Thursday, November 15, 2012

வாங்க பாஸ்..அழலாம்!


ரு முறை அக்கா பையனுக்கு ஊசி போட ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, நானும் கூடப் போயிருந்தேன். லட்டு லட்டா அழகான குழந்தைகள். பெண்குழந்தைகள்தான் அதிகம். 

நம்மாளு டீ.வி. திரையில் தெரிஞ்ச எழுத்துக்களை வாசிக்க ஆரம்பிச்சான். ஏ,பி,சி,டி..தெரிஞ்சதுக்கே இந்த பீட்டர்? எல்லாரையும் கொஞ்சம் ஆச்சரியமாப் பார்க்க வச்சுட்டு அப்பப்ப டாக்டர் ரூம்ல என்ன நடக்குதுன்னு கவனிச்சுட்டு இருந்தான். அங்க ஒரு பெண்குழந்தைக்கு ஊசி போட, சின்னதா அழுதிச்சு.

பீட்டர் விட்டுக் கொண்டிருந்த நம்மாளு உடனே கலவரமாகி "ங் ஹே.." ன்னு மெல்லிய குரல்ல ஆரம்பிச்சு "கரேல்"ன்னு ஹை பிட்சில பிடிச்சான் பாருங்க. கூட இருந்த இன்னும் மூணு பசங்களும் கோரஸ் சேர்ந்துகொள்ள, ஏரியா களை கட்டிச்சு! அங்க இருந்த அம்மாக்கள், நேர்சுகள் எல்லாருக்கும் சிரிப்பு! அவன் வயசுப் பொண்ணுங்க எல்லாம் "என்னங்கடா ஆச்சு இவனுங்களுக்கு"ன்னு ஆச்சரியமாப் பாத்துட்டிருந்தாங்க! இவனுங்க அதையெல்லாம் கண்டுக்காம கன்டினியூ பண்ணிட்டிருந்தானுகள்.

அப்போதான் யோசிச்சேன் ஒரு பொண்ணுக்கு துன்பம்ன்னு வரும்போது பசங்க அவ்வளவு துடிச்சுப் போயிடுறாங்க? அதுவும் இந்தச் சின்ன (ரெண்டு வயசு) வயசிலயே? எவ்வளவு விவரம்? ஆனா கொடுமையைப் பாருங்க அந்தப்பொண்ணு வெளில வந்து சிரிச்சுக்கிட்டே டாட்டா காட்டிட்டுப் போன பிறகும் இவனுங்க உசிரக் குடுத்து சின்சியரா அழுதிட்டிருந்தானுங்க!

சங்களுக்கு எப்பவுமே இளகின மனசுதான். யாராவது அழுதால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை - எந்த வயதிலும்!

சின்னவயதில் மிருதங்கம் கற்பித்த ஆசிரியர் தனித்தனியாகச் சொல்லிக் கொடுத்து, பின்னர் எல்லோரயும் ஒன்றாக வாசிக்கச் சொல்வார். நல்லபடியா ஆரம்பிச்சு போய்க் கொண்டிருக்கும். இடையில் யாராவது தாளம் தவறி சொதப்ப, நாராசமாகும். அந்த இடத்தில் உடனே நிறுத்தினால் பிழைத்தோம். இல்லையேல் உள்ளங்கையில் பிரம்பால் எல்லோருக்கும் வரிசையாக அடிபின்னிவிடுவார்.

ஒரு முறை ஒரு நண்பனைத் தவறுதலாக புரிந்து அவனுக்கு மட்டும் அடிவிழ, யாருமே எதிர்பார்க்காத விதமாக அவன் அழுதுகொண்டே பதில் பேசியதைக் கண்டு நாமெல்லாம் கண்கலங்கி உட்கார்ந்திருக்க, இன்னொருத்தான் அழவே ஆரம்பித்தான். இதெல்லாம் பார்த்து, இளகிய மனம் கொண்ட ஆசிரியரும் கண் கலங்க, ஒட்டுமொத்தமா எல்லோரும் கண் கசங்கி உட்கார்ந்திருந்தது 'கண் நிறைந்த காட்சி'யாக இருந்தது.

