Thursday, May 17, 2012

The Piano Teacher (2001)


சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் ஒரு சிறிய தவறுக்காக ஆசிரியை ஒருவரிடம் மிக மோசமாக அடிவாங்கி, கைகள் கன்றிப்போய், அடிப்பதற்குப் பயன்படுத்திய தடியில் சிறு முட்கள் போல இருந்தவை கீறி ரத்தம் கசிந்தபோது, அதிர்ச்சியாகப் பார்த்த ஆசிரியர் ஒருவர் சக ஆசிரியரிடம் கூறியது - 'பிஞ்சுக்கையை எப்பிடி அடிச்சிருக்கா பார்', 'கல்யாணம் ஆகாததுதான் அவவின்ர பிரச்சினை!'

தின்ம வயதுகளில் நண்பர்களுடன் பள்ளியைக் கட் அடித்து அருணாச்சலம் பார்க்க, எங்களுடன் அன்பாகப் பழகும், அமைதியான ஆங்கில ஆசிரியை நாங்கள் கட் அடித்து ப்ளூ பிலிம் பார்த்ததாக வதந்தியொன்றைக் கிளப்பிவிட, வீண்பழி கேட்ட கோபத்தைவிட, மன உளைச்சலும், அதையும் தாண்டி இவரா இப்படி என்ற அதிர்ச்சியுடன் பேச்சற்று நின்றவேளையில், எங்களுடன் நட்புடன் பழகும் ஒரு தமிழாசிரியர் சொன்னது - 'விடுங்கடா பாவம் அது கல்யாணம் கட்டேல்லத்தானே அதுதான் அப்பிடி!'

முதல் வேலை - அலுவலகத்தில் ஆண்களுக்கிடையில், ஐம்பது வயதுப் பெண்மணி ஒருவர் - திருமணமாகாதவர். எடுத்ததற்கெல்லாம் வீண்வாதம். எப்போதும் ஆண்கள் சொல்வதையெல்லாம் எதிர்க்கவேண்டும் என்ற தன்முனைப்போடு. பல வினோதமான பழக்க வழக்கங்கள் அவருக்கு இருந்தன. அவர் எங்களையெல்லாம் அலட்சியமாக பார்ப்பதும், நாங்கள் எங்களுக்குள் சிரித்துக் கொள்வதுமாக...சிலவேளைகளில் அவரை நினைத்தால் மிகப் பரிதாபமாகவும் இருக்கும்! அதற்கும் காரணமாக திருமணம் செய்யாததையே கூறிக் கொண்டார்கள்.

அவர்களெல்லாம் ஏன் அப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கான காரணம் தெரியாது. ஒரு விதமான பாதுகாப்பின்மையை உணர்வது, துணையின்றிய வெறுமையான உணர்வு, தம்மைச்சுற்றித் தாங்களே போட்டுக்கொண்ட எல்லை, தனிமை போன்றவை அவர்களின் வினோதமான செயல்களுக்கும், மூர்க்கத்தனமான அணுகுமுறைகளுக்கும் காரணமாக அமைந்திருக்கலாம்.

ரிக்காவிடம் என்ன பிரச்சினை?

ஒருவனுக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் இருக்கிறது. நன்றாகவும் வரைகிறான். தொடர்ந்து பயிற்சி செய்கிறான். எதிர்காலத்தில் மிகச்சிறந்த ஓவியனாக வரலாம். வராமல் போகலாம்.

இதே அவன்மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப் பட்டால்? நீ பிக்காசோ மாதிரி வரவேண்டும் எனக் கூறி, அவனது ஏனைய தேவைகள், சுதந்திரம், ஆசைகள் மறுக்கப்பட்டு, எந்நேரமும் ஓவியம் வரைவதில் ஈடுபடுத்தப்பட்டால் என்னவாகும்? அதிக பட்சம் ஒரு ஓவிய ஆசிரியனாக வரமுடியும்... மன நிலை பாதிக்கப்படாவிட்டால்!


எரிக்கா - அவள் அம்மாவால் இன்னொரு பீத்தோவனாக உருவாக்க ஆசைப்பட்டு.....இசைக் கல்லூரி ஒன்றின் பியானோ பேராசிரியையாக இருப்பவள்.

அவளின் அந்தந்த வயதுக்கேற்ற ஆசைகள், தேவைகள் மறுக்கப்பட்டவள். அப்படி அடக்கப்பட்ட ஆசைகள், தேவைகள் திடீரென வெடித்துக் கிளம்பும்போது எப்படி வெளிப்படும்? அது சாதாரணமானவர்களைப் போல் இயல்பானதாக இருக்குமா? அதை மற்றவர்களால் புரிந்துகொள்ள ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஆண்கள் யாரையும் மதிக்ககாமல்,மரியாதையாகத் தலையசைப்பவர்களையும் அலட்சியப்படுத்தும், தனது மாணவன் ஒருவன் புத்தகக்கடை ஒன்றில் செக்ஸ் புத்தகம் ஒன்றைப் பார்ப்பதைக் கவனித்து, தனது வகுப்பறையில் வைத்து மிகக் கோபமாகக் கண்டிக்கும் எரிக்கா நெட் கபே போன்ற ஒரு இடத்திற்குச் செல்கிறாள். மூடப்பட்ட சிறிய கேபின்கள் முன் ஆண்கள் சிலர் காத்திருக்க, அவற்றில் ஒன்றின் முன் எரிக்கா காத்திருக்கிறாள்.

அங்கே நிற்கும் ஒரே பெண் எரிக்கா. ஒரு மாதிரியாக எரிக்கவைப் பார்க்க அவள் கண்டு கொள்ளவில்லை. உள்ளே இருந்த ஆண் வெளியே வந்ததும் , உள்ளே சென்று அமர்கிறாள் டீ.வி திரையில் நீலப்படம்! அது ஒரு நீலப்படம் பார்க்கும் இடம். கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் எரிக்கா, என்ன செய்வதென்றே தெரியாத ஒரு குழம்பிய நிலையில் மேசைமீது கசக்கிப்போடப்பட்ட ஒரு டிஷ்யூவை பார்க்கிறாள். அது முதல் அங்கு வந்த ஆண், சுய இன்பத்தின்பின் துடைத்துப்போட்ட டிஷ்யூ. மெதுவாக அதை எடுத்து முகர்ந்து பார்க்கும் எரிக்கா, பின்பு மீண்டும் மீண்டும் வெறித்தனமாக முகர்ந்து கொள்கிறாள்.

அங்கிருந்து வரும் வழியில் எரிக்கா நிறுத்தியிருக்கும் ஒரு காரின் அருகே சென்று கண்ணாடி வழியே பார்க்க, உடலுறவு கொள்ளும் ஜோடி ஒன்றைக் காண்கிறாள். அவள் பார்ப்பதை அந்தப் பெண் கண்டுவிட, தனது உணர்வுகள் கிளர்ந்துவிட்ட நிலையில் ஏதோ ஒரு வடிகாலாக நினைத்து அங்கிருந்து நகரும் எரிக்கா அவர்கள் முன்னால் சிறுநீர் கழிக்கிறாள். காரிலிருந்து அவர்களிறங்க, அங்கிருந்து ஓடுகிறாள் எரிக்கா.  

அவளிடம் பியானோ கற்றுவரும் பதினேழு வயது இளைஞனான வால்டரின் திறமை காரணமாக அவனைக் கவனிக்கிறாள் எரிக்கா. அவனிடம் சிநேகமாகப் பழகுகிறாள். அவர்களுக்கிடையிலான சிநேகம் பரஸ்பரம் ஈர்ப்பாக மாற, உடலாலும் இணைந்து கொள்ள..அங்கே ஆரம்பிக்கிறது பிரச்சினை! 

எரிக்கா sadomasochism  எனும் மனநிலைப் பாதிப்புக்குள்ளானவள். Sadism - பிறரைத் துன்புறுத்தி இன்பம் காண்பவர்கள், sadomasochism (Sadism + masochism) அதே வேளையில் தமது வலிகளின் ஊடாகவும் ஒருவகை இன்பத்தைப் (??) பெற்றுக் கொள்பவர்கள். மென்மையான உணர்வு கொண்ட வால்டருக்கு, எரிக்காவின் நடவடிக்கைகள் பெரும் சித்திரவதையாக அமைகின்றன.

எரிக்காவின் கல்லூரியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. அங்கு வரும் திறமையான, மாணவி அன்னா, வால்டருடன் சிநேகமாகப் பழகுவது எரிக்காவுக்குப் பிடிக்கவில்லை.அதே நேரம், அன்னாவைப் பார்க்கும்போது, தன்னையே பார்ப்பதுபோல எங்கே அவளும் தன்னைப் போல ஆகிவிடுவாளோ என்ற அக்கறை கலந்த பயமும் ஏற்படுகிறது. அன்னாவின் 'கோட்' போகட்டுக்குள் உடைந்த கண்ணாடித் தூளைப்போட்டு அவளின் கைகளைக் காயப்படுத்துகிறாள். இது வால்டருக்கும் தெரிந்துவிடுகிறது!

எரிக்காவின் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளால் மேன்மேலும் நொந்து போக என்னவாகிறது... (ஸ்ஸ்..ஸப்பா முடியல)

சில காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. படமே இப்படி இருந்தால் கதை எப்படி இருக்கும்? 2004 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற novel ஐ அடிப்படியாகக் கொண்டு எடுக்கப்பட படம் இது.

இயக்கம் -  Michael Haneke
மொழி - French
விருதுகள் - Cannes(2001), German film awards(2002), European Film Academy (2001), French Academy of Cinema(2001) இன்னும் ஏராளம். Bafta உள்ளிட்ட பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

15 comments:

 1. வணக்கம் பாஸ் எப்படி சுகம்?

  நல்ல ஒரு படத்தை பற்றி சொல்லியிருக்கீங்க ஹி.ஹி.ஹி.ஹி......

  பார்த்திட்டால் போச்சி

  ReplyDelete
 2. எரிக்காக்கள் எம்மத்தியிலும் பல்வேறு தளங்களில்- வடிவங்களில் இருக்கிறார்கள். எரிக்காக்கள் மட்டுமல்ல; எரிக்காக்களின் எதிர்பாலாரும் கூட!

  ReplyDelete
 3. உலகசினிமான்னா இப்படி இருக்கணும். ஹி ஹி

  ReplyDelete
 4. கட்டாயம் டவுன்லோட் செய்து பார்த்துவிடுகிறேன். (சைக்காலஜி பற்றிய படம் என்பதால் மட்டுமே ;) )

  ReplyDelete
 5. இந்த கதைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் இண்ட்ரோ மிக அருமை. பார்க்க முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
 6. பதிவே ஒரு திகில் அனுபவமாக இருக்கிறதே. கதையை நினைத்தாலே எதோபண்ணுகிறதே.

  ReplyDelete
 7. DVD கிடைக்குமா ? அல்லது டவுன்லோட் பண்ணலாமா ?

  ReplyDelete
 8. விமர்சனம் நன்று...

  ReplyDelete
 9. எப்பவும்போலவே பார்க்கத் தூண்டும் விமர்சனம்.உங்கள் விமர்சனங்களை வைத்தே சில படங்களைப் பார்த்துமிருக்கிறேன் ஜீ.நன்றி !

  ReplyDelete
 10. என்ன ஒரு படம் பாஸ்....

  இப்படி சொல்லிட்டு போயிடுவீங்க... ஆனா நாங்க...லிங் தேடி அலையனும்..லிங்கையும் சொல்லிடுங்க பாஸ்..

  ReplyDelete
 11. அறிமுகம் அருமை. படம்தான் பார்க்கனும்.. ஆங்கில நாவலா? தமிழில் மொழியாக்கம் இருக்கிறதா? நீங்களே முழுமையாக மொழி பெயர்த்துச் சொல்லிவிடுங்களேன்.. ஜாலியாக இருக்கிறது படிக்க. பகிர்விற்கும் அறிமுகத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 12. //சிட்டுக்குருவி said...
  என்ன ஒரு படம் பாஸ்....

  இப்படி சொல்லிட்டு போயிடுவீங்க... ஆனா நாங்க...லிங் தேடி அலையனும்..லிங்கையும் சொல்லிடுங்க பாஸ்..//

  இந்த லிங்க்கில் முயற்சி பண்ணிப்பாருங்க பாஸ்!
  http://isohunt.com/torrent_details/128624725/the+piano+teacher?tab=summary

  ReplyDelete
 13. //ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...
  அறிமுகம் அருமை. படம்தான் பார்க்கனும்.. ஆங்கில நாவலா? தமிழில் மொழியாக்கம் இருக்கிறதா? நீங்களே முழுமையாக மொழி பெயர்த்துச் சொல்லிவிடுங்களேன்.. ஜாலியாக இருக்கிறது படிக்க. பகிர்விற்கும் அறிமுகத்திற்கும் நன்றி.//

  நான் புத்தகம் பார்த்ததில்லை - பார்த்தாலும்...அது ஜெர்மன் மொழியில் வந்திருக்கு. :-)
  படமே சில காட்சிகள் பார்க்க முடியவில்லை.. மொழி பெயர்ப்புகள் பற்றித் தெரியவில்லை. தமிழில் இதைப்பற்றிய கட்டுரையொன்று முன்னர் சாரு எழுதியிருந்தார் - உயிர்மையில்!

  ReplyDelete
 14. பாதுக்காப்பற்ற(!) உணர்வே பல பிரச்சினைகளுக்கு காரணம்...மாப்ள விமர்சனமும் நல்லா இருக்குதுடோய்!

  ReplyDelete
 15. நம்ம பாணி படமா? பார்த்திட வேண்டியது தான் ... ஆரம்பத்தில் ஏதோ ரீடர் பாணி போல இருந்தது .. ஆனால் இது வேறுபடம்

  நல்ல விமர்சனம் தல ... பிரஞ்சு படம் எண்டாலே எப்ப எங்க சீன் தொடங்கும் எண்டு தெரியாது ... இது வேற சலங்கையை கட்டி இறக்கி இருக்கிறாங்க போல .. ஆட்டம் பார்த்திட வேண்டியது தான்!

  ReplyDelete

Followers

Blog Archive

Powered by Blogger.
Copyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |