத்திலேயே தன்னைப் பற்றி ஸ்த்ரீலோலன்னு சொல்கிறார்! 
-அதனால் என்ன? அவர் உண்மை சொல்கிறார் அதனால் நேர்மையானவர்னு நாங்கள் நம்பிடுவோமா? நாங்களே அதைக் கண்டு பிடித்து அதே முடிவை எங்கள் கண்டுபிடிப்பாக வெளியிட்டு, சாருவின் முகத்திரையைக் கிழிப்போம்னு கிளம்பியிருக்கிறார்கள் சிலர்!

ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்குது! ஒரு பெண் தனக்கு ஒருவர் ஆபாசமா பேசுவது பிடிக்கலைன்னா முகத்தில் அறைந்தது உடனேயே அந்த நபரை 'கட்' பண்ணிடுவாளா? இல்லை Chat பண்ணிய வரிகளை எல்லாம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தமிழச்சிக்கு அனுப்புவாளா?

அது சரி ஒரு நல்ல பெண் எப்படி தமிழச்சியிடம் சங்காத்தம் வைத்திருக்க முடியும்? அவரது FaceBook பார்த்தால்...சாரு Chat பண்ணியதாகச் சொல்லப்படும் வரிகளை விட படு மோசமான வார்த்தையாடல்கள்! கெட்ட பெண்களே அந்தப்பக்கம் போகமாட்டார்கள்! இதுல நல்ல பொண்ணு எப்படி? 

சாரு ஆபாசமாகப் பேசிவிட்டார் என்று குதிப்பவர்கள் யாரும் இதைக் காணவில்லையா?
ஏகப்பட்ட ஆண்கள் கூட்டம் ஒருவித கிளுகிளுப்புடன் அவரை ஆபாசமாகப் பேசுவதற்குத் தூண்டிவிட்டுக்கொண்டிருக்கிறது அங்கே! இதை யாரும் கண்டுக்க மாட்டார்களா? 

இரண்டுபேர் சேர்ந்து அவர்கள் விருப்பத்தின் பேரில் ஆபாசமாகப் பேசுவது தவறு! அப்படித்தான் எடுத்துக்கொள்ளப்படும் , அந்தப்பெண் தடுத்ததாகத் தெரியவில்லையே? ஆரம்பத்திலேயே கட் பண்ணலையே?  ஒரு கூட்டத்தின் மத்தியில் எப்படியும் பேசலாமாம்!

சுய விளம்பரத்துக்கு, அடுத்தவர் மேல் சேறுபூசுவதற்கு எந்த லெவலுக்கும் இறங்கக் கூடியவர் தமிழச்சி என்பதை ஷோபாசக்தி விஷயத்தில் தெரிந்துபோனதுதான்! ஒரு விதத்தில் அவர் நினைத்ததை சாதித்தும் விட்டார்! - அதாவது ஷோபாசக்தி என்றவுடனேயே அவரது ஞாபகம்தான் பலருக்கு வருகிறதாம்! 

எதையாவது பண்ணவேண்டியது பிறகு பெண் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு குற்றம் சாட்டவேண்டியது...உடனே பெண்ணீயப் போராளிகள் போருக்குக் கிளம்பிவிடுவார்கள்! 

ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது    ஆண்கள் தேவைப்படுகிறார்கள்!   


21 comments:

  1. AnonymousJune 24, 2011

    ///அந்தப்பொண்ணு உண்மையிலேயே பெண்தானா? இதில் பலருக்கு ஏற்கனவே சந்தேகம் உண்டு!/// அந்த பொண்ணு ஒரு தடவை தன் உருவப்படத்தை வெளியிட்டதாக நினைவு..

    ReplyDelete
  2. AnonymousJune 24, 2011

    கேவலமாக சாட் பண்ணியவுடன் பொண்ணு சாருவை பிளாக் பண்ணாதது மிக பெரிய தப்பு தான்..அனால் சமூகத்தில் ஒரு எழுத்தாளன் என்று தன்னை அடையாள படுத்திக்கொள்பவர்... சமூகத்தின் மீது அக்கறையுள்ளவராக தன்னை காட்டி கொள்பவர் இப்படி செய்வது ..........!!!

    ReplyDelete
  3. AnonymousJune 24, 2011

    அது மட்டுமல்ல சோபா ஷக்தி தொடர்பாக சர்ச்சை எழுப்பிய போது தமிழச்சிக்கு ஆதரவாக , ஷோபா சக்திக்கு எதிராக, அவரை ஒரு சமூக விரோதி ரேஞ்சுக்கு விமர்சித்த சாரு இன்று "சோபா ஷக்தி போல தன் மீதும் தமிழச்சி பொய் குற்றம் சாட்டுகிறார் " என்று சொல்வது ......எப்பூடி..!!!

    ReplyDelete
  4. AnonymousJune 24, 2011

    எதோ என் மனசில பட்டத சொன்னேன் :-)

    ReplyDelete
  5. ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்குது! ஒரு பெண் தனக்கு ஒருவர் ஆபாசமா பேசுவது பிடிக்கலைன்னா முகத்தில் அறைந்தது உடனேயே அந்த நபரை 'கட்' பண்ணிடுவாளா? இல்லை Chat பண்ணிய வரிகளை எல்லாம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தமிழச்சிக்கு அனுப்புவாளா?

    அதானே!

    ReplyDelete
  6. ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்கள் தேவைப்படுகிறார்கள்!

    நச்!

    ReplyDelete
  7. AnonymousJune 24, 2011

    ///http://www.vinavu.com/2011/06/24/charu/// வினவில இது சம்மந்தமாய் ஒரு கட்டுரை வந்துள்ளது .....

    ReplyDelete
  8. சரியான சாட்டையடிப் பதிவு..இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு ஜீ.

    ReplyDelete
  9. உங்கள் வாதங்களும் சரி ஜி..மற்ற மாதிரியும் வாதாட முடியும்...ம்ம் பார்ப்போம் என்ன நடக்குதுன்னு

    ReplyDelete
  10. I like your way of writing

    ReplyDelete
  11. ஏற்கனவே நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து லண்டனில் வசிக்கும் நடிகர் அஜீத்குமார் facebook பார்த்திருக்கிறேன்! அவருக்கும் எக்கச்சக்கமான நண்பர்கள்!//

    மக்களே, இவன் யாருக்கோ முறையா ஆப்பு வைக்கிறான்...
    என்னம்மா குத்து குத்துறாய் மச்சி...
    நீங்க செம கில்லாடி தான்..

    நானும் இப்படி நிறைய பேஸ் புக் பார்த்திருக்கேன்...
    ஹி....ஹி...

    //ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்கள் தேவைப்படுகிறார்கள்! //

    அடிச்சாம் பாரு ஒரு அடி....
    கலக்கல் மச்சி...



    பாஸ்....உண்மையில் ஒரு பெண் இவ்வளவு சாட்டிங்கினையும் ஏன் சேமிக்க வேண்டு? இது என்னவோ திட்டமிட்ட சதி என்று தான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. நிஜ உலகில்தான் ஏமாற்றுக்கள் நடக்கிறது என்றால் பதிவுலகிலும் அதே நடக்கிறது. நிச்சயமாக இது ஒரு செட்அப் செய்த விஷயமாகத்தான் நான் கருதுகிறேன்.

    பொம்பளைன்னா என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்/நம்பவேண்டும் என்கிற மனப்பான்மையை ஒழிக்கவேண்டும்.

    ReplyDelete
  13. மாப்ள நல்லா அலசி இருக்கீர்!

    ReplyDelete
  14. //கந்தசாமி. said...
    சோபா ஷக்தி தொடர்பாக சர்ச்சை எழுப்பிய போது தமிழச்சிக்கு ஆதரவாக , ஷோபா சக்திக்கு எதிராக, அவரை ஒரு சமூக விரோதி ரேஞ்சுக்கு விமர்சித்த சாரு இன்று "சோபா ஷக்தி போல தன் மீதும் தமிழச்சி பொய் குற்றம் சாட்டுகிறார் " என்று சொல்வது ......எப்பூடி..!!//
    தங்களுக்கு வரும்போதுதானே தெரிகிறது! :-)
    சாரு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது ஒன்றும் புதிதல்லவே!
    சாருவை நான் நியாயப்படுத்தவில்லை! இருவரும் விரும்பியே நடைபெற்றதாகத் தோன்றுகிறது!

    //கந்தசாமி. said...
    ///http://www.vinavu.com/2011/06/24/charu/// வினவில இது சம்மந்தமாய் ஒரு கட்டுரை வந்துள்ளது .....//

    நீங்கள் கொடுத்த லிங்க் இலும் அப்படித்தான் தெரிகிறது! அந்தப்பெண் முதலிலேயே விலகி இருக்கலாம்...இதுல அந்தப்பெண்ணுக்கு ஒரு காதலன் வேறு இருக்கிறாராம்! என்னமோ போங்கப்பா!
    இந்த விஷயத்தில கரெக்டா தமிழச்சிய எப்படி தொடர்பு கொண்டார்?