யாழ்ப்பாணத்துக் கிராமங்களில் முன்னரெல்லாம் இறந்த வீடுகளில் ஒப்பாரி வைப்பதற்கென்றே சிறப்புத் தேர்ச்சி(?!) பெற்ற ஒரு குழு இருக்கும். யாருடைய புருஷன் செத்துப் போனாலும் அங்கே போய் "ஐயோ என்னை விட்டுட்டுப் போயிட்டீங்களே என் ராசா"ன்னு கலவரமாக் குரல் கொடுக்கும்! வரும் பெண்களுடன் சேர்ந்து கூட்டமாகக் கட்டிப்பிடித்துக் கூட்டணி அமைத்து ஒப்பாரி வைப்பது சின்னவயதில் வேடிக்கையாக இருந்திருக்கிறது.

* * * * * * * * 

மிக அரிதாக, ஒரு ஆண் வெடித்து அழுவதைப் பார்க்க நேர்வது மிகத் துயரமான உணர்வைக் கொடுத்துவிடுகிறது. ஒரு முறை நண்பனொருவன் தாய் இறந்த பொழுது அப்படி அழுதான். நண்பர்கள் எல்லாரும் என்னைப் போலவே ஒவ்வொருவராக அங்கிருந்து மெதுவாக நழுவியதைக் காண முடிந்தது. கொஞ்ச நேரம் நின்றாலும் எங்கே கண்கலங்கி விடுவோமோ என்ற பயமே காரணம்.

க்குபாய் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஸ்ரேயா அழுததைப் பார்த்து நண்பன் ஒருவன் கண்கலங்கினான். கவனமாகக் கவனித்து வைத்துக் கொண்டோம். படம் முடிந்து வெளியே வந்ததும்,

"ஏண்டா டேய். இந்தப் படம் பார்க்க வந்ததுக்கே அழலாம், ரொக்சி தியேட்டர்ல மூட்டைப் பூச்சிக் கடிக்கு அழலாம். ஆனா அதெல்லாம் விட்டுட்டு ஸ்ரேயா நடிப்பைப் பார்த்து அழுத பாரு... அதத்தாண்டா தாங்க முடியல!".

"ஆனா ஒண்ணு, 'ஸ்ரேயா நடிப்பைப் பார்த்து' அழுத ஒரே ஒருத்தன் நீயாத்தான் இருப்பே! இதுக்கே உனக்கு சிறந்த பார்வையாளன்னு விருது குடுக்கணும்!"

* * * * * * * * *

நானும், ஜெயனும் வழக்கம்போல் வாழ்க்கை வெறுத்த பேச்சு பேசிட்டிருக்கும்போது எதற்கும் அலட்டிக் கொள்ளாத நண்பன் ஒருவன் திடீரென்று  காண்டாகிக் கத்தினான்.

"ஏண்டா உங்களுக்கென்னடா பிரச்சினை? என்னை மாதிரிக் கஷ்டப் பட்டிருக்கீங்களா? சின்னவயதில ஒழுங்கா சாப்பாடு இல்லாம பள்ளிக்கூடம் போவோம். நல்ல உடுப்புக் கிடையாது. சின்ன வீட்டில இரவு மழை பெஞ்சா வெள்ளம் உள்ள வந்திடும் நித்திரை கிடையாது. கொழும்பு வந்தும், எத்தனை நாள் சைட்ல இருந்து பசியில வீடு வந்தா வீட்ல சாப்பாடு இருக்காது. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமாடா?"

அவன் பேசும் போது விழியோரம் கசிந்திருந்தது. அழுதுவிடுவான் போலிருந்தது. சரி விடுறா லைட்டா பசிக்குது மச்சி கே.எப்.சி. போவமா? பேச்சை மாற்றினான் ஜெயன்.

