மீண்டும் ஒருதரம் என்னை வேறுவழியில்லாமல் தெய்வத்திருமகள் பார்க்க வைத்துவிட்டார்கள் - பேரூந்தில்! I am Sam திரைப்படம் பார்த்தவர்களால் நிச்சயம் தெய்வத்திருமகளைச் சகிக்க முடியாது - நிலா தவிர்த்து!
எனது I am Sam திரைப்படம் பற்றிய பதிவின்போது இதை தமிழில் தழுவும்போது கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இன்ஸ்பிரேசன்னு I am Sam படத்தைக் குறிப்பிடலாம்னு எழுதியிருந்தேன்.
சில அன்பர்கள் சொன்னார்கள், 'நன்றின்னு டைட்டில்ல சொன்னா ஒரிஜினலா படமெடுத்த கம்பெனிக்கு பெருந்தொகையைக் கொடுக்கவேண்டி வரும் அது சாத்தியமில்லை என்பதால்.....
ஆடுகளம் பட டைட்டிலில் வெற்றிமாறன் இன்ஸ்பிரேஷன்னு ஒரு லிஸ்டே கொடுத்தார் - அந்தப் படத் தயாரிப்பாளர்களெல்லாம் அவர் வீட்டுக் கதவைத் தட்டுவதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை!
ஆனால் ஆடுகளத்தில் எந்த சீனும் அப்பட்டமான காப்பி கிடையாது! ஆரம்பத்தில் வரும் ஒரு துரத்தல் சீன் மட்டும் City of God ஐ ஞாபகப்படுத்தியது அதுபோல சிலவே! ஆனால் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் மட்டும் தனது வழக்கப்படி காப்பி பேஸ்ட்டில் அசத்தியிருந்தார்!
ஆனால் காட்சிக்குக் காட்சி அப்பட்டமாக மிக மோசமான முறையில் காப்பி அடித்து வந்திருக்கும் படம் தெய்வத்திருமகள்!
ஹாலிவுட் படங்களில் மனசை டச் பண்ணும் செண்டிமென்டலான சீன்கள் நிறைய வரும். அது ஒரு கணத்தில் உறுத்தாமல், இயல்பாகக் கடந்துசெல்லும். அனால் அதைத் தமிழ்ப்படுத்துவாங்க பாருங்க....அந்த சீனை ஸ்லோ மோஷனில் இழு....த்து, பயங்கரமான பின்னணி இசை கொடுத்து!
கமல் தனது படங்களில் ஒரு சிறு சீனை ஹாலிவுட் இலிருந்து பயன்படுத்தினால்கூட அதைக் கண்டுபிடித்து குய்யோ முறையோ என அலறுபவர்கள்கூட தெய்வத் திருட்டுமகளை ஆதரிக்கிறார்கள் என்பது ஆச்சரியமே!
அதற்கு முக்கிய காரணம் நிலா மட்டுமே! நிலா - நிச்சயம் தமிழ்சினிமாவின் புதுமுயற்சிதான்!
இப்படி ஒரு குழந்தையை நாங்கள் கண்டதில்லை! நிலா அளவுக்கு I am Sam லூசி நிச்சயம் கவர மாட்டாள். காரணம் அவள் ஒரு வழமையான ஹாலிவுட் குழந்தை அவ்வளவே! அதாவது ஹாலிவுட் படங்களில் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். தமிழ்சினிமாவின் வழக்கம் போன்ற தத்துவஞானிகளாகவோ,அதிகப்பிரசங்கிகளாகவோ அல்லது மணிரத்தினத்தின் 'பயங்கரவாதிகளாகவோ' இருப்பதில்லை.
நானும் நிலாவை ரசிக்கலாம் என்றால் விக்ரமின் தொல்லையைச் சகிக்க முடியவில்லை. Sam இன் வாயசைவையும், ஹெயார் ஸ்டைலையும் அப்படியே காப்பி பண்ணிய விக்ரம் அடிஷனலா மனிதர் மழலைக்குரலில், இன்ஸ்டால்மென்டில் கதைத்து 'வித்தியாசமான நடிப்பில்' எரிச்சலூட்டுகிறார்.
