Monday, October 1, 2012

துப்பாக்கி!வாழ்க்கையில் அனுபவத்தைப் போல எதுவும் பாடம் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனாலும் கற்ற பாடத்தை மீண்டும் பிரயோகிக்க, இரண்டாவது சந்தர்ப்பம் ஒன்றை வாழ்க்கை வழங்குவது மிகக் குறைவு.


சில சமயங்களில் ஒருவனிடம் பெற்ற அனுபவத்திலிருந்து கற்ற பாடம், அவனுக்கு பாடம் கற்பிக்க காரணமாக இருந்துவிடுகிறது.

இப்போதும்கூட அப்படித்தான். அவனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டிய நேரம். நம்பிக்கைத் துரோகத்திற்காக அவனுக்கான பரிசு. பலருக்கான பாடம். ஒரே ஒரு புல்லட் - மூளையைச் சிதறடிக்க!

காலி வீதி காலை நேர பரபரப்புக்கு மாறிக் கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் நல்லது! அதற்காகவே இந்த நேரம் தெரிந்தெடுக்கப்பட்டிருந்தது. அவன் சரியாக எட்டு மணிக்கு அதோ எதிரில் தெரியும் அந்த பஸ்தரிப்புக்கு வருவான்.

அருகில் சென்று.. திறந்த நிலையில் மாட்டிக் கொண்டிருக்கும் என் அலுவலகப் பையிலிருந்து எழுபது எம். எம். பிஸ்டலை கணநேரத்தில் உருவி காரியத்தை முடித்து உடனேயே ஜனத்திரளில் கலந்துவிடுவது...

நேரம் 7 : 42 

ஐந்து நிமிடம் முன்னதாக வீதியைக் கடப்பதுதான் சரியாயாக இருக்கும்...

சுற்றிலும் பார்த்தேன். யாரும் யாரையும் கவனிக்கும் நிலையில் இல்லை என்னையும்! இருந்தாலும் சற்றே பதட்டமாக இருந்தது.

பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் ஒரு கோக். மெதுவாக உறிஞ்சிக் கொண்டே நோட்டமிட்டேன்.

மனதிற்குள் ஓர் எச்சரிக்கை மணி ஒலிக்க.. 'என்ன இது?... எதிர்பாராத சிக்கல்? 'இந்த இடத்தில் போலீசை எதிர்பார்க்கவில்லை. இரண்டு பேர். ஒருவன் என்னைக் கவனிப்பதுபோலவே உற்றுப் பார்த்தான். 

'என்ன பண்றது? அசைன்மென்ட் தள்ளிப் போடுவதற்கில்லை. அந்தப் பக்கம் போய்விட்டால் போட்டுட்டு.. எப்படியும் எஸ் ஆகிவிடலாம்...' 

மெதுவாக நகர்ந்தேன். பத்தடி சென்றிருப்பேன். "மல்லி (தம்பி)..!" 

என்னைத்தான்!

வேகத்தை அதிகப்படுத்தி.... 

"மல்லி..!" குரல் உரத்து, கூடவே   தொடர....

கிட்டத்தட்ட ஓடி....

'ரோட்டைக் கிராஸ் பண்ணனும்..!' குறுக்கே பாய்ந்தேன். 

கிறீச்சிட்டு நின்ற அந்த ப்றயஸின் பார்னெட்டை பரவி முத்தமிட்டதில் என் தோள்பையிலிருந்து தெறித்து விழுந்தது பிஸ்டல்...

"சடக்! சடக்!" 

மிகப்பரிச்சயமான அந்த ஒலி..

அதை இனங்காணத் தெரியாவிட்டால் நான் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் வடபகுதிப் பிரஜை என்பதை நானே நம்பமாட்டேன். 

அது..ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி சுடுவதற்குத் தயார் செய்யப்படும் பிரத்தியேகமான அந்த சத்தம்!

அனிச்சையாக என்கைகள் தோள் வரை உயர... மெதுவாகத் திரும்பினேன்.

குறிபார்க்கும் போலீஸ் துப்பாக்கிகள்....

அதிர்ச்சியான முகத்தோடு சனங்கள்....

கூடவே.. அந்தப் பெட்டிக்கடைக்காரனும்....

நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்...

அது...


பெட்டிக்கடையோ... பெரிய கடையோ...

சோடா குடித்தால், மறக்காமல் காசு கொடுத்துவிட வேண்டும்! 

21 comments:

 1. ஐயோ என்னய்யா யாராச்சும் காப்பாத்துங்களேன்..

  ReplyDelete
 2. ஹா ஹா ... சூப்பர் ஜீ! :) :)

  ReplyDelete
 3. வணக்கம்,ஜீ!!!என்னைய்யா இது டுப்பாக்கி விமர்சனமாக்கும் என்று அரக்கப் பரக்கப் படித்தால்,சோடா(கோக்)குடித்தால் மறக்காமல் காசு கொடுத்து விட வேண்டும் என்று.....................ஹ!ஹ!ஹா!!!!(கொழும்பில் எங்கே காசு கண்ணில் காட்டாமல் சோடா(கோக்)கொடுக்கிறார்கள்?ஹி!ஹி!ஹீ!!!)

  ReplyDelete
 4. அடப்பாவி...... பட் இதுக்காக டாகுடர் படத்தைலாம் போட்டு ஏன் கலங்கடிக்கிறீங்க?

  ReplyDelete
 5. மைந்தன் சிவா said...
  ஐயோ என்னய்யா யாராச்சும் காப்பாத்துங்களேன்..////நான் இருக்கிறன் ராசா!இப்பிடி வாங்கோ!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 6. டாகுடர் முகமே ஆயிரம் விஷயம் சொல்லுதே..... அவன் நடிகன்யா.......!

  ReplyDelete
 7. //Yoga.S. said...
  (கொழும்பில் எங்கே காசு கண்ணில் காட்டாமல் சோடா(கோக்)கொடுக்கிறார்கள்?ஹி!ஹி!ஹீ!!!)//

  அப்படியா? இது எனக்குப் புதுசா இருக்கு... எந்தக் கடையிலுமே - பெட்டிக் கடைகளிலும்கூட குடித்துவிட்டு காசு கொடுப்பதுதான் வழக்கம்... இன்று காலை வரைகூட!

  கதைக்கு லாஜிக் அவசியம் இல்லைன்னு விட்டுவிடலாம் என்றாலும் நீங்கள் குறிப்பிட்டு கேட்டதால், லாஜிக் மீறப்படவில்லை எனச் சொல்வது அவசியமாகிறது! :-))

  ReplyDelete
 8. அப்பறம் இந்த பதிவு செம ஹிட்டாகியிருக்குமே பாஸ்
  டாகுதர் பாவம் பாஸ்

  ReplyDelete
 9. சும்மா சொன்னேன்,ஜீ!!!ஆனால்,நான் எங்கும் காசு கொடுத்து விட்டே டீ கூடக் குடிக்கும் பழக்கம்,(வெளி நாட்டில் கூட!)

  ReplyDelete
 10. ஜீ'யின் நண்பி (சுமாரான பிகர்) : ஜீ, நீங்கள் நல்லா எழுதுறீங்களாம்.... #@##@# (வழிகிறார்)

  ஜீ (மனதிற்குள்): உன்னை வாசிக்கவிடாமல் பண்ண ஒரு பதிவு போடுகிறேன்.

