Sunday, October 28, 2012

ராஜனின் கைது ; கற்பிக்கப்படும் இணைய சுதந்திரம்?



ஒரு பெண் சம்பந்தப் படுத்தப்பட்டு, பாலியல் தொல்லையோடு  தொடர்புபடுத்தி மேற்கொள்ளும் எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு ஒன்றே சாமானியன் ஒருவரின் வாழ்க்கை முழுவதற்கும் தண்டனை தரப் போதுமானது - நம் சமூகத்தில்!


சாமானியர்கள் மீது சந்தேகம் என்ற என்று வந்துவிட்டாலே ஆயுள் முழுவதும் குற்றவாளியாகவே பார்த்து ஒதுக்கும் சமூகம் நம்முடையது. ராஜன் விடுதலை செய்யப்பட்டபின் வேறு வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால்.. சுற்றத்திலுள்ளவர்களின் அவர்மீதான பார்வை? அதை மாற்ற முடியுமா?

'ஒரு பிரபலத்திற்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட..' என்று ஆரம்பிக்கும் செய்தி எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்?

நமது பத்திரிகைகளின் லட்சணம் ஏற்கனவே தெரிந்ததுதான். இந்தப் பிரச்சினையை ஆரம்பத்திலிருந்து கவனித்துவருபவர்களுக்குத் தெரியும் எவ்வளவு திரிக்கப்பட்ட செய்திகள் வெளியாகின்றன என்பது! ஓரளவிற்கேனும் உண்மையான /வெளிப்படையான கருத்துகள் குறிப்பிட்டளவில் பகிரப்படுவது இப்போது இணைய ஊடகத்தில் மட்டுமே.. இப்போது அதுவும் ஒடுக்கப்படும் நிலை! 

ராஜன் மிகச்சிறந்த எழுத்தாளுமை உள்ளவர். அவரது எழுத்தின் மூலமாகவே அவரைத் தெரியுமேயன்றி எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பிறரைக் கிண்டல் செய்யும் அவரது ட்வீட்கள் தவிர அவரது ஏனைய படைப்புகளை அவதானித்தவர்களுக்கு அவரின் தமிழ் ஆளுமை, எழுத்தின் வீச்சு பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. வெளிப்படையாக பேசுவது மட்டுமே அவரது பலமும், பலவீனமுமாக இருந்திருக்கிறது.

சின்மயி நல்ல பாடகி. அவர் குரல் எனக்குப் பிடிக்கும். இனியும் பிடிக்கும். அவர் பாடகி, சினிமாப் பிரபலம் என்பதைத் தவிர அவர் ஒன்றும் அறிவுஜீவியோ, தத்துவஞானியோ கிடையாது. அவர்கூறும் அறிவார்ந்த கருத்துக்களைப் பொருட்படுத்தவே வேண்டியதில்லை. ஆனால்.. ஒரு பிரபலம் அதுவும் சினிமாப்பிரபலம் என்ற வகையில் அவரைத் தொடர்பவர்கள், கவனிப்பவர்கள் ஏராளமானோர் இருக்கும் சூழலில், போகிற போக்கில் பொறுப்பில்லாமல் சொல்லிச் செல்லும் அரைவேக்காட்டுத்தனமான கருத்துகள் விஷம் போன்றவை.

இருதரப்பிலும் பிழைகள் இருக்கின்றன. அதுபற்றி திரும்பத் திரும்பப் பேசி ஆகப்போவது எதுவுமில்லை. இப்போது, இங்கே அது பிரச்சினையுமல்ல! பிரபலங்கள், அதிகார பலம் உள்ளவர்களின் கையில் சாமானியர்களின் ஒரேயொரு கருத்து சுதந்திரமுள்ள இணையமும் மாட்டிக் கொள்ளப்போகிறது.