உண்மையில் I am Sam படத்தை பார்த்தவர்களால் விக்ரமின் ஓவர் ஆக்டிங்கை சகிக்கவே முடியாது. இந்த நடிப்புக்குத்தான் இப்பவே பலர் தேசிய விருதை ரிசர்வ் பண்ணி வைத்திருகிறார்கள்!
I am Sam இல் சாமுக்கு அவனைப்போலவே நான்கு தோழர்கள்! அவர்களின் பேச்சும், நடிப்பும் மிக அழகானவை! அதில் ஒருவர் மிக சீரியசான (அவரளவில்) பேர்வழி! அவர் கோட் சீனில் சாம் பேசும்போது படு சீரியஸாக சொல்வார். 'சாம்
எதையும் நன்றாய் யோசித்துப் பேசு! நீ பேசுவதெல்லாம் பதிவு செய்யப்படுகிறது!' - நீதிமன்ற டைப்பிஸ்டைக் காட்டிச் சொல்வார்!
தெய்வத்திருமகளிலும் விக்ரமுக்கு நான்கு தோழர்கள். அபத்தமாக, வேற்றுக்கிரக ஜந்துகள்போல காட்டியிருப்பார் விஜய் - இவர்களுக்கு விக்ரம் எவ்வளவோ தேவல எனும்படியாக!
ஒரு படத்தைக் காப்பி அடிப்பதுகூட பிரச்சினையில்லை ஆனால் என்னமோ தாங்களே உட்கார்ந்து யோசித்ததாக டீ.வி.க்களில் அலப்பறை குடுப்பாங்க பாருங்க அதைத்தான் தாங்க முடிவதில்லை. இதைத்தவிர்த்தாலே சந்தோஷம் என்று ஒருவருக்கு பின்னூட்டம் போட்டிருந்தேன்.
ஆனா வழக்கம் போலவே...
படம் எடுக்க முடிவு பண்ணியதும்
சார் ஆறுமாசமா (டைரக்கர்) தூங்கல!
சார் குளிக்கல! சார் பல்லு வெளக்கல!
சார் கழிவறைக்குப் போனாக்கூட பேப்பர், பேனாவோட போன வேலைய மறந்து கதைதான் எழுதினாரு!
அலப்பறையை ஆரம்பிச்சுட்டாங்க!
இன்னொரு பக்கம் விக்ரம் சார் ஒரு மாசமா மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களோட தங்கி நடிப்புப் பயிற்சி எடுத்தாராம்! - ஏன் I am Sam DVD யே போதுமே!
எனக்கு விக்ரமின் நடிப்பு பிடிக்கும், அவரின் உழைப்பின் மேல் மரியாதையுண்டு! பட் யு நோ விக்ரம் சார்...நீங்க திரைக்கு வெளியே நிஜத்தில் 'பீட்டர்' விடும் நடிப்பு சுத்தமாக ரசிக்க முடிவதில்லை!
கொஞ்சமாவது நேர்மை இருந்தால் அடுத்தவர்களின் உழைப்பைத் திருடிவிட்டு இப்படி 'கெத்'தாகப் பேச முடியுமா? ஒருபடத்தை எடுக்கமுன் ஹாலிவுட் இல் கதைக்காக, ஸ்கிரிப்ட்டுக்காக அவர்களின் உழைப்பு அசுரத்தனமானது! படை பரிவாரங்களோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் நின்று scene யோசிக்கும் கேணத்தனங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை!
அப்படியிருக்க I am Sam போன்ற ஒரு சிக்கலான திரைப்படத்துக்கு அவர்கள் எந்தளவு உழைத்திருப்பார்கள். அவ்வளவு உழைப்பையும் ஒரு DVD மூலம் திருடிவிட்டு Sean Penn ஐத் தாண்டியும் விடுகிறார் விக்ரம்! ஏற்கெனவே ஹாலிவுட் திரைப்படங்களை அப்படியே காப்பி பண்ணி, அவங்ககிட்டயே கிராபிக்ஸ் செய்து எந்திரனில் ஷங்கர் ஹாலிவுட்டைத் தாண்டியிருந்ததாகச் சிலர் பெருமைப்பட்டார்கள்! எப்படித்தான் முடியுதோ?
உண்மையில் விக்ரமும், விஜய்யும் எத்தனை தரம் I am Sam DVD யைத் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பார்கள் என்பது அவர்களின் மனச்சாட்சிக்குத்தான் தெரியும்!
அஜீத்தின் 'மங்காத்தா',விஜய்யின் 'யோஹன்' கூட ஹாலிவுட் படங்களின் காப்பி என்று சொல்லப்பட்டாலும் அதில் கண்டுகொள்ள ஏதுமில்லை. ஏனெனில் அவை தமிழ்சினிமாவின் மைல்கல்லாகவோ, மிகச்சிறந்த படைப்புகளாகவோ யாரும் பிரச்சாரம் செய்யவோ, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப் போவதோ இல்லை.
ஒருசிறுகதையை மிக அற்புதமாக படமாக்கிய ஒரு எழுத்தாளர், இயக்குனர் ஆகியோரின் சொந்த முயற்சியான, நேர்மையான படைப்பான 'அழகர்சாமியின் குதிரை' என்னமாதிரியான வரவேற்பைப் பெற்றது? எத்தனைபேரைச் சென்றடைந்தது எனத் தெரியவில்லை!
திருட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பு உண்மையான உழைப்புக்கும், நேர்மையான படைப்புகளுக்கும் கிடைகிறதா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்!
ஒரு நல்லவனுக்கு கிடைக்கிற எல்லா மரியாதையும் கெட்டவனுக்கும் கிடைக்குதே,ஏன்?...ஏன்?க்கும் கிடைக்குதே,ஏன்?...ஏன்?
ReplyDeleteமாப்ள நச்!
ReplyDeleteபடிச்சிட்டு வறேன்
ReplyDeleteI am Sam காட்சிகள் இப்போது தான் பார்த்தேன்.
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை தான்.
படத்தில் நிலா மட்டும் ஆறுதல்.
நியாயமான கேள்வி. இவர்களுக்கு ஐ ஆம் சாம் இன்பிரசனாக இருந்தாலும் டிவிக்களிலும் வார இதழ்களிலும் கொடுக்க்ம் பேட்டிகள் அபத்தத்தின் உச்சம்.
ReplyDeleteஎத்தனை முறை உரக்க சொன்னாலும் இங்கு உள்ள திருடர்களின் காதில் சேராது ,,,
ReplyDeleteநீங்க முதல்ல யாழ் கொழும்பு பயணத்தை தவிர்கிறது நல்லம் ஜி
ReplyDeleteதெய்வத்திருமகள் இன்னும் பார்க்கவில்லை. டவுன்லோட் செய்து வைத்துள்ளேன்.
ReplyDeleteவெற்றிமாறன் - உழைப்பால் உயர்ந்தவர்
ReplyDeleteஅந்தப்பட்தில் இவ்வளவு கதைகள் இருக்கா...
ReplyDeleteகாபி இல்லாம தமிழ் சினிமா வராது போலிருக்கு...
ReplyDeleteநகலை மட்டுமே ரசிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததால், உங்கள் அளவுக்கு "சிக்கல்" எழவில்லை.
ReplyDelete///தமிழ்சினிமாவின் வழக்கம் போன்ற தத்துவஞானிகளாகவோ,அதிகப்பிரசங்கிகளாகவோ அல்லது மணிரத்தினத்தின் 'பயங்கரவாதிகளாகவோ' இருப்பதில்லை./// அதே ..)
ReplyDelete////திருட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பு உண்மையான உழைப்புக்கும், நேர்மையான படைப்புகளுக்கும் கிடைகிறதா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்!// திருட்டுக்கு கிடைக்கும் பப்பிளிசிட்டி நேர்மைக்கு கிடைப்பதில்லை!!!
