Thursday, December 30, 2010

கமலின் வெற்றுக் கோஷம்!


சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். மன்மதன் அம்பு படத்திற்கான விழாவில் கமலும், த்ரிஷாவும் இணைந்து கவிதையொன்று வாசித்து சர்ச்சை கிளப்பினார்களே...அதேதான்!

அப்போது த்ரிஷா கேட்பார் கமலிடம், 'நீங்க பக்திமானா?' உடனே கமல் முகத்தை சுளித்து, அருவருத்து, ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்ட மாதிரி 'சேச்சே' என்று அவசரமாக மறுப்பார்! யாரோ கொஞ்சப்பேர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்! நிச்சயமாக அவர்கள் கமல் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள்! ஒரு கமல் ரசிகனாக சொல்கிறேன்! (எனது ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல - கமல்)

ஏன் கமல் இப்படி நடந்து கொள்கிறார்? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு, பதில் சொல்லி 'சீன்' போடவேண்டிய அவசியம் என்ன?
அவர் பகுத்தறிவுவாதி! கடவுள் மறுப்பு கொள்கையுடையவர்! அதனால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறாராம்! - இப்படியெல்லாம் நம்புவதற்கு கமல் ரசிகரான ஒன்றும் நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல! 

நாத்திகவாதம், கடவுள்மறுப்பு, பகுத்தறிவு பிரச்சாரம் இதையெல்லாம் ஏற்கனவே பெரியார் சிறப்பாகச் செய்து விட்டார் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் அந்தக் கோஷங்கள் எல்லாம் வழக்கொழிந்து போய் விட்டது! இப்போதெல்லாம் ஒருவன் நாத்திகனாயிருப்பது பெரிய ஆச்சரியமான விஷயம் இல்லை! (அப்படியா இருந்துட்டுப் போ! என்றளவில்தான்) 

அவனவன் தெளிவாத்தான் இருக்கிறான். கடவுளை நம்புகிறவன் நம்புகிறான். நம்பிக்கையில்லாதவன் அவன் பாட்டுக்கு இருக்கிறான். யாரும் யாரையும் தொந்தரவு பண்ணுவதில்லை! நான் நாத்திகவாதி என்று சொல்லிக் கொள்வதில் யாரும் பெருமைப்படுவதில்லை (கமலைத் தவிர!). ஒரு காலத்தில் அப்படிச் சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருந்திருக்கலாம் (பெரியார் காலத்தில்?) 

தமிழ்நாட்டில் மதச்சார்பின்மையைக் காட்ட ஒரு எளிதான வழியை வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள்! அது....இந்துமதத்தைத் தாக்குவது! பெரும்பான்மையான மதம் என்பதால் யாரும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். கட்சிக் கொள்கையையும் காப்பாற்றியதாகவும் ஆயிற்று! இதுவே மற்ற மதங்களைப் பற்றிக் கதைப்பார்களா? கதைத்தால் என்னவாகும்?

அரசியல்வாதிகள் செய்வதை விடுங்கள் அது அவர்களின் தொழில்(?!) தர்மம்! அதையே எதற்கு கமலும் பின்பற்றுகிறார்? உன்னைப் போல ஒருவனில் முஸ்லிம்களையும் கொஞ்சம்...இதெல்லாம் எதற்காக? இதெல்லாம் மற்றவர்களின் உணர்வுகளைப் புண் படுத்துவதாகத்தான் இருக்குமே தவிர.... என்னவோ நாட்டில எல்லோரும் மூட நம்பிக்கையில் உழல்வதாகவும், கமல் வந்து பிரச்சாரம் செய்து, எல்லோரையும் நல்வழிப் படுத்தி..? அதுவும் கமல் சொல்றதை சினிமாகாரங்களே சீரியஸா எடுக்கிறதில்ல! இதுல நாட்டுக்கு...?

