எங்களுக்கும் தூர்தர்ஷனுக்குமான தொடர்பு மகாபாரத காலத்துப் பழமை வாய்ந்தது! அதாவது, இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் தூர்தர்ஷனில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பினார்கள். அதைச் சொன்னேன்!
ஹிந்தியில்தான். இருந்தாலும் பெரியவர்கள் கதை சொல்ல, ஞாயிறு காலை பத்துமணிக்கு டீ.வி.முன்னால். ஏனைய பொழுதுகளில் ரூபவாஹினி மட்டுமே. பிறகு இந்திய இராணுவம் வெளியேற, மகாபாரதப் போர் தொடங்கும் முன்னரே எங்கள் போர் ஆரம்பித்துவிட, யாழ்ப்பாணத்தில் மின்சாரம் நின்று போயிற்று!
சரியாக ஆறு வருடம் கழித்து யாழில் திரும்ப மின்சாரம் வந்தபோது, புதிதாக டீ.வி. வாங்கியோரும், இருந்ததைத் திருத்தியும் (எங்க வீட்ல இருந்தது 16 வயதான நேஷனல் கலர் டீ.வி., அது எந்த திருத்தலுக்கும் அவசியமின்றி வேலை செய்ததில் அப்பாவுக்கு ஒரு பெருமை) பாவிக்கத் தொடங்கும் போது, எல்லோருடைய பெரு விருப்பத்துக்குரிய தெரிவு தூர்தர்ஷன்தான். ஏனெனில் வேற எந்த சானலும் கிடையாது.
முதன் முதல் டீ.வி. பார்க்கும்அந்த நாள் இருக்கே...எங்கள் வயதில் இருந்த ஒவ்வொருத்தனுக்கும் அது ஒரு திருவிழா மாதிரி. அப்போ பொதிகை ஆரம்பிக்கவில்லை. தூர்தர்ஷனின் நேஷனல்... ஒரே ஹிந்திதான். அப்பப்போ கொஞ்சம் தமிழ்!
முதல் நாள் டீ.விக்கு முன்னால பயபுள்ளைக பழியாக் கிடந்து, ஹிந்தி நியூஸ், ஹிந்தி சீரியல் எல்லாம் சின்சியரா, சீரியஸா பார்ப்பாங்க.
மகாபாரத காலத்தில பார்த்த அதே விளம்பரங்களை மீண்டும் திரையில் பார்க்கும்போது அட அட என்ன ஆச்சர்யம், சந்தோஷம்! ( பத்து வருஷம் கழிச்சுப் பழைய பிரண்டைப் பார்த்த மாதிரி )
வெள்ளிக் கிழமையில் ஒளியும்ஒளியும் போடுவார்கள். எட்டரை நிகழ்ச்சிக்கு ஆறு மணியிலிருந்தே பயபுள்ளைக காத்திருக்க, முத்து முத்தா நான்கு பாடல்கள் போடுவாங்க! அது அநேகமா விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார் பாடலா இருக்கும்.
அதே வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு படம் போடுவாங்க பாருங்க. அதப் பாக்கிறதுக்கு எத்தனை போராட்டங்கள், சோதனைகள்!
மின்வெட்டு காரணமாக பத்து மணிக்கு வரும் மின்சாரம் சரியான நேரத்துக்கு வராது. வெறுத்துப் போய் இருப்போம்!
மின்சாரம் சரியான நேரத்தில வந்துட்டா...ஒளிபரப்பு நிலையத்தினர் ஹிந்தில இருந்து, தமிழுக்கு மாற்றி இருக்க மாட்டார்கள்! இது அத விடக் கொடுமை! ஹிந்திப் படத்தை இருபது நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க திடீர்னு தமிழுக்கு மாற்றுவார்கள். என்ன படம்னே தெரியாது! அநேகமா அப்படியான படம் தான் போடுவாங்க.
எல்லாமே சரியா இருந்தா ( எப்பவாவது ஒருநாள் ) சந்தோஷமா பார்த்துட்டே இருந்தா படத்தோட டைட்டில் வரும்! 'வா ராஜா வா!'
வாழ்க்கைல கேள்வியே படாத ஒரு படமா இருக்கும். இருந்தாலும் தைரியத்த இழக்காம, மனசத் தளரவிடாம இருந்தா, டைட்டில தொடர்ந்து பதின்மூன்று விளம்பரம்!
முதலாவதா 'வீக்கோ டெர்மரிக்' அதே பழைய சோப் விளம்பரம்.
பத்து வருஷத்துக்கு முன்னாடி குளிச்சிட்டிருந்த அதே 'ஆன்டி' தான் இப்போ 'அக்காவாகி' குளிச்சிட்டிருந்தா! (புரியல? நாங்க வளர்ந்திட்டோம்னு சொல்றேன்!)
விளம்பரம் முடியும்போதே கண்ணைக் கட்ட ஆரம்பிச்சுடும். அதையும் தாண்டி, கொள்கைப்பிடிப்போட இருந்தா...ஒரு ஐந்து நிமிடம் விட்டு இன்னொரு பத்து விளம்பரம்!...இதுல பாதிப்பேரு அவுட்!
ஒரு கட்டத்தில் படுமொக்கைப் படத்தின் வெப்பம் தாங்காமல் எலோருமே தூங்கி, கரெக்டா வணக்கம் போடும்போது எழுந்திருந்து பார்ப்பாங்க! (அது மட்டும் எப்பிடீன்னே தெரியல!)அந்தக்காலத்தில் ரூபவாஹினியில் எல்லாம் ஒரு நிமிடம் ஏதாவது ஒளிபரப்பில் குளறுபடி (மிக அரிதாகத்தான் நடக்கும்) நேர்ந்தாலே உடனே 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' ன்னு ஒரு கார்டு போடுவாங்க!
ஆனா தூர்தர்ஷன்ல என்னதான் ஆனாலும், எவ்வளவு நேரம் குழறுபடி நடந்தாலும் அவர்கள் எதற்குமே வருந்தியதில்லை! (ஒரு வேளை அவர்களே யாரும் நம்ம சானல் பார்க்க மாட்டார்களென நம்பினார்களோ?) ஒருவேளை தமிழக மீனவர்கள் மீது இந்தியா அரசு காட்டும் அக்கறை போலவே தனது தமிழ்நேயர்கள் மீது அரசு தொலைக்காட்சியும் அன்பு கொண்டிருந்ததோ?
என்னதான் இருந்தாலும், தேசிய விருது பெற்ற கருத்தம்மா, அந்திமந்தாரை போன்ற பல படங்களை நான் தூர்தர்ஷனில்தான் பார்த்தேன்!
( நல்ல விஷயத்தையும் சொல்லணுமில்ல? )
திடீரென்று தோன்றியது..யாழ்ப்பாணத்தில் இப்போது யாராவது தூர்தர்ஷன் பாக்கிறார்களா? எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் எல்லா வீடுகளிலும் கேபிள் கனெக்சன் இருப்பதால் இலங்கையின் தமிழ் சானலான சக்தி டீ.வி.யைக்கூட யாரும் பார்ப்பதில்லை (கொழும்பில்தான் பார்க்கிறார்கள் ).
ஆனால் யாரும் பழசை மறந்திருக்க மாட்டார்கள்!
அதனால்தானோ என்னவோ...ரிமோட்டில் சானல் மாற்றிக்கொண்டு உலாவரும்போது, எல்லா சானலிலும் கொஞ்ச நேரம் தரித்து நின்று பார்த்தாலும் பொதிகை வரும்போது நிற்காமல் ஓடுகிறார்கள் (நானும்)!
ஃஃஃஃஃஇலங்கையின் தமிழ் சானலான சக்தி டீ.வி.யைக்கூட யாரும் பார்ப்பதில்லைஃஃஃஃ
ReplyDeleteஅதெல்லாம் இப்ப இல்லிங்க எல்லாத்துக்கும் ஆப்பு வச்சது அறியலியா...
இப்ப சாதாரண உணரிகளால் இதை பார்க்க முடியாது ...
ReplyDelete//ம.தி.சுதா said...
ReplyDeleteஃஃஃஃஃஇலங்கையின் தமிழ் சானலான சக்தி டீ.வி.யைக்கூட யாரும் பார்ப்பதில்லைஃஃஃஃ
அதெல்லாம் இப்ப இல்லிங்க எல்லாத்துக்கும் ஆப்பு வச்சது அறியலியா..//
ஆமால்ல? அத மறந்துட்டேனே! நன்றி! நன்றி! :-)
2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பணத்தில் இருந்தபோது அப்பா , அம்மா எங்களை இதை மட்டும் தான் பார்கவிடுவார்கள் .
ReplyDeleteபொதிகை மாறும் போது மட்டும் தான் தமிழ் வரும் . மற்றைய படி அத்வானி parliment இல கதைக்கிறத ஒண்ணுமே புரியாமல் பார்க்கிறது . :))
ஜீ..அற்புதமான நினைவுகள்...படிக்க சுவாரஸ்யமா இருந்தது..நாங்களும் எங்கள் சிறுவயதில் தூரதர்ஷன் தெரியாட்டி மேலே மாடியில் போயி ஆண்டனாவை ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி தெரியுதா தெரியுதான்னு கத்தின நினைவுகள்...இப்போலாம் சேட்டிலைட் சேனல்ஸ் வந்தபிறகு..பொதிகையை யாரு சீண்டுரா..:))) நல்லா இருக்கு ஜீ...
ReplyDeleteஅப்புறம் உங்க லோகோ புகைப்படம் மாத்திட்டிங்களா..இது நல்லா இருக்கு...பட் எனக்கு இந்த படம் என்னனு தான் புரியல...தெரில..:(
ReplyDeleteya..got it..:)) உங்க புகைப்படத்தை மாஸ்க் மாதிரி செஞ்சுருக்கிங்க...ஓகே..ஓகே...:))
ReplyDelete//ஆனந்தி.. said...
ReplyDeleteஅப்புறம் உங்க லோகோ புகைப்படம் மாத்திட்டிங்களா..இது நல்லா இருக்கு...பட் எனக்கு இந்த படம் என்னனு தான் புரியல...தெரில..:(//
அதே போட்டோ வில கொஞ்ச ஏரியாவ விட்டு வச்சிருக்கேன்! இப்போ பயமில்லாம இருக்கா? :-))
ஒருவேளை தமிழக மீனவர்கள் மீது இந்தியா அரசு காட்டும் அக்கறை போலவே தனது தமிழ்நேயர்கள் மீது அரசு தொலைக்காட்சியும் அன்பு கொண்டிருந்ததோ///
ReplyDeleteநல்லாவே உதாரணம் கொடுக்கறீங்க மச்சி. :)
//karthikkumar said...
ReplyDeleteநல்லாவே உதாரணம் கொடுக்கறீங்க மச்சி. :)//
நன்றி மச்சி! :-)
//nis said...
ReplyDelete2001 ஆம் ஆண்டில் யாழ்ப்பணத்தில் இருந்தபோது அப்பா , அம்மா எங்களை இதை மட்டும் தான் பார்கவிடுவார்கள் .
பொதிகை மாறும் போது மட்டும் தான் தமிழ் வரும் . மற்றைய படி அத்வானி parliment இல கதைக்கிறத ஒண்ணுமே புரியாமல் பார்க்கிறது . :))//
ஓ! 'ஸ்டார் மூவீஸ்' பார்க்க அனுமதி இல்லையா? :-))
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteவெள்ளிக் கிழமையில் ஒளியும்ஒளியும் போடுவார்கள்.#
ReplyDeleteஅதற்காக காத்து கிடந்ததை மறக்க முடியுமா?
அருமையான மலரும் நினைவுகள்.
ReplyDelete//வெறும்பய said...
ReplyDelete:))//
நன்றி! :-)
//அரசன் said...
பகிர்வுக்கு நன்றி//
நன்றி! :-)
//NKS.ஹாஜா மைதீன் said...
வெள்ளிக் கிழமையில் ஒளியும்ஒளியும் போடுவார்கள்.#
அதற்காக காத்து கிடந்ததை மறக்க முடியுமா?//
நன்றி! :-)
//கனாக்காதலன் said...
அருமையான மலரும் நினைவுகள்//
நன்றி! :-)
//ஆனால் யாரும் பழசை மறந்திருக்க மாட்டார்கள்!//
ReplyDeleteஎப்படிங்க முடியும்...
உண்மைங்க.. தூர்தர்ஷனில் எந்த மொக்கைப் படத்தைப் போட்டாலும்.. வாயைப் பிளந்துட்டு பார்த்தது ஒரு காலம்..
ReplyDeleteஅப்போ வந்திட்டு இருந்த நிறைய விளம்பரங்கள் ரசிக்கும்படியாகவும்.. இன்றும் ஞாபகத்திலயும் இருக்கு..
பகிர்வுக்கு நன்றிங்க...
நேர்த்தியான நடையில், அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
ReplyDeleteஎன்ன சொல்றதுன்னே தெரியல... வரிக்கு வரி சிக்சர் அடிச்சிருக்கீங்க...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅந்தக் காலத்தில் எங்க ஆண்டெனாவை திருப்பினா சிலோன் சானெல் தெரியும்.அப்பப்ப வரும் அழகுத் தமிழுக்கும், ஒளிபரப்பு நேர்த்திக்குமாகவே சிலோன் பார்ப்பதுண்டு. .
ReplyDelete//அன்பரசன் said...
ReplyDelete//ஆனால் யாரும் பழசை மறந்திருக்க மாட்டார்கள்!//
எப்படிங்க முடியும்..//
நன்றி! :-)
//பதிவுலகில் பாபு said...
உண்மைங்க.. தூர்தர்ஷனில் எந்த மொக்கைப் படத்தைப் போட்டாலும்.. வாயைப் பிளந்துட்டு பார்த்தது ஒரு காலம்.//
நன்றி! :-)
//Chitra said...
நேர்த்தியான நடையில், அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!//
நன்றி! :-)
//philosophy prabhakaran said...
என்ன சொல்றதுன்னே தெரியல... வரிக்கு வரி சிக்சர் அடிச்சிருக்கீங்க..//
நன்றி! :-)
//வைகை said...
பகிர்வுக்கு நன்றி//
நன்றி! :-)
//சிவகுமாரன் said...
அந்தக் காலத்தில் எங்க ஆண்டெனாவை திருப்பினா சிலோன் சானெல் தெரியும்.அப்பப்ப வரும் அழகுத் தமிழுக்கும், ஒளிபரப்பு நேர்த்திக்குமாகவே சிலோன் பார்ப்பதுண்டு. .//
நன்றி! :-)
படிச்சிட்டு வரேன்
ReplyDeleteஇப்பொழுது தூர்தர்சனை நாம் முற்றிலுமாகவே புறக்கணித்து விட்டோம்
ReplyDeleteசிறுவயதில் ஞாற்றுகிழமைகளில் படம் படம் போடுவதற்கு முன்பாக "super man ,super ted" கார்ட்டூன் படம் போடுவார்கள் .அதை பார்ப்பதற்காகவே தவம் கிடப்பேன் . அந்த நினைவுகள் சுகமானவை
அது ஒரு அழகிய கனாக்காலம் ,,,
ReplyDeleteபழைய நினைவுகளுக்கு கூட்டிட்டு போய்டீங்க
ReplyDelete//நா.மணிவண்ணன் said...
ReplyDeleteசிறுவயதில் ஞாற்றுகிழமைகளில் படம் படம் போடுவதற்கு முன்பாக "super man ,super ted" கார்ட்டூன் படம் போடுவார்கள் .அதை பார்ப்பதற்காகவே தவம் கிடப்பேன் . அந்த நினைவுகள் சுகமானவை//
:-)நன்றி!
//கே.ஆர்.பி.செந்தில் said...
அது ஒரு அழகிய கனாக்காலம் ,,,//
:-)நன்றி!
//Arun Prasath said...
பழைய நினைவுகளுக்கு கூட்டிட்டு போய்டீங்க//
:-)நன்றி!
அருமையான பழைய நினைவுகள், யுனூன், சக்திமான், ஆயிரத்தில் ஓர் இரவுகதை, விராடன், கப்டன் வியூம், ஸ்ரீ கிறிஸ்ணா, நடாகங்களான ஒரு பெண்ணின் கதை, மால்குடி டேய்ஸ், திரிசூலி, ஓம் நமச்சிவாய, இப்படி பல நிகழ்ச்சிகளை பார்த்த நினைவுகள். பகிர்வுக்கு நன்றி ஜீ.
ReplyDelete//Jana said...
ReplyDeleteஅருமையான பழைய நினைவுகள், யுனூன், சக்திமான், ஆயிரத்தில் ஓர் இரவுகதை, விராடன், கப்டன் வியூம், ஸ்ரீ கிறிஸ்ணா, நடாகங்களான ஒரு பெண்ணின் கதை, மால்குடி டேய்ஸ், திரிசூலி, ஓம் நமச்சிவாய, இப்படி பல நிகழ்ச்சிகளை பார்த்த நினைவுகள். பகிர்வுக்கு நன்றி ஜீ//
வாங்க ஜனா அண்ணா! இன்னும் வரலயேன்னு பார்த்தேன்! :-)
பழைய நினைவுகளை தட்டி எழுப்ப வச்சுட்டீங்க!!!
ReplyDeleteஎனக்கும் கிட்ட தட்ட உங்க அனுபவங்கள் தான்
அடுத்தடுத்து பழைய நினைவுகளை மீட்டிட வைக்கிறிங்கள் ஜீ.. அருமை... தொடரட்டும்
ReplyDelete(சக்தி தொலைக்காட்சியிலும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போடறதால தான் கொழும்பில் உள்ளவர்கள் பார்க்கின்றனர் இல்லையேல் அங்குள்ளவர்களும் சக்தி தொலைக்காட்சியை பார்க்க மாட்டார்கள்)
முதன் முதல் டீ.வி. பார்க்கும்அந்த நாள் இருக்கே...எங்கள் வயதில் இருந்த ஒவ்வொருத்தனுக்கும் அது ஒரு திருவிழா மாதிரி "
ReplyDeleteஅருமை...
சரியாக சொன்னீர்கள்...
தமிழ் நாடும் ரூபவாகினியும் ஒரு பதிவு போடுங்க...
//ஆமினா said...
ReplyDeleteபழைய நினைவுகளை தட்டி எழுப்ப வச்சுட்டீங்க!!!
எனக்கும் கிட்ட தட்ட உங்க அனுபவங்கள் தான்//
:-)
//பிரஷா said...
சக்தி தொலைக்காட்சியிலும் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போடறதால தான் கொழும்பில் உள்ளவர்கள் பார்க்கின்றனர் இல்லையேல் அங்குள்ளவர்களும் சக்தி தொலைக்காட்சியை பார்க்க மாட்டார்கள்//
உண்மை! உண்மை! :-)
//பார்வையாளன் said...
தமிழ் நாடும் ரூபவாகினியும் ஒரு பதிவு போடுங்க...//
அதைப்பற்றி நீங்கதான் சொல்லணும் பாஸ்! :-)
ம்ம்....கொசுவத்தி வாசனையா இருக்கு!
ReplyDeleteஅஹா எழுத்துக்கு எழுத்து வாசிக்க வாசிக்க இன்பம் திகட்டுபனவாம் நண்பரே உங்கள் பதிவு.நானும் இப்படித்தான் ஒரு சந்தர்ப்பத்தில் இந்திய நண்பர் ஒருவர் என்னை பற்றி அறிமுகம் கேட்டதக்கு ஒரு சுவாரஸ்சியத்துக்காகவும் என்னை பற்றி சொல்றதுக்கு ஒண்டுமே இல்லாததாலும் நீங்கள் எழுதின மாரியே ஒரு மலரும் நினைவு எழுதுவம் என்டு அன்டைக்கு எழுத தொடங்கினவன் தான் என்னும் முடியல...அட்சய பாத்திரம் மாரி அள்ள அள்ள குறையாம வந்துகொண்டே இருந்ததால 1987 தொடங்கி இதுவரைக்கும் 1995 வரை மட்டுமே வந்து, அதுக்கு மேல என்னாலயே முடியாம... அது அப்பிடியே பாதில கிடக்கு.எம்மவர்க்கு "போர்" கொடுத்த மிக பெரும் "கொடை" இதுதான். ஆளாளுக்கு ஒரு "மஹாபாரத" ஸீரியலே வச்சிருக்கான்.எம் வ்ழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மறக்க முடியாததாய் செய்த போருக்கும் "போரார்வலர்க்கும்" நாம் என்றும் நன்றி உடையவர்.(அஹா...மலர்ர நினைவென்டோன இடுகையே பதிவு "ரேன்ஜுக்கு" போய்டுது போல)
ReplyDeleteஆஹா அருமையான நினைவுகள்..... நீங்க தூர்தர்சன் பார்த்த மாதிரி நாங்க ரூபவாஹினி பார்ப்போம், அப்போ... ஞாயிறு மதியம் வரும் அம்பிகாவின் பொன்மாலைப்பொழுது, புதன் இரவு தமிழ்ப்படம் எல்லாம் எங்கள் பேவரிட்... அப்புறம் ஆங்கில சீரியல்கள்.. ரோபோ, நைட் ரைடர், ஜெமினி மேன், மேஜிக் மங்கி, எல்லாம் ஒரு காலம்....!
ReplyDelete