நகரத்திலிருந்து நீங்கி, இயற்கை அழகு நிறைந்த மலைப்பதையூடகச் சென்று கொண்டிருக்கிறது அந்தப் பேருந்து! அதிகாலை நேரம் தூக்கக் கலக்கத்துடன் பயணிகள். வெறுமையும், மென்சோகமும் படர்ந்த முகத்துடன் ஒரு அழகிய இளம் பெண் - அவள் பெயர் மரியா!
மரியாவுக்குத் தான் கர்ப்பமாயிருப்பது தெரியவர, காதலனிடம் விஷயத்தைச் சொல்கிறாள். அவன் திருமணம் செய்துகொள்வதைப் பற்றிப் பேச, மரியா தன்னால் அவனது சிறிய வீட்டில் வந்து வாழ முடியாதெனவும், அவனைத் தன வீட்டில் வந்து தங்குமாறும் கூற, அது எப்படி பெண்வீட்டில் வந்து தான் தங்குவது என அவன் மறுக்க, முடிவில் தகராறு முற்றி, சரியான புரிந்துணர்வற்ற அவர்களின் டீன் ஏஜ் காதல் முடிவுக்கு வருகிறது!
இப்போது மரியா பெரும் சிக்கலில்! தனது குடும்பம், வயிற்றில் வளரும் சிசு எல்லாரையும் கவனிக்கவேண்டிய சூழ்நிலை! இந்நிலையில் மீண்டும் பிராங்க்ளினைச் சந்திக்க, அவளது உடனடித்தேவை நல்ல வருமானமுள்ள வேலை என உணரும் அவன் ஒரு வேலையைப் பரிந்துரைக்கிறான். அது, நியூயோர்க்கிற்கு போதைமருந்து கடத்திச் செல்லுதல்!
தன்னம்பிக்கையும், துணிச்சலும் கொண்ட மரியா வேறொரு வழியும் இல்லாததால் ஒத்துக்கொள்கிறாள். பிராங்க்ளின் அறிமுகப்படுத்தும் டீலரான பெரியவர், வேலை, நடைமுறை சிக்கல்கள் எல்லாமே அவளுக்கு விளக்கி உன்னால் முடியுமா? எனக் கேட்கிறார். அங்கே இன்னொரு அழகான பெண் லூசியைப் பார்க்கிறாள். பின்பு தற்செயலாக மீண்டும் லூசியை வீதியில் சந்திக்கும் மரியா, அவளுடன் பேச முயல, முதலில் மறுக்கும் அவள் தனது வீட்டிற்கு மரியாவை அழைத்துச் செல்கிறாள்.
எதுவும் பேசாமல் ஒரு பாத்திரத்தில் பெரிய திராட்சைப் பழங்களைக் கொண்டுவந்து மரியாவிடம் தருகிறாள். ஒரு பழத்தை எடுத்து அது உடைந்துவிடாமல், சிதையாமல் அப்படியே விழுங்குமாறு கூறுகிறாள். மரியா முயற்சிக்கிறாள்..முடியவில்லை! ஒரு திராட்சையை எடுத்து இலகுவாக விழுங்கும் லூசி, இதே அளவில் குறைந்தது நாற்பது காப்சியூல்களை விழுங்கவேண்டும் என்கிறாள்.
பயணம் செய்யும் நாளில் உணவு எதுவும் அருந்தக் கூடாது, ஏனெனில் இயற்கையின் உபாதை காரணமாக வெளியேறி ஒன்று குறைந்தாலும், கொன்றுவிடுவார்கள்! லூசி தன் அக்கா கர்லா நியூயார்க்கில் இருப்பதாகவும், சிறுவயதில் பார்த்தது தான் இப்போதுள்ள நிலையில், தொழிலில் அவளைச் சந்திக்க விரும்பவில்லை என்றும் கூறுகிறாள்.
குறிப்பிட்ட அந்தநாளில் விமானத்தில் மரியா, பிளாங்கா, லூசி அனைவரும் பயணமாகிறார்கள்.பின்பு என்னவாகிறது?தனது கிராமத்தைவிட்டு பக்கத்திலிருக்கும் நகரத்திற்குக் கூட தனியாக சென்றிராத மரியா விமான நிலையத்தில், நியூயார்க்கில் சந்திக்கும் அனுபவங்கள் என்னென்ன?