கமலின் மாபெரும் மரண மொக்கைப் படமான தசாவதாரத்தைப் பார்த்து நொந்து போய் இருக்கும்போது படத்தின் இறுதிக்காட்சியில் கடவுள் பற்றி ஒரு மெசேஜ் 'கடவுள் இல்லேன்னு சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்!' - சத்தியமா விஜய் ரசிகர்கள் மட்டுமே கைதட்டி, விசிலடித்தார்கள்! எங்கள் நிலைமையோ பனையில இருந்து விழுந்தவனை மாடேறி மிதிச்சமாதி! நாங்களும் அப்படித்தானே நினைச்சோம்! (படம் நல்லா இல்லைன்னு சொல்லல..நல்லா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்!)

கமல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், பகுத்தறிவுவாதி இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே? இதை ஏன் திரும்பத் திரும்பக் கூறிக் கொள்ள வேண்டும்? கமலுக்கே தன்மேல் சந்தேகமா? தனக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறாரா? 

இதில எனக்கு ஒன்றும் வருத்தம் கிடையாது! நான் ஒரு பக்திமானோ, ஆத்திகவாதியோ, மதவாதியோ இல்லை! ஆனால் இப்படியான வெற்றுக் கோஷங்கள் எரிச்சலை ஏற்படுத்திகின்றன! அடுத்தவனின் நம்பிக்கை, உணர்வுகளை தாக்கி, கொச்சைபடுத்தி எதைச் சாதிக்கப் போகிறோம்? ஒரு நல்ல கலைஞன் ஏன் இப்படி என்ற ஆதங்கம் மட்டுமே!

கமல் ஒரு நல்ல நடிகர். திறமைசாலி. ரசிகர்களாகிய நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நல்ல தரமான படங்களை மட்டுமே! அதைச் செய்கிற வழியைக் காணவில்லை! இன்னும் கே.எஸ்.ரவிக்குமாருடன் சேர்ந்து காமெடி பண்ணிக் கொண்டு..!?

33 comments:

  1. கமல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், பகுத்தறிவுவாதி இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே? இதை ஏன் திரும்பத் திரும்பக் கூறிக் கொள்ள வேண்டும்? கமலுக்கே தன்மேல் சந்தேகமா? தனக்கு ஞாபகப்படுத்திக் கொள்கிறாரா? ///
    நச்சுன்னு இருக்கு நண்பா

    ReplyDelete
  2. தவறான பார்வை ... நீங்கள் இன்னும் நிறைய படிக்க வேண்டும் தம்பி ...

    ReplyDelete
  3. சரியான பார்வை...’அறிவுஜீவி’ன்னா அப்படித்தான் பாஸ்..லூஸ்ல விடுங்க.

    ReplyDelete
  4. ஏய்யா செத்த பாம்ப அடிச்சி என்ன பண்ணப்போரீக!

    ReplyDelete
  5. உங்கள் ஆதங்கம்.............!!!
    கருத்துகள் மாறுபடலாம்......

    ReplyDelete
  6. //ஒரு கமல் ரசிகனாக சொல்கிறேன்//
    அது என்ன சார் ..கமல் பற்றி உளற வேண்டியதெல்லாம் உளறிட்டு எல்லாரும் இந்த பிட்டை போடுறீங்க

    ReplyDelete
  7. //அப்போது த்ரிஷா கேட்பார் கமலிடம், 'நீங்க பக்திமானா?' உடனே கமல் முகத்தை சுளித்து, அருவருத்து, ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்ட மாதிரி 'சேச்சே' என்று அவசரமாக மறுப்பார்! யாரோ கொஞ்சப்பேர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்! நிச்சயமாக அவர்கள் கமல் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள்! ஒரு கமல் ரசிகனாக சொல்கிறேன்! (எனது ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல - கமல்)//

    இது நாத்திகமோ..ஆத்திகமோ...அது பத்தி கமல் சார் இன் சொந்த விஷயம்...ஆனால்..அவர் தன் நிலைப்பாடை இன்னும் கொஞ்சம் நாகரிகமாய் உணர்த்தி இருக்கலாம்...(பின்குறிப்பு...நான் எந்த நடிகர்,நடிகையின் ரசிகை அல்ல..இளையராஜா தவிர்த்து:)))) ))

