Monday, October 31, 2011

ஏழாம் அறிவும் தமிழன் தாஸும்!


பேரூந்தில் கண்டக்டரிடம் பத்து ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிச் சில்லறை சிங்களம் தெரியாததால்,  தெரிந்தும் கேட்க முடியாமல்...தயக்கம், பயம் ....இந்த அனுபவத்தை ஒரு முறையாவது சந்திக்காத தமிழன் கொழும்பில் உண்டா?

இன்னும் வீதிகளில் போலீசைப் பார்த்துப் பம்மும் அன்பர்கள் எத்தனை பேர்? யாழ்- கொழும்பு பயணத்தில் சோதனைச் சாவடியில் இறங்கும்போது இன்னும்பலர் முகங்களில் ஏன் கலவரம்?

இன்னும் விமானங்களின் ஓசை கேட்கும்போது, ஓடிப்போய் ஒளிந்து கொள்ளத் தோன்றுகிறதே!

இந்த நிலைமை மாறாதா?

இன்னும் ஏராளமான கேள்விகள், ஆதங்கங்கள், குமுறல்கள் எப்போதும் மனதில்...!

இதெல்லாம் எதனால் ? ஏனிப்படி? ஏன்?

விடை சமீபத்தில்தான் தாஸுக்கு தெரிந்தது! 

தமிழன் வரலாறு தமிழனுக்கு தெரியவில்லை! எல்லாவற்றுக்கும் அடிப்படை இதுதான் என ட்ரெய்லர் பார்த்துத் தெளிந்தான்!  

தமிழன் வரலாறு தெரிந்து கொள்ள ஏழாம் அறிவு பார்க்கப் போனான் தாஸ்! இதுவரை அவன் சொந்தமாகத் தனது ஆறாம் அறிவைப் பயன்படுத்தியதாக அவனது வரலாற்றில் சான்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

****************

பெருமை கொண்டான்! கர்வம், இறுமாப்பு, உவகை, தன்னம்பிக்கை எல்லாமே! நரம்புகள் முறுக்கேறி...

கன்னங்கள் சூடாகி....தலை கிறுகிறுத்தது!
(இதுக்கும் தாஸ் அடித்த பியருக்கும் சத்தியமா சம்மந்தமே இல்லை!)

தாஸ் முடிவு பண்ணிட்டான்!

திருப்பி அடிப்பது! எவனா இருந்தாலும் திருப்பி அடிப்பது! நான் தமிழன்டா!

****************

வாங்க...!

இப்பிடியே நேரா போனீங்கன்னா....

எட்டாம் நம்பர் வார்டில, ஒன்பதாவது பெட்ல, ஏகப்பட்ட பத்து போட்டுட்டு படுத்திருப்பான் பாருங்க அவன்தான் தமிழன் தாஸ்!

35 comments:

 1. இந்த அனுபவத்தை ஒரு முறையாவது சந்திக்காத தமிழன் கொழும்பில் உண்டா?// இந்த அனுபவம் எல்லாத் தமிழருக்கும் உண்டா?

  ReplyDelete
 2. மாப்ள நச்!

  ReplyDelete
 3. அப்படிச் சொல்லுங்க!

  ReplyDelete
 4. ட்விஸ்ட் அருமை

  சாமர்த்தியம் கம்மியோ தாஸுக்கு??

  ReplyDelete
 5. 7 அறிவு பார்த்ததில் உமக்கும் வீரம் கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் வந்திருக்கு, மறத்தமிழனெல்லாம் சேர்ந்து கும்மி 8 நம்பர் வாட்டிலை இன்னமொரு கட்டிலை நிரப்பப்போகிறார்கள்.

  ReplyDelete
 6. அது சரி... தமிழன் நிலை...??????

  ReplyDelete
 7. //
  தமிழன் வரலாறு தெரிந்து கொள்ள ஏழாம் அறிவு பார்க்கப் போனான் தாஸ்! இதுவரை அவன் சொந்தமாகத் தனது ஆறாம் அறிவைப் பயன்படுத்தியதாக அவனது வரலாற்றில் சான்றுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!


