Tuesday, January 11, 2011

Baran


ஒருவன் காதலுக்காக என்னென்ன செய்கிறான்? அதுவும் தான் காதல் கொண்ட பெண் தன்னை விரும்புகிறாளா இல்லையா என்றே தெரியாத நிலையில்? அனாலும் இதை ஒரு காதல் கதையென்று சொல்ல முடியாது. அதையும் தாண்டி அன்பு, மனிதநேயம், புலம் பெயர்ந்தவர்கள் வேற்று நாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் எனப் பல விஷயங்களைச் சொல்கிறது! 

லத்தீப் (Lateef) ஒரு கட்டுமானத் தளத்தில் வேலை செய்யும் விளையாட்டுத்தனமான டீன் ஏஜ் பையன். அவனது வேலை தொழிலாளர்களுக்கு உணவு ஏற்பாடு, தேநீர் தயாரிப்பது மொத்தத்தில் சமையலறைப் பொறுப்பு! ஒருநாள் அங்கு வேலை செய்யும் நஜாப் (Najaaf ) என்ற ஆப்கன் தொழிலாளி விபத்துக்குள்ளாகி ஒரு காலை இழக்க, அவருடைய மகன் ரஹ்மத் அங்கு வேலைக்கு வருகிறான்.


இளவயதினனான ரஹ்மத்தால் கட்டட கடினமான வேலையில் ஈடுபட முடியாமல் போக, லத்தீப்பின் பொறுப்பிலிருந்த சமையலறை வேலை ரஹ்மாத்துக்கும், கட்டட வேலை லத்தீப்புக்கும் கொடுக்கப்படுகிறது. இதனால் ஆத்திரமடையும் லத்தீப், ரஹ்மத் கொடுக்கும் டீ, தயார் செய்யும் உணவு எதையும் அருந்துவதில்லை. எல்லோரும் ரஹ்மத்தைப் பாராட்ட மேலும் ஆத்திரமடையும் லத்தீப் சமையலறைக்குள் புகுந்து, பொருட்களைச் சிந்தி, எறிந்து அலங்கோலப்படுத்துகிறான்.

இதெல்லாம் தெரிந்தும் காட்டிக்கொடுக்காமல் ரஹ்மத் அமைதியாக தனது வேலையைத் தொடர்கிறான். இந்நிலையில் தற்செயலாக லத்தீப்புக்கு அதிர்ச்சிகரமான் ஒரு உண்மை தெரிய வருகிறது! அது...ரஹ்மத் ஒரு பெண்! அதன்பின் என்னவாகிறது?


ரஷ்ய, தலிபன் பிரச்சினை காரணமாக, ஆப்கானிஸ் தானிலிருந்து பலர் அகதிகளாக, ஈரானில். அவர்களுக்கு முகாம்களை விட்டு வெளியிடங்களில் தங்கவோ, வேலை செய்யவோ அனுமதியில்லை. வேலை செய்வதாயின் விசேட அனுமதி பெற வேண்டும். அது இலகுவானதல்ல, எனவே சட்ட விரோதமாக வேலை செய்ய, அதனை தங்களுக்கு சாதகமாக்கி குறைந்த ஊதியத்தில் வேலை வாங்குகிறார்கள் கட்டட ஒப்பந்தக்காரர்கள். இடையிடையே போலீசார் சோதனைக்கு வர, ஒழிந்து கொள்கிறார்கள் ஆப்கன் தொழிலாளிகள்.

ரஹ்மத் ஒரு பெண் என்று தெரிந்ததும் லத்தீப்பின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றம். மறுநாள் ஒழுங்காகத் தலைவாரி, நல்ல ஆடைகள் உடுத்தி இன்பண்ணி வர, சூபர்வைசர் கேட்பார், 'எதற்கு வேலைத்தளத்தில் பாப் பாடகர் போல நிற்கிறாய்?'


தன்னிடம் இறுதியாக உள்ள பணத்தை எடுத்துப் போய் நஜாப்பிற்கு ஊன்று கட்டை வாங்கி வந்து, அவர் வீட்டில் யாரோ பேசிக்கொண்டிருக்கும்போது 'கடவுள் உதவி செய்வார்' என்று கூற, தான் வந்தது யாருக்கும் தெரியாமலே, சத்தம் செய்யாமல் அங்கு வைத்துவிட்டு வெளியேறும் காட்சி.

அவளது பெயர் ரஹ்மத் என்றே அறிந்திருக்கும் அவன் தற்செயலாக ஒரு உரையாடலின் போதே தெரிந்து கொல்கிறான் அவள் பெயர் பாரன் (Baran).

அவள் கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல், தனது தங்கைக்கு உடல்நலக்குறைவு என்று அழுது, தான் உழைத்த பணம் முழுவதையும் பெற்றுக்கொண்டுவந்து கொடுக்கும் காட்சி.

பாரன் ஆப்கன் செல்லப்போகிறாள் என்று அவள் தந்தை கூறியதும், அதிர்ச்சியடைந்து, குரல் நடுங்க உரையாடும் காட்சி.

தனக்கு உதவி செய்யும் லத்தீப்பைப் பார்த்து ஓரே ஒரு தடவை, ஒரு சிறு கணம், மிக இலேசாகப் புன்னகைக்கிறாள் பாரன். உடனேயே பர்தாவால் முகத்தை மூடிக்கொண்டு விடும் ஒரு கவிதை போன்ற அழகான இறுதிக்காட்சி!


இன்னும் ஏராளம் உண்டு, குறைவான வசனங்கள், அமைதியான, பெரும்பாலும் மௌனமாக இருக்கும் பின்னணி இசை, ஏழைகளிடம் உள்ள மனிதாபிமானம், தன்மானம், முக்கியமாக சொந்த மண்ணை விட்டு வந்து வேற்றுநாட்டில் வாழும் வாழ்வின் அவலநிலை!

2001 ம் ஆண்டில் மஜீத் மஜிதியின் எழுத்து, இயக்கத்தில் உருவான இந்தப்படம் சிறந்த படத்துக்கான Grand Prix of the Americas Awards உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றது.

இயக்கம் - Majid Majidi
மொழி -   Persian

21 comments:

 1. விமர்சனம் அருமையா எழுதுறிங்க, தகவல்களுடன் அருமை

  ReplyDelete
 2. தெளிவான விமர்சனம்...நன்றி.

  ReplyDelete
 3. இன்னும் பார்க்கல தம்பி, தேர்ந்த விமர்சனம் ... கண்டிப்பா இந்தவாரம் பாத்துடுவேன் ..

  ReplyDelete
 4. நல்ல விமர்சனம் ஜீ...

  ReplyDelete
 5. அனைவரும் பார்க்கவேண்டிய் மிகச்சிறந்த படம். விமர்சனம் அருமை!!

  ReplyDelete
 6. நல்ல படத்தை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 7. ஜி .விமர்சனம் அருமை

  ReplyDelete
 8. ///ரஹ்மத் ஒரு பெண் என்று தெரிந்ததும் லத்தீப்பின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றம். மறுநாள் ஒழுங்காகத் தலைவாரி, நல்ல ஆடைகள் உடுத்தி இன்பண்ணி வர, சூபர்வைசர் கேட்பார், 'எதற்கு வேலைத்தளத்தில் பாப் பாடகர் போல நிற்கிறாய்?'

  தன்னிடம் இறுதியாக உள்ள பணத்தை எடுத்துப் போய் நஜாப்பிற்கு ஊன்று கட்டை வாங்கி வந்து, அவர் வீட்டில் யாரோ பேசிக்கொண்டிருக்கும்போது 'கடவுள் உதவி செய்வார்' என்று கூற, தான் வந்தது யாருக்கும் தெரியாமலே, சத்தம் செய்யாமல் அங்கு வைத்துவிட்டு வெளியேறும் காட்சி.//

  படம் நீங்களே காமிச்சிட்டிங்க ஜீ...இனி படம் பார்க்க அவசியம் இருக்காது..டிக்கெட் பணம் அனுப்பி விட்டுறேன்..:))

  //தனக்கு உதவி செய்யும் லத்தீப்பைப் பார்த்து ஓரே ஒரு தடவை, ஒரு சிறு கணம், மிக இலேசாகப் புன்னகைக்கிறாள் பாரன். உடனேயே பர்தாவால் முகத்தை மூடிக்கொண்டு விடும் ஒரு கவிதை போன்ற அழகான இறுதிக்காட்சி//

  mm..so touching ...

  ReplyDelete
 9. நல்ல படத்தை பற்றி அழகா விமர்சனம் செய்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 10. இத எல்லாம் எங்கேங்க தேடி பாக்றீங்க..அட சாமி

  ReplyDelete
 11. நல்ல விமர்சனம்

  ReplyDelete
 12. விமர்சனத்தை பார்த்ததும் படம் பார்க்க ஆவலை தூண்டிவிட்டது

  ReplyDelete
 13. அருமையான விமர்சனம் நண்பா !

  ReplyDelete
 14. நல்ல விமர்சனம்...வாழ்த்துகள்

  ReplyDelete
 15. ஜீ வாசிக்கவே நல்லாயிருக்கு.. படத்திலுள்ள பெண்ணிடம் ஒர வித்தியாசமாக கவர்ச்சியான முகம் பிடித்திருக்கிறது...

  ReplyDelete
 16. அடடே! தொரை வெளிநாட்டு படமெல்லாம் பாக்குது.. விமர்சனம் நல்லாயிருக்கு ஜி

  ReplyDelete
 17. உலக படம் விமர்சனத்துல நீங்க புலியா.. தெளிவான விமர்சனம்.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. அழகா விமர்சனம் பன்னி இருக்கீங்க. படத்தின் இயல்பான சூழலை எழுத்தில் மிக எளிதாக காட்டியுள்ளீர்கள்.
  நிறைய பேர் இங்குதான் கையில் கத்தியுடன் நின்று நம் பொறுமை சோதிப்பார்கள். வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்.நன்றி.

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |