பரத்! - நல்ல நடிகரா இருந்தார். பாய்ஸ்ல வந்த பசங்கள்ளயே முதல்ல தேறி வந்தவர் அவர்தான்.
ஆனா இன்னுமொரு இளைய தளபதியாகும் ஆசையில், மக்களாக விரும்பிக்கொடுத்த(?!) 'சின்னத்தளபதி' பட்டத்தையும் போட்டுக்கொண்டு, பேரரசு சகவாசம் வைத்துக்கொண்டதில் சின்னப்பகவதி ஆனதுதான் கொடுமை.
ஆனா இன்னுமொரு இளைய தளபதியாகும் ஆசையில், மக்களாக விரும்பிக்கொடுத்த(?!) 'சின்னத்தளபதி' பட்டத்தையும் போட்டுக்கொண்டு, பேரரசு சகவாசம் வைத்துக்கொண்டதில் சின்னப்பகவதி ஆனதுதான் கொடுமை.
இப்பிடியே போனால் 2020 இல் நம்ம சித்தி ராதிகா நடிக்கும் சீரியலில் சித்தியை பொண்ணு பாக்கவரும் வெளிநாட்டு மாப்பிள்ளை காரெக்டரில் நடிக்கும் அபாயம் இருக்கு - அபாயம் பரத்துக்கு மட்டுமல்ல நமக்கும்!
* * * * * * * *
இரண்டுவாரம் கொழும்பிலயே ஒரு ப்ராஜெக்ட் ஆஃபீசில ஆணி பிடுங்கச் சொன்னதால் சந்தோஷமா இருந்தேன். அதென்னவோ தெரியல கொழும்பில வேலைன்னாலே அது 155 பஸ் ரூட்லதான் போகவேண்டி வாய்க்கும். அது ஒரு மோசமான பயண அனுபவமாக இருக்கும் என்பதை கொழும்பு வாழ் மக்களுக்குச் சொல்லவேண்டியதில்லை.
ஒரு சேஞ்சுக்கு 255 பஸ் ரூட்ல கஸ்பாவ போகவேண்டியிருந்தது. இது அதுக்கும் மேல! கிராமப் புறமா இருந்திச்சு. முதல் தடவையா போறதால எதுக்கும் யாரையாவது கேட்டு வைக்கலாம்னு பார்த்தா எல்லாருமே கிராமப்புறமாத் தெரிஞ்சதில், எனக்குப் பக்கத்தில ஒரு பொண்ணு மட்டும்தான் நவ நாகரிக நங்கையாகத் தெரிஞ்சதால் நம்பிக் கேட்டேன்.சிங்களப் பொண்ணுதான்! தமிழ்ப் பொண்ணுன்னா அந்தப் பக்கமே திரும்பியிருக்கவே மாட்டோம்ல.
அதில பாருங்க சிங்களப் பொண்ணுங்க தமிழ்ப் பொண்ணுங்க மாதிரி இல்லாம கொஞ்சம் சகஜமாப் பழகுவாய்ங்க அப்பிடீன்னு ஒரு பேச்சு காலங்காலமா இருக்கு! அதில கொஞ்சம் உண்மையும் இருக்கு. முன்னப்பின்ன தெரியாதவன் பேசினாலும் சிநேகப்பூர்வமா பேசக்கூடியவர்கள். அதாலதான் நம்பிக் கேட்டா...அந்தப் பொண்ணு நவநாகரீகப் பூச்சுக்குள் ஒளிந்திருக்கும் பக்கா குக்கிராமம் போல. ஒரு ரியாக்சன் குடுத்திச்சு பாருங்க.
முகத்தில அப்பிடி ஒரு பதற்றம். கண்ணில கலவரம்.. அப்பிடியொரு அதிர்ச்சி!! ஆடிப் போயிட்டேன். எனக்கே டவுட்டாப் போச்சு! அப்பிடி என்னத்தக் கேட்டுத் தொலைச்சோம்? வழிதானே கேட்டோம்? இங்கிலிப்பீசுல பேசினதால தப்பா புரிஞ்சிருக்குமோ? ஒருவேளை பொண்ணுங்க தொடர்பா நம்ம ராசி தெரிஞ்சு இவன்கூட இப்பிடித்தான் ரியாக்ட் பண்ணனும்னு..? எப்பிடித்தான் கண்டு பிடிக்கிறாளுகளோ?
* * * * * * * *
அப்புறமா வேற ஆஃபீஸ்ல தான் எனக்கு வேலைன்னு சொல்ல நம்ம பழைய 155 ரூட்ல அந்த ஆபீஸ் போனா..
அங்கே ஒரு பொண்ணு இருந்ததைப் பார்த்ததும் ஆச்சரியம். நாம போற இடத்தில பொண்ணா? இருக்கக் கூடாதே.. எங்கயோ தப்பு நடந்திருச்சேன்னு யோசிச்சேன்.
அசப்புல பார்த்தா சானியா மிர்சா மாதிரி வேற இருந்திச்சு..அப்புறமா கூர்ந்து கவனிச்சதில் அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லன்னு தெளிவாச்சு. ஆனா பாருங்க நான் கூர்ந்து கவனிச்சத யாரோ கவனிச்சிட்டாங்க போல. அடுத்தநாளே அந்தப் பொண்ணைக் காணோம்! என்ன மாதிரியான வரட்சியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம்?
ரெண்டு வாரத்துக்கு முதல் ஆஃபீஸ் பார்ட்டி நடந்துச்சா..நாட்டில வேற இடங்கள்ல, ப்ராஜெக்ட்ல இருந்து நம்ம கம்பெனி ஸ்டாஃப்ஸ் பலர் வந்திருந்தாங்க அப்பத்தான் பார்த்தேன் நம்ம கம்பெனில இவ்ளோ பொண்ணுங்க வேலை செய்யுதுங்களா? அதெப்பிடிறா நான் போற ப்ராஜெக்ட்ல மட்டும் மாமாக்களும், தாத்தாக்களுமா மட்டும் இருக்கிறானுங்க?
பொண்ணுங்க இருந்துட்டாலும்..
ஒரு ஃபிளாஷ்பேக் ஞாபகத்துக்கு வந்தது!
* * * * * * * *
நாலு மாசத்துக்கு முதல்..நம்ம ரெசிடென்ஸ்.மழை பெய்து ஒய்ந்துவிட்டிருந்த முன்னிரவுப்பொழுது! குளிர்காற்று வீசிய அந்த ரம்மியமான பொழுதில் வெளிப்புறமாக இருந்த மாடிப்படிகளில் வழுக்கி இசகுபிசகாக சறுக்கிக் கீழே விழுந்து தொலைத்திருந்தேன். ஒரு காலில் கட்டுப் போட்டு, ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்து, அலுவலகத்திற்குப் போனேன்.
ஒரு காலைச் சற்றே இழுத்து நடக்கும்போது மனதிற்குள் 'தாண்டித் தாண்டி நீ நடக்கும்போது அடடா'மீசிக் போட்டுக் கொண்டே நான் பாட்டுக்கு போயிட்டிருந்தேன்.
பக்கத்து ஆஃபீஸ் பொண்ணு "என்னாச்சு?" அக்கறையா கேட்டுச்சு.
'என்ன திடீர் அக்கறை? இது நல்லதுக்கில்லையே'ன்னு தோணிச்சு அப்புறமா 'சேச்சே இருக்காது அந்தப் பொண்ணு அன்பாத்தான் கேக்குது நாம தான் எப்பவுமே தப்பா யோசிக்கிறோம்' அப்பிடீன்னு சமாதானமாகி சொன்னேன்.
"அது..... லைட்டா... அப்பிடி சறுக்கி.. லைட்டா.... விழுந்துட்டேன்! இருந்தாலும் அடி என்னமோ கொஞ்சம் ஓவர்தான்... முடியல!"
"கால்ல மட்டுந்தானா?"
"இல்ல.. மானாவாரியா எல்லா இடமும் அடிபட்டுச்சு. கால்லதான் பயங்கர வலி!"
எல்லாம் விசாரிச்சுட்டு வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க ஆரம்பிச்சுது.
"அவ்வளவு சிரிப்பாவா இருக்கு? அந்தளவு பெரிய ஜோக் இல்லையே இது?"
