சில விஷயங்களைச் செய்வதற்கு அதற்கேற்ற 'மனநிலை' (mood ) அமைய வேண்டும்! சில புத்தகங்கள் வாசிக்க - லியோ டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கியின் கதைகளை வாசிக்க ஒரு தனிப்பட்ட மனநிலை அவசியமென்று நான் நினைக்கிறேன். கடந்த நான்கு வருடமாக நான் ஓஷோவின் எந்தப் புத்தகத்தையும் வாசிக்கவில்லை.
அதேபோல உலக சினிமா! அதற்கும் ஒரு தனி மனநிலை வேண்டுமென்று என் நண்பர்கள் சிலர் சொல்வார்கள். அதை நானும் உணர்கிறேன். நல்ல படமொன்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும், மனதில் எந்தவிதக் குழப்பமுமற்ற நிலையிலேயே அவற்றைப்பார்க்க முடியும்! (சில விதிவிலக்குகள் உண்டு).
தமிழிலும் அவ்வாறே! சோகமாக, குழப்பத்தில் இருக்கும்போது, நகைச்சுவைத் திரைப் படங்களையோ, காட்சிகளையோ பார்த்து மனதை ரிலாக்ஸ் ஆக மாற்றுவதுதான் எல்லோரும் செய்வது. அந்த நேரத்தில் கலைப் படைப்புகளை, வெயில், மகாநதி போன்ற படங்களையா பார்க்கமுடியும்?
ஆனால் இந்த விதிகளுக்கு முரணாக, எனது சோகமான, தனிமையாய் உணரும், மனக்குழப்பமுள்ள பொழுதுகளில், நான் விரும்பிப் பார்க்கும் படம் 'அன்பே சிவம்'. படம் பார்த்ததும் குழப்பங்கள் நீங்கி, ஒரு தெளிவு பெற்று விட்டதைப் போல, எனது தனிமையிலிருந்து விடுபட்டதைப் போல, சோகங்களைக் களைந்தது போன்ற, ஒரு அமைதியான மனநிலையை ஏற்படுத்துகிறது!
சமீபத்தில் நண்பன் பார்த்தியுடன் (நாங்கள், நண்பர்கள் எல்லோரும் கமல் ரசிகர்களே) உரையாடும்போது, 'உன்னைப் போல ஒருவனில் கமலை ஒரு Common man ஆக உணர முடியவில்லை. ஹிந்தியில் நஸ்ருதீன்ஷா அந்தப் பாத்திரத்தில் பொருந்தியது போல், கமல் தமிழில் இல்லை. படத்தில் கமல், கமல்ஹாசனாகவே தெரிகிறார்' என்று சொன்னேன். அவன் சொன்னான் ' உண்மை! அன்பே சிவத்தில் கமல் நல்லசிவமாகவே (விபத்துக்குப் பின்) தெரிகிறார்'. உண்மைதான்!
இரு வேறுபட்ட பொருந்தாத மனநிலையுடைய இருவர் சூழ்நிலை காரணமாக ஒன்றாக இணைந்து பயணம் செய்கிறார்கள் - இதுதான் படத்தின் தீம்.
1987 இல் வெளிவந்த ஹாலிவுட் படம் Planes Trains and Automobiles.
Steve martin, John candy நடித்தபடம்.
Steve martin ஒரு விளம்பர நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் (அன்பே சிவம் மாதவன் போலவே - மாதவனின் முக பாவனைகளும் இவரைப்போலவே இருக்கும் அன்பே சிவத்தில்) John Candy அதிகமாக, அர்த்தமுள்ளதாக் பேசுபவர் (நல்லசிவம் போல). சிக்காகோவிலிருந்து நியூயோர்க் செல்லும்போது பிளைட்...இன்னும் சொல்லவேணுமா?
