'எங்கள் நாட்டு பாதுகாப்பு செயலரை (கோத்தாபாய ராஜபக்சே) லண்டனுக்கு அனுப்பினா, ரெண்டு நாள் மேக்சிமம்! கலவரம் முடிவுக்கு வந்திடும்'
இன்று மதிய உணவு வேளையின்போது நம்ம ரெசிடென்சில டீ.வி. பார்த்துக் கொண்டே சாப்பிட்டோமா...அப்போ லண்டன்ல என்ன நடக்குதுன்னு காட்டிட்டு இருந்தாங்களா..அப்போதுதான் நம்ம கன்சல்டன்ஸ் மாமா ஒருத்தருக்கு இந்த சூப்பர் ஐடியா வந்துச்சு!
அவர் ஜோக்கடிக்க, பக்கத்தில இருந்த இன்னொரு மாமாவும் பெரிதாகச் சிரித்துக் கொண்டார்! எனக்கு ஒரு டவுட்! ஒருவேளை சீரியசாகக் கூட சொல்லியிருக்கலாம்! சொல்லமுடியாது! அங்கே நான் மட்டும்தான் தமிழ்! மற்றதெல்லாம் சிங்கள அங்கிள்ஸ்!
எனக்கு என்னென்னமோ தோணிச்சு! வாய்க்குள்ள சோறு இருந்ததால கஷ்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்! சாப்பாடு ரொம்ப முக்கியம் இல்லையா? மற்றபடி நானும் தன்மானத் தமிழன்தான்! நம்புங்கப்பா!
'நியாயம், தர்மம், நேர்மை இவையே என்றும் வெல்லும்' ஏற்று யாரோ, எதுக்கோ, எப்பவோ போறபோக்கில சொல்லிட்டுப் போனதையே இன்னும் சீரியஸா நம்பிட்டு பலபேர் இருக்கலாம்! (நானும்கூட)
அதையே உல்டாவா எடுத்துகிட்டு வெற்றிபெற்றவர்கள் நியாயவாதிகள், நல்லவர்கள் என்று நம்பிட்டே, புத்தனின் நேரடி வாரிசுகளாகவே தங்களை நினைச்சுட்டு, இவனுங்க பண்ற அலப்பறை தாங்க முடியல! அட்வைஸ் என்ன..தத்துவங்கள் என்ன! கடவுளே என்னை ஏன் இவனுங்க கூட எல்லாம் சேர வைக்கிறே?
சிலவேளைகளில் கோபம் வந்தாலும், பலவேளைகளில் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியாத உணர்வு! ஆனால் பாருங்க இடைவிடாத ஆணிகளுக்கு மத்தியில் இவனுங்க காமெடிதான் கொஞ்சம் ரிலாக்சாவும் இருக்க வைக்குது!
அலுவலகத்தில் எல்லோருக்கும் செம்ம ஆணி! நம்ம ரெசிடென்சில் வந்தும் இரவிரவா பிடுங்கிட்டு! மண்டை காய்ஞ்சு போய் கிடைத்த ஒரு கேப்பில் நம்ம கன்சல்டன்ட் மாமா ஒருவர் தாக சாந்தி செய்யலாமா என்ற ஐடியாவை முன்வைக்க, இருவரும் நடந்து சென்றோம் இடம் தேடி!
புது இடம் ரெஸ்டாரென்ட், ஹோட்டல் எதுவும் இருவருக்கும் தெரியவில்லை. தான் ஒரு இடம் பார்த்ததாகச் சொன்ன மாமா கூட்டிச் சென்ற இடம்..அச்சு அசலாக சினிமாவில் பார்த்த டாஸ்மார்க்! இப்படி ஒரு இடத்தை வாழ்க்கையில நான் நேர்ல பார்த்ததே இல்லை. பிளாஸ்டிக் மேசை, கதிரைகள், சத்தம், சுத்தம் எல்லாம் அப்படியே!
ஆளுக்கு ஒரு பியர் ஓடர் பண்ணிட்டு காத்திருக்க, எனக்குப் பின் டேபிளில், ஒரு குடிமகன் தாழ்வான குரலில் தனது சமுதாய அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டார்!
"அங்க பாருங்க, எத்தினை வயதிருக்கும்?"
"ம்ம்ம்... இப்ப..சின்னப் பெடியளெல்லாம் " மற்றவர்.
'இனி ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு இந்தமாதிரி இடத்துக்கு வரக்கூடாது!'
மங்காத்தா!
மங்காத்தா Ocean elevan இன் உல்டா என்பதை பலர் ட்ரெய்லர் பார்த்து உறுதி செய்துள்ளார்கள்! இருந்துட்டுப் போகட்டும்!
நிச்சயம் மங்காத்தா தமிழ்சினிமாவின் அற்புதமான முயற்சியாகவோ, மைல் கல்லாகவோ இருக்கப்போவதில்லை!
அஜீத், George Clooney யைத் தாண்டப் போவதில்லை!
இது போன்ற இன்னபிற அலப்பறைகளைச் சந்திக்கவேண்டிய அபாயம் இல்லாமல், காலங்காலமாக தமிழ்சினிமா காப்பியடித்த ஆயிரக்கணக்கான படங்களில் ஒன்றாகவே இருக்குமென்பதால் பயமேதுமில்லை!
நானும் ட்ரெய்லர் பார்த்தேன்! வழக்கமான 'தல' படங்களின் ட்ரெய்லர் போலவே கலக்கல்!
நிச்சயம் மங்காத்தா தமிழ்சினிமாவின் அற்புதமான முயற்சியாகவோ, மைல் கல்லாகவோ இருக்கப்போவதில்லை!
அஜீத், George Clooney யைத் தாண்டப் போவதில்லை!
இது போன்ற இன்னபிற அலப்பறைகளைச் சந்திக்கவேண்டிய அபாயம் இல்லாமல், காலங்காலமாக தமிழ்சினிமா காப்பியடித்த ஆயிரக்கணக்கான படங்களில் ஒன்றாகவே இருக்குமென்பதால் பயமேதுமில்லை!
நானும் ட்ரெய்லர் பார்த்தேன்! வழக்கமான 'தல' படங்களின் ட்ரெய்லர் போலவே கலக்கல்!
ஆனா என்ன படம் வழக்கம் போல இல்லாம இருந்தால் சரி!
ட்ரெய்லர் எல்லாம் நல்லாய்த்தான் எடுக்கிறாய்ங்க.... ம்ம்ம்..பார்க்கலாம்!
ரைட்டு..
ReplyDelete///'எங்கள் நாட்டு பாதுகாப்பு செயலரை (கோத்தாபாய ராஜபக்சே) லண்டனுக்கு அனுப்பினா, ரெண்டு நாள் மேக்சிமம்! கலவரம் முடிவுக்கு வந்திடும்' ///அப்புறம் கலவரம் நடத்தியவங்களையும் பூமியில காண முடியாது ஹிஹி
ReplyDeleteஅட்ரா அட்ரா அப்படித்தான்....நடத்துங்க மாப்ள ஹிஹி!
ReplyDeleteகோத்தபய பற்றி அவர்களுக்க்கே தெரிந்திருக்கும் போல் உள்ளதே..
ReplyDeleteடாஸ்மாக்..டவுசர் போட்ட பையன் போகலாமா..ஹா..ஹா..
ReplyDelete//வழக்கமான 'தல' படங்களின் ட்ரெய்லர் போலவே கலக்கல்!
ReplyDeleteஆனா என்ன படம் வழக்கம் போல இல்லாம இருந்தால் சரி!
//
ரொம்ப நொந்து போயிருப்பீங்க போல!
அப்போ ஓசியன் லெவன் தானா...
ஹைய்யோ ஹைய்யோ முடியல...!
ReplyDeleteSUPER MIXER JEE....!
ReplyDeleteVOTE POTTACHU:-)SUPER MIXER JEE....!
VOTE POTTACHU:-)
kothapayaavaiye mudichuruvaanunga londenla, anga poye urinena kuuda adakka mudiyaathu,avan papu srilankala thaan vegum
ReplyDelete//இனி ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு இந்தமாதிரி இடத்துக்கு வரக்கூடாது!' //
ReplyDeleteகரெக்ட்!டிரஸ் கோடு அனுசரிக்க வேண்டாமா?!
பாக்கலாம் தல என்ன செய்திருக்கார் என்று. . .
ReplyDeleteபாஸ் அந்த டெயிலர் போடுன்கவன்....நாங்களும் பார்த்து ரசிக்கலாம்...
ReplyDeleteஒருநாள் விடியும்............
ட்ரைலரிலயே சிம்புளாக விமர்சித்து பகிர்ந்துள்ளீர்கள்..நன்றி நண்பா
ReplyDelete7.
ReplyDeletei afraid wen c yr tittle of the post he he
தீனா படத்துக்குபின் ஒரு ஃபோர்ஸ் தெரிகிறது ட்ரைலரில்....படம் செம ஸ்பீடாக இருக்கும்
ReplyDeleteதல தீயா இருப்பார் போல...கோத்தபய லண்டனுக்கு அனுப்பினா எல்லோரையும் கொன்னுடுவான்...இப்ப கலவரம் வராது என்பான்
ReplyDeleteஅதோட இவங்கள் இன்னும் சொல்லுறாங்க சுயமா சிந்திக்கிற ஆற்றலற்று இருக்கிற மாதிரிதான் தெரியுது! வெங்கட்பிரபுவின்ர படம் என்பதால் படத்தில ஒண்டுமி்ல்லாட்டியும் விசர் அடிக்காது எண்டு நினைக்கிறன்.
ReplyDeleteஜீயும் பாருக்கு போறாருன்னா பாருங்களேன்!!!
மச்சி, பிரித்தானிய கலவரம் பற்றிய டைம்மிங் காமெடி சூப்பர்.
ReplyDeleteஅப்புறம் கலவையும் சூப்பர்.
என்னுடைய டெம்பிளேட் கமெண்டிற்கு மன்னிக்கவும்,. நெட் ஸ்பீட்.
""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..
ReplyDeleteஅனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..(உங்களுக்கும் சொல்லாம் தானே சகோ)
இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..
ReplyDeleteபடம் வரட்டும் பார்க்கலாம் நண்பரே
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி நண்பரே
அடுத்த பதிவு எப்பங்க ஜீ... இப்படிக்கு ஆவலாய் இருப்பது போல காட்டிக்கொள்வோர் சங்கம்..
ReplyDelete