"இல்ல நான் வேற ஒண்டு நினைச்சேன்.."
"ரைட்டு விடுங்க!" நான் திரும்பினேன்.
"இல்ல.. நீங்க தண்ணியடிச்சுட்டு எங்கயாவது விழுந்திட்டீங்களோன்னு.."
ஹி.ஹி.ஹி.ஹி.............
ReplyDeleteஆனா இன்னுமொரு இளைய தளபதியாகும் ஆசையில், மக்களாக விரும்பிக்கொடுத்த(?!) 'சின்னத்தளபதி' பட்டத்தையும் போட்டுக்கொண்டு, பேரரசு சகவாசம் வைத்துக்கொண்டதில் சின்னப்பகவதி ஆனதுதான் கொடுமை.
ReplyDelete////
நேத்துதான் நான் அந்த உலகமகா காவியமான திருத்தனி பார்த்தேன்
////Your comment will be visible after approval.////
ReplyDeleteஅண்ணனுக்கு இங்கும் பொண்ணுங்க தொல்லை போல
பாரத்தோட சிக்ஸ் பாக் பார்த்தா இப்போவே கண்ணா கட்டுது. இதுல சித்திய பொண்ணு பார்க்க வேறயா?
ReplyDeleteHi hi jolly post
ReplyDelete/////அதெப்பிடிறா நான் போற ப்ராஜெக்ட்ல மட்டும் மாமாக்களும், தாத்தாக்களுமா மட்டும் இருக்கிறானுங்க?////////
ReplyDeleteஉங்க வயிதெரிச்சல் புரியுது பாஸ் அவவ்வ்வ்வ்
:))
ReplyDeleteஹா...ஹா...
ReplyDeleteநன்றி...
இப்பிடியே போனால் 2020 இல் நம்ம சித்தி ராதிகா நடிக்கும் சீரியலில் சித்தியை பொண்ணு பாக்கவரும் வெளிநாட்டு மாப்பிள்ளை காரெக்டரில் நடிக்கும் அபாயம் இருக்கு - அபாயம் பரத்துக்கு மட்டுமல்ல நமக்கும்!//
ReplyDeleteஹா ஹா கலக்கல் பாஸ் 2020 வரைக்கும் ராதிகா நடிப்பாங்க நடிப்பாங்க
"இல்ல.. நீங்க தண்ணியடிச்சுட்டு எங்கயாவது விழுந்திட்டீங்களோன்னு.."/// ஹீ,ஹீ, பசங்க மேல பொண்ணுங்க எவ்வளவு நம்பிக்கை வச்சு இருக்காங்க பாருங்க!
ReplyDeleteஉங்களுக்கு எப்பவுமே கன்னி ராசி இல்லை ஜீ :)
ReplyDelete155 பஸ்ல படம் ஒண்ணு போடச்சொல்லி கோரிக்கை வைக்கலாமே.. அதில ஏறி இறங்கிற Gapல ஒரு இங்கிலிஷுப்படமே பார்த்து முடிச்சிடலாம் .. நீங்க தினமும் ஒரு பதிவு எழுதலாம்
//இப்பிடியே போனால் 2020 இல் நம்ம சித்தி ராதிகா நடிக்கும் சீரியலில் சித்தியை பொண்ணு பாக்கவரும் வெளிநாட்டு மாப்பிள்ளை காரெக்டரில் நடிக்கும் அபாயம் இருக்கு - அபாயம் பரத்துக்கு மட்டுமல்ல நமக்கும்!//
ReplyDeleteஎதிர்காலத்தை கணிக்கற சித்தனப்பா நீங்க
//சிங்களப் பொண்ணுதான்! தமிழ்ப் பொண்ணுன்னா அந்தப் பக்கமே திரும்பியிருக்கவே மாட்டோம்ல.//
ReplyDeleteஹி ஹி ... உங்களுக்கு அந்தளவுக்காச்சு தைரியம் இருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க ஜீ
சத்திய சோதனை.... பட்.. அந்த பொண்ணு ஒர்க் அவுட் ஆக சான்ஸ் இருக்கு....!
ReplyDelete