இதை எல்லாம் நன்குணர்ந்த நம் சமூக அக்கறை கொண்ட, எழுத்து சுதந்திரம் பற்றியெல்லாம் பேசும்இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள், முற்போக்காளர்கள், கட்டுடைப்பாளர்கள், பொதுப்புத்திக்கு எதிரான கலகக்காரர்கள், ஒடுக்குமுறைக்கெதிரான சமூகப் போராளிகள் என்று கூறிக் கொள்பவர்கள் நடந்து கொள்ளும் முறை வருத்தமளிக்கிறது.

இந்த சமூகத்தில் வாழ நேர்ந்துவிட்டதை எண்ணி அடிக்கடி மன உளைச்சல் கொள்ளும், நம் சமூகம் பற்றிய நன்கு புரிந்துகொண்ட, கருத்து சுதந்திரம் பற்றியெல்லாம் கவலைகொள்ளும் இலக்கியவாதிகள் கூட தமது சொந்த விருப்பு, வெறுப்பு சார்ந்தே இதுகுறித்துப் பேசுவது அவர்களின் உண்மையான சமூக அக்கறையைக் காட்டுகிறது?

ராஜன் மீது அவரது எழுத்தின் காரணமாக தனிப்பட்ட வெறுப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு அல்லது அவ்வாறு கூறிக்கொண்டு தங்கள் பழைய கணக்கைத் தீர்க்க யாரையாவது வம்புக்கிழுப்பது,பொத்தாம் பொதுவாக பல உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லும் பேர்வழிகள் போகிற போக்கில் தினசரியில் படித்த செய்தியை ஆதாரமாகக் கொண்டு நீதி போதனை செய்வது சொல்வது! இவை மட்டுமே இது விஷயத்தில் அவர்களின் பங்களிப்பாக உள்ளது!

சாருவை விட்டுவிடலாம். ஏற்கனவே ராஜனால் பலமாகப் பாதிக்கப்பட்டவர். அதை அவரே தளத்தில் கூறியிருக்கிறார்.

ஜெயமோகன் சொல்கிறார்..

"சமீபத்தில் பிரபலமான பாடகி ஒருவர் இணையதளத்தில் பொதுத்தொடர்புக்கு வந்தபோது இணையத்தின் இந்த முரட்டுமூடர்கள் அந்தப்பெண்ணை வசைபாடி, அவதூறுசெய்து, மிரட்டி சிறுமைசெய்தனர். ஆபாசப்படங்கள் வெளியிடுவதாக மிரட்டினர். அவரது தாயை ஆபாசமாக வசைபாடினர். பொறுமை மிஞ்சிய ஓர் எல்லையில் காவல்துறைக்குச் சென்று அந்தப்பெண் புகார் கொடுக்க நேர்ந்தது. ஆறுபெயர்களையும் சின்மயி குறிப்பிட்டிருக்கிறார். அவர்களை காவலர் கைதுசெய்திருக்கின்றனர்"

ஜெயமோகன் சொல்லும் 'எழுத்தாளனின் அறம்' இதுதான் போலும்! அவர் வழக்கம்போல அவர் பாணியில் அறத்தைக்(?!) காட்டிவிட்டார். 

ஒடுக்குமுறைக் கெதிரான சமூகப் போராளியான ஷோபாசக்தி சின்மயிக்கு ஆதரவாக இருக்கிறார். இதில்வேறு அவருக்கு ஒரு விநோதமான அறச்சீற்றம் வந்திருக்கிறது. "அது எப்படி சாரு சின்மயிக்கு சப்போர்ட் பண்ணலாம்?" இப்படி ஒரு புதுமையான அறச்சீற்றத்தை இதுவரை யாரும் கண்டிருக்க முடியாது.

நல்லவேளையாக ஒரு பெண்மணியைச் சமீபகாலமாகக் காணவில்லை. இவர்களின் 'சமூக அறச்சீற்ற நியாயப்படி(?!)' அவர் ஷோபாசக்திக்கு எதிரணியில் இருக்கவேண்டும். எனினும், தன் வழக்கப்படி அநியாயமாக சின்மயிக்கு ஆதரவளித்திருந்தால் கூட, அவருக்கும் ஷோபாசக்திக்கு வந்த அதே அறச்சீற்றம் வந்திருக்கும்.."அது எப்படி சின்மயிக்கு ஷோபாசக்தி சப்போர்ட் பண்ணலாம்?"

ஒரு கவிதாயினி சின்மயிக்கு ஆதரவாகப் பேசுவதாகப் பேர்பண்ணி பிரபல கவிஞரை வலிய வம்பிழுத்து, தன்னைப்பற்றி அவர் வாயால் 'பாராட்ட'க்கேட்டு தன் 'பெருமை'  அவருக்கே தாங்கமுடியாமல் "அருவருப்பாயிருக்கு!", "போங்கடா ஆணாதிக்கவாதிகளா" என்று 'வழக்கம்போல' முடித்துக் கொண்டார். இதில் வேறு தனது தளத்தில் நடக்கும் விவாதத்தில் எதிராளிக்கு 'லைக்' போட்டால், சம்பந்தப்பட்டவரைத் தடை செய்துவிடுவேன் என தான் அனுமதிக்கும் 'கருத்துச் சுதந்திரம்' பற்றித் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இந்த விஷயத்தில் நேர்மையாக, உண்மையான அக்கறையோடு பேசிவரும் மனுஷ்யபுத்திரன், விமலாதித்த மாமல்லன், மற்றும் ஒருமுறையேனும் ராஜனால் கிண்டல் செய்யப்பட்ட , ராஜன்மீது வன்மம் கொள்ள காரணமிருந்தும் அவ்வாறு செய்யாமல் நேர்மையாக அவர்மீது அக்கறைகொள்ளும் பதிவுலக தோழர்கள் மீது மரியாதை உண்டாகிறது.

ராஜனின் கைது சொல்வது பணபலம், பிரபல பின்புலத்துடன் நிகழும் வெறி பிடித்த பழிவாங்குதல் பற்றி மட்டுமே!

ஏதோ சட்டம் கடமையைச் செய்துவிட்டதாகச் சிலர் மகிழ்ச்சி கொள்வதாகத் தெரிகிறது!  

இதுவரை உண்மையாகப் பாதிக்கப்பட்ட, பிரபலமில்லாத பெண்களுக்கு சட்டம் இதுபோல் விரைந்த நடவடிக்கை எடுத்திருக்கிறதா?

பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவர், ஒருபத்திரிக்கை நிருபரை எவ்வளவு மரியாதையாக பேசுகிறார் என்பதை நேற்றுப் பார்த்தோம். நேரடி வீடியோ சாட்சி இருந்தும் அந்த சாமானிய நிருபருக்கு ஆதரவாக சட்டம் தன் கடமையைச் செய்யுமா?

பிரபலங்கள் கருத்து என்ற பெயரின் என்ன வேண்டுமானாலும் சொல்லல்லாம். சாமானியர்கள் அவர்களை எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. மீறினால் சிறை.

சட்டம் எப்போதும் பிரபலங்களுக்கு ஆதரவாகவே தன் கடமையைச் செய்யும் இணையத்திலும் கூட! 

பெண்கள் சொல்லும் எந்தக் கருத்துக்கும் ஆண்கள் யாரும் எதிர்க்கருத்து தெரிவித்தால் அது ஆணாதிக்கம். எதிர்க்கருத்து சொல்லும் ஒரு ஆணை மொத்தமாக காலி பண்ணுவதற்கு பாலியல் தொல்லை, ஆபாச மிரட்டல் போன்ற வார்த்தைகளே போதும். அதுபற்றிய உண்மைத்தன்மை குறித்து யாரும் அக்கறை கொள்ளப் போவதில்லை.

பல பிரபலங்கள் தாங்கள் சொல்வதை எல்லாரும் கேட்க வேண்டும் என்பதைத்தவிர, கேள்வி கேட்கப்படுவதையோ, ஆரோக்கியமாக விவாதிப்பதையோ விரும்புவதில்லை. இன்றைய சூழ்நிலையில் இணைய வெளியில் பிரபலங்களுக்கும், சாமானியர்களுக்குமான இடைவெளி வெகுவாகச் சுருங்கிவிட்டது. பல பிரபலங்களுக்கு இது சகித்துக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கலாம். 