அன்பே சிவம் அப்பட்டமான copy என்று சொல்லமுடியாது! கமலின் flashback, காதல், கம்யூனிசக் காட்சிகள் எல்லாம் தமிழில் மட்டுமே! ஆனால் ஹாலிலிவூடை விட தமிழில் மிக அழகாக எடுக்கப்பட்டிடுக்கிறது, காட்சிகள் ஒவ்வொன்றும்!
எனக்கும் கமல், மாதவன் தோன்றும் காட்சிகள், அவர்களுக்கிடையிலான உரையாடல்கள் மட்டுமே மிகவும் பிடிக்கும். கம்யூனிசம் எல்லாம் வலிந்து திணித்த காட்சிகள் போலத் தோன்றுகிறது...காதல் காட்சிகளும் இல்லாமலே கூட ஒரு அழகான படமாகஉருவாக்கியிருக்கலாம்
ஆனால்...படம் வெற்றியடையாதென்று முதலிலேயே தெரியாதே! அப்படி நினைத்து யாராவது படம் எடுப்பார்களா?
'யார் யார் சிவம்' பாடலின் இசை, கமலின் குரல், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும்!
படத்தில் வரும் வசனகளில் ஒன்று,
'அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்!'
இப்போது எனக்குப் பார்க்கவேண்டும் போலத் தோன்றுகிறது!
முதலில் 50வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமை.. அன்பே சிவம் நல்லபடம்....
ReplyDeleteஉங்கள் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஜீ.. அன்பே சிவம் எனக்கு பிடித்த எவர் கிரீன் படங்களில் ஒன்று. இன்னும் கூட நீங்கள் இந்த இரு படங்களை ஒப்பிட்டு எழுதியிருக்கலாம்.
ReplyDelete//பிரஷா said...
ReplyDeleteமுதலில் 50வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்//
நன்றி நன்றி! :-)
//கனாக்காதலன் said...
உங்கள் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஜீ.. அன்பே சிவம் எனக்கு பிடித்த எவர் கிரீன் படங்களில் ஒன்று. இன்னும் கூட நீங்கள் இந்த இரு படங்களை ஒப்பிட்டு எழுதியிருக்கலாம்//
நன்றி நன்றி! :-)
அடடா...வடை போச்சே....
ReplyDeleteஆனா நல்லா இருக்குங்க
//முதலில் 50வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்.//
ReplyDeleteவழிமொழிகிறோம்..
அன்பே சிவம் நல்ல ரசனையான படம். கிட்டதட்ட கமல் தானே இயக்கம். நீங்கள் சொன்ன்து போல கமலும்,. மாதவனும் பேசும் உரையாடல்கள் எல்லாம் அருமை.
ReplyDelete//அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்!'//
ReplyDelete//Arun Prasath said...
ReplyDeleteஅடடா...வடை போச்சே....
ஆனா நல்லா இருக்குங்க//
:-)
//பாரத்... பாரதி... said...
அன்பே சிவம் நல்ல ரசனையான படம். கிட்டதட்ட கமல் தானே இயக்கம். நீங்கள் சொன்ன்து போல கமலும்,. மாதவனும் பேசும் உரையாடல்கள் எல்லாம் அருமை//
கமலின் இயக்கம்தான்! சுந்தர்.சி. படம் என்றால் அவரே நம்பமாட்டார்! :-)
சில விஷயங்களைச் செய்வதற்கு அதற்கேற்ற 'மனநிலை' (mood ) அமைய வேண்டும்!
ReplyDelete//////
yes
ennai mindum mindum parkka vaiththa padam ,.....
ReplyDeleteஉங்களது பார்வையில் படத்தை பற்றிய கருத்துக்கள் .... நல்லா இருக்குங்க ...
ReplyDeleteதொடருங்கள் உங்கள் பயணத்தை ...
50 பதிவுக்கு வாழ்த்துக்கள்
அது ஒரு குப்பைபடம் என்பது என் கருத்து..
ReplyDeleteஇருந்தாலும் அதை பலர் அந்த படத்தை ரசிக்கிறார்கள் என்பதை அறிவேன்...
ரசனை பலவிதம்
50 க்கு வாழ்த்துக்கள் சகோ .
ReplyDelete//பிரியமுடன் பிரபு said...
ReplyDeleteennai mindum mindum parkka vaiththa padam//
:-)
//அரசன் said...
உங்களது பார்வையில் படத்தை பற்றிய கருத்துக்கள் .... நல்லா இருக்குங்க ...
தொடருங்கள் உங்கள் பயணத்தை ...
50 பதிவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி! :-)
//பார்வையாளன் said...
அது ஒரு குப்பைபடம் என்பது என் கருத்து..இருந்தாலும் அதை பலர் அந்த படத்தை ரசிக்கிறார்கள் என்பதை அறிவேன்...ரசனை பலவிதம்//
ரசனை பலவிதம்! :-)
//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
50 க்கு வாழ்த்துக்கள் சகோ//
நன்றி சகோ! :-)
பொதுவாவே எனக்கு கமல் பேச்சுக்கள் பிடிக்கும். அதுக்காகவே அவர் படத்தை பாக்கலாம்.....
ReplyDeleteo...so so so sweet...எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு படத்தை பற்றி அலசல்...அதுவும் 50 வது படைப்பில்...அட்டகாசம் ஜீ...வாழ்த்துக்கள்..!!
ReplyDeleteஎனக்கு இது ஒரு தழுவல் படம்னு இப்ப தான் தெரியும்.:)..அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை...கமல்...கமல்..அந்த ஒரு படம் போதும் ஜீ கமலுக்கு...எனக்கும் அந்த கிரண் சம்பந்தப்பட்ட கம்யூனிஸ்ட் காட்சிகள் செம செயற்கையா இருந்தது படம் பார்க்கும்போது...ஆனால் அந்த பூ வாசம் பாட்டை பற்றியும் சொல்லிருக்கலாம்...அந்த காட்சி அமைப்பு...கமலின் expression எல்லாம் சூப்பர்..எனக்கும் அந்த மாதவன்,கமல் கு இடையே நடக்கும் தர்க்கங்கள் அந்த வசன போர்கள் ரொம்பவே இஷ்டம்..அதுவும் அந்த கடைசி காட்சியில் நாய் பின்னாடியே வரும்போது கமல் அதுகிட்டே பேசும் வசனம் பார்த்து நான் பலமுறை அழுதுருக்கேன்...எனக்கும் இந்த படம் பார்கனும்போலே இருக்கு உன்னொரு வாட்டி...!!thanks to sharing this fentastic post...:) keep rocking ....!!
ReplyDelete//ஆமினா said...
ReplyDeleteபொதுவாவே எனக்கு கமல் பேச்சுக்கள் பிடிக்கும். அதுக்காகவே அவர் படத்தை பாக்கலாம்....//
நன்றி! :-)
//ஆனந்தி.. said...
அதுவும் அந்த கடைசி காட்சியில் நாய் பின்னாடியே வரும்போது கமல் அதுகிட்டே பேசும் வசனம் பார்த்து நான் பலமுறை அழுதுருக்கேன்...//
எனக்கும் பிடிக்கும்!
//எனக்கும் இந்த படம் பார்கனும்போலே இருக்கு உன்னொரு வாட்டி...!!thanks to sharing this fentastic post...:) keep rocking ....!!//
நன்றி நன்றி! :-)
50வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்...
ReplyDeleteநான் வெகுவாக ரசித்த படம் தனியாக சென்று பார்த்தேன் அதனால்தானோ என்னவோ .நல்ல பகிர்வு ஜி + 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete//கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDelete50வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்...//
நன்றி! :-)
//நா.மணிவண்ணன் said...
நான் வெகுவாக ரசித்த படம் தனியாக சென்று பார்த்தேன் அதனால்தானோ என்னவோ .நல்ல பகிர்வு ஜி + 50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி! :-)
//ஆனால் இந்த விதிகளுக்கு முரணாக, எனது சோகமான, தனிமையாய் உணரும், மனக்குழப்பமுள்ள பொழுதுகளில், நான் விரும்பிப் பார்க்கும் படம் 'அன்பே சிவம்'. //
ReplyDeleteநானும் உங்களைப்போல் தான்...
இதுவரை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று நினைவில்லை...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. நல்ல விமர்சனம்.. அன்பே சிவம் சூப்பர் படம்..
ReplyDeletePlanes Trains and Automobiles.. ரொம்ப நாட்களாக பார்க்கனும்னு நினைச்சுட்டு இருக்கேன்..
அன்பே சிவம் அருமையான படம்.....
ReplyDeleteரொம்ப லேட்டா வந்துட்டனோ.....
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநானும் வந்தேன் என்று ஆஜர் போட்டுக்கிறேன், சார்!
ReplyDeleteபடத்தைப் பற்றிய தங்கள் விமர்சனம் சிவமா இருக்கு..
ReplyDeleteஇதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்!
சொல்ல மறந்துட்டேன். ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//அன்பரசன் said...
ReplyDeleteநானும் உங்களைப்போல் தான்...
இதுவரை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று நினைவில்லை...//
:-)
//பதிவுலகில் பாபு said...
50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. நல்ல விமர்சனம்.. அன்பே சிவம் சூப்பர் படம்..//
:-)
//NKS.ஹாஜா மைதீன் said...
அன்பே சிவம் அருமையான படம்.....
ரொம்ப லேட்டா வந்துட்டனோ...//
:-)
//Chitra said...
நானும் வந்தேன் என்று ஆஜர் போட்டுக்கிறேன், சார்!//
:-)
//ஆதிரா said...
இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்
அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்!//
//சொல்ல மறந்துட்டேன். ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்//
நன்றி! :-)
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்
ReplyDeleteஅன்பே சிவம் என்னும் திருமந்திரம் எனக்கப் பிடிக்கும் அதற்காகவே இந்த படம் பார்த்தேன். அந்த மதர் மறக்க முடியாத கேரக்டர். எனக்கு சின்ன வயசில் பாடமெடுத்த சிஸ்டர் தான் இந்த மதரோ என்று நான் எண்ணினேன். கமல் குரலில் அந்த பாடல் அற்புதம்
ReplyDelete50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரம்...
ReplyDeleteநான் பார்த்த தமிழ் சினிமா படங்களில் சமூகத்திற்கு மிக முக்கியமான கருத்தைச் சொன்ன படம் இது தான் என நினைக்கிறேன்...
இந்தப் படத்தில் எனக்கு பிடிக்காத விஷயம் ஒன்று இருக்கிறது... விபத்துக்கு முன்பு கமலிடம் கோபம், வீரம் அதிகமாக இருக்கும்... ரெளத்திரம் பழகுவார்... ஆனால் விபத்துப்பின் ஆளே மாறிவிடுவார்... பழைய குணங்கள் பறந்துவிடும்... விபத்தில் குணங்கள் கூடவா மாறும்...
ReplyDeleteஉங்கள் 50வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஜீ.
ReplyDelete50வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பே சிவம் எனக்கும் பிடித்த படம்.சரியாகத்தான் எழுதியிருக்கிறீர்கள்.
ReplyDelete@தர்ஷன்
ReplyDelete@சிவகுமாரன்
@ம.தி.சுதா
@philosophy prabhakaran
@தேவன் மாயம்
@வெறும்பய
@சென்னை பித்தன்
நன்றி!நன்றி!நன்றி!:-)
அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்!'
ReplyDeletemmmm...Grate.
//Jana said...
ReplyDeleteஅடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்!'
mmmm...Grate.//
:-)
இது படமல்ல ஒரு காவியம். என்னை மாற்றிய படம் இது! சொல்ல வார்த்தைகள் இல்லை..
ReplyDelete// ஆனால் இந்த விதிகளுக்கு முரணாக, எனது சோகமான, தனிமையாய் உணரும், மனக்குழப்பமுள்ள பொழுதுகளில், நான் விரும்பிப் பார்க்கும் படம் 'அன்பே சிவம்'. படம் பார்த்ததும் குழப்பங்கள் நீங்கி, ஒரு தெளிவு பெற்று விட்டதைப் போல, எனது தனிமையிலிருந்து விடுபட்டதைப் போல, சோகங்களைக் களைந்தது போன்ற, ஒரு அமைதியான மனநிலையை ஏற்படுத்துகிறது!
அப்படியே உங்களுடன் ஒத்துப்போகிறேன்.
எனக்கும் அந்த கிரண் சம்பந்தப்பட்ட கம்யூனிஸ்ட் காட்சிகள் செம செயற்கையா இருந்தது படம் பார்க்கும்போது...
ReplyDeletecorrect. but needed.
விமர்சனம் அருமை
ReplyDelete50வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்...
சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்..எனக்கும் யார்..யார் சிவம் பாடல் மிகவும் பிடிக்கும்..கமலின் குரல் அட்டகாசமாய் இருக்கும் இந்தப் பாடலில்..நினைவூட்டியதற்கு நன்றி..
ReplyDelete--செங்கோவி
//சீக்கிரம் செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்//
ReplyDeleteஅடடே அதுக்குள்ள 50வது வந்திட்டா...நல்லா கிளப்புறாங்கைய்யா பீதிய! வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் ஒரு சில பதிவுகள் வாசிக்கும் போது, நம்மளோட சொந்த எண்ணங்களுக்கு "டப்பிங்" குடுத்த மாரியே இருக்குங்கோ....அதுல இதுவும் ஒண்டு.
"அன்பே சிவம்"வாழ் நாளில் மறக்க முடியாத ஒரு "படம்" அல்ல ஒரு "காவியம்".இந்த ஒரு படம் மட்டுமே கமலின் வாழ்நாளுக்கும் போதும்.
"பூவுடன் சேர்ந்த நாறும் மணக்கும்" என்று கேள்விபட்டாலும் இந்த படம் பார்க்கும் போது தான் புரிந்தது.கமலோட சேர்ந்து நாயும் நடிக்கப் பழகிட்டுதென்டு.
லேட் கொமெனடுக்கு வருந்துகிறேன்... சிறந்த பதிவு... படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசித்தேன்.. வாழ்க்கையை வாழச் சொல்லும் படம்.. அற்புதம்
ReplyDelete//'யார் யார் சிவம்' பாடலின் இசை, கமலின் குரல், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும்!//
ReplyDeleteபாடல் பிடித்த அளவு படம் பிடிக்கவில்லை. ரொம்பவே ட்ராமாத்தனமாகப் பட்டது.
//படத்தில் வரும் வசனகளில் ஒன்று,
'அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்!'
//
ஆனால் வசனங்கள் அருமை.
சிலவேளைகளில் எதிர்பார்ப்பு அதிகமாக வைத்து பார்த்ததால் அப்படி ஆகியதோ தெரியவில்லை.
இன்னமும் அடிக்கடி பார்க்கும் திரைப்படம் அன்பே சிவம் மட்டுமே. இதற்கு நான் கமல் ரசிகர் என்பது மட்டும் காரணமல்ல. வரிக்கு வரி நகைச்சுவையாக எழுதப்பட்ட படத்தின் வசனங்களும் காரணம்.
ReplyDeleteஎத்தனை முறை இந்தப் படத்தைப் பார்த்தேனோ தெரியாது. படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் இறுதியில் மாதவன் கமலை காரில் ஏறச்சொல்லும் காட்சியில் அழுகை வராமல் இதுவரையில் பார்த்ததில்லை.