    ஜீ...நாம நடிப்பை மட்டும் ரசிச்சிட்டு விட்டு விடலாம்...இப்படி எல்லாம் நொள்ளை பார்த்து விமர்சனம் பண்ணுவதால் தான் அவங்க ரொம்ப ஓவரா பண்றாங்கன்னு தோணுது..அவங்க அவங்க விருப்பங்கள்...நடிப்பை மட்டும் ரசிச்சுட்டு என்னவோ செஞ்சு தொலைராங்கனு போயிட்டே இருப்பது தான் ஒரு பார்வையாளராக நமது நாகரிகம்...:)))
    என் அன்பு தம்பி உனக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்...:))))

    ReplyDelete
  8. கமலின் உண்மையான ரசிகரின் ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்

    ReplyDelete
  9. ஆதங்கம்?
    பார்வைக் கோணங்கள் வேறுபடலாம். அடிக்கடி சொல்வதால் சில விஷயங்கள் அலுப்பதில்லையே..

    கமலின் சில விஷயங்களும் அவ்வாறே..
    அதுசரி எல்லாப் படத்திலும், எல்லாக் கமலின் படத்திலும் ஏன்யா நீங்கள் மெச்செஜ் எதிர்பார்க்கிறீர்கள்?
    சிலது சிரிப்பதற்கு மட்டுமே..

    சிலது ரசிப்பதற்கு மட்டுமே..

    ReplyDelete
  10. //LOSHAN said...
    அதுசரி எல்லாப் படத்திலும், எல்லாக் கமலின் படத்திலும் ஏன்யா நீங்கள் மெச்செஜ் எதிர்பார்க்கிறீர்கள்?//

    //கமல் ஒரு நல்ல நடிகர். திறமைசாலி. ரசிகர்களாகிய நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நல்ல தரமான படங்களை மட்டுமே!//

    நாங்கள் மெசேஜை எதிர்பார்க்கவில்லை!
    சொல்லப்போனா மேசேஜே வேணாம்!
    நன்றி உங்கள் கருத்துக்கு!

    ReplyDelete
  11. //karthikkumar
    நச்சுன்னு இருக்கு நண்பா//
    :-)

    //கே.ஆர்.பி.செந்தில்
    தவறான பார்வை ... நீங்கள் இன்னும் நிறைய படிக்க வேண்டும் தம்பி ...
    இது எனக்கா?//

    //செங்கோவி
    சரியான பார்வை...’அறிவுஜீவி’ன்னா அப்படித்தான் பாஸ்..லூஸ்ல விடுங்க//
    :-)

    //விக்கி உலகம்
    ஏய்யா செத்த பாம்ப அடிச்சி என்ன பண்ணப்போரீக!//
    :-(

    //“நிலவின்” ஜனகன்
    உங்கள் ஆதங்கம்.............!!!
    கருத்துகள் மாறுபடலாம்//
    நிச்சயமா!

    //ஜோ/Joe
    //ஒரு கமல் ரசிகனாக சொல்கிறேன்//
    அது என்ன சார் ..கமல் பற்றி உளற வேண்டியதெல்லாம் உளறிட்டு எல்லாரும் இந்த பிட்டை போடுறீங்க//
    இது 'பிட்' இல்ல உண்மை! :-)

    //ஆனந்தி..
    நடிப்பை மட்டும் ரசிச்சுட்டு என்னவோ செஞ்சு தொலைராங்கனு போயிட்டே இருப்பது தான் ஒரு பார்வையாளராக நமது நாகரிகம்...:)//
    :-)

    //பத்மநாபன்
    கமலின் உண்மையான ரசிகரின் ஆதங்கத்தை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்//
    உண்மை! :-)

    ReplyDelete
  12. அவருக்கு தன் கொள்கையில் நம்பிக்கை இல்லை .பரபரப்புக்கு பயன்படுத்துகிறார்

    ReplyDelete
  13. உண்மைதான் ஜீ! ஒரு கலைஞனிடம் கலையை மட்டுமே எதிர்பார்க்கிறோம்! அவருடைய சொந்த கருத்தை அல்ல!

    ReplyDelete
  14. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. உங்கள் ஆதங்கங்கள் நியாயமானவை புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. பதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. //அடுத்தவனின் நம்பிக்கை, உணர்வுகளை தாக்கி, கொச்சைபடுத்தி எதைச் சாதிக்கப் போகிறோம்? //

    உண்மை தான் இது எல்லாரும் அறிய வேண்டிய ஒன்று..

    ReplyDelete
  18. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    கமல் ஒரு அதிகபிரசங்கி.

    //பகுத்தறிவு பிரச்சாரம் இதையெல்லாம் ஏற்கனவே பெரியார் சிறப்பாகச் செய்து விட்டார்//


    பதிவர் தருமி போன்றவர்களே உண்மையான நாத்திகர்கள்.

    ReplyDelete
  19. அருமை..
    இனிய புத்தாண:டு வாழ்த்துக்கள ஜீ...

    ReplyDelete
  20. When all actors including Rajini has a shot of deity Worship, talking about greatness of God, without fail in all their movies, what's wrong in Kamal repeatedly talking about atheism in his movies? People can repeatedly talk about Hindu Gods, Jesus, Allaah in their films which is accepted as common belief but when atheism ideology is spoken, how come it is branded as one's individual belief and an uncommon one? Strange.

    Other than that I agree with all your points. Me too a staunch Kamal Fan, expected that Kamal would evolve someone like Spielberg or Cameron of Indian Cinema - Movies being classics, refreshing and at the same time commercially extravaganza and innovative. But with regrets I should admit that he is a big disappointment and let his fans down.

    ReplyDelete
  21. //ரசிகர்களாகிய நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நல்ல தரமான படங்களை மட்டுமே!//

    ஆமாங்க...!ஒரு கமல் ரசிகனாக...! என்னோட வருத்தமும் அதாங்க...!
    ரொம்ப ஏமாத்துறாருங்க "அன்பே சிவம்" லிருந்து..!

    ReplyDelete
  22. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

    வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..///////////

    ReplyDelete
  23. //அடுத்தவனின் நம்பிக்கை, உணர்வுகளை தாக்கி, கொச்சைபடுத்தி எதைச் சாதிக்கப் போகிறோம்? ஒரு நல்ல கலைஞன் ஏன் இப்படி என்ற ஆதங்கம் மட்டுமே!//

    திருடனுக்கு திருடுவதில் நம்பிக்கை அதனால் எதற்கு அவர்களின் நம்பிக்கையை தகர்ப்பது. சரியா தலைவரே???

    ReplyDelete
  24. வாஸ்தவம்தான்...


    எதிர்வரும் வருடம் தங்களுக்கு சிறப்பானதாக அமைய என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. மன்னியுங்கள் உங்கள் கருத்தோடு உடன்பட முடியவில்லை

    ReplyDelete
  26. உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  27. பெரும்பாலான நடிகர்கள் திரைக்கு வெளியே சிறப்பாக நடிக்கிறார்கள்; புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!!

    ReplyDelete
  28. ஆத்திகனா, நாத்திகனா என்பதா முக்கியம் முதலில் நல்ல மனிதராக இருக்க சொல்லுங்கள், அதை விட்டுவிட்டு எப்பொழுது பார்த்தாலும் காமடி பண்ணிட்டு இருக்குறார் கமல், Wish you Happy NEw Year Sir

    ReplyDelete
  29. 50% உடன்படுகிறேன் 50% உடன்படவில்லை!

    ReplyDelete
  30. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    நிற்க "திரும்பத் திரும்பக் கூறிக் கொள்ள வேண்டும்.."
    ஒரு இலட்சியத்தில் பற்றுள்ளவர்கள் அதனைப் பரப்புவதற்கு தங்கள் படைப்புகளையே ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள்.
    முற்போக்கு வாதிகள், ஆன்மீகவாதிகள், பெண்ணியம், சாதீயம் யாவும் எனப் பலரும் செய்வதுதானே.

    ReplyDelete
  31. //கமல் ஒரு நல்ல நடிகர். திறமைசாலி. ரசிகர்களாகிய நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நல்ல தரமான படங்களை மட்டுமே! அதைச் செய்கிற வழியைக் காணவில்லை! //
    மத்த படங்களைப் பார்க்கும்போது இந்த ஆதங்கம் அதிகமாகுது..

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  32. KS ravikumar vida ippo evvalvo youth efficient talented technicians vandhirukirargal.. avargalai kamal madhippathe illai

    ReplyDelete