ஒரு நல்ல அனுபவத்தை சரியான முறையில் பெறாமல் அரைகுறையாக அனுபவித்து பின்னர் வருத்தப்படுவது யாருக்கும் புதிதல்ல!
இப்படி அடிக்கடி நான் அனுபவப்படுவது தூக்கம்!
கணனியில் ஏதாவது வாசித்துக்கொண்டோ, சினிமா பார்த்துக் கொண்டோ அப்படியே தூங்கிவிடுவது. மேசைமீது கால்களிரண்டையும் வைத்து, மடியில் கீபோர்ட் வைத்து டைப் செய்வதே வழக்கம். நடுச்சாமத்தில் தூக்கம் கலைந்து எழுந்து 'அடச்சே நல்ல நித்திரைய வேஸ்ட் ஆக்கிட்டமே'ன்னு ஃபீல் பண்ணிட்டே கட்டில்ல விழுந்து மறுபடியும்..
2006 இல் Water படம் வெளி வந்தபோது நண்பர் ஒருவர் கேட்டார் பார்க்கப் போகலாமா? எம்சியில் வெளியானது (Majestic City)! அது ஏற்கனவே வந்த தீபா மேத்தாவின் ஃபயர் மாதிரிப் படமாகவே இருக்கும்ன்னு நம்பி வேணாம்னுட்டேன். அதையெல்லாம் எதுக்கு தியேட்டர்ல? அப்பால 'வேற எங்கயாவது' பார்த்துக்கலாம்னு ஒரு தொலைநோக்குப் பார்வை. என்னை மாதிரியே பலபேர் நினைச்சிருக்காங்க. சமீபத்தில கூட ஒருவர் அப்பிடியே நம்பிட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்புறம் வோட்டர் பற்றிக் கேள்விப்பட்டு, அடுத்த வருஷம் DVD தேடி வாங்கிப் பார்த்தபோது வெறுத்துப் போனேன், ஏண்டா மிஸ் பண்ணோம்னு.
அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. எம்சில எல்லாரும் ஜோடியாவே டிக்கட் வாங்க கியூல நிக்கிறது பார்த்து இது நமக்கு ஆவுறதில்லைன்னு நினைச்சுட்டிருந்தேன். ஒருவேளை எங்களை மாதிரி சிங்கிள் சிங்கங்களை எல்லாம் உள்ள விடமாட்டாங்களோன்னு கூட ஒரு சந்தேகம் நம்மாளுங்க பலருக்கு! ஒரு நண்பன் தெரியாத்தனமா போயிட்டு வந்து சொன்னான். அங்கே எல்லாருமே ஜோடியா இருந்ததாகவும் ஏதோ எங்களை மாதிரி நாலைஞ்சு பேர் படம் பார்க்க வந்ததாகவும்.
அதைவிட முக்கியமான ஒரு விஷயத்தைச் சொன்னான். தியேட்டரினுள் நிலவும் சீதோஷ்ண நிலை பெண் நண்பர்களோடு செல்பவர்களுக்கு மட்டுமே உகந்ததாக இருக்கும் என்றான். குளிர் ஒத்துக் கொள்ளாது என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நான் போகல. சிலபேர் ஒரு நண்பி கிடைச்ச பிறகு போகலாம்னு மூட நம்பிக்கையில, போகாம இருந்தாங்க. அப்புறம் ரெண்டு வருஷம் காத்திருந்து ஒரு முடிவுக்கு வந்தாங்க 'எம்சில படத்தையாவது பாத்துடலாம்'.
அங்கே, அப்போதெல்லாம் சில்ட்ரன் மூவி அதைவிட்டால், ஃபாமிலி மூவி எனப்படும் மொக்கைப் படங்கள்தான் அதிகமாப் போடுவாங்க. இந்த விஷயமெல்லாம் தெரியாம, 'தீபா மேத்தா படம்லாம் போடுறாங்க', 'எல்லாரும் ஜோடியா வேற போறாங்க'ன்னு வழக்கம்போல 'கோக்குமாக்கா' யோசிச்சு, நம்பிப் போனோம்!
எங்க வழமையான ராசிப்படி, அது ஒரு மரண மொக்கைப் படம். Mamma mia! ABBA இசைக்குழுவினரின் ஆல்பமாக வந்த பாடல்கள் உட்பட, ஏராளமான பாடல்கள் நிறைந்த பெரு வெற்றிபெற்ற திரைப்படம்! இந்த UK படங்களே இப்பிடித்தான்.
எங்க வழமையான ராசிப்படி, அது ஒரு மரண மொக்கைப் படம். Mamma mia! ABBA இசைக்குழுவினரின் ஆல்பமாக வந்த பாடல்கள் உட்பட, ஏராளமான பாடல்கள் நிறைந்த பெரு வெற்றிபெற்ற திரைப்படம்! இந்த UK படங்களே இப்பிடித்தான்.
ஒரு பொண்ணுக்கு பாய்பிரெண்டு கூட கல்யாணம் நிச்சயமாச்சு. அதுக்கு அப்பாவைக் கூப்பிடணும்.இதுல பிரச்சினை என்னான்னா அப்பா யாருங்கிறதுல அம்மாவுக்கு கன்பியூஷன்!ஒரு ஃபோட்டோல கும்பல்ல இருந்த மூணு பேரைக்காட்ட, பொண்ணு "அய்! எனக்கு மூணு அப்பா''ன்னு சந்தோஷப்படுது. ஆனா அம்மா ஒரு குண்டைத்தூக்கிப் போடுறாங்க (அம்மான்னாலே... .)"இதுல ஒருத்தர்தான் உங்கப்பான்னு நான் சந்தேகப்படுறேன்". ('அது சரியாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம் . இருந்தாலும் பரவாயில்ல இன்னுமொரு மூணுபேரைக் கண்டுபிடிச்சு செக் பண்ணலாம்' - இது என்னோட சொந்த வசனம்)
ஆனாலும் பொண்ணுக்கு அம்மாவை நினைச்சாப் பெருமையா இருக்கு, மூணுபேர்ல ஒருத்தர்னு சொல்ற அளவுக்காவது மம்மி தெளிவா இருந்திருக்கேன்னு. அந்த மூணுபேரையும் ஊருக்கு வரவழைச்சு மாறி மாறிப் பாட்டாப் பாடி (எந்தக் காரெக்டர் எப்போ பாட ஆரம்பிக்கும்னு நாங்கெல்லாம் பீதில இருந்தோம்) அப்பாவை ஓரளவுக்குக்(?!) கண்டுபிடிக்கிறாய்ங்க.
இந்த ஃபாமிலி மூவியப் பார்க்க ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமா வந்திருந்தாங்க. குட்டிப் பொண்ணுங்க, வயசுப் பொண்ணுங்க, அம்மாக்கள், பாட்டிகள், என்று நான்கு தலைமுறையும் ஒன்றாகச் சேர்ந்து சந்தோஷமா ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

இதுல அந்த அப்பாக் காரெக்டரா வர்ற அங்கிளை எங்கயோ பார்த்திருக்கோமேன்னு ரொம்ப நேரமா யோசிச்சு பார்த்ததில் பயங்கர அதிர்ச்சி. பியர்ஸ் பிராஸ்னன்! 'ஜேம்ஸ்பாண்ட்' நடிகர்களிலேயே எனக்கு மிகப்பிடித்த பிராஸ்னனை இப்பிடிப் பார்த்து நொந்துபோய் வந்ததுக்கப்புறம் எம்சி தியேட்டருக்கு போகவே நினைச்சதில்ல.
சரி மறுபடியும் தொடங்கிய இடத்துக்கே வரலாம்..
எப்போதாவது வோட்டர் பட பாடல்களைக் கேட்கும்போது, காட்சிகளெல்லாம் மனதில் ஓடும். படத்தின் குளிர்மையான ஒளிப்பதிவு, எப்போதுமே ஒரு ஈரலிப்பை உணர வைக்கும். சாரல் தெறிப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் பாடலகள், பின்னணி இசை, எல்லாம் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். இப்போதும் படத்தை தியேட்டரில் பார்க்காமல் விட்டதை நினைத்து நொந்து போகச் செய்கிறது.
படம் பற்றி இங்கே...Water (2005)
குறிப்பாக இந்தப் பாடல் இசையும் படமாக்கப்பட்டிருக்கும் முறையும்...டிவைன்! டிவிடியில் இடையிடையே பார்ப்பது வழக்கம். பகிர்ந்துகொள்ள யு டியூபில் வீடியோ லிங்க் கிடைக்கவில்லை என்பது சோகம்!

//இப்படி அடிக்கடி நான் அனுபவப்படுவது தூக்கம்!// நானும்தான்
ReplyDelete///ஆனா அம்மா ஒரு குண்டைத்தூக்கிப் போடுறாங்க (அம்மான்னாலே... .)"///
ReplyDeleteநடுவுல கொஞ்சம் அரசியல்..
அம்மாவின் 'உண்மை' முகம் தெரிய உனக்குக் கல்யாணம் ஆகவேணுமடா தம்பி. அம்மாமார், மகன்மாரில் வைத்திருக்கிற அன்பு கசாப்புக் கடைக்காரன் கிடாய் ஆட்டில் வைத்திருக்கிற அன்புதான் என்று போகப்போகப் புரியும்.
ReplyDelete(என்ன செய்வது முகமூடியாகத்தான் கொமென்ட் போடவேண்டியிருக்கு)
தியேட்டருக்குப் போய் படம் பார்க்காம் நித்திரை கொண்டா எப்பிடி காண்டாகும்......
ReplyDeleteநமக்கு நடந்திருக்கு நண்பா
கண்ணொளியை பிறகு வந்து பார்க்கிறேன்...
ReplyDelete16 hours Power cut...!
காலை வணக்கம்,ஜீ!!!!!!!///மேசைமீது கால்களிரண்டையும் வைத்து, "மடியில்" கீபோர்ட் வைத்து டைப் செய்வதே வழக்கம்.////ஆபத்தென்று சொல்கிறார்கள்,கவனம்!
ReplyDelete