யாராவது உணர்ச்சி வசப்பட்டால் ஆறுதல் சொல்லி உசுப்பேத்தியே அழ வைக்கும் கோஷ்டி ஒன்று இருக்கும். நாங்கள் அதில் தெளிவாக இருந்தோம். அப்படியொரு சூழ்நிலையில் கண்டுக்காமல் உடனடியாகப் பேச்சைமாற்றி விடுவது வழக்கம். 

சில படங்களைப் பார்க்கும்போது எவ்வளவு முயன்றாலும் கண்கள் கலங்குவதைக் கட்டுப்படுத்த முடியாது. அவையெல்லாம் சோகப் படங்களாக இருக்க வேண்டியதில்லை என்பது உலக சினிமா பார்ப்பவர்களுக்குத் தெரியும்! 

Cinema Paradiso படத்தில் சில காட்சிகள் சோகமின்றியே நெகிழ்ந்து கலங்க வைக்கும். கரண்ட் வோயகே The Grand Voyage பார்க்கும்போது ஒவ்வொருமுறையும் அழுதுவிடுவதாக என் நண்பன் கூறுவான். ஆனால் துரதிருஷ்டவசமாக படத்தில் சோகத்தைப் பிழிந்தால் பார்வையாளர்கள் அப்படியே உணர்வார்கள், நடிகர்கள் அழுதால் பார்வையாளர்களும் அழுவார்கள் என்ற தவறான புரிதல் தமிழ்சினிமாவில் இருப்பதாகத் தெரிகிறது. இது சமயங்களில் தாங்க முடியாத எரிச்சலை மட்டுமே கொடுக்கிறது.3 திரைப்படத்தில் சுருதி எப்போதும் ஓவென்று அலறுவது சகிக்க முடியாத இம்சையாக மட்டுமே இருந்தது.

ழ முடியாதது ஒரு ஒரு கொடுந்துயரம். துயரத்தை அடக்காது வாய் விட்டு அழுதுவிடுவது மனதை இலேசாக்கும் துன்பத்திலிருந்து மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கும் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. ஆண்கள் அழக்கூடாது என்று நம் சமூகத்தில் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டிருப்பதால் மனதிற்குள் மட்டுமே அழுது தீர்க்கிறார்கள். அடக்கி அடக்கியே பழக்கப்பட்டதால் அழுது தீர்க்கவேண்டும் என்று நினைத்தாலும் அழுகை வராது. 

'வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி' என்று காதலைச் சொல்லியிருந்தார் கவிஞர். அது உண்மையோ இல்லையோ தெரியாது. ஆனால், அழுது தீர்க்க முடியாத துயரம் ஒரு இரும்புக் குண்டாய் தொண்டைக்குழிக்குள் அடைத்துக் கொள்ளும். பேசமுடியாது வார்த்தைகள் துண்டாகித் திக்கிக் கொண்டிருக்கும். மூச்சு முட்டி, நெஞ்சு வெடித்துவிடும்போலிருக்கும். தனிமையில், நள்ளிரவில் அவசரமாக எழுந்து சென்று பல்கனியில் நின்று இருளில் வெறித்து, காற்றில் கரைந்து அடங்கும் அந்த அனுபவம் உணர்ந்தவர்களுக்கே புரியும்.

* * * * * * * * 

ஆண்கள் சிலர் மனம் விட்டு அழுகிறார்களோ இல்லையோ உள்ளே பீர்விட்டதும், சரக்கு விட்டதும் அழும் சிலரைப் பார்க்க முடிகிறது. ஏதோ ஒரு சோகத்தை நினைவுபடுத்தி அழுபவர்கள் இருக்கிறாகள். ஓவராகப் போனதும் ஹோ வென்று குந்திய்ருந்து அழுபவர்களும் இருக்கிறார்கள். 

ஒருமுறை பார்டியில் கௌசி 'ஆகாச வாணி..' பாடினான். நண்பர்களில் ஒருத்தன் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு காதல் தோல்வியாம். ஆனாலும் கௌசியின் பாட்டைக் கேட்டபோது எங்கள் எல்லோருக்குமே அழவேண்டும் போலத்தோன்றியது என்னவோ உண்மை!