ReplyDelete//ஒருசிறுகதையை மிக அற்புதமாக படமாக்கிய ஒரு எழுத்தாளர், இயக்குனர் ஆகியோரின் சொந்த முயற்சியான, நேர்மையான படைப்பான 'அழகர்சாமியின் குதிரை' என்னமாதிரியான வரவேற்பைப் பெற்றது? எத்தனைபேரைச் சென்றடைந்தது எனத் தெரியவில்லை!//
ReplyDeleteஎனக்கும் அந்த ஆதங்கம் மிக அதிகமாகவே இருக்கிறது. இங்கே தவறு யாரிடம் என்று புரியவில்லை
உண்மையில் I am Sam படத்தை பார்த்தவர்களால் விக்ரமின் ஓவர் ஆக்டிங்கை சகிக்கவே முடியாது.
ReplyDelete...rightly said.
ஒரு படத்தைக் காப்பி அடிப்பதுகூட பிரச்சினையில்லை ஆனால் என்னமோ தாங்களே உட்கார்ந்து யோசித்ததாக டீ.வி.க்களில் அலப்பறை குடுப்பாங்க பாருங்க அதைத்தான் தாங்க முடிவதில்லை.
ReplyDelete... ஹையோ...அவங்க கொடுக்கிற பில்ட் அப்பு!!!! ஸ்ஸ்ஸ்ஸ்...... யப்பா..... முடியல!
இந்த உலகத்தில் நேர்மைக்கு என்ன வேலை பாஸ்?? அதுவும் நம்ம தமிழ் சினிமாவில் நேர்மையை எதிர் பார்த்தால் அது நம்ம தப்புதானே...
ReplyDeleteஉண்மையில் நடிகர் விக்ரம் சிறந்த நடிகர்தான், ஆனா என்ன எல்லா இடமும் நடிப்பதுதான் சகிக்க முடியவில்லை, நெத்தியடி பதிவு இதை தெய்வதிருமகள் பட குழுவில் யாராவது ஒராளாவது பார்க்க வேண்ட்டும் என்பதுதான் என் ஆசை,
நீங்கள் சொல்வது உண்மை தான்.
ReplyDeleteபடத்தில் நிலா மட்டும் ஆறுதல்.
நல்ல பதிவு.
ReplyDeleteஅட இந்த படமும் காப்பி தானா.....
ReplyDeleteஎன்னடா கொடுமை இது...
//உண்மையில் I am Sam படத்தை பார்த்தவர்களால் விக்ரமின் ஓவர் ஆக்டிங்கை சகிக்கவே முடியாது.//
ReplyDeletevery true
என்ன சொல்வதென்று தெரியவில்லை. I am Sam பார்க்காத காரணத்தினால் என்னமோ தெய்வத்திருமகள் பிடித்துவிட்டது.. ஆனால் காப்பியடித்துவிட்டு அதை உரிமை கொண்டாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது
ReplyDeleteகந்தலாக்கிட்டீங்க!
ReplyDeleteஆங்கில மூலத்தைப் பார்த்துவிட்டு, தமிழில் பார்த்தால் நிச்சயம் கடுப்பு தான் வரும்..நல்லவேளை நான் தப்பித்தேன்..
ReplyDeleteமங்காத்தா பத்தி தான் அடுத்த பதிவு எழுதிக்கிட்டு இருக்கேன்..இப்படி டென்சன் ஆகாம சும்மா ஜாலியா..
ReplyDeleteஆனந்தவிகடனில் விக்ரம் புளுகியதை படித்தீர்களா..? ஐயாம் சாம் பட தழுவல் இருக்கிறது ஆனால் காப்பி இல்லை..என்கிறார் நடிகை ,கவர்ச்சியாக நடிப்பேன்.ஆனால் ஆபாசம் காட்டவே மாட்டேன் என்பது போல விக்ரம் சொல்லியிருக்கிறார்
ReplyDeleteசரியா சொன்னீங்க..........
ReplyDeleteஎன்வென்று சொல்வது இவர்களை...
\\\\உண்மையில் விக்ரமும், விஜய்யும் எத்தனை தரம் I am Sam த்வத் யைத் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பார்கள் என்பது அவர்களின் மனச்சாட்சிக்குத்தான் தெரியும்!\\\\
ReplyDeleteசார் அவங்களுக்கு மனசாட்சி இருந்தால் இப்படி பீலா விடமாட்டாங்களே
உண்மை தான் நண்பரே.உழைப்புக்கு கிடையாது மரியாதை .
ReplyDeletesariya sonninga sar intha adipodikal pannura alapara thanga mutiyala sar
ReplyDeleteநகலை அசலாய் காட்டுவது சிரமம்தான்...
ReplyDeleteநூற்றுக்கு நூறு உண்மை...!
ReplyDeleteநண்பரே சூப்பர் அலசல்
ReplyDeleteஉழைப்பிற்கு கிடைக்கும் மரியாதையினையும், திருட்டிற்கு கிடைக்கும் புறக்கணிப்பினையும் அருமையாக ஒப்பிட்டு விளக்கியிருக்கிறீங்க.
ReplyDeleteநீங்க போற பஸ்ஸிலை கூடத் தெய்வத் திருமகள் போட்டு தொல்லை பண்றாங்களே என்ன பண்ணுவோம் பாஸ்?
///தமிழ்சினிமாவின் வழக்கம் போன்ற தத்துவஞானிகளாகவோ,அதிகப்பிரசங்கிகளாகவோ அல்லது மணிரத்தினத்தின் 'பயங்கரவாதிகளாகவோ' இருப்பதில்லை./// அதே ..)
ReplyDeleteஇன்னொரு காமெடி... இசையருவி நிகழ்ச்சியில் இந்த படத்தின் குழு வந்திருந்தது... நேயர் ஒருவர் கால் செய்து படத்தை பாராட்டினார்... படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சொல்லி அந்தக்காட்சி நன்றாக இருப்பதாக சொன்னார்... உடனே குழுவினர் பதறியடித்து "அய்யய்யோ க்ளைமாக்சை சொல்லிட்டீங்களே..." என்று கூவினார்கள்... என்னவோ அவங்களே சொந்தமா யோசிச்சு எடுத்தா மாதிரி... த்தூ...
ReplyDeleteதான் சேர்த்து வைத்திருக்கும் கொஞ்சம் மரியாதையையும் தன் பேச்சு புதைத்து விடும் என்று தெரியாமல்தான் விக்ரம் பேசுகிறார்...
ReplyDeleteShame
Jee!
ReplyDelete////அதற்கு முக்கிய காரணம் நிலா மட்டுமே! நிலா - நிச்சயம் தமிழ்சினிமாவின் புதுமுயற்சிதான்!////
எனக்கு தெய்வத்திருட்டு மகளை ஒரளவுக்கு வரவேற்க இது மட்டுந்தான் காரணம். மற்றப்படி, தெய்வத்திருட்டு மகளின் ‘மைய இசையே’ திருட்டு என்றபோது ஜி.வி.பிரகாஸின் மீதிருந்த நம்பிக்கை ஒட்டுமொத்தமாகச் சரிந்தேபோனது.
ம்ம்ம்ம்..
ReplyDeleteநிலா பிடிச்சிருக்கா..
ஜி.வீ ஆயிரத்தில் ஒருவன், மதராசபட்டினத்தைத் தவிர பிடிக்கல..
விஜய், விக்ரம் - வேண்டாமே.. :)
அஜீத்தின் 'மங்காத்தா',விஜய்யின் 'யோஹன்' கூட ஹாலிவுட் படங்களின் காப்பி என்று சொல்லப்பட்டாலும் அதில் கண்டுகொள்ள ஏதுமில்லை. ஏனெனில் அவை தமிழ்சினிமாவின் மைல்கல்லாகவோ, மிகச்சிறந்த படைப்புகளாகவோ யாரும் பிரச்சாரம் செய்யவோ, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப் போவதோ இல்லை.
//
சரி தான் :)
நெத்தியடி ஜீ, இவர்கள் திருந்த போவதே இல்லை
ReplyDeleteவிக்ரம் டி.வி.யில் இப்படம் குறித்து பேசிய பேச்சும், கெத்தாக அமர்ந்திருந்த தோரணையும்...எத்தனை நாள் அந்த பருப்பு வேகுதுன்னு பாப்போம். ஆப்பு வைக்க கிளம்பி இருக்கும் பதிவர் படைக்கு தோள் கொடுப்போம். விக்ரமுக்கு தேசிய விருது குடுத்தால் அந்த கமிட்டியில் இருப்பவர்களுக்கு உலக சினிமா பற்றிய பார்வை துளியும் இல்லை என்றுதான் அர்த்தம்.
ReplyDeleteவிக்ரம் மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில் கடைசி வரை காப்பின்னு ஒத்துக்கவே இல்லை. கண்டிக்கத்தக்கது
ReplyDeleteஇதுக்கும் மேல விக்ரம் சுப்பரா நடிச்சிருக்காரு தேசியவிருது நிச்சயம் அவருக்கு கெடக்கணும் அப்பிடின்னு யாரவது நெனச்சிங்கன்னா நாம ஒங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும். ஒங்கள்ள எத்தனைபேருக்கு ரெண்டு தடவக்கி மேல இந்த படத்துல இருக்கற விக்ரம் - சாரா மட்டும் வாற ப்ளாஷ் பாக் காட்சிகள முழுசா பாக்குற தைரியம் இருக்கு?
ReplyDeleteதெய்வதிருமகள் : ஒரு சந்தானம் ரசிகனின் மாற்று பார்வை
தெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு
உங்கள் இந்த பதிவின் பல பாகங்களை உங்கள் ஏக்கமாக பலரின் பதிவுகளுக்கு நீங்கள் பின்னுாட்டியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்!
ReplyDeleteஉங்கள் ஏக்கம் பல இடத்தில் சரியாகதான் இருக்கிறது!
[ஆனால் காட்சிக்குக் காட்சி அப்பட்டமாக மிக மோசமான முறையில் காப்பி அடித்து வந்திருக்கும் படம் தெய்வத்திருமகள்!]
ReplyDeleteஇத என்னால ஏத்துக்க முடியல, அதுக்காக காபி இல்லன சொல்லல, சரியாய் காபி அடிகலன்னு சொல்றன்.
நானும் இந்த I am Sam படத்த பார்த்தன் ஆனா நீங்க சொல்ற மாதிரி, அந்த படத்த அப்படியே காப்பி அடிச்சா மாதிரி தெரியல.
நான் ஏன் அப்படி சொல்றனா I am Sam படத்துல இதவிட மிக அழகா தந்தை மகள் பாசம் தெரியும்.
எனக்கு தெரிஞ்ச சில விஷயம் கோவிசிகதிங்க,
ஆங்கில படத்துல வக்கிலா வரவங்க கேரக்டர் மிக அருமையா இருக்கும், ஏன் சொல்றானே தன மகள் தான் உலகம் அப்படின்றது ஹீரோ, தன்னோட தொழிலுக்கு நடுவுல தன்னோட மகன் கிட்ட பேச கூட நேரம் இல்லாதவங்க இந்த வக்கீல், இத முதல் சீன் அறிமுகமே நமக்கு சொல்லும்.
கோர்ட் சீன் வரும் பாருங்க, அதுல ஹீரோவோட நண்பர்களும், அந்த குழந்தைய வழக்க உதவற லேடி பேசற டயலாக் எல்லாம் நீங்க தமிழ் ல கம்பர் பண்ணவே முடியாது.
ஒரு சீன் வரும், அந்த குழந்த கிட்ட ஹீரோ, தான் ஒரு சரியான தகப்பன் கிடையாதுன்னு வருத்த படுவான், அப்ப அந்த குழந்த maturity அதிகம் அப்படின்னு (அதாவது அந்த குழந்த வளருது) புரிய வைக்க ஒரு வசனம் வரும், " எல்லா தகப்பனும் தன்னோட குழந்தைங்க கிட்ட அதிகமா இருக்கறது இல்ல, ஆனா நீ எப்பவும் என்கூடவே இருக்க, அதனால நீதான் சிறந்த தகப்பன் அப்படினு சொல்லும் (அதாவது இன்றைய பொரளாதார உலகத்துல நாம எல்லோரும் பணத்துக்க ஒடரமே தவிர தன்னோட குழந்தை கள் கிட்ட நேரம் செலவிடரம்னா நிச்சயமா இல்ல), உடனே ஹீரோ ஆமாம் இல்ல அப்படின்னு சிரிப்பான், அதாவது இவன் இன்னும் வளரல அப்படின்னு.
கடைசியல அந்த வக்கில்கிட்ட ஹீரோ சொல்ற வசனம் இன்னும் அழகா இருக்கும்,
இது போல பல விஷயங்கள், I am Sam படத்துல சிறப்ப வந்துருக்கும், நீங்க சொல்ற மாதிரி அப்பட்டமான காபி கிடையாது.
தமிழ் ல இவங்க எடுத்துகிட்ட விஷயம் மிக குறைவு என்பது என்னோட கருத்து.
ஹீரோவோட மேனரிசம்
மனவளர்ச்சி குன்றிய தந்தை மகள் உறவு.
ஹீரோவோட நண்பர்கள்.
எனக்கு தெரிஞ்சு I am Sam படத்தோட வசனங்கள் இதுல ஒரு சில சதவிகிதம் தான்.
நேரில் கேட்கப்பட்ட விடயம் பதிவில் விரிவாக!!வாழ்த்துக்கள் சகோ!
ReplyDelete@Elayaraja Sambasivam
ReplyDeleteநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நண்பரே!
///காட்சிக்குக் காட்சி அப்பட்டமாக மிக மோசமான முறையில்///
இங்கு மிகமோசமான முறையில் என்று ஒரிஜினலைக் கேவலப்படுத்துவது போன்ற காட்சியமைப்பையே கூறினேன்!
நான் சொல்லாமல் விட்ட பல விடயங்களில் சிலதைக் கூறியதற்கு நன்றி! உண்மையில் இதுபற்றி எழுதுவதானால் நாலைந்து பதிவு தேவை!
நீங்கள் குறிப்பிட்ட அந்த கோர்ட் சீனுக்கே தனி ஒரு பதிவு போடலாம்!
நன்றி உங்கள் பகிர்தலுக்கு!
கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!
ReplyDeleteமாப்பிள நான் ரெண்டு படமும் பார்கல ஆனா தமிழ்ல பார்த்தா காட்டானுக்கு ஓரளவு புரியுமையா...
ReplyDeleteகாட்டான் குழ போட்டான்
''அஜீத்தின் 'மங்காத்தா',விஜய்யின் 'யோஹன்' கூட ஹாலிவுட் படங்களின் காப்பி என்று சொல்லப்பட்டாலும் அதில் கண்டுகொள்ள ஏதுமில்லை. ஏனெனில் அவை தமிழ்சினிமாவின் மைல்கல்லாகவோ, மிகச்சிறந்த படைப்புகளாகவோ யாரும் பிரச்சாரம் செய்யவோ, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப் போவதோ இல்லை.''என்ன ஒரு எதிர் பார்ப்பு தாங்க முடிய வில்லை
ReplyDeleteஎங்க கண்ணுக்கு என்னவோ குருவி படத்தோட அட்ட காபிதான் அவதார்னு படுது.
ReplyDeleteஇந்த திருட்ட பத்தி நாங்க உதயநிதி சாருக்கு tweet பண்ணி இருக்கோம். அவரு இத கண்டுக்கலனாலும் இந்தமாதிரி திருட்டுக்கள் ஒழியும்வரை இந்த முயற்சி தொடரும்.
திருட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பு உண்மையான உழைப்புக்கும், நேர்மையான படைப்புகளுக்கும் கிடைகிறதா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்!
ReplyDeleteஒப்புக் கொள்ள வேண்டிய விஷயமும்
அப்படியே டைம் இருக்கும்போது இந்த படத்த பார்த்துடுங்க
ReplyDeleteMain Aisa Hi Hoon (2005)
ரொம்ப ரொம்ப நியாயமான ஆதங்கம்.... நச் பதிவு......!
ReplyDeleteVery...Very....Very....Very....Superb and bold post...Hatsoff jee..:-))
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே.வாழ்த்துகள்.ஆனாலும் இவர்களை திருத்த முடியாது.
ReplyDelete