ஒரு பெண் மீதான வன்முறை இடம் பெறும்போதெல்லாம் பெண்களின் ஆடைகள் குறித்து மட்டுமே அதிகமாகப் பேசப்படுகின்றன.
ஒரு பெண் அணிந்திருக்கும் உடை குறித்து மோசமான வசைச் சொற்களால் தாக்கும் சைக்கோக்களிற்கு கலாச்சாரக் காவலர்கள் அந்தஸ்தைக் கொடுக்கும் மனநிலை பிறழ்ந்த சமூகம் நம்மிடையே உண்டு.
ஒரு பெண் சம்பந்தப் படுத்தப்பட்டு, பாலியல் தொல்லையோடு தொடர்புபடுத்தி மேற்கொள்ளும் எந்த ஆதாரமுமற்ற குற்றச்சாட்டு ஒன்றே சாமானியன் ஒருவரின் வாழ்க்கை முழுவதற்கும் தண்டனை தரப் போதுமானது - நம் சமூகத்தில்!