    //மைந்தன் சிவா said...
    உங்கள் வாதங்களும் சரி ஜி..மற்ற மாதிரியும் வாதாட முடியும்//
    ம்ம்ம்! முடியும் மைந்தன்! ஆனால் அந்தப் பெண் ஒன்றும் சிறு பிள்ளையல்ல! சாருவை மட்டும் குற்றம்சாட்ட!

    //செங்கோவி said...
    சரியான சாட்டையடிப் பதிவு..இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு ஜீ//சாட்டை அடியா? யாருக்கு? வேணாம்ணே! :-)

    //"என் ராஜபாட்டை"- ராஜா said...I like your way of writing//ம்ம்ம்...!

    //ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
    ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்கள் தேவைப்படுகிறார்கள்! நச்!// :-)

    //நிரூபன் said...
    ஏற்கனவே நான் யாழ்ப்பாணத்தில் பிறந்து லண்டனில் வசிக்கும் நடிகர் அஜீத்குமார் facebook பார்த்திருக்கிறேன்! அவருக்கும் எக்கச்சக்கமான நண்பர்கள்!//
    மக்களே, இவன் யாருக்கோ முறையா ஆப்பு வைக்கிறான்...
    என்னம்மா குத்து குத்துறாய் மச்சி...
    நீங்க செம கில்லாடி தான்..// ஆகா! என்ன மச்சி இது? நான் பாத்தத சொன்னேன் அவ்வளவுதான்! :-)

    //DrPKandaswamyPhD said...பொம்பளைன்னா என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும்/நம்பவேண்டும் என்கிற மனப்பான்மையை ஒழிக்கவேண்டும்// அதே! நன்றி! வருகைக்கு!

    //விக்கியுலகம் said...
    மாப்ள நல்லா அலசி இருக்கீர்!//ம்ம்ம்...!

    ReplyDelete
  15. ஜீ.....!

    நீங்கள் சொல்லுறதும் சரிதான். வேலியில போற ஓணான தேவையில்லாமல் சாரு தன்னுடைய வேட்டிக்குள் விட்டுவிட்டார். அவதிப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

    ReplyDelete
  16. /ஆனா ஒண்ணு! பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்கள் தேவைப்படுகிறார்கள்! //

    மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  17. பெண்ணீயவாதிகளுக்கெல்லாம் பிரபலமடைவதற்காவது ஆண்கள் தேவைப்படுகிறார்கள்! //நச்சுன்னு சொல்லிருக்கீங்க
    எனது இன்றைய பதிவுக்கு கருத்து சொன்னதற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. //ஒன்று மட்டும் புரியவே மாட்டேங்குது! ஒரு பெண் தனக்கு ஒருவர் ஆபாசமா பேசுவது பிடிக்கலைன்னா முகத்தில் அறைந்தது உடனேயே அந்த நபரை 'கட்' பண்ணிடுவாளா? இல்லை Chat பண்ணிய வரிகளை எல்லாம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தமிழச்சிக்கு அனுப்புவாளா?

    அது சரி ஒரு நல்ல பெண் எப்படி தமிழச்சியிடம் சங்காத்தம் வைத்திருக்க முடியும்? அவரது FaceBook பார்த்தால்...சாரு Chat பண்ணியதாகச் சொல்லப்படும் வரிகளை விட படு மோசமான வார்த்தையாடல்கள்! கெட்ட பெண்களே அந்தப்பக்கம் போகமாட்டார்கள்! இதுல நல்ல பொண்ணு எப்படி? //

    :)

    ReplyDelete
  19. 2 சைடும் தப்பு இருக்கு பாஸ்

    ReplyDelete
  20. AnonymousJuly 21, 2011

    basicaaly it is being said that the party at the other end of the so called writer is at fault. Leave out the man / woman difference there is no doubt about a young person has different level understanding and a person who is litle old should have much more decent and matured views. Here the so called writer always ho hos about one or about the whole society for harassing him. He uses all the filthy language even when he writes a reply to some one's request. Here other party is a lady it has taken a different level filthy language. Ofcourse I definetly agree if the girl was not catious about his vulgarity over language. But do not declare this porukki writer is not be blamed he has no right to write about something declare that he is a genious. Sorry should not refer ur family but have to just imagine if your family ladies faced this issue...? ur response....?

    ReplyDelete