அதைத்தான் ராஜனின் கைது ஒருவகையில் சொல்கிறது! 

இந்த இணையப் பெருவெளியில் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட ஒரு சாமானியன் என்ற வகையில்...I support Rajan!




20 comments:

  1. வழமை போல் சட்டம் தன் கடமையை செய்கிறது செய்யும்!

    ReplyDelete
  2. சரிதான்:)

    ReplyDelete
  3. ராஜன் பற்றி...!

    ||சாமானியர்கள் மீது சந்தேகம் என்ற என்று வந்துவிட்டாலே ஆயுள் முழுவதும் குற்றவாளியாகவே பார்த்து ஒதுக்கும் சமூகம் நம்முடையது. ராஜன் விடுதலை செய்யப்பட்டபின் வேறு வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால். சுற்றத்திலுள்ளவர்களின் அவர் மீதான பார்வை? அதை மாற்ற முடியுமா?!

    'ஒரு பிரபலத்திற்குப் பாலியல் தொல்லை கொடுத்ததால் கைது செய்யப்பட்ட..' என்று ஆரம்பிக்கும் செய்தி எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்?! – ஜீ ||

    ராஜனின் அதீத சொல்லாடல்கள் குறித்து எனக்கும் மாற்றுக்கருத்துக்கள் உண்டு. ஆனால், இணையவெளியில் கருத்துரைக்கின்ற சுதந்திரம் ராஜனுக்கும் உண்டு. அது, சாதிய ரீதியில் ஆபாசத்தைக் கொட்ட சின்மயிக்கு இருக்கின்ற சுதந்திரம் அளவுக்கு ராஜனுக்கும் இருக்கத்தானே வேண்டும்….? ஆபாசங்கள் உடலியல் ரீதியில் மட்டும் நிகழ்த்தப்படுவதல்ல; மனரீதியாகவும் நிகழ்த்தப்படுவது!

    ராஜனின் எழுத்தாளுமை மீது எனக்கு அதீத ஆர்வமுண்டு. தடுப்புக்காவலிலிருந்து வெளியில் வந்து படைப்பிலக்கியத்தில் ராஜன் கவனம் செலுத்த வேண்டும். அப்போது மிகச்சிறந்த படைப்புக்களை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்!!

    ReplyDelete
  4. எல்லாம் சொன்னீங்க நம்ம குஷ்பு மேடமும் சின்மயிக்கு ஆதரவாய் "அற சீற்றத்தோடு " பொங்கி இருக்காங்களே அதை குறிப்பிடவில்லையே....... :)))))

    ReplyDelete
  5. பல பிரபலங்கள் தாங்கள் சொல்வதை எல்லாரும் கேட்க வேண்டும் என்பதைத்தவிர, கேள்வி கேட்கப்படுவதையோ, ஆரோக்கியமாக விவாதிப்பதையோ விரும்புவதில்லை. இன்றைய சூழ்நிலையில் இணைய வெளியில் பிரபலங்களுக்கும், சாமானியர்களுக்குமான இடைவெளி வெகுவாகச் சுருங்கிவிட்டது. பல பிரபலங்களுக்கு இது சகித்துக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கலாம்.////

    இருக்கலாம் என்ன நிறையவே இருக்கு...... :))) ராஜனின் கைது என்பது பல பிரபலங்களுக்கு எதையோ சாதித்த சந்தோஷத்தை நிம்மதியை கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

    ReplyDelete
  6. தேவையான பதிவு ராஜனுக்கு ஆதரவாய் நாம் எழுப்பும் குரல் நாளை நசுக்கப்படவிருக்கும் இன்னுமொருவரின் கருத்துரைக்கும் உரிமைக்கும் சேர்த்தே என்பதாயிருக்கட்டும்

