Saturday, December 4, 2010
எங்க வீட்ல யார் சொல்றது?
'ச்சே! இப்பிடி ஆயிடுச்சே!'
'ஆனாலும் ஏதோ நல்ல காலம் பெரிசா பயப்பிடுற அளவுக்கு அடிபடல. ஒரு கிழமை ஹொஸ்பிடல்ல இருக்கணுமாம். அதெல்லாம் பெரியாஸ்பத்திரில நல்லா கவனிப்பாங்க'.
'ஆனா சுதாவோட அம்மாவைத் தான் சமாளிக்க ஏலாது. சும்மாவே பயந்த மனிசி. மகனுக்கு அச்சிடென்ட் எண்டா அழுது ஊரைக் கூட்டிடும். இப்பவே காணேல்ல எண்டு தேடுவாங்க வீட்ல'.
-சைக்கிளை ஊன்றி மிதித்துக் கொண்டே, யோசித்தவாறு.
'மத்தியானம் சாப்பிடவேற இல்ல. பசிக்கல. ஆனா தலையிடி. கைக்கடிகாரம் ஆறு மணி என்றது. பதினைந்து நிமிஷத்தில கோண்டாவில் போயிடலாம். எட்டரைக்குத் தானே ஊரடங்கு? போயிட்டு வர நேரம் காணும்'.
தட்டாதெருச் சந்தியில, டெலிபோன் கதைக்க ஒரு கியூ. அதில ஒரு ஆமிக்காரனும்.
'இன்னும் டெலிபோன் லைன் அதிகமா குடுக்கத் தொடங்கல. செல்போன் எப்படி இருக்குமெண்டு இங்கிலீஷ் படத்தில பாத்ததுதான். இப்பதான் கொழும்பிலயே கொஞ்சம் கொஞ்சமா பாவிக்கிறாங்களாம். எப்பிடியும் மிலேனியம் பிறந்தாப்பிறகுதான் இங்க வரும்'.
'எதுக்கும் எங்க வீட்ல சொல்லிட்டு போகலாமா..? வேணாம் வந்திடலாம். இரவு ஸ்ரார்ல டேர்மினேட்டர் போடுறாங்கள். வந்து பாக்க வேணும்'.
கொக்குவில் சந்தியில ஒரு சாப்பாட்டுக் கடையில வடை,டீ.
'அப்பாடா! தலையிடி குறைஞ்ச மாதிரி இருக்கு. இப்பவே இருட்டீட்டுது. மழை வரப் போகுதோ? குடையும் இல்ல. ஏதோ டியூட்டரில கிளாஸ் முடிஞ்சிருக்கு..அந்த ரோஸ் சுடிதார் நல்லா இருக்கு..
பாத்திட்டு போன மாதிரி..'
'யாரு...?'
'இப்போ அதுவா முக்கியம்?'.
தாவடி செக்பொய்ன்ட் கியூவில், சைக்கிளை இறங்கி தள்ளிக்கொண்டே...பொக்கட்டில் கையை....
'அய்யய்யோ என்னோட purse ? ஐடென்டிடி கார்டு காட்டணுமே? சாப்பாட்டுக் கடையில விட்டுட்டேனா? கடைக்காரன் எடுத்து வச்சிருப்பான். ஆனா இப்போ திரும்பிப் போகவும் ஏலாதே'.
'ஆமிக்காரனை எப்பிடி சமாளிக்கிறது? சிங்களம் தெரிஞ்சாலும் சமாளிக்கலாம்...அடிப்பாங்களோ....?
அது கூடப் பரவாயில்ல அரெஸ்ட் பண்ணுவாங்களோ....?
இங்கேயே இருத்தி வச்சிடுவாங்களோ?'
சுதா, அவங்கம்மா, செல்போன், டேர்மினேட்டர், ரோஸ் சுடிதார், ஐடென்டிடி கார்டு எல்லாமே சுத்தமாக மறந்து போய் புதிய கவலை ஆக்கிரமித்துக்கொண்டது...
'நான் அரெஸ்ட்டானா, எங்க வீட்ல யார் சொல்றது?'
Subscribe to:
Post Comments (Atom)
/////சுதா, அவங்கம்மா, செல்போன், டேர்மினேட்டர், ரோஸ் சுடிதார், ஐடென்டிடி கார்டு எல்லாமே சுத்தமாக மறந்து போய் புதிய கவலை ஆகிரமித்துக்கொண்டது../////
ReplyDeleteநினைவுகள், கனவுகள் எப்போதும் இதமானவையாகவே இருக்கிறது.. ஆனால் விழிப்பு பயங்கரமாக அல்லவா வந்து தொலைக்கிறது வாழ்த்துக்கள்.. சகோதரம்...
அருமை அருமை.. தொடருங்கள்
ReplyDelete//சுதா, அவங்கம்மா, செல்போன், டேர்மினேட்டர், ரோஸ் சுடிதார், ஐடென்டிடி கார்டு எல்லாமே சுத்தமாக மறந்து போய் புதிய கவலை ஆக்கிரமித்துக்கொண்டது...
ReplyDelete'நான் அரெஸ்ட்டானா, எங்க வீட்ல யார் சொல்றது?' //
Nice.
அருமையான பழைய நினைவுகள். காங்கேசன்துறை வீதி - 1996/97களை படம்பிடித்து காட்டியுள்ளீர்கள். அந்த நாட்களில் நானும் உயர்தரம் கற்றவேளைகள். இதே ரூட்டால் அடிக்கடி வந்துபோவேன். ஆனால் என் வீடு இருப்பது நல்லூரில்.
ReplyDelete@ம.தி.சுதா
ReplyDeleteநன்றி சகோ!
@ பிரஷா
நன்றி! நன்றி!
@அன்பரசன்
thanks! :-)
@ Jana
//இதே ரூட்டால் அடிக்கடி வந்துபோவேன். ஆனால் என் வீடு இருப்பது நல்லூரில்//
அப்படியா? நன்றி அண்ணா!
வித்தியாசம்!
ReplyDeleteபடிச்சிட்டு கொஞ்சம் கஷ்டமாவும் இருந்தது...ம்ம்..நேத்து தான் லண்டனில் வெளியிட்ட அந்த வீடியோ டிவியில் பார்த்தேன்..ஜீ...:(((
ReplyDelete@எஸ்.கே
ReplyDeleteநன்றி!
@ஆனந்தி
//நேத்து தான் லண்டனில் வெளியிட்ட அந்த வீடியோ டிவியில் பார்த்தேன்..ஜீ...:((//
நானும் நேற்றுத்தான்..
//'நான் அரெஸ்ட்டானா, எங்க வீட்ல யார் சொல்றது//
ReplyDeleteநல்ல சந்தேகம்....
அருமை... ஃபண்டாஸ்டிக்
ReplyDelete@Kousalya
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி!
@பார்வையாளன்
நன்றி! நன்றி!