இந்தப் பதிவில் எதுவும் விவகாரமாக சொல்லப் படவில்லை. அதற்காக எல்லாரும் நம்பி படத்தைப் பார்த்துவிடாதீர்கள்!
ஒரு இரவு விருந்துக்குச் செல்கிறார்கள் நியூயார்க்கில் வசிக்கும் டாக்டர் பில்-லும் (Bill Harford - Tom Cruise) அவன் மனைவி ஆலிஸ்-ஸூம் (Alice - Nicole Kidman).
பில்லின் நண்பரான விக்டர் வழங்கும் அந்த கிறிஸ்மஸ் பார்ட்டியில் பில் தன்னுடன் மெடிக்கல் காலேஜில் படித்து, படிப்பைப் பாதியில் நிறுத்திச் சென்ற தனது நண்பனான பியானோ வாசிக்கும் நிக்-கைச் சந்தித்துப் பேசுகிறான். அவன் வழமையாக பியானோ வாசிக்கும் கஃபே அறிந்து கொள்கிறான்.
ஒரு இரவு விருந்துக்குச் செல்கிறார்கள் நியூயார்க்கில் வசிக்கும் டாக்டர் பில்-லும் (Bill Harford - Tom Cruise) அவன் மனைவி ஆலிஸ்-ஸூம் (Alice - Nicole Kidman).
பில்லின் நண்பரான விக்டர் வழங்கும் அந்த கிறிஸ்மஸ் பார்ட்டியில் பில் தன்னுடன் மெடிக்கல் காலேஜில் படித்து, படிப்பைப் பாதியில் நிறுத்திச் சென்ற தனது நண்பனான பியானோ வாசிக்கும் நிக்-கைச் சந்தித்துப் பேசுகிறான். அவன் வழமையாக பியானோ வாசிக்கும் கஃபே அறிந்து கொள்கிறான்.
ஆலிஸ் ஒரு பெரிசுடன் ஏராளமான ஜொள்ளு, கொஞ்சம் டான்ஸ் என்று பேசிக்கொண்டிருக்க, பில் தன்னுடன் கடலை போடும் இரண்டு பெண்களுடன் (அதில ஒண்ணு சூப்பர் என்பது ரொம்ப முக்கியம்) செம டீசண்டா ஜொள்ளு விடுகிறான்.
அந்தப் பெண்கள் பில்லைத் தங்களுடன் அழைத்துச் செல்ல, இது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே பெரிசு விடும் ஜொள்ளுக் கணைகளைத் தாங்கி, ஒரு கட்டத்தில் சுதாரித்து, தான் திருமணமானவள் என்பது திடீரென்று(?!) நினைவுக்கு வந்து தொலைக்க, விலகிச் செல்கிறாள்.
அந்தப் பெண்கள் பில்லைத் தங்களுடன் அழைத்துச் செல்ல, இது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே பெரிசு விடும் ஜொள்ளுக் கணைகளைத் தாங்கி, ஒரு கட்டத்தில் சுதாரித்து, தான் திருமணமானவள் என்பது திடீரென்று(?!) நினைவுக்கு வந்து தொலைக்க, விலகிச் செல்கிறாள்.
தனது அத்தனை செட்யூஸ் முயற்சிகளும் தோல்வியில் முடிய 'வட போச்சே' என்றவாறு பெரிசு (அந்தாள் மட்டுமா?) பார்த்திட்டிருக்க, அங்கே பில்லை அவசரமாக ஒரு ட்ரக்ஸ் ஓவர்டோசா எடுத்த் ஒரு பெண்ணுக்கு ட்ரீட்மென்ட் குடுக்க அழைக்க, அந்தப் பெண்ணைக் காப்பாற்றுகிறான் பில்.
மறுநாளிரவு பில், ஆலிஸ் இடையே ஒரு ஜாலியான மூடில் ஆரம்பிக்கும் பேச்சு, கொஞ்சம் கொஞ்சமாக வாக்குவாதமாகி அதன் உச்சகட்டத்தில் ஆலிஸ் ஒரு விஷயம் சொல்கிறாள்.
அது கடந்த வருடம் பார்ட்டியின்போது ஆலிஸ் தன குடும்பம், எதிர்காலம் பற்றி எதையும் கருத்தில் கொள்ளாது, ஒரு மனிதனிடம் தன்னையிழக்க சம்மதமாயிருந்தாள்! தவறாக எதுவும் நடக்கவில்லை- நடந்து கொள்ளும் எண்ணம் வந்தது என்பதே!
அதிர்ச்சியடைந்து (அருமையான பின்னணி இசையுடன்) பார்த்துக் கொண்டிருக்கும் பில், ஒரு தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து தனது பேஷண்டின் இறுதி விடைகூறலுக்கு செல்கிறான்.
அதிர்ச்சியடைந்து (அருமையான பின்னணி இசையுடன்) பார்த்துக் கொண்டிருக்கும் பில், ஒரு தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து தனது பேஷண்டின் இறுதி விடைகூறலுக்கு செல்கிறான்.
மனைவியின் வார்த்தைகள் ஏற்படுத்திய காயத்தால் அடிக்கடி கோக்குமாக்காக மனதில் இசகுபிசகான காட்சிகளாக கற்பனை செய்து கொள்ளும் பில், துரோகம் செய்யவிருந்த மனைவியைப் பழிவாங்க தானும் பதிலுக்கு ஏதாவது செய்யணும்னு விபரீதமாக யோசிக்கிறான்.
அதற்கேற்ப சந்தர்ப்பங்களும் அமைகிறது. விளைவு? (தலைவர் Tom இன் ரியாக்சன்கள், ஸ்டைல் எல்லாமே செம்ம!- ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்னா..சும்மாவா!)
அதற்கேற்ப சந்தர்ப்பங்களும் அமைகிறது. விளைவு? (தலைவர் Tom இன் ரியாக்சன்கள், ஸ்டைல் எல்லாமே செம்ம!- ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்னா..சும்மாவா!)
தன்னை அணுகும் ஒரு ப்ராஸ்டிட்டியூட்டுடன் சென்று பேசி(?!) விட்டு, நண்பன் நிக் பியானோ வாசிக்கும் கஃபே வந்து, அவன் கண்ணைக்கட்டிக் கொண்டு பியானோ வாசிக்கும் ஒரு குறிப்பிட்ட இரகசிய வேலை பற்றி அறிந்துகொள்கிறான்.
மனைவியைப் பழிவாங்க ஒரு அட்வெஞ்சருக்குத் தயாராக இருக்கும் பில், நிக்கிடமிருந்து அந்த நிழலான, விவகாரமான Orgy பற்றியும், அந்த இரகசிய இடத்தில் நுழைவதற்கான பாஸ்வேர்டையும் தெரிந்து கொண்டு ஒரு உள்ளே செல்ல.....!
மனைவியைப் பழிவாங்க ஒரு அட்வெஞ்சருக்குத் தயாராக இருக்கும் பில், நிக்கிடமிருந்து அந்த நிழலான, விவகாரமான Orgy பற்றியும், அந்த இரகசிய இடத்தில் நுழைவதற்கான பாஸ்வேர்டையும் தெரிந்து கொண்டு ஒரு உள்ளே செல்ல.....!
முற்றிலும் வேறுபட்ட ஒரு கனவுலகம்! கூடவே மயக்கும் இசையும் (Music -Jocelyn Pook)! நிச்சயம் ஒரு திரையரங்கில் பார்க்கும்போதே அதன் பிரமிப்பை உணரலாம் - ஆனா யாராவது வந்திடுவாங்களோன்னு டென்ஷன்ல PC ல பாக்கிறது கொடுமை!
பில் ஒவ்வொரு அறையாகச் சென்று பார்க்கும்போது, வரும் இசை கூடவே ஆச்சரியம்...தமிழ் வரிகள்! 'காதலா?.... இது ஒரு நரகமா...?' நம்ம ஊரு (யாழ்ப்பாணம்) தமிழன் மாணிக்கம் யோகேஸ்வரனின் குரலில்! ஓரிஜினலா அவருடைய சவுண்ட் ட்ராக் (பகவத்கீதை?) தான் பயன்படுத்தினார்களா தெரியல!
நிச்சயம் படம் வெளிவந்தபோது தமிழ், கலாச்சாரக் காவலர்கள் எல்லாரும் ஒரு 'வழி' பண்ணியிருப்பார்கள்! படம் 1999 இல் வெளியானது!
பில் அந்தக் கோட்டத்துக்கு சம்பந்தப்படாதவன் என அங்குள்ளவர்கள் தெரிந்து கொள்ள, ஆரம்பமாகிறது த்ரில்லான இரண்டாம்பாதி!
இங்கு,நடந்தவை பற்றி ஆராயக் கூடாது என எச்சரித்து விடப்படும் பில் அதை மீற, தன்னைச் சுற்றி பின்னப்பட்ட ஒரு மாய வலையில் சிக்குண்டு, மறுநாள் முழுதும் நிகழும் சம்பவங்களும், முதல் நாள் தான் சந்தித்த மனிதர்களுக்கும் அவற்றுக்குமான தொடர்பு என மர்ம முடிச்சுகளாக...!
இறுதியில் நண்பர் விக்டர் பில்லை அழைத்துப் பேசும்போது கொஞ்சம் தெளிந்து, அதிகம் குழம்பிப் போய் வீடு திரும்பும் பில் சந்திக்கும் உண்மை...?
இயக்கம் - Stanley Kubrick
அண்ணே ஸ்டில்ஸ்லாம் குமால்ட்டிகா இருக்குனே
ReplyDeleteதமிழ் மணம் முதல் ஒட்டு
ReplyDeleteஹா ஹா மிகவும் குழப்பமான கதையோ
ReplyDeleteசரி சரி நீங்க சொன்னதால படம் பார்க்கல ஹா ஹா
அசத்தலான விமர்சனம் பாஸ்
ReplyDeleteநான் PC லதான் பார்க்கனும்.
torrent லிங் தந்ததுக்கு நன்றி
ReplyDeleteநான் நினைக்கிறன் பதிவுலகில் முதன்முதல் Torrent லிங் தந்தது நீங்கதான்
கடைசியில் என்ன?
ReplyDeleteமுதல் படைப்பு....
ReplyDeleteவிமர்சனம் சூப்பர்ப்....!!!
ReplyDeleteஅருமையான படம் இது..ஸ்டேன்லி குப்ரிக்கின் மாஸ்டர்பீஸ் இது.
ReplyDeleteபதிவு விமர்சனமாகவும் இல்லாமல், பட அறிமுகமாகவும் இல்லாமல் பாதியில் தொங்குதே, ஏன்யா?
ReplyDelete//...தமிழ் வரிகள்! 'காதலா?.... இது ஒரு நரகமா...?' நம்ம ஊரு (யாழ்ப்பாணம்) தமிழன் மாணிக்கம் யோகேஸ்வரனின் குரலில்! ஓரிஜினலா அவருடைய சவுண்ட் ட்ராக் (பகவத்கீதை?) தான் பயன்படுத்தினார்களா தெரியல! //
ReplyDeleteமுதலில் பகவத் கீதையை பயன்படுத்தினார்கள். எதிர்ப்பு வந்ததால் நீக்கிவிட்டு, இந்த தமிழ்ப்பாடலை பயன்படுத்தினார்கள்..
good review.,
ReplyDeleteவழமை போல கலக்கல் ...
ReplyDeleteஉலக வரலாற்றில் முதல் முறையாக ...
ஜி ப்ளாகில் கில்மா படம்!!:)
ஆஹா........ இது நல்லாயிருக்கே.
ReplyDeleteரொம்முக்காக காட்டாயம் பார்க்க வேண்டும்.
நாம் ஏன் அமைதியா அந்த தோசையை சாப்பிட்டுருக்ககூடாது?
ReplyDeletehttp://spoofking.blogspot.com/2011/10/blog-post.html>
ஹாலிவுட் டாப் 10 இயக்குனர்களுள் ஒருவரான ஸ்டான்லி குப்ரிக்கின் கடைசிப்படம்.வெவ்வேறு களங்களில் படமெடுத்து அதில் வெற்றி கண்டதில் இன்று வரை குப்ரிக்கை அடித்து கொள்ள ஆளே இல்லை.
ReplyDeleteதங்கள் பதிவில் டாம் குரூசை புகழ்ந்ததில் குப்ரிக்கை கண்டு கொள்ளாமல் விட்டது சற்று வருத்தம்தான் நண்பரே.
நாவலை திரைப்படம் ஆக்கியிருப்பார் கூப்ரிக், என்னளவில் சொதப்பலான திரைக்கதையால் அமைந்த படம் இது என்பேன்!
ReplyDeleteநல்லாயிருக்கு...ஆஸ்திரேலிய bEAUTY பற்றி இன்னும் சொல்லியிருக்கலாமோ...
ReplyDeleteகுப்ரிக்கின் மாஸ்டர் பீஸ் கண்டிப்பா இப்படம் இல்ல,,,என் சாய்ஸ் 2001:a space odyssey.
ReplyDeleteஹீ ஹீ படம் கலக்கலா இருக்கும் போல
ReplyDeleteபடங்கள் கலக்கல்
ReplyDeleteஎன்ன சார் அவங்க குழப்புரதவிட நீங்க ரொம்ப குழப்பி விட்டுடீங்க, தெளிவு கிடைக்கணும்னா படம் பார்த்தே தீரனும். பார்த்திடுவோம்.
ReplyDeleteஅசத்தலான விமர்சனம்
ReplyDeleteஏய்யா இப்படி ஆசையைத்தூண்டிவிடுறிங்க.
ReplyDeleteஅப்படின்னா கட்டாயம் பார்க்கணும்போல இருக்கு
ReplyDeleteபடம் பார்க்க ஆவல் .நல்ல விமர்சனம்
ReplyDeleteவணக்கம் பாஸ்,
ReplyDeleteநலமா?
விவாத மேடையில் கொஞ்சம் பிசியாகிட்டேன். அதான் டைம்மிற்கு வர முடியலை.
மர்மங்களோடு,
திசை மாறும் மனதின் காதலையும் சொல்லும் படம் பற்றி அழகிய விமர்சனத்தினைத் தந்திருக்கிறீங்க.
டைம் கிடைக்கும் போது இந்தப் படத்தினைப் பார்க்கிறேன் பாஸ்.
2வது படமே படம் எப்பிடியிருக்குமெண்ணு சொல்லுதே! ஹிஹிஹி
ReplyDelete///தனது அத்தனை செட்யூஸ் முயற்சிகளும் தோல்வியில் முடிய 'வட போச்சே' என்றவாறு பெரிசு (அந்தாள் மட்டுமா?) பார்த்திட்டிருக்க,///
ReplyDeleteஅடடா அங்கையும் விடுறாங்களில்லையா?
ஃஃஃநிச்சயம் படம் வெளிவந்தபோது தமிழ், கலாச்சாரக் காவலர்கள் எல்லாரும் ஒரு 'வழி' பண்ணியிருப்பார்கள்! படம் 1999 இல் வெளியானது!ஃஃஃஃ
ReplyDeleteஜீ உள்ளுரில நடக்கிறதையே தட்டக் கேட்க துப்பில்ல அதுக்குள்ள எப்படீப்பா இதுக்கு துள்ளுறது..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்
சூப்பர்ப்....!!! விமர்சனம் ....
ReplyDeleteநான் மிஸ் செய்த படம். கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விட்டீர்கள். கம்ப்யூட்டரில் படம் பார்ப்பவன் என்பதால் நீங்கள் சொன்னது போல் ஜாக்கிரதையாகத்தான் பார்க்க வேண்டும்.
ReplyDeleteஎப்பவும்போல யூ ட்யூப்ல தேடப்போறேன் ஜீ !
ReplyDelete