  ReplyDelete
 11. //K.s.s.Rajh said...
  அப்பறம் இந்த பதிவு செம ஹிட்டாகியிருக்குமே பாஸ்
  டாகுதர் பாவம் பாஸ்//

  இல்ல பாஸ்! கடந்த இரு பதிவுகளோடு ஒப்பிடுகையில் மிக அவரேஜான ஹிட்! ஹிட் ஆகணும்னா படம் வரும்போது ரிலீஸ் பண்ணனும்! :-)
  டைட்டில் வைக்கிறது எனக்கு பெரிய பிரச்சினை பாஸ்! வேறெதுவும் பொருந்தாமல், தோன்றாததால்தான் இந்தப் பெயர்.

  ReplyDelete
 12. //Yoga.S. said...
  சும்மா சொன்னேன்,ஜீ!!!ஆனால்,நான் எங்கும் காசு கொடுத்து விட்டே டீ கூடக் குடிக்கும் பழக்கம்,(வெளி நாட்டில் கூட!)//

  தெரியும்!!! :-)
  நீங்க கேட்டது நல்லதுதான் பாஸ்! நாங்களும் யோசிக்கணும் இல்ல? :-)

  ReplyDelete
 13. //எஸ் சக்திவேல் said...
  ஜீ'யின் நண்பி (சுமாரான பிகர்) : ஜீ, நீங்கள் நல்லா எழுதுறீங்களாம்.... #@##@# (வழிகிறார்)

  ஜீ (மனதிற்குள்): உன்னை வாசிக்கவிடாமல் பண்ண ஒரு பதிவு போடுகிறேன்.//

  என்ன பாஸ் இது? ஜீக்கு நண்பியா? ஏன் பாஸ் ஏன்?? :-)
  ஆனா ஒண்ணு.. நாலு பேர் சொல்லும்போது கேக்க நல்லாத்தான் இருக்கு! என்னமோ போடா ஜீ...!

  ReplyDelete

 14. //எஸ் சக்திவேல் said...
  ஜீ'யின் நண்பி (சுமாரான பிகர்) : ஜீ, நீங்கள் நல்லா எழுதுறீங்களாம்.... #@##@# (வழிகிறார்)

  ஜீ (மனதிற்குள்): உன்னை வாசிக்கவிடாமல் பண்ண ஒரு பதிவு போடுகிறேன்.//

  என்ன பாஸ் இது? ஜீக்கு நண்பியா? ஏன் பாஸ் ஏன்?? :-)
  ஆனா ஒண்ணு.. நாலு பேர் சொல்லும்போது கேக்க நல்லாத்தான் இருக்கு! என்னமோ போடா ஜீ...!


  ----------------------------------

  எகெ எகெ எகெகெகேகேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!

  ReplyDelete
 15. வழக்கம் போல ஜீ பாணியில் ஒரு சிறுகதை.. அப்புறம் கிளைமேக்ஸ்க்கு பிறகு என்ன நடந்துச்சுன்னு கமெண்ட்ல சொல்லுங்க பாஸ்...

  ReplyDelete
 16. அப்புறம் ஜீ யை சகல மரியாதைகளோடும் போலீஸ் அழைத்து?!சென்று விருந்து கொடுத்தது!பாவம்,பொட்டிக் கடைக்காரர்,கடைசி வரை கோக் காசு கிடைக்கவேயில்லை,ஹ!ஹ!ஹா!!!

  ReplyDelete
 17. //வாழ்க்கையில் அனுபவத்தைப் போல எதுவும் பாடம் கற்றுக் கொடுப்பதில்லை. ஆனாலும் கற்ற பாடத்தை மீண்டும் பிரயோகிக்க, இரண்டாவது சந்தர்ப்பம் ஒன்றை வாழ்க்கை வழங்குவது மிகக் குறைவு.//
  மிகவும் சரி .

  ReplyDelete
 18. சூப்பர் கதை பாஸ் ... கலக்கீட்டிங்க! .. முடிவு அசத்தல்!

  ReplyDelete
 19. ஹா... ஹா.... ஹா..

  முடியல....

  சூப்பரு...

  ReplyDelete
 20. ஹா ஹா கலக்கல் :)

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.

Archives

Follow by Email

Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |