கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் யோஹன் படம் பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே இப்படி ஒரு கேள்வியும் பரபரப்பாக! எனது பதிவிலும் சிலர் இதைப்பற்றி பின்னூட்டியிருந்தார்கள்! முகநூலிலும் வலைத்தள நண்பர்கள் சிலர் ஒரு வழி பண்ணியிருந்தார்கள்! எல்லாத்துக்கும் காரணம் படத்தின் போஸ்டர்தான்!
ஒரு போஸ்டருக்காக அமெரிக்க போய் படம்பிடிக்க தேவையில்லை! அதனால் பின்னணியில் கிராபிக்ஸ் துணை கொண்டு...அமெரிக்கா அது ஓக்கே! அதுவும் ஒரிஜினலில் உள்ளதையே பயன்படுத்தாமல் கவனமாக மாற்றி இருப்பது பாராட்டுக்குரியது!
ஆனால் போஸ்டரில் முக்கியமா யாரைப் பார்ப்பார்கள்?
ஒரிஜினலா விஜய்யையே படமெடுத்திருக்க முடியாத பட்சத்தில், கோர்ட் போட்ட ஒரு விஜய் படத்தை பாவிச்சிருக்கலாம்! அதுவும் முடியாவிடில், வேறு ஏதாவது ஒரு போட்டோவில் மாத்தியிருக்கலாம்!
அதையெல்லாம் விட்டு ஒரிஜினல் போஸ்டரில் உள்ள படத்தில விஜயின் தலையையும், ஒரு கையும் பொருத்தி இருந்ததுதான் (அப்படியே தெரிகிறது கோர்ட்டின் மடிப்புகள், லைட்னிங்கில்) நம்மாளுகளின் சந்தேகத்திற்கு காரணம்!
எப்படியோ இப்போதைக்கு போஸ்டர் உல்டான்னு மட்டும் தெரியுது! ஒருவேளை போஸ்டரில் இருந்தே ஆரம்பிக்கிறோம் என்று சிம்பாலிக்கா சொல்கிறாரா கவுதம்?
அப்படியே இருந்தாலும் கவுதம் மேனனின் ஸ்டைலிஷான மேக்கிங்கில் நல்லாவே இருக்கும்! அதைவிட முக்கியமா காப்பியாக இருக்கும் பட்சத்தில் அதை நேர்மையாக இன்ஸ்பிரேஷன்னு டைட்டிலில் போட்டு ஒத்துக்கொள்ளும் அல்லது பேட்டிகளிலாவது நேர்மை கவுதமிடம் இருக்கிறதென்று நினைக்கிறேன்!
இது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போல தொடராக வர வாய்ப்புள்ளது! அப்படித்தான் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தபோது கவுதம் கூறியிருந்தார்.
Largo Winch
2008 இல் வெளியான பிரெஞ்சுப்படம்! டீ.வி.சீரியலாகவும் வெளிவந்திருக்கிறது! பிரபல பெல்ஜியம் காமிக்ஸ் கதைகளான Largo Winch இனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்! இதன் இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாகியுள்ளது!
Largo Winch comics
1970 இல் முதலாவது அத்தியாயம் வெளிவரத் தொடங்கியது! ஆசிரியர் பிரபல காமிக்ஸ் எழுத்தாளர் Jean Van Hamme மிகப்பிரபலமான இந்த காமிக்ஸ் தொடர்கள் வருடாந்தம் ஐந்துலட்சம் விற்றதாக விக்கிபீடியா சொல்கிறது!
Jean Van Hamme
இந்தப்பெயர் மட்டும் எனக்கு முன்னரே பரிச்சயம்! நான் Largo Winch காமிக்ஸ் பார்த்ததே இல்லையென்றாலும் இவரது இன்னொரு மிகப்பிரபல படைப்பான XIII காமிக்ஸின் தீவிர ரசிகன் என்பதால்! காமிக்ஸ் பற்றிய எனது முன்னைய பதிவு இது. நீங்களும் காமிக்ஸ் பிரியரா?
1984 இல் முதலாம் அத்தியாயம் வெளியானது. தமிழில் லயன் காமிக்ஸ் வெளியீடாக 'இரத்தப்படலம்' என்ற தொடராக வந்தது. சென்றவருடம்(?) முழுத் தொடரும் ஒருபுத்தகமாக வெளிவந்துவிட்டது! ஆனால் இன்னும் என்கைக்குக் கிடைக்கவில்லை! கொழும்புக்கு இன்னும் பதிப்பகத்தார் அனுப்பவில்லை என்று சொன்னார்கள், சில நாட்களுக்கு முன்! இந்தத் தொடரின் மிகப்பெரிய வெற்றிக்கு ஓவியர் William Vance இன் உயிர்ப்பான ஓவியங்களும் ஒரு காரணம்!
எங்கிருந்து தான் தேடிப்பிடிக்கிறான்களோ! ஸ்ஸ்ப்பா.. முடியல.. ji
ReplyDeleteஇப்படி தொடராக படங்கள் வெளிவருவது தமிழில் நல்ல முயற்சியாக இருக்கும் என நினைக்கிறேன்
ReplyDeleteவிஜய் படத்தை பற்றி அடிக்கடி நிறைய தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது..
ReplyDeleteஆனால் படம் வந்தால்தான் பரபரப்பின்று ஓடிவிடுகிறது...
விஜய் இந்த படமாவது கமர்சியலாக கைகொடுக்குமா..?
ReplyDeleteபுது தகவல்
ReplyDeleteநன்றிகள்மற்றும் பாராட்டுகள்...
ஆஹா இதுவுமா
ReplyDeleteபாக்கலாம்..
ReplyDelete////
ReplyDeleteஎப்படியோ இப்போதைக்கு போஸ்டர் உல்டான்னு மட்டும் தெரியுது! ஒருவேளை போஸ்டரில் இருந்தே ஆரம்பிக்கிறோம் என்று சிம்பாலிக்கா சொல்கிறாரா கவுதம்?
அப்படியே இருந்தாலும் கவுதம் மேனனின் ஸ்டைலிஷான மேக்கிங்கில் நல்லாவே இருக்கும்! அதைவிட முக்கியமா காப்பியாக இருக்கும் பட்சத்தில் அதை நேர்மையாக இன்ஸ்பிரேஷன்னு டைட்டிலில் போட்டு ஒத்துக்கொள்ளும் அல்லது பேட்டிகளிலாவது நேர்மை கவுதமிடம் இருக்கிறதென்று நினைக்கிறேன்!////
எனக்கும் கௌதமின் மேக்கிங்கின் மீது அவ்வளவு ஈடுபாடு. தழுவலென்றாலும் பரவாயில்லை. அதற்கு நன்றியாவது போட்டுவிடுங்கள் அதுதான் நல்லது.
போஸ்டர்லயே காப்பியா... :)
ReplyDeleteவிஜய் ஸ்டில் பார்த்தா ஒரிஜினல் மாதிரிதான் தெரியுது!
போட்டு தாக்குங்க..டிரைலர் பார்த்தா தெரிஞ்சிடும்..நம்ம ஆளுங்க போஸ்டரை வெச்சே பிரிச்சிட்டாங்க
ReplyDeleteஅஜீத் நடிச்சிருந்தா பில்லா மாதிரி சூப்பரா இருந்திருக்கும்...விஜய் கேரியரை இந்த படம் உயர்த்தும்...பார்க்கலாம்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி மாப்ள....காபிக்கடை வாழ்க!
ReplyDeleteபடம் வெளிவரட்டும் உண்மை தெரிந்து விடும் நண்பரே
ReplyDeleteபுது ஃபோட்டோ ஷூட் எடுத்தே ஸ்டில் வெளியிட்டிருக்கலாம்..ஏதோ கல்யாண ஃப்லக்ஸ் போர்டு போன்று ஒட்டு வேலை பார்த்தது அசிங்கம் தான்.
ReplyDeleteபோஸ்டர் என்னமோ தலையை வெட்டி ஒட்டினது போல தான் இருக்கு..))
ReplyDeleteபுதிய தகவல்களுக்கு நன்றி!
ReplyDeleteபச்சைக்கிளி முத்துச்சரத்துக்கு inspiration அப்பிடி போட்டவரா??? விண்ணைதாண்டிவருவாயும் கொஞ்சம் கொப்பிதானே????
ReplyDeleteஉங்களை தொடர் பதிவான்றுக்கு அழைத்துள்ளேன். விரும்பினால் எழுதவும்
மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்கள்
அதென்ன விஜய்க்கு மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் எல்லாரும்??
ReplyDeleteஅதுவும் விமர்சிக்க??வேறு யாரும் கிடைக்கவில்லையா??
ஜி நண்பனாய் இருந்தாலும்,நான் விஜய் ரசிகன்!
ReplyDeleteஇரண்டு படமும் பார்த்தாகிவிட்டது.... இனி தமிழில் வந்தால் பார்ப்போம்...
ReplyDeleteபோஸ்டர் நல்லா இருக்குது.............
ReplyDeleteகோடம்பாக்கமே காப்பிய நம்பி தான் இருக்குதுன்னு சொல்லுங்க :)
ReplyDeleteவிஜய் என்னும் மனிதனை எத்தனை தடைகள் தாக்கினாலும் எழுந்து பெரு விருட்சமாய் நிற்பதற்கு அணிலாய் இருப்பதை இட்டு பெருமைப் படுகிறேன்
ReplyDeleteயாரப்பா தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் -முடிவு இதோhttp://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post.html
ReplyDeleteவணக்கம் மச்சி, போஸ்டர் உல்டா என்பது பற்றிய விளக்கமும், பெல்ஜியம் காமிக்ஸ் கதைகள் பற்றிய அறிமுகமும் எனக்குப் புதியவை- பயனுள்ளவை,.
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம், தளபதி என்ன செய்யப் போகிறார் என்று.
முடியல தல நடிக்க வேட்டிய படம்ஃ தலக்கு வந்தது தலப்பாவோடு போச்சு. film
ReplyDeleteரசிக்கிற மாதிரி காப்பி அடிச்சா நல்லது தான் நண்பரே...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ...
வரட்டும் பார்க்கலாம்
ReplyDeleteவிஜய் தன் ரூட்டை மாற்றி நடித்தால் தான் வெற்றி பெற முடியும். எப்படியோ, படம் வெற்றி பெற்றால் சரி.
ReplyDeleteகாக்க காக்க' வில் வரும் நிறைய ஷாட்ஸ் ரத்தபடலத்திலிருந்து சுட்டதுதான்
ReplyDeleteஜீ...உங்களைப் பாராட்டணும் !
ReplyDeleteவணக்கம் நண்பா மிகவும் நன்றாக இருந்தது
ReplyDeleteபுது தகவல்
ReplyDeleteநன்றிகள்மற்றும் பாராட்டுகள்.
யோஹன் பற்றியும் அதன் போஸ்டரையும் இப்போது தான் பார்க்கிறேன்.
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
யோஹனை விட Largo Winch தான் ஈர்க்கிறது.
ennamaa என்னமா கண்டுபிடிக்கறீங்க?
ReplyDelete