    ReplyDelete
  7. சில பிரபலங்களின் மேடைப்பேச்சு மேடைகளில் மட்டும் ஏற்கனவே எழுதிவைத்த ஆளுமைகளால் தம்மை மச்சுவேர்ட்டாக காட்டிக்கொள்கிறார்கள் நான்களும் நம்புகின்றோம் ஆனால் சமூகத்தளங்களில் வாயைத்திறக்கும்போதுதான் வெத்துவேட்டு அல்லது முதிர்ச்சியடையாமை தெளிவாக தெரிகின்றது

    ReplyDelete
  8. If a man get into problem his fellow men watch it with folded hands, but a women got into a problem everybody extend their hands. To understand this read sigmund freiud books on psycology.

    ReplyDelete
  9. ராஜனுக்கும் சின்மயிக்குமான பிரச்சினை. நீங்களே இதனை தீர்த்து கொள்ளுங்கள் என விட்டு செல்லலாம். ஆனால் இந்த ராஜன் லீக்ஸ் அன்ட் கோ சின்மயி என்று மட்டுமில்லாது பல பெண் பிரபலங்களையும் ஆபாச வசை சொற்களினால் கேவல படுத்தி உள்ளார்கள்.
    " ஒரு மாநிலத்தின் முதல் பெண்மணியை, அவர்களது தாயினும் வயதில் மூத்தவராக இருக்க கூடிய ஒரு பெண்மணியை மிகவும் வக்கிரத்தனமாக, மிகவும் ஆபசாமாக , அருவருப்பாக, தரக்குறைவாக ட்வீட்டி உள்ளார்களே. இதற்கு காரணம் என்ன? அந்த ஹசந்த விஜேநாயக என்னும் கார்டுனிஸ்ட்ற்கும், ராஜன் லீக்ஸ் அன்ட் கோவிற்கும் என்ன வித்தியாசம்?". அவனாவது ஒரு கார்டூன் படத்துடன் நின்று விட்டான்/ அல்லது நிறுத்தப்பட்டு விட்டான். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரை, அவனாவது துவேஷ இனவெறி பிடித்தவன், தமிழர்களையே இழிவாக எண்ணுபவன். ஆனால் பச்சை தமிழர்களாகிய, தமிழ் நாட்டில் வாழும் இவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இவ்வாறு ஆணாதிக்க ஆபாச கருத்துகளை வெளியிட்டதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? . தான் ஒரு ஆண், தான் ஒரு பெண்ணை பற்றி, அவர் நாட்டின் முதல்வராகவே இருந்தாலும் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் கூறலாம் என்று இவர்களை எண்ண வைத்த காரணி என்ன? இதுதான் நீங்கள் கூறும் கருத்து சுதந்திரமோ? பதிவர்களே, டிவிட்டர்களே?

    ReplyDelete
  10. சட்டத்துக்கு முரணாக செல்வதில் உடன்பாடில்லை, சட்டமே முரணாக இருந்தால், மக்களே அவற்றை மாற்ற முற்படவேண்டும் !

    ReplyDelete
  11. தமது சொந்த விருப்பு வெறுப்பின் அடிப்படையிலேயே டிவிட்டர்களின் பிரச்சினை பார்க்கப்படுகிறது.

    You are with us or against us என்ற ஜார்ஜ் புஷ்சின் தட்டைப்பார்வையே பார்க்கப்ப்டுகிறது.

    சாரு,லீனா மணிமேகலை,ஷோபா சக்தி பற்றி அருள் எழிலன் அவரது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.நமது அரசியல்வாதிகள் தேர்தல் காலத்து தாவல் மாதிரியான முரண்நகை.

    துவக்கத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தனி மனித கோபங்கள்,சார்பு தாண்டி பதிவுலகம் மாற்று பக்கங்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளதை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  12. ஜெயமோகனின் ரியாக்ஷன் எனக்கும் ஷாக்தான். நீங்கள் சரியாக சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  13. http://www.sengovi.blogspot.com/2012/10/blog-post_29.html

    ReplyDelete
  14. good article. i know how much hatred those 2 ladies have. not sure why, by they always stalk people and created trouble with them. judge other girls characters. i hope they learn from this. i too support rajan!

    ReplyDelete
  15. பல பிரபலங்களுக்கு இது சகித்துக் கொள்ள முடியாத விஷயமாக இருக்கலாம். //

    உண்மையோ உண்மை இது...!

    ReplyDelete
  16. முதலில் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்.
    நான் யூதன் அல்ல, அதனால் நான் பேசவில்லை.
    பின்பு அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்.
    நான் கம்யூனிஸ்டு அல்ல, அதனால் நான் பேசவில்லை.
    பின்பு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள்,
    நான் தொழிற்சங்கவாதியல்ல, அதனால் நான் பேசவில்லை.
    இறுதியாக அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்.
    இப்பொழுது எனக்காகப் பேச எவரும் இல்லை. - நிமோலர்

    ReplyDelete
  17. இனைய வெளியில் கருத்துச் சுதந்திரம் பற்றி மட்டுமே பதிவு பேசுவதால் எனது கருத்தையும் பதிவு செய்கிறேன். நமக்கு கிடைத்திருக்கும் இந்த கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டிய கடமை நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. பொது வெளியில் விவதாம் புரியும்போது கையாள வேண்டிய அடிப்படை தர்மங்கள் கடைப்பிடிக்கப்படாமல் நடக்கும் எந்த விவாதமும் இவ்வாறன பிரச்சினைலேயே போய் முடியும். சமீப காலமாக இணைய வெளியில் நடக்கும் கருத்து மோதல்கள் கருத்து மோதல்களாக மட்டுமே நிற்காது தனிப்பட்ட நபர்களின் மீதான தாக்குதலாக யாருக்கு அதிகம் கெட்ட வார்த்தை தெரியும் என்பதை பரீட்ச்சித்துப் பார்க்கும் குழந்தை விளையாட்டாக மாறிவிட்ட கொடுமை கருத்துச் சுதந்திரத்தை காவு கொடுத்துவிடும். பொது வெளியில் கருத்து மோதலில் ஈடுபடும் தகுதி இதில் சம்பந்தப்பட்ட இருசாரருக்கும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. சுதந்திரம் பறிபோவதற்கு இருவரும் காரணமே.

    //சின்மயி நல்ல பாடகி. அவர் குரல் எனக்குப் பிடிக்கும். இனியும் பிடிக்கும். அவர் பாடகி, சினிமாப் பிரபலம் என்பதைத் தவிர அவர் ஒன்றும் அறிவுஜீவியோ, தத்துவஞானியோ கிடையாது. அவர்கூறும் அறிவார்ந்த கருத்துக்களைப் பொருட்படுத்தவே வேண்டியதில்லை. ஆனால்.. ஒரு பிரபலம் அதுவும் சினிமாப்பிரபலம் என்ற வகையில் அவரைத் தொடர்பவர்கள், கவனிப்பவர்கள் ஏராளமானோர் இருக்கும் சூழலில், போகிற போக்கில் பொறுப்பில்லாமல் சொல்லிச் செல்லும் அரைவேக்காட்டுத்தனமான கருத்துகள் விஷம் போன்றவை.//

    நூறு வீதம் ஆமோத்திக்கிறேன்.

    ReplyDelete
  18. சின்மாயியும் இணைய சுதந்திரமும்
    http://realsanthanamfanz.blogspot.com/2012/10/blog-post_2307.html

    ReplyDelete
  19. வெகுவும் தெளிவான பதிவு தோழரே!!!

    ReplyDelete
  20. chinmayee iddam sola/keetka pada/patirukka veandiyaY: iyyo! neenga supera paaduringa!, I love U!, U R so nice!, kolreenga!, chance illa pitchuteenga!, unga paatunna usirayum kuduppen, eenga en kanila pattu tholaicheenga, U so sweet,will U marry me, ungaloda puthu projct enna?, eppidi ungalala matum ippidy paada mudiyuthu?...etc

    ReplyDelete