ரு பார்ட்டி முடிந்து வழக்கம்போல வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கியருகே நின்று பேசிக்கொண்டிருந்தோம். நண்பனுக்கு  ஒரு  அலைபேசி அழைப்பு. பேசிய நண்பன் அதிர்ச்சியானான். எங்களிடமிருந்து சற்று முன்னர் விடைபெற்றுச் சென்ற நண்பன் ஒருவன் தொலைபேசி, அழுது, அவசரமா வீட்டுக்கு வரச்சொன்னான். 

என்ன பிரச்சினை என்று புரியாமல் எங்களில் ரெண்டுபேர் ஆட்டோ பிடித்துக் கொண்டு நாலு கிலோமீற்றர் தள்ளியிருந்த அவன் வீட்டுக்குப் போனார்கள்.

ஒருவாறு அழுதவனைச் சமாதானப்படுத்தி, "எங்கடா? வீட்டதானே நிக்கிறே?"

"இல்லடா வீட்டுக்கு வெளில..(Gate)கேட்டடியில!" 

"ஏண்டா?" 

அப்போதான் விஷயத்தையே சொன்னான்.    

"கேட்ல திறப்புப் போடுற ஓட்டையைக் (key hole) காணேல்ல!" - மறுபடியும் அழ ஆரம்பித்தான்.

14 comments:

  1. //பசங்களுக்கு எப்பவுமே இளகின மனசுதான். யாராவது அழுதால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை - எந்த வயதிலும்//

    நாமல்லாம் நல்லவங்க பாஸ்

    ReplyDelete
  2. இப்படியா அழ வைக்கிறது... தாங்க முடியலே சாமீ...!

    ReplyDelete
  3. அழ முடியாத துக்கத்தின் வலி அதிகம் தான்..அர்த்தமுள்ள பதிவு ஜீ.

    ReplyDelete
  4. இப்ப என்னதான் சொல்ல வாறீங்கள்? ஹான்களும் அழ வேணுமா? ஹிஹிஹி முடியல சிரிப்புதான் வருது.

    ReplyDelete
  5. "என் ராஜபாட்டை"- ராஜா said...

    //பசங்களுக்கு எப்பவுமே இளகின மனசுதான். யாராவது அழுதால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை - எந்த வயதிலும்//

    நாமல்லாம் நல்லவங்க பாஸ்
    >>
    பொண்ணுங்களை அழவைக்குறதே நீங்கதானே பாஸ்?!

    ReplyDelete
  6. எவ்வள்வுதான் ஆண் சோகத்துல இருந்து கண்ணீர் வடிச்சாலும் அவன் சோகம் அங்கே கேலிப்பேசப்படுகிறது.., ஆம்பிள்ளையா தைரியமா நிக்காம, பொம்பளை போல என்னடா அழுகை வேண்டிக்கிடக்குன்னு”

    ReplyDelete
  7. குழந்தைமனது அப்படித்தானே பள்ளிக்கூடத்தில் ஒரு குழந்தை அழ ஆரம்பித்தால் வரிசையாக கோரஸ் ஆரம்பிச்சுடுவாங்களே

    ReplyDelete
  8. அழுவாச்சன் காவியம் செம!

    ReplyDelete
  9. Final cry in gate....chancelesssssssss

    ReplyDelete
  10. அழுகை பதிவு அழகாக இருந்தது பாஸ்.... பொம்பிளைங்க அழுகைக்குத்தான் இந்த உலகத்தில் மதிப்பு ஆம்பிளைங்க அழுத 'என்னடா பொம்பிளை மாதிரி அழுறாய்' என்று கிண்டல் பண்ணியே அடக்கிடுவான்களே ?

    ReplyDelete
  11. கண் நிறைந்த அழுகை காட்சிகள்...!!

    ReplyDelete
  12. இது எப்படித் தப்பித்தது,என் பார்வையிலிருந்து?

    ReplyDelete