ஜனா அவர்களின் அழைப்பை ஏற்று, எனக்குப்பிடித்த ரஜினி படங்களைப் பட்டியலிடுகிறேன்!
பதினாறு வயதினிலே
பரட்டையைத் தவிர்த்துவிட்டு ஒரு ரஜினியின் கதாபாத்திரத்தை என்னால் நினைக்க முடிவதில்லை! தெனாவெட்டான ஊரின் மைனர் கதாபாத்திரத்தில் சூப்பரா நடிச்சிருப்பார்! அதிலும் சப்பாணி கமலைக் கலாய்க்கும் காட்சிகள் அருமை! பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே பாடல்' எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவள் அப்படித்தான்
இந்தப் படத்தைப் பல நாட்களாக (ஆண்டுகளாக) பார்க்கவேண்டுமென்று ஆசை. இதுவரை எனக்கு DVD கிடைக்கவில்லை! ஓரிரு காட்சிகள் மட்டுமே பார்த்தா ஞாபகம். உடனே பிடித்துக் கொண்டது (கமலிடம், ரஜினி ஒரு பெண் பற்றிப் பேசும் காட்சி). தமிழ் சினிமாவில் இதையும் ஒரு முக்கியமான படமாகக் கூறுகிறார்கள்.
முள்ளும் மலரும்
ரஜினியின் சிறந்த நடிப்புக்கு சான்று கூறும் ஒரு படைப்பு! இயக்குனர் மகேந்திரனின் சிறந்த படங்களில் ஒன்று. அண்ணன்- தங்கை பாசத்தை வழமையான காலம் காலமாக இருந்துவந்த தமிழ்சினிமா பாணியிலிருந்து விலகி மகேந்திரனின் ஸ்டைலில். ரஜினி படம் என்ற உணர்வின்றி, முற்று முழுதாக ஒரு இயக்குனரின் படமாக இருக்கும்!
ஆறிலிருந்து அறுபதுவரை
நிச்சயமாக ரஜினியின் ஸ்டைலை விரும்பும் தீவிர ரசிகர்களுக்குப் பிடிப்பது கடினம்! மிக இயல்பாக கதை சொல்லும் ஒரு சாதாரண ஏழை மனிதனின் கதை. எமது சமூகத்தில் பணம் என்பது வாழ்க்கைக்குத் தேவையான ஒரு விஷயம் என்ற நிலையை விடுத்து, பாசம் ,சொந்தம், நமக்குத் தேவையானவர்கள், தேவையில்லாதவர்கள் எல்லாவற்றையும் பணமே தீர்மானிக்கிறது என்ற அவல நிலையைச் சொன்ன படம் இது!
நெற்றிக்கண்
ரஜினி இரு வேடங்களில் நடித்த இப்படத்தில், எல்லோரையும் போல எனக்கும் அப்பா ரஜினியை மிகவும் பிடிக்கும்! அந்த ஸ்டைல், பேச்சு, காலையில் நித்திரை விட்டெழும்போது கைகளால் முகத்தை மூடிச் சிறிது விலக்கி, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படத்தைப் பார்ப்பாரே.....சூப்பர்!
படிக்காதவன்
சின்ன வயதில் ரசித்த 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்', 'ஒரு கூட்டுக்குயிலாக' பாடல்களினால் அறிமுகம்! அதில் வரும் நகைச்சுவைக் காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
தளபதி
மணி ரத்னத்தின் படங்களில் ஒரு முக்கியமான படைப்பு! ரஜினி என்ற ஒரு பெரிய சூப்பர் ஸ்டாரின் இமேஜையும் தக்கவைத்துக் கொண்டு, தனது படங்களுக்குரிய அடையாளங்களையும் தொலைத்துவிடாமல், அதேநேரம் வியாபார ரீதியிலும் ஒரு வெற்றிப்படமாக உருவாக்கியது மணிரத்னத்தின் திறமை (எல்லாருக்கும் தெரிந்த கதை வேறு!) ஸ்டைலை முன்னிலைப் படுத்தாத ரஜியின் இயல்பான நடிப்பை இதில் பார்க்கலாம்.
பாட்ஷா
இன்றுவரை தொடரும் தமிழ் சினிமாவின் தாதா கதைக்கான ஒரு 'டெம்ப்ளேட்' ஆக மாறிப்போன ஒரு திரைப்படம்! இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு ஒரு பெரிய அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது இப்படத்தின் மாபெரும் வெற்றி. அநேகமாக ரஜினிக்கும்- அரசியலுக்கும் இடையிலான ஒரு இழுபறி நிலையை இந்தப்படம்தான் ஆரம்பித்து வைத்தது என நான் நினைக்கிறேன்.
முத்து
இந்தப் படத்தை விட பாடல்களே என்னைக் கவர்ந்தவை! சாவகச்சேரியில் இடம்பெயர்ந்து இருந்த காலங்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் இப்பாடல்களை இப்பொழுது கேட்டாலும், பழைய நினைவுகளை மீட்டுகின்றன! இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஒரு பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த படம் இது.
எந்திரன்
எந்திரன் பற்றி என்னதான் விமர்சங்களை முன்வைத்தாலும், எத்தனை படங்களின் copy என்று பட்டியலிட்டாலும், அவையெல்லாம் இயக்குனர் ஷங்கர் மேலுள்ள குற்றச்சாட்டுகளே! ரஜினியைப் பொறுத்தவரை ஒரு மிகச் சரியான தேர்வு! அவரைத் தவிர யாரும் யாரும் சரியாகச் செய்யமுடியாத படம். அதிலும் அந்த வில்லன் ரோபோ பழைய கால ரஜினியை ஞாபகப் படுத்தியது!
யாராவது விரும்பிறவர்கள் இந்தப் பதிவைத் தொடருங்கப்பா!
ரைட் ... ரைட் ...
ReplyDeleteகலக்கலான தொகுப்பு....வாழ்த்துக்கள் ஜி. தமிழ்மணத்தில் வாக்களித்து விட்டேன்.
ReplyDeleteநல்ல தெரிவுகள். அது சரி உங்களுக்கு ஒரு 45 வயசு இருக்குமா? படங்களின் தெரிவுகளை வைத்துக் கேட்கிறேன் சகா.
ReplyDelete//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteரைட் ... ரைட் ..//
:-)
//ரஹீம் கஸாலி said...
கலக்கலான தொகுப்பு..//
:-)
//KANA VARO said...
நல்ல தெரிவுகள். அது சரி உங்களுக்கு ஒரு 45 வயசு இருக்குமா? படங்களின் தெரிவுகளை வைத்துக் கேட்கிறேன் சகா//
அதெல்லாம் 'அங்கிள்ஸ்' ரெகமன்ட் பண்ணி, பார்த்தவை! :-)
அருமையான தெரிவுகள்
ReplyDeleteபதிவுலக superstar சினிமா superstar ஐ பற்றி எழுதி இருக்கீங்க :)
ReplyDeleteஎனக்கு எப்பவுமே பாட்ஷா தான்
super collections:)
ReplyDeleteஅருமையான தெரிவுகள் kalakkunka ji..morning vote podukiren...
ReplyDeleteசூப்பரோ சூப்பர்...
ReplyDeleteகலக்குங்க
முள்ளும் மலரும் எனக்கு மிகப் பிடித்த படம்.
ReplyDeleteஅதே..அதே.. நல்ல தெரிவுகள்தான். நன்றி.
ReplyDeleteஎந்திரன் பற்றிய உங்கள் கருத்து உண்மைதான்
ReplyDeleteநல்ல தொகுப்பு .நண்பா
ReplyDeleteசூப்பர் பாஸ் கலக்குங்க
ReplyDelete#இன்றுவரை தொடரும் தமிழ் சினிமாவின் தாதா கதைக்கான ஒரு 'டெம்ப்ளேட்' ஆக மாறிப்போன ஒரு திரைப்படம்#
ReplyDeleteஉண்மை உண்மை....
Super! Super! Super!!!
ReplyDeleteஅருமையான தொகுப்பு!
ReplyDeleteநல்ல தொகுப்பு!!!
ReplyDeleteஅனுபவித்து எழுதி உள்ளீர்கள்.
ReplyDeleteகலக்கலான தொகுப்பு.. அருமையாக எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteநல்ல தேர்வு
ReplyDeleteஅனைத்தும் அருமையானப் படங்கள்தான் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteபடத்தெரிவுகள் அருமை அண்ணா வாழ்த்துகள்..
ReplyDelete