அறிமுகமில்லாத மரியாவுக்கும், பிளாங்காவுக்கும் உதவி செய்யும் கர்லாவும் அவள் கணவன், அவர்கள் பற்றிய உண்மை தெரிந்தும் காட்டிக்கொடுக்காத நல்லவரான வேலைவாய்ப்பு முகவரான பெர்னான்டோ, விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரிகள் என ஒவ்வொரு சிறிய பாத்திரங்களும் கவர்கிறார்கள்!
விமான நிலையத்தில் போதை மருந்து சந்தேகத்தில் யூரின் டெஸ்ட் செய்ய, வயிற்றில் குழந்தை இருப்பதால் அதன் காரணமாக எக்ஸ்-ரே டெஸ்டிலிருந்து தப்பிக்கிறாள் மரியா!
காப்சியூல்களை விழுங்கியதால் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்றஞ்சி நியூயார்க்கில் 'ஸ்கான்' செய்து பார்க்கிறாள். குழ்காந்தையின் அசைவுகளை பார்க்கும் பொது மரியாவின் முகபாவனைகள் மிக அழகான கவிதை!
விமானத்தில் மரியா எதிர்கொள்ளும் அனுபவம்! நினைத்தே பார்க்கமுடியாத அதிர்ச்சி!
காப்சியூல்களை விழுங்கியதால் குழந்தைக்கு ஏதாவது ஆபத்து நேருமோ என்றஞ்சி நியூயார்க்கில் 'ஸ்கான்' செய்து பார்க்கிறாள். குழ்காந்தையின் அசைவுகளை பார்க்கும் பொது மரியாவின் முகபாவனைகள் மிக அழகான கவிதை!
விமானத்தில் மரியா எதிர்கொள்ளும் அனுபவம்! நினைத்தே பார்க்கமுடியாத அதிர்ச்சி!
லூசிக்கு நேரும் முடிவு! அதை கர்லாவிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் மரியா, உண்மை தெரிந்ததும் கர்லாவின் கோபம், பின்பு புரிந்து கொண்டு அமைதியாகும் கர்லாவின் நடிப்பு!
சொந்த நாட்டைவிட்டு, வருமானத்திற்காக அந்நிய நாட்டில் வாழ நேர்ந்துவிட, சொந்த மண்ணின் நினைவுகள் ஏக்கங்களை கலங்கும் கண்களுடன் விவரிக்கும் கர்லாவின் வார்த்தைகள் நம் எத்தனையோ பேரின் உணர்வுகளாக!
விமான நிலையத்தில் அதிகாரி ஒருவர் மரியாவிடம் அவளிடம் உனக்கு நியூயார்க்கிற்கு விமான டிக்கட் எடுக்க ஏது பணம், யார் பணம் தந்தது? அது மட்டுமே தங்களின் சந்தேகத்திற்கான காரணம் எனக்கூறுவது ஒன்றே, அவள் வாழும் பிரதேசத்தின் தன்மையைப் பிரதிபலிக்கிறது!
மரியா போதை மருந்து விழுங்கும் காட்சி, சுகவீனமையும் லூசிக்கு மருத்துவ உதவி செய்யாமல் அவளின் வயிற்றைக் கிழித்து காப்சியூல்களை எடுப்பது - இதை நேரடியாகக் காட்டாமல் உணரவைப்பது மனம் பதறச் செய்யும்!
- ஆனால் இதே போன்ற காட்சியை 'அயன்' படத்தில் கொடூரமாக விலாவாரியாகக் காட்டி, அதிர்ச்சியைவிட அருவருப்பை அதிகமாக ஏற்படுத்தியிருப்பார்கள்!
2004 இல் வெளியான இப்படத்தில் மரியாவாக நடித்த Catalina வுக்கு சிறந்த நடிகைக்கான Berlin Film Festival விருது கிடைத்தது. சிறந்த நடிகைக்கான Academy Award விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
இயக்கம் : Joshua Marston
மொழி : Spanish
நாடு : Colombia
முதல் வருகை..
ReplyDelete////சொந்த நாட்டைவிட்டு, வருமானத்திற்காக அந்நிய நாட்டில் வாழ நேர்ந்துவிட, சொந்த மண்ணின் நினைவுகள் ஏக்கங்களை கலங்கும் கண்களுடன் விவரிக்கும் கர்லாவின் வார்த்தைகள் நம் எத்தனையோ பேரின் உணர்வுகளாக!// அழகாக சொன்னீங்க பாஸ்.
ReplyDeleteஜீ...!
ReplyDeleteநிச்சயமாகப் படத்தைப் பார்க்கத் துாண்டுகிறது. எப்படியாவது பார்க்க வேண்டும்.
உங்களின் பதிவின் போக்கிலேயே “அயன்“ சீன் கண்ணுக்குள் வருகிறது. அதை நீங்கள் சொல்லியிருக்காவிட்டாலும் புரி்ந்திருக்கும்.
கலக்கம் பாஸ்
விமர்சனம் நல்லா இருக்கு
ReplyDeleteபடம் பார்த்த திருப்தி
உலக சினிமா என்ற தலைப்பில் வாரம் ஒரு அட்டகாசமான படத்தை முன்பு ஆனந்த விகடனில் ஹாய் மதன் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.. அவர் பகிர்ந்ததில் இந்தப்படமும் ஒன்று...
ReplyDeleteநல்ல விமர்சனம் நண்பரே..
நல்ல விமர்சனம்...தேடி நல்ல படத்தை விமர்சித்ததக்கு நன்றி..
ReplyDeleteதேடி பார்க்க முயற்சி செய்கிறேன்...
Good review. I am yet to see this movie.
ReplyDeleteவழமை போல விமர்சனம் சூப்பர் தல!!
ReplyDeleteஇங்கிலீசு படம் பாக்கிறதால என்ன படம் எங்க இருந்து சுடுராங்கன்னு தெரியுது என!
ReplyDeleteபடம் பார்க்க முயற்சிக்கிறேன்.......
ReplyDeleteநல்ல விமர்சனம்...
நானும் உங்கள மாதிரி இப்ப கொஞ்சம் வேற்று மொழி படங்களும் பாக்கிறன். முக்கியமாக ஆங்கில படங்கள்.....
ReplyDeleteஸ்பானிஷ்ல ட்ரேட்-னு ஒரு படம் உண்டா?
ReplyDelete//சொந்த நாட்டைவிட்டு, வருமானத்திற்காக அந்நிய நாட்டில் வாழ நேர்ந்துவிட, சொந்த மண்ணின் நினைவுகள் ஏக்கங்களை கலங்கும் கண்களுடன் விவரிக்கும் கர்லாவின் வார்த்தைகள் நம் எத்தனையோ பேரின் உணர்வுகளாக!//
ReplyDeleteவேணாம்...அழுதுடுவேன்.
அந்த நடிகை முகம் எப்பவுமே சோகமாத்தான் இருக்கும் போலிருக்கே..
ReplyDeleteஅயன் காட்சி இங்க இருந்து உருவுனதா..பார்த்தீங்களா, மொத்தமாச் சுட்டா தனிப்பதிவு போட்டு திட்டுறீங்கன்னு தான் இப்படி பிட்டு பிட்டா சுடுறாங்க.
ReplyDeleteஉங்களது விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது...
ReplyDeleteபடம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்...
ReplyDeleteஃஃ- ஆனால் இதே போன்ற காட்சியை 'அயன்' படத்தில் கொடூரமாக விலாவாரியாகக் காட்டி, அதிர்ச்சியைவிட அருவருப்பை அதிகமாக ஏற்படுத்தியிருப்பார்கள்!ஃஃ
விடுங்க தமிழ் படம் என்றாலே அப்படித்தானே
//!* வேடந்தாங்கல் - கருன் *!// :-)
ReplyDelete//கந்தசாமி. said...அழகாக சொன்னீங்க பாஸ்// நன்றி!
//மருதமூரான். said...
உங்களின் பதிவின் போக்கிலேயே “அயன்“ சீன் கண்ணுக்குள் வருகிறது. அதை நீங்கள் சொல்லியிருக்காவிட்டாலும் புரி்ந்திருக்கும்//
:-)
//மகேந்திரன் said...
விமர்சனம் நல்லா இருக்கு படம் பார்த்த திருப்தி//
நன்றி!
//மைந்தன் சிவா said...
இங்கிலீசு படம் பாக்கிறதால என்ன படம் எங்க இருந்து சுடுராங்கன்னு தெரியுது என!//
நான் படம் பார்ப்பது குறைவு மைந்தன்! ஆனா அப்பப்ப ஏதாவது மாட்டுது! :-)
//ஆகுலன் said...
படம் பார்க்க முயற்சிக்கிறேன்.....// பாருங்க பாஸ்!
//கார்த்தி said...
ReplyDeleteநானும் உங்கள மாதிரி இப்ப கொஞ்சம் வேற்று மொழி படங்களும் பாக்கிறன். முக்கியமாக ஆங்கில படங்கள்...//
நல்லது பாஸ்! ஆங்கிலத்தில் நிறைய மெனக்கெடாமல் உலக சினிமாவுக்கு வாங்க கார்த்தி! ஈரானிய சினிமால ஆரம்பிங்க!
//மாய உலகம் said...
உங்களது விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது...// :-)
//மதுரன் said...விடுங்க தமிழ் படம் என்றாலே அப்படித்தானே// :-)
//செங்கோவி said...
ReplyDeleteஸ்பானிஷ்ல ட்ரேட்-னு ஒரு படம் உண்டா?// ஆமாண்ணே! என்னா ஆர்வம் அண்ணனுக்கு!
//செங்கோவி said...
அந்த நடிகை முகம் எப்பவுமே சோகமாத்தான் இருக்கும் போலிருக்கே..//
இல்ல! நல்ல ஸ்டில்ஸ் கிடைக்கல! சூப்பரா இருக்கும்! :-)
//செங்கோவி said...
அயன் காட்சி இங்க இருந்து உருவுனதா..பார்த்தீங்களா, மொத்தமாச் சுட்டா தனிப்பதிவு போட்டு திட்டுறீங்கன்னு தான் இப்படி பிட்டு பிட்டா சுடுறாங்க//
இதுல தமிழ் இயக்குனர்கள் சிடி பார்த்து படம் எடுக்கிறாங்கன்னு அயனிலயே நக்கல் வேற!
விமர்சனம் சூப்பர்யா
ReplyDeleteமாப்ள நன்றி!
ஜீ... said..
ReplyDelete//ஆமாண்ணே! என்னா ஆர்வம் அண்ணனுக்கு! // ஆரண்ய காண்டம் படம் அதைச் சுட்டு எடுத்ததுன்னு சொல்றாங்களே..அப்படீன்னா பார்த்துட்டு ஒரு பதிவு போடுங்க.
//நல்ல ஸ்டில்ஸ் கிடைக்கல! சூப்பரா இருக்கும்! :-) // தகவலுக்கு நன்றி நண்பரே!!!
//இதுல தமிழ் இயக்குனர்கள் சிடி பார்த்து படம் எடுக்கிறாங்கன்னு அயனிலயே நக்கல் வேற! // ‘அய்யோ திருடன்’ன்னு திருடனும் சேர்ந்து கத்திட்டா, தெரியாதுன்னு நினைப்பு.
//விக்கியுலகம் said...விமர்சனம் சூப்பர்யா மாப்ள நன்றி!// நன்றி மாம்ஸ்!
ReplyDeleteசகோ/விமர்சனம் அசத்தல்..
ReplyDeleteபகிவிற்கு அன்புடன் பாராட்டுக்கள்...
உலக சினிமா பார்க்க தொடங்கிய காலத்தில் பார்த்த படம்... அருமையான படம்...
ReplyDeleteட்ரேட் படத்துக்கும் ஆரண்யகாண்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை கடத்தல் துரத்தல் என்பதை தவிர ... ட்ரேட் படத்தை சீன் பை சீன் சுட்டு "விலை" என்று ஒரு படம் வந்துள்ளது.. :)
நல்ல விமர்சனம் சகோ
ReplyDeleteஅயன் இந்த படத்தை பார்த்து தான் சுட்டாங்களா? ம் ம்
ReplyDelete//vidivelli said...
ReplyDeleteசகோ/விமர்சனம் அசத்தல்..// :-)
//...αηαη∂.... said... ட்ரேட் படத்தை சீன் பை சீன் சுட்டு "விலை" என்று ஒரு படம் வந்துள்ளது.. :)//அப்படியா? :-)
//Mahan.Thamesh said...
நல்ல விமர்சனம் சகோ// :-)
//சி.பி.செந்தில்குமார் said...
அயன் இந்த படத்தை பார்த்து தான் சுட்டாங்களா? ம் ம்//
அப்படியெல்லாம் இல்ல பாஸ்! ரெண்டு சீன்தான் லைட்டா சுட்டு! :-)
இன்னொரு புதுப்படம் தந்திருக்கிறீர்கள் ஜீ.வாரவிடுமுறை இன்று.பார்க்க முயற்சிக்கிறேன்.நன்றி !
ReplyDeleteஅண்ணே, ஏதாவது கில்மா பட விமர்சனம் போடவும் ஹி ஹி
ReplyDeleteexcellent writting, nice movie.thanks
ReplyDelete