  //

  உண்மை

  ReplyDelete
 8. இந்த பதிவுக்குத்தான் வெய்டிங்... சூப்பர்... சொல்லவேண்டியதை சொல்லாமல் சொல்லியிருக்கீங்க...

  ReplyDelete
 9. அதுக்குக் காரணம் துரோகம்-னு சொன்னாங்களே, பார்க்கலியா?


  அதுசரி, துரோகத்தை வெல்ல என்ன செய்யணும்னு தான் சொல்லலை...

  ReplyDelete
 10. கோழையா பத்திரமா நடமாடுறதை விட, தாஸ் மாதிரி உடம்பெல்லாம் பேண்டேஜோட படுக்கிறது மேல்-னு நாங்க ஸ்டார் ஹோட்டல்ல டிஸ்கஸ் பண்ணி கண்டுபிடிச்சுச் சொன்னா, கிண்டலா பண்றீங்க?

  ReplyDelete
 11. //இந்த அனுபவத்தை ஒரு முறையாவது சந்திக்காத தமிழன் கொழும்பில் உண்டா?

  இங்க இந்தியால இதே அனுபவத்தை பெங்களூரிலோ இல்லை ஹைதையிலோ அனுபவிக்காத தமிழன் இருக்கமாட்டான் நண்பரே...

  ReplyDelete
 12. boss தமிழனுக்கு வீரம் வர வைத்த காவியத்தை கொச்சைப் படுத்தாதீங்க பாஸ்

  ReplyDelete
 13. Nachunu irruku boss nalla sonnenga

  ReplyDelete
 14. //Dr. Butti Paul said...
  இந்த பதிவுக்குத்தான் வெய்டிங்... சூப்பர்... சொல்லவேண்டியதை சொல்லாமல் சொல்லியிருக்கீங்க...//
  ஏது? எனக்கே தெரியாம ஏதாவது சொல்லிட்டேனா?

  ReplyDelete
 15. //செங்கோவி said...
  கோழையா பத்திரமா நடமாடுறதை விட, தாஸ் மாதிரி உடம்பெல்லாம் பேண்டேஜோட படுக்கிறது மேல்-னு நாங்க ஸ்டார் ஹோட்டல்ல டிஸ்கஸ் பண்ணி கண்டுபிடிச்சுச் சொன்னா, கிண்டலா பண்றீங்க?//
  கிண்டலா? இல்லண்ணே நம்புங்க! இது ஒரு சிறிய கதை முயற்சி அவ்வளவே!

  ReplyDelete
 16. //தர்ஷன் said...
  boss தமிழனுக்கு வீரம் வர வைத்த காவியத்தை கொச்சைப் படுத்தாதீங்க பாஸ்//
  இல்லீங்க பாஸ்! ஆக்சுவலா வந்து... இது அதில்ல! :-)

  ReplyDelete
 17. நண்பர்கள் அனைவருக்கும் நன்றி! :-)

  இது ஒரு சிறுகதை முயற்சி என்பதைக் கூறிக் கொள்வதோடு இதற்கும் ஏழாம் அறிவு படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்!

  தவறான புரிந்துணர்வு காரணமாக ஏழாம் அறிவுக் கதைகள் என்று குட்டிக் கதைகள் எழுதும் முயற்சியில் மனதில் தோன்றிய இன்னும் இரண்டு கதைகளை எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!

  ReplyDelete
 18. பாஸ், ஏன் இந்த கொலை வெறி?

  ReplyDelete
 19. நல்ல நக்கல் ஹா

  த.ம 7

  ReplyDelete
 20. வணக்கம் ஜீ
  நீங்க என்ன சொல்ல வருகிறீங்கன்னு தெரியல.. ஏன்னா நானும் ஆறாம் அறிவை உபயோகிப்பதில்லை..!! ஆனா ஏழாம் அறிவு படத்தை பார்த்துவிட்டு இங்கு பிறந்த சிறார்கள் மாமல்லபுரத்தையும் போதிதர்மனையும் யாழ் நூலகத்தையும் தேடுகிறார்கள... நல்லதுதானே மற்றும்படி ஏன் அவர் வைத்திய சாலையில் இருக்கிறார்கள்ன்னா இருந்த ஆறாம் அறிவையும் உபயோகிக்காததே...!!!

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. இது உங்கள் முன் மட்டும் வைக்கப்பட்ட விமர்சனம் அல்ல உங்களது பிளாக்கை மட்டும் தொடர்ந்து படித்து வருபவன் என்ற வகையில் இங்கேயே பின்னூட்டி இருக்கிறேன் அவ்வளவுதான்

  ReplyDelete
 24. ஹிஹி நான் நூறு ரூபாய் கொடுத்து மிச்சம் வாங்காமல் போன சந்தர்ப்பமும் உண்டு!
  ஹிஹி கதை சூப்பர்!

  ReplyDelete
 25. tamilanai tamilale kochai paduthalama bosss...

  ReplyDelete
 26. .
  இத்தனை காலமும் தமிழ் இளம் சமுதாயம் தூகிவைத்து ஒரு தமிழ் சினிமாவின் அறிவு ஹீவியாக கொண்டாடிய முருகதாஸ் செய்த தப்பு என்ன ??
  போதிதர்மன் என்ற ஓரு மறக்கப்பட்ட தமிழனின் வரலாற்றை சொல்லும் படத்தில் தமிழனின் மறதிக்குணத்தை இடித்துரைக்கும் சில உணர்ச்சியை தூண்டும் வசனங்கள் காட்சிகளை வைத்ததுதான்..!
  பலரும் இதை தமிழனை தூண்டி விட்டு படத்தை ஓட்டுறான் சொறிஞ்சு பிழைக்கிறான் என்ற ரீதியில் விமர்சித்திருந்தார்கள்.
  அதாவது சீமான் உருவாக்கிவிட்ட ரெண்ட்.. யாரும் உணர்ச்சிவசப்பட்டு தமிழ் தமிழைப்பற்றி கதைத்தால் உடனே தமிழை வைத்து அரசியல் செய்கிறான் தமிழை வைத்து வியாபாரம் செய்கிறான் என்கிறார்கள்.. ஏன்..?
  தமிழ்ப்பற்று பேசக்கூடாத ஒரு விடயமா..?
  தமிழனுடைய மறதிப்புத்தியை சுட்டிகாட்டுவது தப்பா?
  உலகமே கொண்டாடும் குங்பூ கலையை அறிமுகப்படுத்தியது போதிதர்மன் என்ற ஒரு தமிழன் எனபது சத்தியமாக எனக்கு ஏழாம் அறிவு படத்தை பற்றிய பேச்சு வந்த பிறகுதான் இது தெரியும். ஒரு அற்புதமான் தமிழனை மீழ நினைவுபடுத்திய விதத்தில் வேணுமானால் முருகதாஸ் தப்பு செய்திருக்கலாம் ஆனால் அந்த முயற்சி நல்லது தானே!
  ஆக ..ஒருகாலத்தில் தமிழன் வீரம் செறிந்த இனம் அறிவியல் மருத்துவம் அனைத்திலும் தலைசிறந்து விழங்கியது இப்போது பல இடங்களிலும் பல்லிளித்து பிழைக்கிறான் என்று சொன்னால் ..
  எங்களது மறதிபுத்தியை குத்திகாட்டினால் சுட்டிகாட்டினால் உடனே பொத்துகொண்டு வருகிறது கோபம் இது ஏன் எங்களது குற்ற உணர்வின் வெனிப்பாடாக இருக கூடாது .. முருகதாஸ் தமிழன் மறதிக்காறன் என்று சொல்லவந்தால், உடனே… முருகதாஸ் தமிழனை தூண்டி விட்டு பிழைக்கிறான் சொறிஞ்சு விட்டு பிழைக்கிறான் என்று அதே தமிழாலேயே திருப்பி அடிக்கிறோம். அடுபடுவது ஏதோ தமிழ் தான்.. ! ஒரு மொழியைச்சுற்றிதான் எத்தனை அரசியல்.. ! இதுதான் தமிழனின் நிலைமை..!
  எதுவாக இருந்தாலும் உங்கள் பதிவின் மூலந்தான் ஒரு உண்மை வெளிப்பட்டிருக்கிறது. அது.. படத்தை பற்றி வந்த அத்தனை எதிர்மறையான விமர்சனங்களுக்கு பின்னாலுள்ள அரசியல் “முருகதாஸ் எங்களை நிக்கவச்சி கேள்விகேட்டுட்டான் எங்கள் மறதிபுத்தியை சுட்டிகாட்டிவிட்டான்” என்பதாக கூட இருக்கலாம் அத்தனையும் எங்களது குற்ற உணர்வின் வெளிப்பாடாக கூட இருக்கலாம் !

  ReplyDelete
 27. நச்சென்ற வார்த்தைகள்.

  ReplyDelete
 28. @Balasooriyan Vasakan said...
  //இத்தனை காலமும் தமிழ் இளம் சமுதாயம் தூகிவைத்து ஒரு தமிழ் சினிமாவின் அறிவு ஹீவியாக கொண்டாடிய முருகதாஸ் செய்த தப்பு என்ன ??//

  படத்துக்கு மேற்கொண்ட தமிழுணர்வுப் பிரச்சாரம்! அந்தப் பிரச்சாரத்தை தவிர்த்து சைலண்டா இருந்திருந்தா நிச்சயமா எல்லாரும் பாராட்டி இருப்பார்கள்!
  ஓவர் பில்டப் கொடுத்து படத்தை சொதப்பியது மட்டுமே! சத்தியமா வேறொன்றுமில்லை!

  நீங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு இந்தப்பதிவு உகந்ததல்ல காரணம் இது ஒரு மொக்கைப் பதிவு! :-)

  இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்...முடிந்தால் நேரில்!

  இயக்குனர் முருகதாசின் தமிழ் உணர்வை நான் மதிக்கிறேன்!
  அதுவும் உதயநிதி ஸ்டாலின் படத்தில் 'ஈழத்தமிழருக்கான துரோகம்' பற்றிப் பேசியது....!

  போதிதர்மன் பற்றிய ஓஷோவின் புத்தகம் 'ஜென் குரு போதிதர்மா' என்று நினைக்கிறேன் பெயர் ஞாபகமில்லை! முடிந்தால் வாசியுங்கள் பாஸ்! அவரைப் பற்றிய, அவரின் நகைச்சுவை உணர்வு போன்ற பல சுவாரஷ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்!

  இதுதான் உங்கள் முதல் வருகை என்று நினைக்கிறேன்!
  நன்றி உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

  ReplyDelete
 29. //FOOD said...
  நச்சென்ற வார்த்தைகள்//

  போங்க பாஸ்! மேல வாசகன் வந்து கும்மிட்டு போயிருக்கார்!
  ஒருவேளை அவரைத்தான் சொல்றீங்களோ? :-)

  ReplyDelete
 30. வணக்கம் சகோ,
  என்ன சொல்வதென்று எனக்குப் புரியவில்லை,
  என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்.
  உணர்ச்சிவசப்பட்டுத் தமிழன் உபாதைக்கு ஆளாகும் நிலமையினை நன்றாகச் சாடியிருக்கிறீங்க.
  அதே வேளை தமிழனுக்கு உணர்ச்சியூட்டும் வகையில் சினிமா எடுத்திருப்போரையும் சாடியிருக்கிறீங்க.

  ReplyDelete
 31. //நிரூபன் said...
  வணக்கம் சகோ,
  என்ன சொல்வதென்று எனக்குப் புரியவில்லை,
  என் கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்//
  அப்படியெல்லாம் இல்ல பாஸ்! இது ஒரு மொக்கைப் பதிவு! :-)

  ReplyDelete
 32. .. Thamizhan enu oru enam vundu..adarkene oru gunam undu..

  adhudhaan nakkal.. kindal.. sense of humor

  ReplyDelete
 33. சார் நீங்க எல்லா படத்தையும் கலாய்க்கிறீஙக!! இது சரிவராது ஹிஹி

  ReplyDelete
 34. //எட்டாம் நம்பர் வார்டில, ஒன்பதாவது பெட்ல, ஏகப்பட்ட பத்து போட்டுட்டு படுத்திருப்பான் பாருங்க அவன்தான் தமிழன் தாஸ்!// ஆமா... ஜீ..,பத்துபோடறத கண்டுபுடிச்சவன் ஒரு தமி'ல'னாமே!! அத பத்தி ஏதாவது...?

  ReplyDelete

Followers

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |